இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 26, 2017

ஐ.......நூறாவது பதிவு

திருவாரூர் ஐநூற்றுப் பிள்ளையார் துணை

      ணக்கம் நட்பூக்களே... நலமா ? நலமே விளைவு என்ன திடீரென நலகுசலம் என்று நினைக்கின்றீர்களா ? எல்லாம் மஸ்க்காதான். மஸ்க்கா என்றால் அரபு மொழியில் காக்கா பிடித்தல் என்று பொருள் இப்பொழுது காக்கா பிடிக்க காரணம் ? இது எமது ஐநூறாவது பதிவு இதுவே கா’’ரணம். இதுவரை தந்த பதிவுகளில் ஐம்பது பதிவுகளாவது உங்களின் மனதை தொட்டுச்சென்று இருக்கும் என்பது எமது திண்ணமான எண்ணம். இதுவரை எமது எழுத்துக்களின் நன்மையை திறந்த மனதோடு பாராட்டியும், உயர்ந்த மனதோடு தவறுகளை சுட்டியும், காண்பித்துச் சென்ற அனைத்து உள்ளங்களையும் பெயர்களைச் சொல்லி நன்றி பாராட்ட மனதில் இடமுண்டு என்றாலும் யாராவது விட்டுப்போய் விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுப்படையில் சொல்கின்றேன்.

நன்றி सुक्रिया மஞ்சி Thanks இஸ்தூத்தி നന്നി ஒல்லது  شـــكرا சலாமத்.

இதுவரை எமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே, எண்பத்து ஆறு லட்சத்து, நாற்பத்தி ஏழாயிரத்து, ஐநூற்று முப்பத்தி இரண்டு நபர்கள் (எண்ணால் 1, 86, 47, 532) என்று சொல்லிட ஆசைதான் ஆனால் ஆனை ஏற ஆசையிருக்கு உந்தி ஏற ஜீவனில்லை என்பதைப்போல்தான் என்நிலை ஆகவே எம்பூட்டு பேரு பார்த்தாங்கன்னு சைடு கெஜட்டுல நீங்களே பார்த்துக்கோங்க...

இனி நாமலும் அரசியல் பதிவுகள் எழுதினால்தான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் போல தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்பதுபோல் தமிழ் நாட்டுக்குள் வந்தவன் எல்லாம் தலைவன் ஆகப்பார்க்கிறான் அப்படி என்றால் மண்ணின் மைந்தன் நான் ஆககூடாதா ? என்னுடைய நிறம்தான் எலுமிச்சை போல மஞ்சலும், சிவப்பும் கலந்த பொன் நிறமே தவிர நானும் பச்சைத்தமிழனே என்பதை பதிவர்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக எனது கணினி இணையம் பிரச்சனை காரணமாக செல்பேசியின் வழியாக படித்து கருத்துரை இட்டு வருகிறேன் பலரது தளங்களிலும் தமிழ் மணம் ஓட்டு செய்ய இயலவில்லை பொதுவாக அனைவருக்கும் நான் தமிழ் மணம் ஓட்டு போட்டு விடுவேன் அரசியல்வாதிகளுக்குத்தான் ஓட்டுப்போட்டதில்லை.. இணையம் விரைவில் சரியாகி அடுத்த மாதம் முதல் அனைவரது தளத்திலும் மீண்டும் தமனாவுக்கு திடீர், திடீரென குத்து விழும் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்பெல்லாம் எனது பதிவுகள் வெளியான ஒரு மணி நேரத்தில் தமிழ் மணத்தில் நுழைந்து விடும் இப்பொழுதெல்லாம் பதிவு வெளியாகி 47 மணி நேரமாகியும் ஏழாவது ஓட்டு கிடைக்காததால் 48 வது மணி நேரத்திலேயே பதிவு காலாவதி ஆகி விடுகிறது.

இதன் காரணமென்ன என்பதை சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் கோடாங்கி அடித்து பார்த்ததில் குரு நாலாம் வீட்டிலிருந்து இடப்பெயர்ச்சி கொண்டுள்ளான் வரும் வைகாசி போயி சித்திரை வந்தால் சுக்கிரன் மீண்டும் உச்சிக்கு வருகிறான் என்று சொன்னார் மேலும் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று எமது நண்பர் பக்திப்பழம் திரு. வலிப்போக்கன் அவர்களும் ’’ஜொள்ளி’’ இருக்கின்றார் இனியெனும் பகவான்ஜி அருளால் நன்மையே நடக்கட்டும்.

