இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 07, 2017

நவரத்தினங்கள்


என் மதியை மயக்கினாள் மஞ்சுளா
என் விதியை எழுதினாள் விமலா
என் வேலையை களைத்தாள் வேணி
என் சிந்தனையை கெடுத்தாள் சிந்துஜா
என் தூக்கத்தை துறத்தினாள் துளசி
என் பணம் தினம் பறித்தாள் பரிமளா
என் வீட்டு பத்திரம் மாற்றினாள் வீணா
என் காரை தாரை வார்த்தாள் காஞ்சனா
என் வங்கி கணக்கை வாங்கினாள் வனஜா
இந்த நவரத்தினங்களால் எல்லாம் இழந்தேன் நாளை நான் மனநல காப்பகத்தில் இருந்தால் ?  ?  ? மருத்துவருக்கு உதவுமென்று எழுதி வைத்த குறிப்புகளோடு இன்று வீதியில் செல்கிறேன் விதியின் வழியே....

இப்படிக்கு
அறிவை அடகு வைத்த அறிவழகன்.

Chivas Regal சிவசம்போ-
ஒண்ணு புடிச்சவன்கூட ஒசரத்துக்கு போயிடுறான் ஒன்பதை புடிச்சவன் கதி இப்படித்தானா ? நல்லவேளை நம்ம இந்த ரூட்ல போகவே இல்லை.

சிவாதாமஸ்அலி-
குடிகார மட்டைக்கு கம்பளம் விரிச்சது யாரு ?

சாம்பசிவம்-
இவன் அறிவையும் அடகு வாங்கி வச்சவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பான் ?

32 கருத்துகள்:

  1. இதுக்கு உயிரையே கொடுக்கலாமே ,இழந்தது குறைவுதான் :)

    பதிலளிநீக்கு
  2. ஹா... ஹா... ஹா... இப்படியும் கஷ்டங்களா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டம் இப்படியெல்லாம் வரக்கூடாது.

      நீக்கு
  3. ஹஹஹஹ் ரத்தினங்களின் ஒளி மதியை மறைத்ததோ!! அதனால் அறிவிழந்த அறிவழகனை என்ன சொல்ல??!!

    அது சரி சிவசம்போவுக்கு ஒரு செய்தி...படிச்சவன் எல்லாம் ஒசரத்துக்குப் போறதில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இருக்கலாம்
      சிவசம்போ சொன்னதை கவனித்து படிக்கவும்.

      நீக்கு
  4. நல்லவேளை.. அடகு வைக்கும் அளவுக்கு அறிவு இருந்ததே... அதுவரை மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவை அடகுகடையில் வைக்க முடியுமா ஜி ?

      நீக்கு
  5. அத்தனை துன்பங்களும் பெண்களால்!!!

    பதிலளிநீக்கு
  6. மனநலக் காப்பகத்துக்குப் போகுமளவுக்கு மனதைத் துன்பப் படுத்தியோர் என்றாலும், அவர்களை இப்பவும் நவரத்தினங்கள்:) என பெருமையாவே சொன்ன உங்க பெருந்தன்மையை நான் பாராட்டுறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அவர்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்.

      ஹலோ ஒரு விசயம் தெளிவாக புரிந்து கொள்ளவும் இதை சொன்னது நான் அல்ல திரு. அறிவழகன்

      நீக்கு
  7. அறிவும் அழகும் இருந்தும் மன நலக் காப்பகமா?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மையாக இருக்காது நண்பரே..

      கால் ஊனமானவனுக்கு "நடராஜன்" என்று பெயர் வைப்பதில்லையா...

      நீக்கு
  8. வாழ்க்கையில் நிறைய அனுபவப்படவரோ

    பதிலளிநீக்கு
  9. வேணியும் துளசியும் 'இ' என்று இளிக்கிறார்கள். மற்ற ஏழுபேரும்- மஞ்சுளா, விமலா, சிந்துஜா, பரிமளா, வீணா, காஞ்சனா, வனஜா – ‘ஆ’ என்று நகைக்கிறார்கள்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மொத்தத்தில் அறிவழகனை "கி" ஆக்கி விட்டார்கள்

      நீக்கு
  10. அறிவழகன் உண்மையிலேயே அறிவும் அழகும் நிரம்பியவர் தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எனக்கும் அப்படித்தான் தோணுது.

      நீக்கு
  11. நவரத்தினங்கள் நன்றே
    "நம்மட மதி
    எங்கே போயிற்று?" என்று
    அப்படிச் செய்திருக்கலாம் தான்...
    நன்றே
    எங்களைச் சிந்திக்க வைக்கிறியள்...

    பதிலளிநீக்கு
  12. என்னாது அறிவ அடகு வச்சிட்டாங்களா...???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இதென்ன அதிசயமா ?
      தேர்தல் வந்தால் எல்லோரும்தானே வைக்கிறோம்...

      நீக்கு
  13. கொடுத்த வைத்தவர் அறிவழகன்..அடகு வைக்க அவரிடம் அறிவு இருந்திருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இப்படியும் நினைக்கலாம்.

      நீக்கு
  14. அறிவை அடகு வைத்த அறிவழகன்...உங்களின் குசும்பு வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு