இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 07, 2017

குற்றம் குற்றமே...


ந்த இடம் மேலோகம் என்று பூலோகத்தில் சொல்வோமே.. அதைப் போல் உணரப்பட்டேன், நிறைய மனிதர்கள் கூட்டம் நின்றிருந்தது இருபாலரும் மட்டுமல்ல குழந்தைகள் உள்பட ஆனால் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதை சொல்லத் தெரியவில்லை என்பதைவிட முதலில் நானே உணரவில்லை என்பதே மிகச்சரியாகும் நாம் எதில் நிற்கிறோம் என்பதும் தெரியவில்லை சுற்றிலும் சாம்புராணி புகை வந்து கொண்டு இருந்தது கூடவே நல்லதொரு நறுமணம். சொல்லப்போனால் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற புராண திரைப்படங்களில் பார்த்திருப்போமே அதைப் போன்றே Setting System.

எனது மனம் வழக்கம் போலவே குழம்பினாலும், இது ஏதோ நம்மைப் படைத்தவனிடம் வந்து நிற்கிறோம் நாம் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளோம் என்பது மட்டும் புரிய ஆரம்பித்தது இருப்பினும் மனதின் ஓரத்தில் சிறிய பயம் எட்டிப் பார்த்தது ஆனால் என்னுள் வாழும் ஒருவன் (அவன்தாங்கோ... மனசாட்சி) தைரியம் கொடுத்தான் ஏன் பயப்படணும் ? நாமதான் அரசியல்வாதி இல்லையே, நாமதான் சாமியார் இல்லையே, நாமதா... திடீரென சிந்தனை நிறுத்தப்பட்டது காரணம் கில்லர்ஜி, கில்லர்ஜி, கில்லர்ஜி 3 முறை ஏதோ நீதி மன்றத்தில் கூப்பிடுவதுபோல் குரல் மட்டும் கேட்க சட்டென அந்த மேடையில் நிறுத்தப்பட்டேன் இந்த இடத்தில் நிறுத்தியது யார் ? மனம் குழம்ப.... அசிரீரி குரல் கேட்டது.

யாம் உம்மைப் படைத்தவன் விசாரணைக்குப் பிறகு உனக்கு சொர்க்கமா ? நரகமா ? என்று தீர்மானிக்கப்படும் எமது கேள்விகளுக்கு பதில் கொடு.
நான் கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டேன்....
முதல்ல நீங்க வெளியே வந்து சொல்லுங்க ?
சுற்றி நின்றவர்கள் திகைத்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள், சிறிது நேரம் அமைதி ஒருவேளை ‘’அந்தக்குரல்’’ பார்ட்டியும் திகைத்திருக்க வேண்டும் மீண்டும் குரல்.....

இங்கு வந்தவர்களில் முதன் முறையாக எம்மிடம் கேள்வி கேட்டது நீர் மட்டுமே....
’’ஹா ஹ் ஹா ஹா ஹ் ஹா’’

ஏன்... சிரிக்கின்றாய் ?
இப்பத்தான் தெரியுது இங்கே வந்தவங்க எல்லோருமே தப்பு செய்துருக்காங்க, அதனாலதான் பயந்து போய் கேள்வி கேட்கவில்லை.

உமது தவறுகளும் இப்பொழுது எடுத்து வைக்கப்படும்.
நான் என்ன தவறு செய்தேன் ? நான் அரசியல்வாதியும் கிடையாது, ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டும் கிடையாது யாருடைய பணத்தையும் சுருட்டியதில்லை, சினிமாவில் ஒரு மாதம் நடித்து வேலை செய்து விட்டு கோடிக்கணக்கில் அநியாயமாக சம்பளம் வாங்கினேனா ? இல்லை கிரிக்கெட் விளையாட்டில் கிடைத்த பெயரை வைத்து விளம்பரப் படங்களில் 5 நொடிக்குள் வந்து போகும் காட்சியில் நடித்ததற்காக பல லட்சங்கள் சம்பளம் வாங்கினேனா ?
இதோ இந்தக் காட்சிகளுக்கு பதில் சொல்.

திடீரென அந்தரத்தில் LED Screen போல் ஒன்று தெரிய அதன் மேல் பாகத்தில் SAMSUNG என்று எழுதியிருக்க அதில் திரைப்படம் போலவே ஓடியது.

