இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 12, 2017

பணம்


வர்ண காகிதத்தில் வந்த கலை வண்ணமே
உன்னை சிறை பிடிக்க மனம் எண்ணுமே
நீயும் என்னைப்போல் ஜாதி மதம் மறந்து விட்டாய்
அதனால்தானே எல்லோரிடம் சென்று பழகுகின்றாய்

  என்னிடம் வந்து மனம் மகிழச் செய்கின்றாய்
உடன் ஏனோ பிரிந்தே செல்கின்றாய்
உனது அழகு கண்டு மயக்குகின்றேன்
நீ ஏனோ என்னுள் தங்கிட தயங்குகின்றாய்

உமது வயதில் ஒன்றானாவன் ஆயினும்
நூறானவனாயினும் பாசத்துக்கு குறைவில்லை
என்னை ஏழையென்று நினைக்கின்றாயோ
ஆனால் நான் கோழையில்லை அறிந்தாயே

இன்னும் எதற்கு தயக்கமடி கண்ணே
என்னிடம் நிரந்தரமாய் தங்கிவிடு பெண்ணே
பொன்னைப்போல் பார்த்துக்கொள்வேன் உன்னை
இன்று முதலாவது நேசிப்பாய் நீ என்னை

கடந்த வருடம் ‘’ஊற்று’’ நடத்திய பணம் பற்றிய கவிதைப் போட்டிக்கு அனுப்பி வைத்த கவிதை. வழ(ழு)க்க(கு)ம்போல தோல்வியை இறுகத்தழுவி வந்தது முதல் முறையாக பதிவேற்றுகிறேன். – கில்லர்ஜி

43 கருத்துகள்:

  1. கடைசி நான்கு வரிகள் காதலியைப் பார்த்து சொன்னதா ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நீங்கள் சொல்லிய பிறகுதான் கவனிக்கிறேன் பெண்ணைக் குறிக்கிறதே... பொன்னே என்று சொல்லி இருக்கலாமோ... ?

      நீக்கு
  2. நானும் அதைக் காதலிக்கத்தான் செய்கிறேன்
    ஏனோ அது ஒருதலைக்காதலாகவே தொடர்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... எனக்கு போட்டியாக நிறைய பேர் காதலிப்பார்களோ....

      நீக்கு
  3. நானும் பணத்தை விரும்புகிறேன்
    ஆனால்,
    பணம் என்னை வெறுக்கிறதே!
    ஆகையால், அடிக்கடி
    நானும் பிச்சைக்காரன் ஆகின்றேன்!
    எப்படியோ,
    அத்தி பூத்தாற் போல - என்னை
    நாடி வரும் பணம் தான்
    என்னை வாழ வைக்கிறதே!
    அதுவும்
    நாலு பணம் சேமிப்பில
    நான் போட்டு வைச்சதால...
    நானும் பணத்தை விரும்புகிறேன்
    ஆனால்,
    பணம் என்னை வெறுக்கிறதே!
    ஏனென்றால்
    என்னை நாடி வந்த பணமோ
    எப்பவும் - அடுத்தவர்
    கையைத் தானே காதலிக்கிறது!

    அத்தி - 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்றாவது நிரந்தரமாய் உங்களிடம் தங்கிவிடும்

      நீக்கு
  4. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா என்று பணத்ட்திற்காக நாயா பேயா அலைவோர் பலரோ ஜி??!!!

    கீதா: பணத்தினைப் பலர் காதலிக்கிறார்கள்! ஆனால் அவள் ஒரு சிலரை மட்டுமே கண்டு கொள்கிறாளோ??!! ஒரு சிலரை மிகவுமே ஏமாற்றி விடுகிறாள் கிராதகி!!! வஞ்சகி! ஒரு சிலரை சிறைக்குள் தள்ளுகிறாள்! ஆனால் ஒரு சிலரை தப்பிக்கவும் உதவுகிறாள்! நியாய தர்மம் தெரியாதவள்! ஏனென்றால் அந்த நியாய தர்மம் வழங்கப்படும் இடத்திலும் நடமாடி, நாடகமாடி அந்த நியாயதர்மத்தையே மாற்றி விடுகிறாளே பாவி! உண்மையானவர்களிடம் அவள் இருப்பதில்லை. பொய்யான, கபடதாரிகளிடம் வருடக் கணக்காகப் பெருத்துக் கொண்டே இருக்கிறாள்! அதுவும் இறைவன் என்று சொல்லி பலரையும், பணம் பெரிதல்ல என்று பணத்தினைத் துச்சமாகக் கருத வேண்டும் என்று சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை இவள் ரொம்பவே காதலிக்கிறாள்!! எங்கெல்லாமோ ஒளிந்தும் கொள்கிறாள்! அம்மா தாயே என்று திருவோட்டினை வைத்துக் கொண்டு கெஞ்சுபவர்களிடமும், இவள் போகவே மறுக்கிறாள்! அவளுக்கும் பிடிக்கவில்லையாம் வறுமை!! புத்திசாலிகளாய், கல்வி கற்க விழையும் குடும்பத்தைக் கூட காதலிப்பதில்லை இவள் ஏனென்றால் இவளுக்குக் கலைவாணி இருக்கும் வீடு பிடிக்காதாம்!!! பொறாமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா..ஹா.. கருத்துரையில் அரசியல் இரசித்தேன்

      நீக்கு
  5. நன்று.

