இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 27, 2016

சங்கரன்கோவில், சந்தேகபுயல் சங்கரன்


எனக்கு நெடுங்காலமாகவே சந்தேகம்

அதாவது திரைப்படங்களில் கசாநாயகனை அடிப்பதற்கு சுமார் பத்திலிருந்து இருபது நபர்கள் வரை பைக்குகளில் வருவார்கள் அதுவும் இப்பொழுது ஐம்பது பேருக்குமேல் வருகிறார்கள் அவர்கள் கைகளில் அருவாள், கத்தி, கம்பு, கோடரி, ஈட்டி, சைக்கிள் ஜெயின் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருக்கும், போதாக்குறைக்கு அவர்கள் அனைவருமே 80 திலிருந்து 110 கிலோ வரை எடையுள்ள தடியன்களாகவும் இருப்பார்கள் இவர்கள் எல்லோருமே கசாநாயகனை சுற்றிக் கொண்டுதான் நிற்பார்கள் கையிலிருக்கும் ஆயுதத்தால் ஒரே அடியில் மண்டையில் அடித்து வீழ்த்தி விடலாம். ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம் ஐடியா இல்லை அறிவு வளர்ச்சி குறைவு. ஆனால் கசாநாயகனோ சாதாரண எடையுள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பார் கையிலும் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது, அடிக்க வரும் எதிரிகளை வெறும் கையால் அடிப்பார், மேலும் காலால் எதிரிகளை பந்து போல் எத்தி விடுவார் அந்த நேரங்களில் நான் ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன் இந்தக் கால்களுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது ?

அப்புறம் இன்னொரு சந்தேகம் ?

சாநாயகனை வில்லன் ஆட்கள் துப்பாக்கியோடு விரட்டுவார்கள் கசாநாயகனோ வீட்டின் ஓட்டு முகளில் ஓடிக்கொண்டு இருப்பார் இவர்கள் அனைவருடைய துப்பாக்கி குண்டுகளும் அவரின் காலின் பக்கத்திலேயே சுடுவார்கள், ஓடுகள்தான் வேஷ்டாகும். சட்டென ஒருவனுடைய துப்பாக்கியை பிடுங்கி ஓடிக்கொண்டே... ஆறு குண்டுகள் உள்ள, துப்பாக்கியிலிருந்து எட்டுப் பேரை சுடுவார், பிறகு கசாநாயகன் தரையில் ஜம்ப் பண்ணி ஜீப்பில் ஏறப்போகும் போது பக்கத்தில் உயரமான டவரிலிருந்து ஒருஆள் பாம் வீசுவார் ஓடிக்கொண்டே நமது கசாநாயகனும் அதை லாவகமாக பிடித்து அந்தத் டவரின் மீது மிகச் சரியாக வீசுவார் டவர் மீது நின்றவரும் கருகிச்செத்து விடுவார்.

(அப்போழுதெல்லாம் நான் நினைத்ததுண்டு கெடுவான் கேடு நினைப்பான்)

ஜீப்பில் ஏறிய பிறகும் விடமாட்டார்கள் கார்களிலும், லாரிகளிலும், பைக்குகளிலும் விரட்டி வருவார்கள் கசாநாயகனும் லொடக்கு ஜீப்பை வைத்துக் கொண்டே எல்லோரையுமே இடித்தும், அவர்கள் கையில உள்ள பாம்''மை பிடுங்கிவீசி கொன்று விடுவார். இவ்வளவும் செய்து விட்டு வில்லனின் மகளோடு கைகோர்த்துக் கொண்டு போய்க் கொண்டே... இருப்பார். அந்த உலுத்த சிறுக்கியும், நம்ம அப்பனோட சொத்தை எல்லாம் அழிச்சுட்டானே ! நாளைக்கு சோத்துக்கு என்ன செய்வது ? என்று நினைத்துப் பார்ப்பதில்லை போலீஸாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். சரி அது போகட்டும் அது வேற காரியம்.

அதாவது ஒருஆள் இத்தனை ஆபத்துகளையும் கடந்து இவ்வளவு பேரையும் கொல்ல முடிகிறது என்றால் உண்மையிலேயே அவர் மிகமிகத் திறமைசாலிதான்.

