இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 16, 2017

தலைவா.. அரசாள வா !


நட்பூக்களே... என் மனதில் 2 ½ வயதிலிருந்தே அரித்துக் கொண்டிருந்த விடயமிது நடிகனுக்கும், ரசிகனுக்கும் உள்ள பந்த உணர்வுகள் எப்படி உருவாகின்றது ? எனக்கு மட்டும் உண்டாகாதது ஏன் ?

நடிகன் என்பவன் எல்லா மனிதர்களையும் போலவே வயிற்றுப் பிழைப்புக்காக ஏதோவொரு வகையில் திரையுலகத்தில் நுழைந்து விடுகின்றான் ஆரம்ப காலத்தில் சோத்துக்கு பணம் கிடைத்தால் போதும் என்று வந்தவன் அவனது திரைப்படம் நல்ல கதையம்சத்தின் காரணமாக, நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களின் காரணமாக, நல்லதொரு இசையை கொடுத்ததின் காரணமாக, கேட்பதற்கு இனிமையான ராகங்களில் பாடியதின் காரணமாக, நல்ல நகைச்சுவைகளின் காரணமாக, புதுமுக நடிகையின் தாராள மனதின் காரணமாக, தணிக்கைகுழு அதிகாரிகளின் வாழ்வாதாரமும் உயர்வதின் காரணமாக ஏன் ? இவனது நல்ல நடிப்பின் காரணமாகவும் என்பதை ஏற்றுக்கொள்வோம் திரைப்படம் பட்டி தொட்டிகளில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி விடுகிறது. உடனே இவனும் தனக்கு சம்பளத்தை நிர்ணயிக்கிக்கின்றான் இந்த திரைப்படத்தின் பின்னணியில் உழைத்தவர்கள் எல்லோருமே வழக்கம் போல தனது உழைப்பைக் கொடுத்து தனது வழக்கமான சம்பளத்தை பெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள் இவனது திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்தும் இயக்குனர்கள் இவனுக்கு வாய்ப்பு கொடுக்க அந்தப்படமும் ஏதோவொரு காரணத்துக்காக வெற்றி பெற்று விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம் உடன் இவன் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து விடுகின்றான் அடுத்து தயாரிப்பாளர்கள் இவனை முற்றுகையிட இவனது சம்பளமும் உச்சாணிக் கொம்புக்கு சென்று விடுகிறது இந்த தருணம் பார்த்து வேலையற்ற வெட்டிக்கூட்டம் ஒன்று வீதிகளில் திரியும் பார்த்து இருப்பீர்கள் அவர்கள் இந்த நடிகரை நாடுவார்கள் நாங்கள் உங்களுக்கு நற்பணி (?) மன்றம் அமைக்கப் போகிறோம் தங்களது அனுமதி வேண்டும் என்பார்கள் உடனே இவனும் இந்த மாதிரியான அரைவேக்காடுகள்தான் நம்மை இன்னும் உயரத்துக்கு கொண்டு போகும் என்று சில ஆயிரங்களை தூக்கி எறிவான் இந்த பொறுக்கிகள் அதை பொறுக்கி வந்து பகுதியை வாயில் ஊத்தி விட்டு மிகுதியில் இவனுக்கு ஒரு பட்டம் கொடுத்து ரசிகர் மன்றம் ஆரம்பித்து தியேட்டரில் திரைப்படம் வெளியானதும் பேனர் வைத்து, விசில் அடித்து வர்ணப்பேப்பர்களை வீசியெறிந்து ஆரவாரம் செய்வார்கள் இந்த கேவலத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருமே உடன்படுவார்கள் காரணம் இவர்களால் திரைப்படம் விளம்பரமாகி நல்ல வசூலைப்பெறும் இதற்கு பகரமாக இந்த பொறுக்கிகளுக்கு திரைப்படம் பார்ப்பது இலவசம்.

இவனின் 4 திரைப்படங்கள் வெற்றியானதும் இவர் மிகப்பெரிய வீரனாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவான் நாட்டுக்காக போராடுவான், அநியாயங்களை எதிர்ப்பான், திரைப்படத்தில் வில்லன் நாயகியை பலாத்காரமாய் இழுத்துப்போய் தனது இச்சையை தீர்க்கும் தருணத்தில் நாயகன் திடீரென தோன்றி அவனை வீழ்த்தி காப்பாற்றி தியேட்டரில் இருந்த தமிழ் நாட்டு தாய்மார்களின் மனதில் பாலை வார்த்து விடுவான் இதன் மூலமும் இவன் நல்லவன் என்றே மக்கல்ள் நம்பி விடுகின்றார்கள் பிறகு இவன் அவளை பவ்யமாய் கெடுத்து விடுவான். அது இந்த முடுமைகளுக்கு தெபுரியாது என்பது வேறு விடயம். திரைப்படங்களில் ஒரேயொரு உதை விடுவான் கிராஃப்பிக்ஸ் கலைஞர்களின் திறமையால் அந்த உதையில் 50 நபர்கள் அந்தரத்தில் பறப்பார்கள் பறப்பவர்கள் எல்லோருமே யார் தெரியுமா ? உண்மையிலேயே ஸ்டண்ட் கற்றவர்கள் இவர்களில் ஒருவன் நாயகனை ஒரு உதை விட்டால் போதும் அந்த நிமிடமே இந்த அறியாமைகளின் ஆதர்ச நாயகன் செத்து பல வருடங்கள் முடிந்திருக்கும் ஆனால் இதைப்பார்த்து இந்த அரிய ஆமைகள் கை தட்டி ஆரவாரம் செய்யும் திரைப்படங்களில் கடைசிவரை நியாயமானவனாகவே வலம் வருவான் திரைக்குப் பின்னால் இவர்களின் உண்மையான முகம் ஸூட்டிங்குகளில் லைட்பாய் வேலை பார்ப்பார்களே சாதாரண கூலி வேலைக்கு அவர்களுக்கு நன்றாகவே தெரியும் காரணம் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து தகுதியின் காரணமாக அவர்களுடன் நெருங்க முடியாமல் பக்கத்திலேயே வாழ்பவர்கள் ஆனால் இந்த பாமரப்பய ரசிகனுக்கு கடைசிவரை தெரியாது இவன் நியாயமானவன்தான் என்பது இந்த அறியாமைகளின் ரத்தங்களில் கலந்து விடும் திரைப்படத்தில் அநியாய ஆட்சி செய்யும் முதல்வரை எதிர்த்து குரல் கொடுப்பான் பாருங்கள் உடனே இந்தப் பாமரப்பய கூட்டம் தலைவா.. அரசாள... வா ! என்று கத்தத் தொடங்கியவன் அவன் கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்கா விட்டாலும் கடைசிவரை கத்துவதை விடமாட்டான்.

திரையில் எத்தியே பலரை வீழ்த்தும் இந்த நாயகர்கள் உண்மையில் வெள்ளமோ, சுனாமியோ வந்து மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பொழுது ஜன்னல் வழியே அந்தோ பரிதாபம் என்று வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி துணிந்து இறங்கி யாரையாவது காப்பாற்றி இருப்பான் இதற்காக இந்த நடிகர்களை நான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை உண்மையில் முடியாதுதான் காரணம் பலகோடிகள் சொத்து சேர்த்து வைத்து இருக்கின்றோம் இந்த உலகில் உள்ள எல்லா சுகங்களையும் அனுபவித்து விடவேண்டுமென்ற திட்டங்களோடு வாழும் மனிதன் இந்த வெள்ளத்தில் இறங்கிச் சென்று இவனையும் கொண்டு போய் விட்டால் ? மேலும் இந்த வெள்ளத்தில் இறங்கிப் போனாலும் அறியாமைக் கூட்டங்கள் ‘’ஹை நடிகர் வால்டர் வடுகநாத் வந்துருக்காரு’’ என்று சொல்லி கூட்டத்தை கூட்டி நெருக்கியடித்து ஆட்டோ கிராப்கூட கேட்பாங்களே வம்பு எதற்கு ?

அறியாமை ரசிகர்களே.. இதுதான்டா யதார்த்த வாழ்க்கை அவனும் மனுஷன்தான்டா அவனுக்கு மட்டும் ஏதோ அமானுஸ்ய சக்தி இருப்பது போல் நினைக்காதே... இதற்கு உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன் இருக்கின்றாரே அவரிடமாவது ஏதாவது (?) இருக்கும் சமீபத்திய பேரிடரில் நடிகர் ராஜ்கிரண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது ராணுவ வீரர்கள்தான் அவரை உயிருடன் மீட்டு இருக்கின்றார்கள் இதே நடிகர் திரைப்படத்தில் எத்தனை பேரை தூக்கி அடித்தார் ? நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் முடியாதுடா ரசிகனே... விஞ்ஞான வளர்ந்து விட்ட இந்த காலத்திலாவது கொஞ்சமாவது யோசிடா... இதில் இன்னொரு விடயம் நீங்க யோசிங்கடா... நீங்க கொண்டாடிய, கொண்டாடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் நம் இன தமிழன் இல்லையடா உன்னால் நாட்டுக்கு பெருமை தேடி கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை சிறுமையை சேர்த்து விட்டு செல்லாதே.

குறிப்பு - நான் எந்த நடிகரையும் மனதில் வைத்து எழுதவில்லை அப்படி யாரும் நினைத்தால் அதனைப்பற்றிய கவலையும் எனக்கு இல்லை ஆனால் இது பெரும்பாலும் எல்லா நடிகருக்கும் பொருந்தும் - கில்லர்ஜி

48 கருத்துகள்:

  1. இதுக்கு என்னிடமிருந்து எதிர்க் கருத்தேதும் இல்லை...
    நீங்களும் வோட் லிங் இணைச்சால் எனக்கு ஈசியாக இருக்கும், இது விடிய கொம்.. ஓன் பண்ணித்தான் வோட் போடுவேன்... போஸ்ட் போட்ட உடன் தெரியல்லியே எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இதன் கீழே "வலையில் காட்டு" என்று இருக்கும் அதை சொடுக்கினால் கொம்ப்யூட்டரில் காண்பது போலவே வரும் பிறகு ஓட்டு அளிக்கலாம்

      வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ் மீ தான் இங்கயும் 1ஸ்ட்டூஊஊ... ஆஹா நீங்க சொன்னால்தானே தெரியும், இப்போதான் கண்டுபிடிச்சேன்.. போட்டிட்டேன் ... அட்டமத்துச் சனி என்னோடது:).

      நீக்கு
    3. வருக இதுதான் எல்லோருடைய தளத்திலும் இருக்குமே...

      நல்ல நம்பர்தான் நன்றி

      நீக்கு
  2. நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் போதும் ஜீ. அவர்கள் திரையில் செய்யும் சாகசங்களை நிஜத்திலும் செய்வார்கள் என எதிர்பார்ப்பதுதான் தவறு.

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பா விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. நடிகர்களின் மீதுள்ள மோகம் குறையவேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக கருத்து இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. புரிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி புரியாதவர்கள் நம்நாட்டில் அதிகமாகி விட்டதே.. ஜி

      நீக்கு
  5. உண்மைதான் நண்பரே
    நடிகர்கள் என்ற மாயையில் இருந்து நம் இளைஞர்கள் வெளியே வரவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர்கள் வெளியே வராதவரை நாடு முன்னேற்றம் காண்பது கானல்நீரே...

      நீக்கு
  6. இது எல்லாம் களை!..

    இதுகளை எல்லாம் விக்ரமாதித்தனின் வேதாளத்தால் கூட திருத்த முடியாது...

    அரிக்கும்.. ஆசை அரிக்கும்...
    செல்லாக் காசானாலும் செல்லரிக்கும்!..

    அதில் இது ஒரு விதம்!.. ஆகக் கூடாத விஷம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சவுக்கடி வார்த்தைகள் புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நாடு நலம் பெறும்

      நீக்கு
  7. சினிமா நடிகர்கள் மீதுள்ள மோகம் குறைந்தே ஆகவேண்டும். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மூடத்தனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி இது கூடிக்கொண்டே இருக்கின்றது வேதனையே..

      நீக்கு
  8. வேலையற்ற வெட்டிக்கூட்டம் நற்பணி மன்றம் - கில்லர்ஜி... எந்தக் காலத்துல இருக்கீங்க. நடிகர்கிட்ட இருந்து காசு கறப்பதற்கான முயற்சிதான் இது. அப்புறம் அந்த ஏரியாவில், தலைவன்/பொருளாளன் அப்படின்னு போட்டுக்கிட்டு உதார் விட்டுத்திரியலாம் என்பவர்கள்தான் ரசிக/நற்பணி மன்றம் ஆரம்பிக்கிறவங்க. எவனும் ஓசிக்கு வேலைபார்க்கறதில்லை.

    பொறுக்கிகளுக்கு திரைப்படம் பார்ப்பது இலவசம் - இதுவும் கிடையாது. ரசிகர்களுக்காக முதல் ஷோ உண்டு. அதனைக் காரணம் காட்டி இந்தக் கும்பல், நிறைய காசுக்கு தன் மன்ற உறுப்பினர்களுக்கு டிக்கெட் விற்றுவிடும். அதனை உபயோகப்படுத்தி நிறைய நற்பணிகளை செய்வார்கள் (என்னன்னு கேப்பீங்க. நடிகர் பக்திப் படத்தில் நடித்திருந்தால், படம் பார்க்க வருபவர்கள், பால் நிரம்பிட தட்டில் காலைவைத்து வரவைப்பது, பெரிய பெரிய கட் அவுட்டுக்கு பால், பீர் அபிஷேகம், வந்திருக்கிற யாரும் படம் பார்க்கவிடாமல் கட் செய்த குப்பைகளை திரையை நோக்கி விசிறியடிப்பது, விசிலடித்து யாரையும் படம் பார்க்கவிடாமல் அராஜகம் செய்வது போன்றவைதான்)

    நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே உண்மைதான். இந்த ரசிகக்கும்பலின் வெட்டிவேலைகள் இப்போது ஒரு சில நடிகர்களுக்குத் தவிர பிறருக்கு இல்லை என்று நினைக்கிறேன் (ஒரு வேளை, ஒரு நாள் வேலைதிட்டத்தில் இதைவிட அதிகமாக கூலி கிடைக்கிறதா என்று தெரியவில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. ராஜ் கிரணைப் பற்றிக்கூறியது சிரிப்பை வரவழைத்தது. சொந்த வாழ்க்கையில் ஒழுங்காக இருக்கத் தெரியாத சிம்பு, வம்பு எல்லாம் மக்களுக்கு அறிவுரை சொல்வதையும், கனவிலும் கண்டிராத ஜல்லிக்கட்டுக்காகப் போராடியதையும் சொல்ல மறந்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு நீண்டதால் நிறுத்திக் கொண்டேன் நண்பரே

      நீக்கு
  10. உண்மையான வரிகள்....


    நம் உலகம் முழுமையும் இப்பொழுது சினிமா என்னும் மாய வலைக்குள் பின்னப்பட்டுள்ளது...


    எங்கும் சினிமா..எதிலும் சினிமா...அதன் பாட்டுகள் என்று மட்டும் தான் உள்ளது...

    அதை தாண்டி நின்ற நம் விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் எல்லாம் பாவம் தூர நின்று நம்மை பார்த்து ஏக்க பெரு மூச்சுக்கள் விடுக்கின்றன..

    இந்த மாயவலையை அறுத்து எறிந்தால் மட்டுமே இந்நன்நிலம் சிறக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நமது இளைஞர்களிடம் தொலைநோக்கு பார்வை வரவில்லை.

      நீக்கு
  11. யெஸ்!! அதே! நடிகர்கள் மீதான மோகம் எனும் மாய வலை மக்களை வெகுவாகவே ஆட்டிப் படைக்கிறது.

    டக்கென்று படத்தைப் பார்க்கும் போது நீங்களோ என்று நினைக்கத் தோன்றியது. அப்புறம்தான் புரிந்தது நகைச்சுவை நடிகர் மோகன்...நீங்கள் ஏதேனும் டிங்கெரிங்க் வேலை பண்ணி போட்டுருக்கீங்களோ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டக்கென்று படத்தைப் பார்த்தபோது என்னைப்போல இருந்ததா ?
      அதாவது மறைமுகமாக "லூஸ்" என்று சொல்கின்றீர்களோ...

      நீக்கு
  12. //நான் எந்த நடைகரையும் மந்தில் வைத்து எழுதவில்லை//

    பதிவர்கள் ஒருங்கிணைந்து வெளிப்படையாகவே எழுத வேண்டும். அப்போதுதான் பந்தா நடிகர்கள் அடக்கி வாசிப்பார்கள்; வேலையற்ற வெட்டிக் கும்பல் திருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே...

      இன்று எல்லா நடிகனுமே மூன்று படம் வெற்றி பெற்றதும் கட்சி ஆரம்பித்து விடுகின்றானே...

      நீக்கு
  13. நல்ல பதிவு .புரியவேண்டியோர் விழிப்படைய வேண்டியோர் பயாஸ்கோப்புல மாட்டுப்பட்டிருக்காங்க :(
    நடிகர்கள் தொழில் நடிப்பது அவ்வளவே ..காட்சி முடிந்ததும் அவரவர் இடத்துக்கு திரும்பணும் .அசோகா சக்ரவர்த்தியா நடிக்கிறவர் சீன முடிஞ்சதும் ஒப்பனையை கலைச்சிட்டு போயிரணும் இல்லை மாட்டேன் நானே ராஜா நானே அரசாள்வேன்னா நாடு தாங்குமா ?பிம்பங்கள் நிஜமாக்கி விட முடியாது என்பதை ரசிகர்களும் மாபெரும் நடிகர்களும் உணரணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இன்று அறியாமைகள் நிறைந்து விட்டனர் நாட்டினிலே...
      நல்ல உவமை சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  14. ஒரு விஷயம் மோகன் நடிகரை அதான் மேலே படத்தில் போட்டிருக்கிங்களே அவர் பற்றி நினைவுக்கு வருது ..ஒரு விளம்பரம் டிவில வரும் நான் ஸ்கூல் படிக்கும்போது ..பொது மாநகராட்சி paving ஸ்லாப்ஸ் ரோடோரம் இருக்கும் அதை இவர் சுற்றுமுற்றும் பார்த்துட்டு //யாருமின்றி அனாதையா இருக்கு நான் ஆதரவு கொடுக்கறேன்னு எடுத்திட்டு போயி இவர் வீட்டில் ஸ்லாப்ஸ் போடுவார் :)
    அப்படிதான் ஆச்சி இப்போ மேய்ப்பன் இல்லா மந்தையை (தமிழ்நாட்டை ) மேய்ப்பதற்க்கு ஆளாளுக்கு ஆதரவு கொடுக்க வராங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் கேனப்பயல் ஊருல கிறுக்குப்பயல் நாட்டாமை.

      நீக்கு
  15. நடிகர்கள் , மார்க்கெட் போனா அரசியலுக்கு வந்து விடுகிறார்கள் ,சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள !அவர் பெயரைச் சொல்லி சொத்து சேர்க்க ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது !இவர்களின் கொள்ளையால் நாடு நாசமாக போய் கொண்டுள்ளது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகமொத்தம் மக்கள் வாழ்வுதான் நாசமாகுது.

      நீக்கு
  16. கடவுள்தான் காப்பாற்றவேண்டு ம் என்ற சொல் இப்போது மீண்டும் எதிரொலிக்கிறது இவர்களை லார்ஜெர் தான் லைஃப் சைசாகக் காட்டுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  17. நடிகனை நடிகனாக பார்க்காமல் அதிசயப் பிறவியாக பார்க்கும் ம(மா)க்கள் இருக்கும் வரை, இந்த நடிகர்கள் நம்மை கோலொச்சத்தான் நினைப்பார்கள். நடிகனும் மற்ற தொழில் புரிவோர் போலத்தான் என்று எண்ணும் நாள் வரும். அன்று இந்த நிலை மாறும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்நாள் வருவதுபோல தெரியவில்லை நண்பரே.

      நீக்கு
  18. தமிழ்நாட்டில் சினிமா மோகம், தொலைக்காட்சி மோகம் அதிகம் தான். அதிகம் எனில் ரொம்பவே அதிகம்! மக்களாகத் திருந்தினால் தான் நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  19. தமிழ்நாட்டைவிட அதிக சினிமா மோகம் கொண்டவர்கள் தெலுங்கர்கள். ஆனால் அவர்கள் நடிகைகளை மட்டுமே நேசிப்பவர்கள். நம்மவர்கள்தான் நடிகர்களை தொழுது கொண்டாடுபவர்கள். இதை உளவியல் ரீதியாக ஆராயவேண்டும்.

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே N.T.R ஐக் கண்டவுடன் திரைக்கு தீபம் காட்டியவர்கள்தானே அவர்கள் பலமுறை தீ விபத்தும் நடந்து இருக்கிறது.

      நீக்கு
  20. நடிகரிகளின் மீதுள்ள மோகம் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது நண்பரே.பல வருடங்களாக நடிகனும் நடிகையுத்தானேதமிழ்நாட்டில் கோல் ஆட்சி நடத்தினர்

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை என்பது நீங்கள் சொல்லாமலேயே எங்களுக்குப் புரியுமே? சொன்னால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. முனைவரின் புரிதலுக்கு நன்றி

      நீக்கு
  22. நிழலை நிஜமாக எண்னி,நடிகனை ஆராதனை செய்யும் கூட்டம் இருக்கும் வரை,இது மாறாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கின்றதே ஐயா.

      நீக்கு