இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 08, 2016

பால் பாய்சன்


கல்லல் கல்யாணராமனுக்கும், கல்யாணிபுரம் கல்யாணிக்கும் கல்யாணம் முடிந்து இன்று வெள்ளி விழா 25 ஆம் ஆண்டு இதுவரையில் குழந்தைகளுக்கு பஞ்சமில்லை ஆனாலும் ஆசைக்கும் பஞ்சமில்லையே கட்டிலில் மல்லாந்து படுத்துக் கிடந்த கல்யாணராமனுக்கு பள்ளி கொள்ள வழியில்லை என்று கல்யாணி மீது கோபமாக இருந்தவரை மேலும் கோபத்தைக் கொடுத்தது விட்டத்தில் இருந்த பல்லி ஆம் இவரைப் பார்த்து சிரித்து எள்ளி நகையாடி சொல்லி வைத்தது போலவே இவரின் வாயில் ஆய் போயதே காரணம் சட்டென எழுந்தவர் விஜயகாந்த் மாதிரி தூ தூ என்று கழிவறைக்குப் போய் வாய் அலம்பி வந்தவரிடம் சத்தம் கேட்டு.. 

என்னங்க ? 
என்று வந்த கல்யாணியை அடிக்கள்ளி வந்துட்டியா ? என்றவரை 
என்னாங்கிறேன் காடு வா வானுங்குது, வீடு போ போனுங்குது ஏதாவது கோல்மால் செஞ்சீங்க மூத்தவன்ட்ட சொல்லி மொத்த விட்ருவேன் ஜாக்கிரதை 

மனைவி ஆட்காட்டி விரலைக் காட்டிச் சென்றதும் ச்சே அவனுக்கு சொல்லி விட்டாள்ல் பயபுள்ளே கில்லி மாதிரி பறந்து வந்து அடிப்பானே மீண்டும் படுத்தவருக்கு மேலே நேரே இவரைப் பார்த்து பல்லி ச்சுச்சூ என்றதும் நம்மளை இதுவும் நக்கல் செய்யுதே சட்டென கீழே கிடந்த கோடரியை எடுத்து வீசினார் வீச்சு விலா எலும்புக்கும், தொடைப் பாகத்துக்கும் நடுவில் விழ வெட்டுப்பட்டு கீழே விழுந்த பல்லி துள்ளி துடித்து அகால மரணம் அடைந்தது பள்ளி கொள்ள வழியில்லாத கல்யாணராமன் பல்லியை கொல்லவும் மனம் சமாதானமாகியது உறக்கம் வராததால் உடன் மனதில் தோன்றிய ஹைக்கூ கவிதை ஒன்றை எழுதினார்.

பால் கொண்டு வருவாளென நானிருந்தேன்
 பாவையவள் பாய்சன் போன்ற வார்த்தையை
கொண்டு வந்தாள் மனதை கொன்று சென்றாள்
நான் பள்ளி கொள்வோம் என்றிருக்க, பல்லியை
கொல்லும் பாவத்துக்கு ஆளாக்கி சென்றாயடி
கள்ளி உன் மனமென்ன கல்லா ? பாலா ?

கவிதையை எழுதியவர் நாளை நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் சிபாரிசு மூலம் பாக்யாவில் வெளியிட வைப்போம் என்று நினைத்தவருக்கு தூக்கம் கண்ணைச் சொக்க பழைய கால நினைவுகளுக்குள் மூழ்கி உறங்க கல்லூரி கால முன்னாள் காதலி கனகா வந்தாள் கனவில்.

பாவம் கனவிலாவது சந்தோஷிக்கட்டும் நான் போறேன் அடுத்த பதிவெழுத...

19 கருத்துகள்:

  1. பெயரில்லா12/08/2016 2:05 AM

    ஒரே சிரிப்பத் தான் இதைவாசித்து சகோதரா.
    பாயாசம் நல்ல ருசியாக இருக்கும் போல....

    Thaமிழ் மணம் -1..

    பதிலளிநீக்கு
  2. ஹாஹா பல்லியைக் கொன்னு பாக்யாவிற்குத் திட்டமா?

    பதிலளிநீக்கு
  3. ஹா... ஹா... ஹா...

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. தலைப்பு சூப்பர். இதுபோன்ற நகைச்சுவைக் கவிதை படித்து நாட்களாயிற்று

    பதிலளிநீக்கு
  5. பால் பாயாசம் கேள்விப் பட்டிருக்கிறேன்
    பால் பாய்சன்
    ஆகா
    தம +1

    பதிலளிநீக்கு
  6. அடக் கொடுமையே..
    இருந்த நிம்மதியும் போய்விட்டதா?..

    பதிலளிநீக்கு
  7. பல்லியைக் கொல்ல கோடரி எதற்கு ?ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு .......

    பதிலளிநீக்கு
  8. வெள்ளி விழா கொண்டாடினாலும் ஆசைக்கு வயதில்லையே.....

    பதிலளிநீக்கு
  9. பூப்பறிக்க கோடரி எதற்கு என்ற நீங்கள் பல்லியை அடிக்க கோடரியைத் தூக்கவேண்டுமா?
    கனவில் வந்த கனகா என்ன சொன்னாள் என்பது அடுத்து கவிதையாய் வருமா?

    பதிலளிநீக்கு
  10. நானும் வேற என்னமோ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  11. இதென்ன பல்லி துள்ளி விழும் பலனா :)

    பதிலளிநீக்கு
  12. இரசித்தேன் ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
  13. ஹாஹாஹா ரசித்தேன் நண்பா! என்னை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி! நீங்களும் பாக்யாவில் எழுதும் நாள் விரைவில் வர வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  14. ஹாஹா.... விரைவில் பாக்யாவில் உங்கள் ஆக்கம் வெளிவரட்டும்!

    பதிலளிநீக்கு
  15. நான் தப்பாகப் படிக்கிறேனோ என நினைத்தேன். இல்லை..இல்லை..உங்கள் நடையே...என்று பின்னர் தெளிவாகிக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  16. பால் பாய்சன் ரசித்தேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
  17. பால் பாய்சன் ஹஹஹஹ்...ரசித்தோம்...

    பாக்யாவில் உங்கள் எண்ணங்கள் பாக்யாவில் வெளிவர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. நானும் தப்பாகப் படிக்கிறேனோ எனச்
    சந்தேகித்து பின் கண்ணாடியைச்
    சரிசெய்து கொண்டு படித்தேன்
    வழக்கப்போல் சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு