இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 29, 2017

சம்பந்திகள்

படிப்பிற்கும் அறிவுக்கும் பந்தமுண்டா ?

01. உண்டெனில் ஒரு M.A  படித்த பட்டதாரி படிக்காத நடிகனுக்கு ரசிகர் மன்றம் அமைத்து அவனை தலைவனாக்கி அதன் வழியே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு போவது எந்த வகையில் ?

02. படிக்காதவனாயினும் பாமரனாயினும் இதுதான் வாழ்க்கை எனஅறிந்து உழைத்து தாய்-தந்தைக்கு உணவளிக்கிறானே இது எந்த வகையில் ?

03. நான்காம் வகுப்புவரை படித்தவனிடம் ஒரு மையக்கருவை கொடுத்து ஒரு கதை வேண்டும் எனச் சொன்னால் மறுநாளே அழகான கதை ஒன்றை தயார் செய்து விடுகிறானே இது எந்த வகையில் ?

04. உடனடியாக ஒரு கவிதை வேண்டுமென்றால் சட்டென ஹைக்கூ கவிதை ஒன்றை தீட்டி விடுகிறானே இது எப்படி ?

05. இதையே ஒரு M.A படித்தவனிடம் கேட்டால் ? (எல்லோரும் அல்ல) எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிறானே இது எப்படி ?

06. படிக்காததால் ஊனமென்றாலும் ஒரு கையால் மண்வெட்டி கொண்டு வேலை செய்து வாழ்கிறானே இது எப்படி ?

07. உயிரைக் காக்கும் மருத்துவம் படித்தவன் (எல்லோரும் அல்ல) கிட்னியை திருடி விற்கிறானே இது எப்படி ?

08. படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை கண்டு பிடித்தாரே இது எப்படி ?

09. படிக்காத ஐயா காமராஜர் அவர்கள் நாட்டை செம்மை படுத்தினாரே இது எந்த வகையில் ?

10. படிக்காத விவசாயி நமக்கு உலகம் புரியாது எனஒதுங்கி நாட்டு மக்கள் உண்ணுவதற்க்கு உழைத்துக் கொண்டு இருக்கிறானே இது எந்த வகையில் ?

11. படித்தவன் கம்ப்யூட்டர் மூலம் உலக அளவில் தீவிரவாதத்தை வளர்த்து மக்களை அழிக்கின்றானே இது எப்படி ?

12. ராஜராஜசோழன் காலத்திலேயே தஞ்சை பெரியகோயிலின் நிழல் தரையில் விழாமல் கணக்கு வைத்து கட்டினார்களே அவர்கள் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் ?

13. ஒண்ணேமுக்கால் வாக்கியத்தில் உலக வாழ்க்கையை சித்தரித்து திருக்குறள் எழுதினாரே ஐயன் திருவள்ளுவர் அவர் எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் ?

14. மூடக் கொள்கைகளை ஒழிக்க குரல் கொடுத்தாரே தத்துவ முத்துக்களால் தந்தை ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் எவ்வளவு தூரம் படித்தவர் ?

15. கல்வி வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் சாதி-மத சண்டைகள் கிடையாதே இது எப்படி ?

16. கல்வியோடு இன்று சாதி - மதமும் வளர்ந்து விட்டதே இது எந்த வகையில் ?

கரும்புச்சாறிலிருந்து சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியிலிருக்கும் இயற்கை விஞ்ஞானி ''ஞானி ஸ்ரீபூவு'' அவர்களிடம் ஒருமுறை கேட்கப்பட்டது, ஐயா படிக்காமலேயே இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்யும் தாங்கள் படித்திருந்தால் ? அதற்கு அவர்கள் சொன்ன பதில்

//எவனாவது நடிகனுக்கு ரசிகர் மன்றம் அமைத்து கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருப்பேன்// 

ஆக இதிலிருந்து தெரிவது என்ன ? படிப்பும் அறிவும் சம்பந்திகள் அல்ல !

28 கருத்துகள்:

  1. எனக்கும் இந்த மாதிரித் தோன்றும். நல்ல சிந்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருந்தது எல்லாம் அந்தக் காலமுங்கோ.. அதைக் கெடுத்தது நாம தூனுங்கோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி அழகிய உண்மையை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. ரொம்ப நல்ல சிந்தனைதான். கண்ணதாசன் சொல்கிறார்,

    "படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்
    படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

    கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்
    குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

    வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா
    வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா
    சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா
    சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா"

    ஒரு திரைப்படப் பாடலில் எத்தகைய கருத்தைக் கொண்டுவந்துவிட்டார் கண்ணதாசன்.

    படிப்பு முக்கியம்தான், அது பிறருக்கு உதவவேணும் என்ற அறிவை நமக்குக் கொடுத்தால். 'வெறும் காசை சேர்த்துக்கொண்டே செல்லவேண்டும்' என்பதல்ல அறிவு.

    நல்லா எழுதியிருக்கீங்க.

    டிஸ்கி: தஞ்சை கோபுரத்தின் நிழல் கீழே விழும். ஆனால், விமானத்தின் மேலே உள்ள எட்டாக (?) இருக்கும் கரும்கற்கள் ஒன்று சேர்ந்து வைத்திருப்பது (அத்தனை எடையுள்ள கல்), அதைத் தாங்கும்படியான அஸ்திவாரம் மற்றவற்றை எழுப்பிய விதம், விஞ்ஞானம் துணைசெய்யும் காலத்தில் நாம் எழுப்பிய மவுலிவாக்கம் 11 மாடி கட்டடத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு திறமையான, ஏட்டுப் படிப்பு படிக்காத பொறியாளர்கள் தமிழகத்தில் இருந்திருப்பதையே சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான நிறைய விடயம் தந்தமைக்கு நன்றி.

      நண்பரே நிழல் கோவிலின் மேலேயே படிந்து விடுவது அறிந்த செய்தியே... சிறப்பே அதுதானே.

      நீக்கு
  4. பட்டப்படிப்பும் பாடப் படிப்பும் மட்டுமே படிப்பா

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு சிந்தனை! என்றாலும் படிப்பினால் மனம் விசாலம் அடைவதில்லை என்பதை அனுபவங்கள் சொல்கின்றன! :( அதிகம் படித்தவர்கள் தான் குறுகிய கருத்துக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சிறப்பான கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. வலிமையான கருத்து முத்துக்களை கொட்டி வைத்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல கேள்விகள்! கில்லர்ஜி ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று நீங்களும் அறிந்திருப்பீர்கள். கல்வி அறிவு என்பது வேறு. அது பணம் ஈட்டுவதற்கு மட்டுமே அதாவது இக்காலக் கல்வி. பண்டைய கல்வி முறை அல்ல. ஆனால் பட்டறிவு என்பது வேறு. அந்த அனுபவத்திலிருந்தும் கற்காதவர்களும் உள்ளனர். வாழ்க்கைக் கல்வி வேறு. ஏட்டுக் கல்வி வேறு. நாம் ஏட்டில் கற்பதை நம் வாழ்க்கையில், சூழ்நிலைக்கேற்ப நடைமுறைப்படுத்த பயன்படுத்தினால் மனிதர்கள் எங்கேயோ போய்விடுவார்கள்.

    கீதா: மேற் சொன்ன கருத்துடன்.... ஆனால் எல்லோரது மூளையும் அப்படி இல்லையே. ஒவ்வொருவரின் மூளைத் திறனும் ஒவ்வொரு மாதிரி அதனால் தான் உலகில் இத்தனை வேறுபாடுகள்....ஒவ்வொருவரின் அனுபவமும், சிந்தனைகளுமே அவர்களது ஜீனை மாற்றி அமைக்கும் திறன் படைத்தவை அப்படித்தான் மனித இனம் மாறி வருகிறது...இது மகனின் ஃபிசியாலஜி வகுப்பில் பேராசிரியர் விளக்கியது...

    நல்ல பதிவு கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பகிரந்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. நானும் இது பற்றி நிறைய யோசித்திருக்கிறேன் . படிப்பு என்பது விஷய அறிவை மேம்படுத்தும் , கையாளும் திறமை என்பது வேறு . அது அவரவர் திறமையைப் பொறுத்தது

    பதிலளிநீக்கு
  9. சரியான கேள்விகள்.....பதில்தான்.......இடிக்கிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன்

      நீக்கு
  10. அறிவு என்பது கல்விக்கூடத்தில் சேர்ந்து படித்து மட்டும் பெறுவதல்ல. அதனால் தான் ‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.’ என சொல்கிறார்கள். அனுபவம் தரும் பாடமே அறிவை வளர்க்க உதவுகிறது எனலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அனுபவமே வாழ்க்கை இதுவே உண்மை

      நீக்கு
  11. படிப்பும் அறிவும்
    சமபந்திகள் அல்ல என்கிறீர்
    அதற்கெனப் பதினாறு கேள்விகள் போட்டு
    சிந்திக்க வைக்கிறியள்
    படிப்பதனால் அறிவு பெருகலாம்
    ஆனால்,
    அறிவு பெருகினால் விளைவு
    நடிகைகளுக்குக் கோவில் கட்டக்கூடாது!

    பதிலளிநீக்கு