    கடைசி நான்கு வரிகள் :: பணத்தைப் பெண்ணாக உருவகப் படுத்தியிருக்கிறீர்கள் என்று சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி சொல்வதும் சரிதான் அதனால்தான் எடுபடவில்லையோ...

      நீக்கு
    2. ஸ்ரீராம் கில்லர்ஜி அப்படிப் பெண்ணாக உருவகப்படுத்தியதுதான் என்னை அப்படி எழுத வைத்தது!!.....ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  6. வணக்கம்
    ஜி

    படித்த கவிதையை மீண்டும் நினைவு படுத்தி படிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள் ஜி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. இவரைக் காதலிக்காதவர்கள் யாரும் உண்டோ?
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  8. பணம் எனும் பெண் பின்னால் போகாதவர் வெகு குறைவு! என்னையும் சேர்த்து!

    எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற எண்ணம் தான் அனைவருக்குமே ஜி! போதும் என்ற வார்த்தையை உணவு தவிர வேறு எதற்குமே சொல்வதில்லை இந்த மனித மனம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மை.
      உணவுக்கு போதும் என்று சொல்வதும் 6 மணி நேரம் மட்டும்தானே ஜி

      பிறகு பசி வந்ததும் மீண்டும் கேட்போமே.

      நீக்கு
  9. பண ஆசை யாரை விட்டது?
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  10. இந்த பணத்துக்கு அது மேலே நாம் எவ்ளோ அன்பு வைச்சாலும் அந்த அன்பு தெரிய மாட்டேங்குதில்ல :)
    ஆனா வேணாம் போவென்றும் உதற முடியாது ..
    இப்போ எங்க ஊர் பணம் சிலது பிளாஸ்டிக் நோட்டுக்கள் வழுக்கிட்டே போகும் கொஞ்சம் ஏமாந்தா பறந்திடும் ..
    கவிதை நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனாக்கா.... பிளாஷ்டிக் நோட்டுகள் கிழிஞ்சு போயிட்டா... எடைக்கு போட்டு பேரீட்சம்பழய் வாங்கித் திங்கலாமோ...?

      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. பணம், பெண், பாசம்! :))))) பணத்தை விரும்பாதவர் யார்?

    பதிலளிநீக்கு
  12. பணத்தை என்னமா காதலிக்கிறீங்க... காதலிக்குக்கூட இப்படி ஆரும் கவிதை போட்டிருக்க மாட்டாங்க.. எதுக்கு இதுவும் தோல்வியைத் தளுவியதோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பணமிருந்தால் எல்லாம் வசமாகுமே...

      நீக்கு
  13. போதுமென்று யாரும் சொல்வதே இல்லை
    அருமை

    பதிலளிநீக்கு
  14. போட்டியில் தோற்றாலென்ன, இங்கு எத்தனை எத்தனை மனம் திறந்த பாராட்டுகள்.

    இனியும் கவிதை எழுதுங்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  15. எனக்கு பெண்ணும் பணமும் எட்டாக்கனியாக இருந்ததால்..அதுகளை நான் நிணைப்பதேயில்லை....

    பதிலளிநீக்கு
  16. பணம் ... பணம் தான்!..

    நல்ல வழியில் சேர்ந்(த்)திருந்தால்
    அதுவே நம்மைக் காக்கும்!..
    இல்லையெனில் நாம் அதைக் காத்தாலும்
    அதுவே நம்மைத் தாக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி என்நிலை இன்று பணத்தால் ஆபத்தே....

      நீக்கு
  17. முன்னொரு திரைப்படத்தில் ஏழை பணக்காரன் ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு போகு ம் ரயிலைப்பற்றிய ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்குமே. அதனால் யதார்த்ததை கவிதையாகப் படைத்திருக்கிறீர்கள்.கவிதையை இரசித்தேன்!

    ஒருவேளை பணத்தை வெறுப்பதுபோல் கவிதை எழுதியிருந்தால் பரிசு கிடைத்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பணத்தை வெறுப்பதுபோல்... இதுவும் சரிதான் முயன்று பார்ப்போம்.

      நீக்கு
  19. பெயரில்லா5/15/2017 1:38 PM

    நீயும்என்னைப்போல் சாதிமதம் மறந்துவிட்டாய்- பிடித்த வரி...
    இனிய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. போட்டியில் தோற்றால் என்ன? கவலையை விடுங்க ஜீ..! கவிதை அருமை.! பெண்ணையும் பணத்தையும் ஒருசேர எழுதியிருக்கீங்க.

    அன்றைய காளமேகப் புலவரின் பாடல்களை நினைவூட்டுது உங்கள் கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. ராஜீவன் ராமலிங்கம் அவர்களின் முதல் வருகையை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

      "காளமேகப்புலவர்" மிகப்பெரும் வார்த்தை அவரோடு என்னை இணைப்பது தவறு நண்பா.

      நீக்கு