இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 02, 2016

A மாற்றம்


கில்லர்ஜியின் டைரிக்கிறுக்கல்களிலிருந்து...

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழப்பழகிக் கொண்டால் ஏமாற்றம் இல்லாமல் வாழ்ந்து முடிச்சிடலாம் என்பது எனது கொள்கை இருப்பினும் என் வாழ்வில் மிகப்பெரிய அளவிற்கு நான் ஏமாந்ததாக உணர்ந்தது 09.01.2013 அன்று காரணம் 10 வருட எதிர்பார்ப்பு, ஏமாற்றம் எனக்கு புதிதல்ல ! அரேபியர்கள் எதற்கெடுத்தாலும் இன்ஷா அல்லாஹ் என்பார்கள் இதில் நான் முழுமையாக நம்பிக்கை வைத்ததில்லை இப்பொழுது அந்த வார்த்தையில் 100க்கு 150% நம்புகிறேன் ஆம் இன்ஷா அல்லாஹ் என்றால் என்ன ? இது ஒருஅரபு வார்த்தை இன்ஷா என்றால் ? நினைத்தால் என்று அர்த்தம். அல்லாஹ் என்றால் ? இறைவன் என்று அர்த்தம் அதாவது, இறைவன் நினைத்தால் என்று அர்த்தம், மொழிகளின் காரணமாக வார்த்தைகள்தான் மாறுகிறதே தவிற அர்த்தம் ஒன்றுதான். நான் வேலை செய்த, அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதும், சம்பளம் உயர்வதும் மேலாளர்களின் செயல் என்றுதான் நினைத்திருந்தேன், இல்லை நடந்த சம்பவங்களை பார்க்கும்போது இது இறைவன் செயல்தான் என்பது தீர்மானமானது.
எல்லா இடங்களும் இப்படித்தான், என்று நான் சொல்லவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு இடத்திற்க்கும் வேறுபடலாம்.
எனது அலுவலகத்தில் நடந்தது...
 வேலை இல்லாதவன்
வேலை செய்யாதவன்
வேலை தெரியாதவன்
இவர்களுக்கு(ம்) பதவி உயர்வு, சம்பளஉயர்வு, அவார்டும் கிடைத்தது.
அதே நேரம்...
வேலை உள்ளவன்
வேலை செய்பவன்
வேலை தெரிந்தவன்
இவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லையே காரணம் என்ன ?
தேர்வு முறை அறிவு வளர்ச்சிக்கு உட்பட்டதுதானா ? என்னைநானே கேட்டுக்கொண்டேன் பாதிக்கப்பட்ட வட்டத்திற்குள் நானும் இருக்கிறேன் என்பதால் மட்டுமல்ல நியாயம் செத்து விட்டதா ? என்னைவிட, பாலஸ்தீனிய எனது நண்பனுக்காக வேதனைப்பட்டேன் ஏனெனில் நான் சிறந்தவன் என்றால் (?) அவன் மிகச்சிறந்தவன் அப்படியானால் நடந்த தவறான செயலுக்கு காரணம் இறைவன் என்று நான் சொல்வதாய் அர்த்தமல்ல ! இறைவன் ஒருக்காலமும் தவறு செய்ய சாத்தியமில்லை இருப்பினும் உண்மையான உழைப்பிற்கு பலன் மறுக்கப்பட்டதற்க்கு காரணம் என்ன ?
அது நீ மறந்துவிட்ட, மறைத்துவிட்ட பழைய தவறுகளுக்கு இறைவன் கொடுத்த தண்டனை.
நானறியாமல் நானென்ன தவறு செய்தேன் ?

சாம்பசிவம்- 
நீர் மோண்ட இடம் உமக்குத்தானே தெரியும்.
காணொளி

38 கருத்துகள்:

  1. நடக்கும் சில விஷயங்களுக்கு காரண, காரியம் கண்டுபிடிக்க முடிவதில்லை! காணொளி அருமை. ஏதோ லாரிகளே ரயில் பெட்டிகளானது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. நண்பரே
    எல்லா நாட்டிலும் இதே நிலைதான்
    வேலை தெரியாதவன்
    வேலை செய்யாதவன்
    வேலை செய்கின்றவர்களைப் பற்றிக் குறைகூறியே
    நல்ல பெயர் எடுக்கிறான்
    வேலை செய்து கொண்டேஇருப்பவனுக்கு
    கடைசியில் கெட்ட பெயர்தான்
    அனுபவப் பூர்வமான உணர்ந்துள்ளேன்
    அதனால் பாதிக்கப்பட்டும் உள்ளேன்
    கவலை வேண்டாம் நண்பரே
    பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்காவிட்டாலும்
    நமக்கு என்றென்றும் நிம்மதி கிட்டும்
    ஆனால் மற்றவர்களோ நிம்மதி இன்றிதவித்துக் கொண்டே இருப்பார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரை நடைமுறை உண்மை பல இடங்களிலும் இப்படித்தான் மனநிம்மதி போதுமாதான் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. நலமா சகோ


    இப்படித்தான் எல்லா நாடுகளிலும் நடக்கிறது....

    எதிர் பார்க்கக்கூடது என்றாலும் மனம் கேட்பதில்லை சில நேரங்களில்...

    காணொளி....அழகு
    தம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லருக சகோ நலமே....
      மனம்தானே எல்லாவற்றுக்கும் காரணம் வருகைக்கு நன்றி.
      தங்களது பதிவுகளை காணோமே.... ஏன் இடைவெளி ?

      நீக்கு
  4. வேலை செய்பவனைவிட வேலை செய்பவன் போல நடிப்பவனுக்குதான் அவார்டும் சம்பள உயர்வும் உண்டு, இது எழுதப்படாத உலக நியதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தமிழரே பல இடங்களிலும் இப்படித்தான்.

      நீக்கு
  5. >>> நீர் மோண்ட இடம் உமக்குத் தானே தெரியும்!..<<<

    ஆமாங்க!..

    கும்பிடு குருசாமி.. யா இருக்க எனக்குப் புடிக்கிறதில்லை..
    நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தால் அவனுங்களுக்குப் புடிக்கிறதில்லை!..

    அந்த நாய் நம்மைக் கடித்து விடக்கூடாது என்று தான் -
    தோ..தோ.. - என்று சொல்லியபடியே - அந்த நாயைக்
    கடக்கின்றேன்..

    ஆனாலும் -

    மேலே விழுந்து பிடுங்கி வைக்கிறது.. என்ன செய்வது!?..

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு இங்கே எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள்!..

    நீங்கள் அரபிகளிடம் பணி புரிவதால் நன்றாகவே தெரிந்திருக்கும்..

    நேற்று தலைமையிடத்தில் அரை மணி நேரத்தில் ஆக வேண்டிய வேலை நான்கு மணி நேரம் கழித்து நடந்தது..

    அரபிகளுக்கு அடிமைகளையும் அடிவருடிகளையும் மிகவும் பிடிக்கும். அதை விட ஏனென்று கேட்காதிருப்பது மிக மிக பிடிக்கும்..

    என செய்ய!..

    நம்ம ஜாதகப்படி அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை!..

    ஏன் என்றால் நமக்கெல்லாம் முதுகெலும்பு இருக்கின்றதாம்!..

    ஆனால், என்ன.. நோயற்ற வாழ்வு!.. படுத்தால் நிம்மதியான தூக்கம்!..

    அது போதாதா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி விரிவான விளக்கமான கருத்துரை நன்று நன்றி

      நீக்கு
  6. மச்சான் இதைத்தான் சந்திரபாபு சொன்னார் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லைனு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மாப்ளே...
      சரி இப்ப நான்... புத்திசாலி இல்லையா ? இல்லை வெற்றி வெற்று விட்டேனா ?

      நீக்கு
  7. ji this is o.k
    ... but there are instances that you will be branded as DISHONEST and NOT RELIABLE... when you actually gave your EVERYTHING to your company....
    INSHHAA ALLAH

    பதிலளிநீக்கு
  8. பல சூழலில் உழைப்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அதனை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். தொடர்ந்து பயணிப்போம் என்ற நிலையில் பயணிக்கிறேன். அதையே நீங்களும் செய்யலாம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான் அந்த வழியில்தான் என்றும்... நிச்சயமாக இறுதிவரை...

      நீக்கு
  9. உண்மையான உழைப்புக்கு நிச்சயம் வெற்றி உண்டு .
    சிலநேரங்களில் நம் நினைப்பை மீறி சில காரியங்கள் நடைபெறுகிறது அதற்கு காரணம் நமக்கு தெரியாது, எப்போதும் போல் மகிழ்ச்சியாக பணிகளை செய்து கொண்டு இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. Promotion is the process of elimination என்பார்கள். ஆனால் உண்மையில் அது சிலசமயம் நன்றாக உழைப்பவர்களை Eliminate செய்துவிடும். . கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என எண்ணிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் தங்களது அனுபவ பாடம் உண்மையே...

      நீக்கு
  11. சில சமயங்களில் இப்படித் தான் நடக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும் என்று தான் போக வேண்டும். காரண, காரியங்களே தெரியமல் பல விஷயங்கள் இப்படி நடப்பது உண்டு. நமக்குக் கொடுப்பினை இல்லைனு நான் நினைச்சுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  12. கவலைப் படாதே சகோதரா !
    காணொளியில் கண்ட காட்சி ,ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் :)

    பதிலளிநீக்கு
  13. உண்மை ஒரு நாள் வெற்றி பெறும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மை நலமா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. எல்லா இடத்திலும் இதுதானே நிலை...
    கவலை வேண்டாம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  15. வேலை நன்கு தெரிந்து உண்மையாக வேலை செய்வது மட்டும் போதாது நண்பரே. அந்த குணம் நீங்கள் நல்ல வேலைக்காரர் என்று மட்டுமே காட்டும். அதனால் உங்களை அந்த வேலையிலிருந்து மாற்ற மாட்டார்கள்.

    நீங்கள் மனிதர்களை மேய்க்க முடிந்தவர் என்று காட்டவேண்டும். அப்போதுதான் பதவி உயர்வு கிடைக்கும். அதாவது சமயத்திற்குத் தகுந்த மாதிரி வேஷம் போட முடியுமா? அதுவே முதல் தகுதி. மேலதிகாரிகளை காக்கா பிடிக்கத்தெரியுமா? அது இரண்டாவது தகுதி. தக்க தருணத்தில் தகுந்த ஆட்களைப் பிடித்து உங்கள் காரியங்களை நிறைவேற்றத்தெரியுமா? அது மூன்றாவது தகுதி.

    அடிப்படையாக இந்த மூன்று தகுதிகள் இல்லாதவர்கள் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லாதவர்கள். கேரளாக்காரன் இந்த மூன்றிலும் வல்லவன் என்பதை அறிந்திருப்பீர்கள்.

    நானும் ஓரளவு இந்தத் தகுதிகளைப் பெற்றிருந்ததினால் என் பதவிக் காலத்தில் பல சலுகைகளைப் பெற்று பதவி உயர்வுகளையும் பெற்றேன்.

    மனச்சாட்சி,நீதி, நியாயம், நேர்மை என்று பினாத்திக்கொண்டு திரியக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி
      முத்தாய்ப்பான அனுபவக்கருத்தை அழகாக பகிர்ந்தீர்கள் இது இனியெனும் பலருக்கும் பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் விரிவான கருத்துரைக்கு மீண்டும் நன்றி ஐயா

      நீக்கு
  16. அங்கு மட்டுமல்லா, இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இன்ஷா அல்லாஹ் தான்!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. பகவானே சொல்லிவிட்டாரே..ஓடமும் ஒருநாள்(ஒருநாளுக்கு மட்டும்)வண்டியில ஏறுமுன்னு.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஒருநாள் மட்டும்தானே....

      நீக்கு
  18. ஒ ...
    காணொளி எந்த இடத்தில் எடுக்கப் பட்டது ?
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே முகநூலில் கிடைத்த பழைய காணொளி இந்தியாதான்.

      நீக்கு
  19. உலகம் முழுக்கவே இப்படித்தான் கில்லர்ஜி! வேலை செய்யத் தெரிந்தால் மட்டும் போதாது. கொஞ்சம் சோப் போடவும், வெண்னை தடவவும் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் இயலாத காரியம்....இது எழுதப்படாத சட்டம்!

    பதிலளிநீக்கு
  20. காணொளி முன்பே பார்த்த நினைவு இருக்கிறது உங்கள் பதிவொன்றில் சரியா...

    பதிலளிநீக்கு