இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 11, 2016

உயர்ந்த கொள்கை


கவுண்டமணி இவரைத் தெரியாதவர்களும் உண்டா செந்திலை மானபங்கப்படுத்திப் பேசியே உயர்ந்தவர் அவரும் மானபங்கப்பட்டே உயர்த்திக் கொண்டவர் இருவருமே வேறு வழிகளின்றி உடன் பட்டுக்கொண்டவர்கள் காரணம் இவர்களுக்கு வடிவேலுவைப் போல தனியாக நகைச்சுவை கொடுக்கத் தெரியாது இருப்பினும் மக்களிடம் இவர்களுக்கும் அமோக வரவேற்பு இருந்தது காரணம் வேறு நடிகர்களுக்கு பஞ்சம் அதன் காரணமாக செந்தில் 1990-லேயே கோடம்பாக்கத்தில் 200 கடைகள் கட்டி விட்டவர் அது அவரது உழைப்புக்கு கிடைத்த ஊதியம் இன்னும் உயரட்டும்.

வடிவேலு வந்தார் தனது திறமையை நிரூபித்தார் தயாரிப்பாளர்களால் இருவரும் ஓரம் கட்டப்பட்டார்கள் காரணம் திரைப்படத்தில் மட்டுமல்ல யதார்த்தத்திலுமே கவுண்டமணி யாரையும் மரியாதையாக பேசுவதில்லை வடிவேலு தன்னையே தாழ்வாக பேசிக்கொண்டு நடித்து முன்னேற்றம் அடைந்தார் இதுவே உண்மை அது தொடராமல் போனதற்கு மற்றொருவர் காரணம் ஆம். நடிகர் வடிவேலு அவர்களின் தலையில் மண் அள்ளிப்போட்டது அரசியல்வாதி வடிவேலு அதன் பிறகு அந்த இடத்துக்கு சந்தானம் வந்தாலும் நிலைக்கவில்லை காரணம் சந்தானத்தின் குணமும் கவுண்டமணியின் குணமும் ஒன்றே... இந்த சூழலில் விவேக்கின் நிலைப்பாடு வேறு அவர் கலைவாணர் N.S. கிருஷ்ணனின் வழி.

கவுண்டமணியிடம் எனக்குப் பிடித்த சில நல்ல குணங்களும் உண்டு அது பாராட்டு விழாக்களை அவர் ஏற்றுக் கொள்வதில் நான் நடித்தேன் பணம் பெற்றுக்கொண்டேன் இதற்கு பாராட்டு விழா, விருதுகள் அவசியமற்றது என்ற கொள்கைவாதி இதை ஆரம்பம் முதலே புறக்கணித்து வந்தார் கார்ப்பிரியர் புதிதாக எந்தக்கார் இறக்குமதி ஆனாலும் உடன் வாங்கி விடும் பழக்கம் உள்ளவர் மேலே புகைப்படத்தில் உள்ள இந்த வசனத்தால் எனக்கு அவர்மீது இன்னும் மரியாதை உயர்ந்து விட்டது இந்த மாதிரி எல்லா திரைப்பட நடிகர்களும் இருந்தால் தமிழக இளைஞர்கள் தனது வாழ்க்கை மீது பிடிமானம் வைத்து உயரத் தொடங்கி விடுவார்கள்.

வாழ்க ! கவுண்டமணி அவர்களின் கொள்கை.
சமூக தவறுகளை சுட்டிக்காட்ட தயங்குவதில்லை
பொது நன்மைகளை பாராட்டவும் தாமதிப்பதில்லை.
 தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

46 கருத்துகள்:

  1. புரிந்து உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  2. பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டியிருக்கிறீர்கள்.

    போற்றுதலுக்குரியது உங்களின் நடுநிலை உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்றுமே நடுநிலையாளனே குடும்பத்தில்கூட ஆகவே நான் பலருக்கும் கெட்டவன்.

      நீக்கு
  3. கவுண்டமனி பாராட்டிற்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  4. எம் ஆர் ராதா பற்றிச் சொல்ல வந்தேன். நீங்களே அதைக் கீழே போட்டிருக்கிறீர்கள். வருமான வரி கட்டுவதில் எப்படி நடிகன் ஏமாற்றுவான் என்றும் ராதா பேசியிருப்பார்.

    செந்தில் இல்லாமல் சத்யராஜ் போன்றோருடன் நடிக்கும்போது கூட கவுண்டரை ரசிக்க முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒருசில படங்கள் இருக்கின்றது உண்மையே நண்பரே...

      நீக்கு
  5. யாருக்கும் பயப்படாத நடிகரும் கூட...