நான் தி கிரேட் தேவகோட்டை சிவரக்கோட்டையார் வீதியில் கந்தன் கருணை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடந்து வருவாரே அதைப்போல் அழகாக நடந்து வருகிறேன் எனது கால்கள் மட்டும் ஸ்ரீராம் அவர்களின் திறமையால் (வலைப்பதிவர் ஸ்ரீராம் அல்ல, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம்) யானைக்கால்கள் போல பெரிதாக காண்பிக்கப்படுகிறது எறும்பு பார்த்திருப்பீங்க அது பழைய காலங்கள்ல கிராமங்களில் கம்மங்கஞ்சியை உருண்டையாக உருட்டிப் போடுவார்களே அந்த அளவில் அதுவும் ஊர்ந்து போகிறது நான் அதை கவனிக்காமல் மிதிக்க அது நசுங்கியதுகூட தெரியாமல் நான் M.K.T in வதனமே சந்த்ர பிம்பமோ... மலர்ந்த சரோஜமோ வதனமே...... சந்த்ர பிம்பமோ என்று சிவகவி பாடலை பாடிக்கொண்டு வருகிறேன் வீடு வருவதற்க்குள் 17 எறும்புகளும், வீதியை கடந்து போன 4 புழுக்களும், நசுங்கியது வழியில் ஓரமாய் ’’இருந்து’’ கொண்டிருந்த பையனைக் கிளப்பிவிட்டு லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பன்றியை நான் ஒரு மிதி மிதித்து விட்டு வருகிறேன், இடையில் மாட்டு வண்டிவர ஒதுங்கிய நான் சாக்கடையோரம் முளைத்திருந்த புல்களை மிதிக்கும்போது அவைகள் துவண்டு விழுந்து மடிந்து விடுகிறது, இது போதாதென்று நிழலுக்காக சும்மா படுத்துக் கிடந்த நாயை கல்லெடுத்து எறிய நாய் WEEL என்று ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு ஓடுகிறது... சட்டென Screen மறைய.... எனக்கு வியர்க்க ஆரம்பித்தது அசிரீரி குரல் கேட்டது.

பார்த்தாயா ?
என்னங்க இது, எறும்பு போறதையெல்லாம் எப்படி பார்க்க முடியும் ? என்னோட கண்ணுக்குத் தெரியாதே...

ஏன் தெரியாது ? நீ நடக்கும்போது காலணி போட்டு மிதித்து இருக்கின்றாய், எறும்பு, புழுக்களை வதைத்து விட்டு நீ வதனமோ என்று நக்கலடித்து பாடுகிறாய். சரி எதற்காக நாயை கல்லெடுத்து எறிந்தாய் ? எதற்காக பன்றியை மிதித்தாய் ? இன்னும் உனது மற்ற உயிர் வதை காட்சிகளும் இருக்கிறது, மூட்டைப்பூச்சி, கொசு, ஓணான், தவ....
ஐயா சாமி மன்னிச்சுடுங்க இனிமேல் ரோட்டுல நடக்ககூட மாட்டேன் தவழ்ந்து போறேன்.

இனி நீ பூமிக்கு போனால்தானே ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சீ வாயை மூடு என்ன ? சின்னப்புள்ளத்தனமா இருக்கு, இதுவரை உமது வாழ்நாளில் இரண்டு கோடியே, பதிமூன்று லட்சத்து, அறுபதாயிரத்து, முன்னூற்றி எண்பத்து நான்கு சிற்றெறும்புகளும், நான்கு கோ...
ஐயா சாமி உங்க கணக்கே வேண்டாம் சாமி எதைச் சொல்லப்போறீங்க, மூட்டைப்பூச்சியா இருக்கும், இல்லைனா கொசுவா இருக்கும், இனிமேல் கண்டிப்பாக டார்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள்கூட வாங்க மாட்டேன் சாமி.

