4 வயது மகளிடம் கடந்த இரண்டு தினமாகவே வெறுப்புடன்
பேசினான் அரவிந்தன் இத்தனை நாள் கொஞ்சிக் கொண்டு இருந்த அப்பா திடீரென்று ஏன்
கோபப்படுகிறார் ? என்பது புரியாமல் விழித்துக் கொண்டு முகம் வாடி
இருந்தாள் ஸ்வேதிகா அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்ள நீ அப்பா கிட்டே போகாதடா
செல்லம் அவரு இப்படித்தான் உனக்கு நான் இருக்கேன்டா கவலைப்படாதே என்று ஆறுதல்
சொன்னாள் மலர்விழி. கடந்த ஒரு மாதமாக ஒட்டிக்கொண்டே திரிந்த மகள் நாம் போனவுடன்
முகம் வாடி விடக்கூடாதே என்பதற்காக கடைசி இரண்டு நாளில் வெறுப்பது போல் நடந்து
கொண்டது பாவம் ஸ்வேதிவுக்கு எப்படி புரியும் ? விடுமுறை முடிந்து மீண்டும்
துபாய் புறப்பட்ட கணவன் குழந்தைக்கு சந்தோசமாக டாடா சொல்ல முடியாமல் போய் விட்டதே
என்று வருந்துவது மலர்விழிக்கு மட்டும்தானே தெரியும்.
* * * * * * * * * * * 01 * * * * * * * * *
*
சுந்தரம்
சட்டீரென கன்னத்தில் அறைந்ததும் ’’அம்மா’’ என்று
அலறி கீழே விழுந்தாள் மல்லிகா சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்த அவனின் அம்மா
ஏன்டா முரட்டுப்பயலே வாயும், வயிறுமா இருக்கிறவளை இப்படிப் போட்டு அடிக்கிறியடா
உனக்கு அறிவு இருக்கா ? அதுக்காக
என்னை வேலைக்குப் போகச் சொல்றா வேலைக்குப் போயி சாப்பிடுற அளவுக்கு நாம என்ன இவளுக
குடும்பத்தைப் போல பிச்சைக்காரங்களா ? ஏன்டா தண்டச்சோறு ஒரு
குழந்தைக்கு தகப்பனாகிட்டே இன்னும் அப்பன் சம்பாத்தியத்துல உட்கார்ந்து
சாப்பிடுறியே உனக்கு அறிவு இருக்கா ? என்ற
அம்மாவை இல்லாததை எத்தனை தடவை கேட்பே ? என்று சொல்லி சட்டீரென்று
விட்டான் சுந்தரம் ‘’அம்மா’’ என்று
அலறி கீழே விழுந்தாள் அம்மா ’’கட் கட்’’ என்று
டைரக்டர் சொல்லவும் கீழே கிடந்த மல்லிகாவும், அம்மாவும் எழுந்தார்கள்.
* * * * * * * * * * * 02 * * * * * * * * *
*
டெல்லிக்கு
அவசரமாக கிளம்புறீங்களே... அவ்வளவு முக்கியமான விசயமா ? என்று கேட்டதும் ‘’தூ’’ என்று
வாயிலிருந்த வெற்றிலையை துப்பிய அமைச்சர் விஜயகுமார் ஏன்டி வெளங்காமட்டை உனக்கு
எத்தனை தடவைதான்டி சொல்றது ? ஊருக்கு
கிளம்பும்போது குறுக்கு கேள்வி கேட்காதேன்னு என்று சொல்லி விட்டு மீண்டும்
வெற்றிலையை எடுத்து வாய்க்குள் ஒதுக்கி சுவைத்தவரை ஏங்க நானும் எத்தனை தடவை
கேட்கிறேன் என்னையும் ஒருதடவை டெல்லிக்கு கூட்டிக்கிட்டுப் போயி அந்தப்
பாராளுமன்றத்து நாற்காலியில் உட்கார வைக்க மாட்டீங்களா ? அவசரமாக வந்த அவரது பி.ஏ. டெலிக்ராமை படித்து
சொன்னான் உங்களது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது டெல்லி வரவேண்டாம் மனைவி பூங்கோதையை
பார்த்து ‘’தூ’’ என்று வாயிலிருந்த
வெற்றிலையை துப்பினார் முன்னாள் அமைச்சர் விஜயகுமார்.
* * * * * * * * * * * 03 * * * * * * * * *
*
கல்யாண
வீட்டில் நாதஸ்வரம் ஊதிய வித்வான் நாகேஸ்வரனை அடித்து விட்டதாக ஒரே பரபரப்பு நாங்க
இனி நாதஸ்வரம் வாசிக்க மாட்டோம் தாலி கட்டும் நேரத்தில் இப்படி தகராறு செய்து
விட்டாங்களே... என்று பதறியடித்து சமாதனப்படுத்த முயன்றனர் திருமணத்துக்கு
வந்திருந்த பெரியவர்கள் நாதஸ்வரக்கார கோஷ்டிகளிடம் மன்னிப்பு கேட்டு தயவு செய்து
தாலி கட்டு முடியட்டும் பிறகு பேசித் தீர்மானிப்போம் என்று கேட்டுக் கொண்டதற்கு
இணங்க நாதம் முழங்க திருமணம் இனிதே நடைபெற்றவுடன் நாதஸை அடித்தவனை தேடியதில் அது
டாஸ்மாக்கில் மூழ்கி சாப்பாட்டுக் கூடத்தின் பாத்திரம் கழுவிமிடத்தில் கவிழ்ந்து
கிடக்க ஏன்டா இவரை அடிச்சே ? இவரு
அசிங்கமா வாசிச்சாரு... நல்லாத்தானே வாசிச்சாரு ? இல்லை ‘’பீப் பீப் பீப்’’ அப்படின்னு
அசிங்கமா வாசிச்சாரு... கல்யாண வீட்ல இப்படி வாசிக்கலாமா ?
* * * * * * * * * * * 04 * * * * * * * * *
*