    பதிலளிநீக்கு
  6. அட, புதிய தகவல் ..உண்மைதான் சகோ, மரியாதை வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலம்தானே...? வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் ஏதோ தங்களுக்கு வழிகாட்ட வந்தவர்கள் போல் நினைப்பதால் தான் இந்த நிலை. நடிகர் கவுண்டமணி அவர்கள் இந்த உண்மையை சொன்னதற்கு அவருக்கு வாழ்த்துகள்! பதிவிட்ட தங்களுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  8. இதை கவுண்டமணி மேடையில் பேசினாரா ? இல்லை ,படத்தில் பேசினாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கவுண்டமணி அவர்கள் திருமண விழா ஒன்றில் பேசியதை முகநூலில் பார்த்தேன் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  9. இரண்டு படங்களிலும் உள்ள
    கவுண்டமணி, M.R.ராதா ஆகிய
    இருவரது கருத்தையும் ஏற்று
    தன் வாழ்வை உயர்த்துபவர்
    எவரோ - அவரே
    சிறந்த மனிதர் என்பேன்!

    உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், தகவலுக்கும் நன்றி

      நீக்கு
  10. நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு தவிர மற்றவர் நகைச்சுவை அவ்வளவாக ரசித்ததில்லை. நீங்கள் சொல்வதுபோல் வடிவேலு தனி ரகம். பார்த்திபனோடு சோபிக்கும் அளவு மற்றவற்றில் சோபிப்பதாகத் தெரியவில்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அதெல்லாம் பழைய காலம் இனி அப்படி எதிர் பார்க்க முடியாது

      நீக்கு
  11. கவுண்ட மணி செந்தில் மறக்க முடியாதது கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி , ரஜனியுடன் முதல் ஷோ டிக்கெட்
    வாங்கி விஜய்சாந்தியிடம் மாட்டிக்கொள்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்ல பாப்புலரான கரகாட்டக்காரன், மன்னன் திரைப்படக் காட்சிகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. கவுண்டமணி செந்தில் பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  13. சிரித்ததும், சிந்தித்ததும்.

    அருமையான பதிவு நண்பரே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை நன்றி நண்பரே...

      நீக்கு
  14. நடிகர்களை நடிகர்களாகவே பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. கவுண்டமணியின் பஞ்ச் டயலாக் அருமையாக இருக்கும்! அவர் சொல்வது உண்மை! அப்படி இருந்தால் தமிழகம் உருப்படும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான வார்த்தை வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. பெயரிலேயே சாதியை கொண்டவர் என்பதுதான் நான் தெரிந்து கொண்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா உங்களது பார்வை மாறுபட்டது நண்பரே

      நீக்கு
    2. வலிப்போக்கன்... கவுண்டமணி கவுண்டர் இல்லை. அதற்குப் பெயர்க்காரணம் உண்டு. நீங்கள் எழுதியிருப்பதால் சொல்லுகிறேன்.. அவர் கோயமுத்தூர் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர் (னு எனக்கு என் நண்பன் சொல்லியிருக்கிறான்)

      நீக்கு
  18. ஆகா நச் பதிவு தோழர்
    தொடர்க
    தம +

    பதிலளிநீக்கு
  19. செமை தோழர்..
    உங்கள் பதிவுகளில் ஸ்டார் ரேட்டிங் பதிவு இது
    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. செந்தில் - கவுண்டமணிக்குள்... அது என்னாது... இப்ப டிவியில் ஆடுறவனுகளைப் பார்த்து சொல்றானுங்களே.... ஆங்... கெமிஸ்ட்ரி அது நல்லா வேலை செஞ்சது.... செந்தில் கவுண்டமணியை அடிப்பது போல் நடிக்க மறுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்...

    வடிவேலு நாள் கூலி பெற்று நடித்து மாளிகை கட்டியவர்... தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கிட்டாலும் இன்னும் திமிர் குறையலை...

    சந்தானம் எனக்கு எப்போதும் பிடிக்காத நடிகன்...

    விவேக் வழி தனி வழி...

    சூரி கொஞ்சம் பரவாயில்லை....

    ஆனாலும் கவுண்டமணி - செந்தில் இடம் இன்னும் வெற்றிடமே...

    நல்ல பகிர்வு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே விரிவான கருத்துரை தந்தீர்கள் நன்று

      நீக்கு
  21. நகைச்சுவை என்று பார்த்தால் பழைய படங்கள் தரமாக இருக்கும். கவுண்டமணி செந்தில் இருவரும் புகழ்பெற்றார்கள்...லாரல் ஹார்டி என்று கூட சொல்லப்பட்டார்கள். ஆனால் கவுண்டர் ரொம்ப சத்தமாகப் பேசுவதும் மாற்றுத் திறனாளிகளைக் கூடச் சில சமயம் கலாய்ப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு சில நன்றாக இருக்கும். வடிவேலு தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டார். சந்தானம் எல்லாம் ஏனோ பிடிக்கவில்லை சுத்தமாகப் பிடிக்கவில்லை....இப்போதெல்லாம் நகைச்சுவை ம்ம்ம்ம் சொல்வதற்கில்லை...

    கவுண்டரின் கருத்து அருமை...

    பதிலளிநீக்கு