01. சிறப்பாக நடந்த திருமணங்களின் எல்லோருடைய வாழ்க்கையுமே சிறப்பாக இருப்பதில்லை.
02. ஊர் சிரிக்க நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கின்றது
03. மனங்கள் ஒன்றி நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் பிரிந்து போயும் இருக்கின்றன.
04. மனம் சேராமல் நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சேர்ந்தே சிறப்பாக இருந்திருக்கின்றது.
05. விருப்பத்துடன் நடந்த திருமணங்களின் பலர் சமூகத்துக்காக பிரியாமல் வாழ்கின்றார்கள்.
06. விருப்பமில்லாமல் நடந்த திருமணங்களின் பலரும் சமூகத்துக்காக சேர்ந்தே வாழ்கின்றார்கள்.
07. குழந்தைகளுக்காக விருப்பமில்லாத கணவனுடன் வாழும் பெண்கள் இருக்கின்றார்கள்.
08. குழந்தைகளால் விருப்பமுடன் கணவனுடன் வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்
09. குழந்தை இல்லாததால் கணவனை பிரிந்து வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்.
10. பேராசையால் பொன்னுக்காக, பலரும் பெண்ணை திருமணம் செய்கின்றார்கள்.
11. ஆசைக்காவும், அழகான பெண்ணுக்காகவும் சில ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள்.
12. ஆசைப்பட்டு திருமணம் செய்த அழகான பெண்களாலும் சிலர் பிரிகின்றார்கள்.
13. ஆசைப்படாமல் திருமணம் செய்த அழகில்லாத பெண்களால் பலரும் சந்தோஷமாய் வாழ்கின்றார்கள்.
14. நல்ல கணவனுக்கும் துரோகம் செய்து கொண்டும் சில பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
15. அயோக்கிய கணவனுக்கும் துரோகம் செய்யாமலும் பல பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
16. பழிக்குப்பழி என்ற கோட்பாட்டில் கணவனும், மனைவியும் துரோகம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள்.
இந்த முரண்பாடுகளுக்கு எல்லாம் காரணகர்த்தா யார் ? மேல் வீட்டு திருவாளியத்தவனா ? இல்லை விதி என்றும் எல்லாம் அவன் செயல் என்று மேல் வீட்டுக்காரரை கைகாட்டி விட்டு கீழ் வீட்டுக்குச் செல்லும் காலம்வரை வாழ்வின் நெளிவு சுழிவு அறிந்து வலிகளை நீக்கத்தெரியாத வழிப்போக்கர்களான புரியா மடந்தை மனித மனங்களா ? இதன் மூலம் கீழ்காணும்...
விருப்பமற்ற விவாஹம் விருத்திக்கு வராது.
திடீர் திருமணம் திருப்தி தராது.
கட்டாய கல்யாணம் களத்தில் நிற்காது.
என்பதும் பொய்யாகிறது ஆம் இவை எதிர் புறமாகவும் திரும்பலாம் என்பதே எமது கருத்து உங்கள் கருத்தென்ன, நட்பூக்களே... ?
காணொளி
மணப்பெண் கதறக் கதற கட்டியதாலி நிலைக்குமா ?
பதிவுக்கு காரணமான திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி.
கானொளியில் நான் கண்டது , வழங்கப் படுவது ஆசீர்வாதம் அல்ல , ஆ'சீ'ர் வாதம் :)
பதிலளிநீக்குவருக ஜி இதெல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமே வருகைக்கு நன்றி
நீக்குபகிர்வு நன்று.
பதிலளிநீக்குஇந்த காணொளி முகநூலில் பார்த்திருக்கிறேன்... வேதனையான விஷயம்... கொடுமை...
வருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஇந்த வீடியோ க்ளிப்பை பேஸ்புக்கில் பார்த்து மனம் நொந்துதான் போனேன் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அங்குள்ள அனைவரையும் எரித்துவிடுவேன்
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே ஆத்திரம்தான் வருகிறது வருகைக்கு நன்றி
நீக்குசமூகத்தின் எதிர் மறை யதார்த்தங்கள்,,,
பதிலளிநீக்குதங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே
நீக்குஉங்கள் வரிகளை ரசித்தேன். காணொளி : சதியில் இவ்வளவு பெண்களா கூட இருப்பார்கள்? ஒருவேளை ஆனந்த அழுகையும், மயக்கமுமோ!
பதிலளிநீக்குபெண்களால் எதிர்த்திருக்க முடியாது என்று நினைக்கிறேன் இன்னும் ஆணாதிக்கம் இருக்கின்றது
நீக்குஆனந்த அழுகை தாலி கட்டிய பிறகு நிதானமாக வரவேண்டுமே நண்பரே
ஹை, பதிவுக்கு நான் காரணமா? எப்பூடி? ஆனால் சிந்தனைக்கு வித்திட்ட சிறந்த பதிவு.
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் இது எனக்கு அப்டேட் ஆகலை. கூகிளார் மறுபடி தன் வேலையைக் காட்டறார்னு நினைக்கிறேன். :)
வாங்ப பரவாயில்லையே உடனே வந்துட்டீங்களே....
நீக்குகூகிளார் மீது பாரத்தை போச்சு விட்டு பல பதிவுகளை விடுகின்றீர்கள்
தீபாவளிப்பதிவு 'கொடுத்துட்டு போங்க, அத்தான்' வரவில்லையே...
அருமையான வரிகள் சகோ. காணொளியை நானும் பார்த்திருககிறேன்,
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குகாணொளி மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது நண்பரே
பதிலளிநீக்குஆம் நண்பரே இன்னும் இது போன்ற அநீதிகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது,
நீக்குஒவ்வொரு கேள்வியும் குத்தீட்டியாகப் பாய்கின்றது...