(அரசாங்கம் ஏன் ? இந்த மாதிரி வீரர்களை ராணுவத்துக்கு எடுக்ககூடாது)

இத்தனை பேர் சேர்ந்தும் கசாநாயகனை வீழ்த்த முடியவில்லையே... இதற்கு காரணம் என்ன ? நான் யோசித்துப் பார்த்தேன்.

தேர்வுமுறை சரியில்லை. ஆம், தேர்வுமுறை சரியில்லை.

தேர்வு செய்தது யார் ? நமது இயக்குனர்தான்.

அவர்தானே இந்த மாதிரி திறமையில்லாத தடியன்களை தேர்வு செய்தது. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது ஒரு திறமையான கசாநாயகனை சரியான முறையில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

எனது சந்தேகமே இனிமேல்தான்.

அதாவது ஒரு படத்தில்தான், இந்த மாதிரி திறமையில்லாத அடியாட்களை தேர்வு செய்து விட்டார்கள் சரி. அடுத்து வரும் படங்களிலாவது மற்ற இயக்குனர்கள் நல்ல திறமையான அடியாட்களையும், வில்லன்களையும் ஏன் தேர்வு செய்வதில்லை ?

இதுதான் எனது சந்தேகம்.

சாம்பசிவம்-
ஏலே யாருப்பா... அங்கிட்டு இந்த ஆளைக் கொஞ்சம் கவனி''லே.

 காணொளி 

38 கருத்துகள்:

  1. சரி சரி இனிமேல் வில்லன் களை தேர்வு செய்யும் போது உங்களை தேர்வு செய்ய தமிழ் டைரக்டர்களுக்கு சிபாரிசு செய்கிறேன் நீங்கள் எளிதாக ஹிரோவை அடித்து போட்டு கதாநாயகியுடன் டூயட் பாடலாம் எப்படி நம்ம ஐடியா உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐடியா நல்லா இருக்கு நண்பரே ஆனால் கோடரியை கையில் கொடுத்து கசாநாயகனோடு மோத விட்டால் உண்மையிலேயே வெட்டு விழும்

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க சந்தேகத்துக்கு பதில் சொல்லாமல் இப்படி சிரித்தால் என்ன அர்த்தம் ?

      நீக்கு
  3. எனக்கு சுள்ளான் படம் நினைவுக்கு வருகிறது! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. சினிமா என்றாலே...ஏமாற்றுதானே..நண்பரே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் அளவுக்கு மீறி ஓட்டுறாங்களே... நண்பரே...

      நீக்கு
  5. ji the worst part is ...our NONJAN DHANUSH is always shown as hitting ten to fifteen strong men at a time...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவனோட கூத்துதான் ரொம்ப ஆகிப்போச்சு.

      நீக்கு
  6. இந்த சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் அனைவருக்குமே உண்டு. தம5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே அனைவருக்கும் உண்டா ? ஹாஹாஹா

      நீக்கு
  7. எனக்கும் ஒரு சந்தேகம் ....நம்ம எம்ஜியாரின் பேச்சு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடும்போது அட்சரசுத்தமாக பாடுகிறாரே ,எப்படி :)

    பதிலளிநீக்கு
  8. உங்களை நினைச்சா சிரிப்பாத்தான் வருது. என்னமோ 5 பாட்டு 4 fight ஒரு கிளைமாக்ஸ் என்று தமிழ் சினிமாவே ஒரு போர்முலாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. எடுக்கிறவனுக்கும் தெரியும் பாக்கிறவனுக்கும் தெரியும் இது எல்லாமே நிஜம் இல்லை என்று. அதனால் தானே நிழல் படம் என்று கூறுகிறார்கள்.

    உங்ககிவிட்டே கோடாரியைக் கொடுத்தது எங்களை அறுக்கத்தான் பூவைப் பறிக்க அல்ல.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கடைசியில் கோடரி அறுக்கத்தானா ? ஹாஹாஹா

      நீக்கு
  9. திரைப்படத்தில் கதாநாயகன் நோஞ்சானாய் இருந்தாலும் 10 பேரை வெறும் கையால் அடிக்கவேண்டும்.வில்லன்கள் அவனிடம் அடிவாங்கி கீழே விழவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதைப்பார்த்து ‘இரசிக்கவேண்டும்’ என்பது நமது தலைவிதி. இதற்கெல்லாம் போய் சந்தேகப்படவேண்டாம் என்று சங்கரன்கோவில் சந்தேகப்புயல் சங்கரனிடம் சொல்லிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை நமது தலைவிதிதான் இதோ சொல்லி விடுகிறேன் நண்பர் ச.ச.ச.விடம்...

      நீக்கு
  10. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் நண்பரே

      நீக்கு
  11. லாஜிக் இல்லாம ஒரு படம் வரக்கூடாது என்றால் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் கூடத் தேறாது. நீங்கள் சொல்றபடிப் பார்த்தால், நம் ராணுவத்தில் உள்ளவர்களில் 8 லட்சம் பேரை வேற வேலை பாருங்கப்பா என்று சொல்லி அனுப்பிவிட்டு விஜயகாந்தை மட்டும் வேலைக்கு வச்சிக்கிட்டா போதும் போலிருக்கே. பாகிஸ்தான் எப்பயோ ஒடங்கியிருக்குமே.

    படங்கள் சொல்றபடி நல்லவேளை நிஜத்தில் நடப்பதில்லை. நடந்திருந்தால், நல்லவங்க யாருக்கும் உருப்படியா பொண்ணு கிடைச்சிருக்காது. எல்லாப் பொண்ணுகளும் பொறுக்கிகளையம் ரௌடிகளையும் கண்ணாலம் கட்டிக்கிட்டு ஓடிப்போயிருக்கும்க.

    உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம்? (ரசிக்கும்படி இருந்தாலும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும் அடிக்கடி நீங்கள் சொன்ன விஜயகாந்த் விடயத்தை நினைத்துப் பார்ப்பதுண்டு
      தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவை ரசித்து படித்தேன்.உங்களுடைய உண்மையான இந்த சந்தேகங்கள் யாருக்குமே எந்த காலத்திலும் தீராதவைதான்!

    தங்களுக்கும்.தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமே...
      எந்தக் காலத்திலும் தீராதவை.... ஹாஹாஹா உண்மை
      தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

      நீக்கு
  14. அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  15. எங்கள் தமிழ் சினிமாவின் பாரம்பரியத்தை அவதூறு செய்த கில்லர்ஜி மீது 110 அவதூறு வழக்குகளை தமிழ் ரசிகர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்.
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ''உங்கள் தமிழ்'' அப்படின்னா,,, நாங்க யாரு பெங்காலியா ?

      நீக்கு
  16. அதுமட்டுமில்லை. கதாநாயகன் எவ்வளவு மோசமாக காயப்பட்டிருந்தாலும் பிழைச்சுடுவான், பாவம் வில்லனெல்லாம் ஸ்பாட்டிலேயே மண்டைய போட்டுவாய்ங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. வழிப்போக்கன் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.
      ஆம் நண்பரே சரியான விடயம் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. பொல்லாத சந்தேகம்! யாரும் கேட்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா யார்தான் கேட்கப் போகின்றோம்.

      நீக்கு
  18. என்ன நம்ம கசாநாயனகனைப் பத்தி இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க, இதெல்லாத்தையும் பார்க்கத்தான் நாங்க இருக்கோமே!! முக்கியமான ஒன்னை மறந்திட்டீங்க, முன்னே எல்லாம் எங்க கசாநாயகன் மூணு அடி வாங்கின பிறகுதான் அடிப்பாரு, அதுவும் வில்லனுக்கு தலையில அடிச்சா மட்டும்தான் வலிக்கும்.

    இந்த சந்தேகப் புயல் சங்கரன் யாருன்னு தெரியலயே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் இவரு, சங்கரன்கோயில் காரருதான்...

      நீக்கு
  19. சினிமாவில் லாஜிக் பார்க்கக் கூடாது ஜி. இது அரிச்சுவடி பாடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இருந்தாலும் ரீல் ரொம்ப விடுறாங்களே....

      நீக்கு