யாம் பூமியை படைத்தது அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்க்கே அவைகளுக்காகவே பூமியை மேடு பள்ளமாக அமைத்தோம் மானிடர்கள் இயந்திரம் கொண்டு சமப்படுத்துகின்றீர்கள் ஆறு, குளம், அருவி, ஊரணி, கடல் என யாம் அமைத்திட நீங்கள் பூமாதேவியை துளையிட்டு ஆழ்கிணறு என்று வதைக்கின்றீர்கள்.
ஐயா சத்தியமா எனக்கும், இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க அது விஞ்ஞானிங்க படிச்சுப்புட்டு சும்மா இருந்து தொலையாம, எதையாவது கண்டு புடிச்சதுங்க.

யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே...
ஐயா இதுக்கு என்னதாங்க, முடிவு ?

உமக்கு மிகப்பெரிய தண்டனை இருக்கிறது.
இதுக்கே மிகப்பெரிய தண்டனையினா ? என்னோட பக்கத்து வீட்டுக்காரன் கரீம்பாய் கறிக்கடை வச்சுருக்கான் தினம் மூணு ஆட்டை கவுத்திப்போட்டு அறுக்கிறானே... அவன் கதியெல்லாம் ?

மற்றவர்களைப்பற்றி, குறை சொல்ல உமக்கு தகுதியும், உரிமையும் இல்லை.
ஐயா சாமி உங்க கால்ல வேணா விழுறேன் என்னை விட்டுறுங்க, எங்கிட்டாவது மனுஷன் அண்டாத காட்டுல போயி தண்ணியைக் குடிச்சு பொழைச்சுக்கிறேன்.

ஹூம் மனிதர்கள் அனைவரும் பூமியில் விதம் விதமாய் விழுந்து வணங்குகின்றீர்களே அதனால் எமக்கு பயன் என்ன ? மனிதனாக படைத்தேனே அதற்கு கைமாறாக மனிதநேய மனிதனாக வாழ்வில் ஒரு நாளாவது வாழ்ந்தீர்களா ?
ஐயா சாமி இனிமேல் எந்த முறையில வணங்கணும்னு சொல்லித்தாங்க சாமி அது படியே எல்லோருட்டையும் சொல்றேன்.

எத்தனை தூதுவர்களை பூமிக்கு அனுப்பினோம், யாராவது செவி சாய்த்தீர்களா ?
சாமி எனக்கிட்டே சொல்லுங்க சாமி என்னோட www.killergee.blogspot.com websiteடில், போட்டு உலகம் பூராம் உள்ள மக்கள் கண்டிப்பாக படிச்சு தமிழ் மணம் ஓட்டும் போடணும் இல்லைனா விரலில் நகச்சுத்தி வரும்னு நீங்க சொன்னதா சொல்றேன்.

ஹூம் மீண்டும் என்னிடமே விஞ்ஞானமா ? அதுவும் நான் தமிழ் மண ஓட்டு போட சொன்னதாக பொய்யுரை யாரங்கே... இந்த ஜடத்தை தூக்கி அந்தக் குழியில் போடுங்கள்.
எந்திரன் சினிமாவில் நடித்த ரோபோட்கள் மாதிரி இரண்டு நான் கதறியதை காதில் வாங்காமல் மிகவும் சுலபமாக என்னை தூக்கி கொண்டு போய் அதன் முனையில் நிறுத்தியது கீழே குனிந்து பார்த்தவன்.....


‘’அய்யோ ஆத்தா’’ என்று அலற...
எனக்கு பக்கத்தில் படுத்துக் கிடந்த மகன் தமிழ்வாணனும், மகள் ரூபலாவும் திடுக்கிட்டு மிரண்டு போய் எழுந்து என்னாச்சு ? என்றார்கள். நேரம் 03.48 am.

காணொளி

50 கருத்துகள்:

  1. ஆகா
    இறைவனையே வெளியே வா
    முகம்காட்டு என ஆணையிட்டுள்ளீர்கள்
    ஒருவேளை தங்களது முகம் மறைக்கும் மீசையினைப் பார்த்து
    வெளியேவராமல் அசரீரியாகவே பேசியிருக்கலாம்
    தேவகோட்டையைப் பார்த்து தேவர் கோட்டையே நடுங்கியிருக்கிறது
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. ஹா... ஹா...

    நீங்களும் ஒரு தூதுவன் தான் ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி வெளியே சொல்லாதீங்க என்னை சாமியாராக்கி விட்ருவாங்கே...

      நீக்கு
  3. உணரப்பட்டேன் என்பது சரியான வார்த்தை அல்ல! நீங்கள் சொல்ல வரும் அர்த்தத்துக்கு உணர்ந்தேன் என்பதே சரி!

    //அதன் மேல் பாகத்தில் SAMSUNG என்று எழுதியிருக்க//

    ஹா..... ஹா..... ஹா... இதுல கம்பெனி பேர் வேற!!!

    //(வலைப்பதிவாளர் ஸ்ரீராம் அல்ல, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம்)//

    ஹா.... ஹா... இங்கே எனக்கு இடமில்லையா!

    ஐயா சாமீ... நான் எந்தத் தளத்திலும் தமிழ்மணம் வாக்குப் போடாமல் போனதே இல்லை! (அப்பாடா.... எனக்கும் இதை எல்லோருக்கும் [மறுபடி] சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது!!)

    பதிவை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எங்கேயெல்லாம் விளம்பரம் செய்யிறாங்கே... பார்த்தீங்களா ?

      உங்களுக்குத்தான் ஒளிப்பதிவு தெரியாதே...

      நீங்கள் அனைவருக்கும் ஓட்டு போடுவது உலகறிந்த விடயம் நான்தான் தற்பொழுது இயலாத நிலையிஇருக்கக்கிறேன் நண்பரே

      தங்களது கருத்துரை தங்களது ரசிப்பை பிரதிபலித்து விட்டது நன்றி

      நீக்கு
  4. கற்பனையே என்றாலும் நல்லாக இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனையா ? நான் உண்மைச் சம்பவத்தையே எழுதினேன்

      நீக்கு
  5. கனவிலும் வலையுலகம் பற்றியே சிந்தனை! :)))

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! கணினியில் மீண்டும் வருகிறேன் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கணினியில் வந்து திட்டுவீங்களோ... ?

      நீக்கு
  7. அந்த ஏழரையானுக்கு அரோகரா !ஏழாவது வோட்டு போட்டபின்பும் இன்னும் அரை வோட்டு போட ஆசை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... இன்னும் அரை வோட்டு போட்டு தமிழ் மணத்துக்கு வேட்டு வச்சிடாதீங்க... ஜி

      நீக்கு
  8. சொன்னவிதம் நகைச்சுவை என்றாலும் சொன்ன கருத்து பழுதில்லை. எனக்கும் இந்தச் சந்தேகம் எழும். தண்டனை முடிஞ்சபின் முழித்துக்கொண்டிருந்தீர்களென்றால் இனியாவது சரியாக நடக்க முயற்சி செய்திருக்கலாம். 20 வருட அபுதாபி வாழ்வில் கொசுக்களுக்கும், எறும்புக்கும் இடமேது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்த சம்பவம் தேவகோட்டையில் 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது
      நேற்று முன்தினம் வந்த கனவு இது

      நீக்கு
  9. அய்யா... ஆத்தா.... ஆகா.. ஆகா. கடைசி நேரத்திலாவது கூப்பிட்டிங்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே பயந்து அலறி விட்டேன்

      நீக்கு
  10. அழகான, அருமையான
    தங்கள் குற்றப்பத்திரிகையைப் படித்தேன்...
    கடவுளுக்கு அனுப்பி
    தீர்வைப் பெற்றுத் தருகின்றேன்.
    படைத்தவன் அவனல்லவா...

    பதிலளிநீக்கு
  11. அதுசரி..

    20 வருஷத்துக்கு முன்னால நடந்ததுக்குத் தானே இத்தனைக் கூத்து?..

    20 வருஷத்துக்கு இந்தப் பக்கம் நடந்ததெல்லாம் பாக்கி இருக்கும் போல இருக்கே!..

    அடுத்த விசாரணைக் கமிஷனுக்கும் ஆஜராக வேண்டுமா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி இனிமேல் செருப்பு போடாமல் நடக்க முடிவு செய்துள்ளேன்

      நீக்கு
  12. பெயரில்லா1/07/2017 2:59 PM

    நல்ல கற்பனை சகோதரா.
    அழகாக எழுதப்பட்டுள்ளது.
    என்ன சுகயீனமா?
    தங்களைக் காணோமே என்பக்கத்தில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தற்பொழுது கணினி இல்லை தங்களது பதிவுக்கு ஜிமெயில் வழியே வரவேண்டும்
      விரைவில் தொடர்வேன்
      மன்னிக்கவும்

      நீக்கு
  13. ஹஹஹஹ் கில்லர்ஜி தமிழ்மணம் எங்களை போட்டுக் கொடுக்குது ஜி....நாங்க ஓட்டு போட்டாலும் சுத்துக்கிட்டே இருக்கு விழுதானு தெரியலை....எரர் வருது சில சமயம்....உங்களுக்காவது ஓட்டுப்பட்டை காமிக்குது. எங்கள் ப்ளாக்ல ஓ ட்டுப்பட்டையே கண்ணுக்குத் தெரியாது.....எங்கள் ப்ளாக்குக்கு பதில் மொய் வைக்கவே முடியலை....ஹும்...

    இப்பவும் போட்டுருக்கம்...விழுதானு தெரியல....

    இந்தப் பதிவ படிச்ச உடனே வெங்கட்ஜி பதிவுல படிச்ச இற்றை நினைவுக்கு வருது.....
    //”உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே” என்று கடவுளிடம் புலம்பினேன்… ”இது உன் போன ஜென்ம சோம்பேறித்தனத்திற்கான தண்டனை” என்றார் கடவுள்.

    ”போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும் உன் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்?” என்று கடவுளைக் கேட்டேன்…..

    ”இந்த வாய்க்கு உனக்கு அடுத்த ஜென்மத்திலும் தண்டனை இருக்கு” என்று சொல்லி மறைந்தார் கடவுள்!//
    //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நானும் படித்தேன் இது கடந்த பதிவு நல்ல கருத்து.

      நீக்கு
  14. ஹை ஆத்தா ஓட்டு விழுந்துருச்சு....ஓட்டு விழுந்துருச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு நகச்சுத்தி வராது கவலை வேண்டாம்

      நீக்கு
  15. பெந்த கோஸ்தல் மிஷன் கிருத்துவ கீதங்கள் கேட்டீர்களா அவர்கள்தான் இந்தமாதி how you gonna feel about the things he:ll say onthat judgement day என்னும் ரீதியில் பாடிக்கேட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா நான் கேட்டதில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. ஹா... ஹா...
    தூதுவன்...
    கடைசியில கத்தி பசங்க தூக்கத்தை கெடுத்துட்டீங்களே...

    பதிலளிநீக்கு
  17. சமணர்கள் மயிலிறகால் தரையைக் கூட்டிக்கொண்டே நடந்த வரலாறு நினைவுக்கு வந்தது.

    படித்துச் சிரித்துவிட்டுச் சிந்திக்கவும் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே எல்லா மக்களும் இருந்திருந்தால் முனிசிபாலிட்டியே அவசியம் இல்லைதான்

      நீக்கு
  18. நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இப்படித்தான் மேலோகத்தில் சொன்னாங்கே...

      நீக்கு
  19. கனவுனு தான் நானும் நினைச்சேன். நல்ல கற்பனை தான்! ஹிஹிஹிஹி! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே உண்மையிலேயே நடந்திருந்தால் பதிவு வருமா ?

      நீக்கு
  20. ஜி வெறும் கனவுதானா....??
    நான் கூட நனவோ னு நெனச்சேன்...

    பதிலளிநீக்கு
  21. குற்றம் செய்யாதவர்கள் யாரும் இல்லை என்பதை ‘KILLERGEE யின் கனவு’ தெளிவுபடுத்திவிட்டது!
    பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்றைய நிலைப்பாடு இப்படித்தானே இருக்கின்றது

      நீக்கு
  22. அந்த கேப்டன் பாணியிலான கணக்கு தலை சுத்துது தோழர். குற்றம் குற்றமே... எனக்கும் உதறல் எடுக்குதுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இனிமேலாவது எறும்பை மிதிக்காமல் நடக்க பழகுங்கள்

      நீக்கு
  23. கடவுளே இவருக்கு மட்டும் இத்தனை நகைச்சுவை உணா்வைக கொடுத்தற்கு..எண்ணைய் கொப்பறை உமக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது கடவுளுக்கு எண்ணைக் கொப்பறையா ?
      கடை வச்சு கொடுக்க போறீங்களோ ?

      நீக்கு