பதிலளிநீக்கு(அது சரி!.. யாரையும் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டீர்களா?..)
காணொளி முன்பே Fb ல் வந்திருந்தது..
கருத்துக் குருடர்கள் திருந்துவது எப்போது?..
வாங்க ஜி தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குஇன்றுதான் இந்தக் காணொளி கண்டேன்.. திருமணம் என்பது வாழ்க்கைப் பயிர். மனதைப் பாதிக்கும் காணொளி. ஆனாலும், விதி (destiny) அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது, அட.. இது தெரியாமல் கல்யாணத்தின்போது அழுதேனே என்று எண்ணவும் வாய்ப்பிருக்கிறது. 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' என்ற பாட்டு ஞாபகம் வருகிறது.
பதிலளிநீக்குசினிமா கல்யாணங்கள் பொதுவாக, கணவன் படம் எடுத்து கடனாளியாக ஆகும்போது, தன்னையும், குடும்பத்தையும், தன்னுடைய சொத்தையும் பாதுகாத்துக்கொள்ள, பிரிவு நேர்கிறது. இதுதானா காரணம் நளினி-ராமராஜ், பார்த்திபன்-சீதா, ரேவதி-... திருமணங்களில் என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் இவைகள் காதல் திருமணம்.
வருக நண்பரே தாங்கள் சொன்னது போலவே அந்த சகோதரிக்கு நல்வாழ்வு அமையட்டும் அனைவரும் பிரார்த்திப்போம் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குi have read that some young women are scared of marriages...
பதிலளிநீக்குsome of them may be victims of CHILD ABUSE...
pshchological councelling should be given to them
HERE THE BRUTAL FAMILIES ARE KEEN ON FORCED MARRIAGE ONLY...JI
தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே
நீக்கு1 முதல் 16 வரை எல்லாமே சரி . நானும் பலரது திருமண வாழ்வினை அலசி ஆராய்ந்திருக்கிறேன் .
பதிலளிநீக்குகாணொளி ...........பல பெண்களால் ஒன்று செய்ய முடிவதில்லை ( ஃ பேஸ் புக்கில் பல ஜோக்குகள் மனைவிகள் நோஸ் கட் கொடுப்பது போல கணவர்கள் பாவம் என்பது போல வந்தாலும் யதார்த்தம் என்பது வேறு )
வருக சகோ உண்மையே... நடைமுறை யதார்த்தம் வேறுதான் வருகைக்கு நன்றி
நீக்குசில திருமணங்கள் இல்லாத ஒன்றான சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதால் பிரிந்துபோய் இருக்கலாம். பல திருமணங்கள் வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதால் பிரியாமல் இருக்கலாம்...
பதிலளிநீக்குவருக நண்பரே தாங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கலாம்.
நீக்குதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பர்
பதிலளிநீக்குவாழ்க்கை வாழ்வோரால் வாழப்படுகிறது என்பர்
வாழ்ந்தவர் தான் சான்று!
வருக நண்பரே அழகிய கருத்துரைக்கு நன்றி
நீக்குதிருமணம் என்பதே லாட்டரி போல் ஆகிவிட்டது. பல பெண்களால் ஆண்களின் வாழ்க்கை சீரழிந்து போய் இருக்கிறது அது போல் ஆண்களாலும் பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள்எதிலும் இருபாலாருக்கும் கவனம் தேவை
பதிலளிநீக்குவாஙக ஐயா மிகச்சரியான சொல்லாடல் அதிஷ்டம் வேண்டும் என்பதே உண்மை.
நீக்குஉலகத்தில் நடப்பவைகளைப் பார்க்கும் போது
பதிலளிநீக்குதிருமணம் கேள்விக் குறியாகவே உள்ளது.
தமிழ் மணம் - 5
உண்மை இப்பொழுது பெண்ணைப் பெற்றவர்கள் பயந்து கொண்டே வாழ்க்கின்றனர் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ
நீக்குஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை, ச்ச்சீ இவர்களெல்லாம் மனிதர்களா?
பதிலளிநீக்குகாட்டுமிராண்டிகள் வகை எள்று சொல்லலாம் நண்பரே
நீக்குமச்சான் உங்களுக்கு நிகர் தாங்கள்தான் என்று உணர்த்தும் பதிவு...
பதிலளிநீக்குமாப்பிள்ளையின் வருகைக்கு நன்றி
நீக்குவேதனை, சாதனை, சோதனை...அனைத்தையும் உங்களது பதிவுகளில் காணலாம் என்பதற்கு இது ஒரு சான்று.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஇரு மனம் இணைவதே திருமணம். கட்டாயக் கல்யாணம் இருவரது வாழ்க்கையையுமே சீரழித்துவிடும்.
பதிலளிநீக்குஅந்த காணொளியை பார்க்கும்போது அந்த பெண்ணின் நிலைமையை/ஆற்றாமையை எண்ணி பரிதாபப்படத்தான் தோன்றுகிறது.
வருக நண்பரே அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி
நீக்குஅத்தனையும் உண்மை.
பதிலளிநீக்குகாலம் எல்லோரையும் எல்லாவற்றையும் மாற்றவல்லது.
நம் குடும்ப அமைப்பு, திருமணப்பந்தம் இவற்றின் மகத்துவம் வெளிநாட்டினரின் வாழ்க்கை முறை அதுவும் நாகரீகம் வளர்ச்சி அடையாத ஆப்பிரிக்க நாடுகளைப் பார்த்தால் தான் புரியும்.
வருக கவிஞரே தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி
நீக்கு