நட்பூக்களே தொடர்ந்து தங்களது கருத்தை ஆவலுடன் தேடும்...
உங்கள் தேவகோட்டை


கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

79 கருத்துகள்:

  1. வாழ்த்து முதலில் ,கருத்து பிறகு :)

    பதிலளிநீக்கு
  2. சோலந்தூர் சோசியர் சோனைமுத்து ஆருடம் பொய்த்து விட்டது ..நேற்றிலிருந்து தமிழ்மணம் சரியாக செயல் பட ஆரம்பித்து விட்டது ,இனி உச்சம் தொடுவீர்கள் கில்லர்ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் சொன்னால் நடக்குமாமே...
      நன்றி ஜி

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹையோ பகவான் ஜீ நேக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார்:) இப்போ கில்லர்ஜீ உம் சப்போர்ட்க்கு பகவான் ஜீக்கு ஐஸு வைக்கிறாரே கர்:).. எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளிட்டால்ல் மகுடம் அதிராவுக்கே:)

      நீக்கு
    3. வாங்க பகவான் பொதுவானவர் அவர் இப்படி சொல்வதால்தான் பகவான் இல்லையேல் பகைவன்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அவர் உப்பூடிப் புகழ்ச்சிக்கெல்லாம் மயங்கமாட்டார்ர்:) இல்லயா பகவான் ஜீ???:).

      நீக்கு
    5. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வாழ்த்துக்கள் கில்லர் ஜீ... அதிகப் படியான வாக்குகளின் அடிப்படையில்.. மகுடத்தை ஈசியாக தலையில் சூட்டி விட்டீங்க:)..

      அழுகிறபிள்ளைதான் பால் குடிக்கும் என்பது இப்ப புரியுதோ?:)

      நீக்கு
    6. வாங்க பசிக்கின்ற பிள்ளையும் பால் குடிக்கும்னு ஔவையார் அம்மாச்சி சொல்லி இருக்காங்க....

      நீக்கு
  3. ஐநூறு, ஆயிரம் இரண்டாயிரம் எனப் பெருகிட என் வாழ்த்துகள்.

    தமிழகத்தின் தலைவனாகும் ஆசை எனக்கிருந்தது. நீங்களும் ஆசைப்படுவதால் என் ஆசையை வேரோடு களைந்துவிடுகிறேன்.

    மீண்டும் வாழ்த்துகள் நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே எனக்கு தலைவனாக வேண்டும் என்ற சிந்தை இல்லை நல்ல தலைவனை சுட்டிக் காட்டவேண்டும் எனாபதே கொள்கை வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  4. 500 க்கு வாழ்த்துக்கள் மேலும் தொடரந்து எழுதிக் கொண்டே இருங்கள் தம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக இறுதிவரை எழுதுவேன் நண்பரே நன்றி

      நீக்கு
  5. அன்பின் ஜி..

    இன்னும் பலநூறு பதிவுகள் வழங்கிட நல்வாழ்த்துகள்..
    தொடரட்டும் தங்களின் அரும்பணி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வாழ்த்து என் பாக்கியம்.

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..ஐநூறு, ஆயிரம் மற்றும் மேலே இன்னமும் நிறைய பதிவுகளை எழுதுங்கள் ..
    நான் போனிலேயே 2 ஆம் வாக்கு போட்டுட்டேன் :)
    பின்னூட்டம் வர லேட்டானாலும் வாக்கு முதலில் போட்டுடுவேன் .அதுவும் இப்போ உடனே ஒன் கிளிக்கில் வாக்களிக்க முடியுது நேற்றிலிருந்து ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தொடர்பவமைக்கும் நன்றி

      நீக்கு
  7. ஐநூறு என்ன
    சின்னப் பெறுமதியா?
    ஐநூறைக் கடக்க
    எத்தனை எத்தனை
    தடைகளைக் கடந்திருப்பாய்...
    அத்தனையும் - உனது
    அறிவுக் கண்ணைத் திறந்திருக்கும்
    எனது பாராட்டுகள்
    ஐநூறைக் கடந்தாலும்
    பல்லாயிரங்களைக் கடக்க
    எனது வாழ்த்துகள்
    தொடர்ந்து எழுதுங்கள்
    எழுத்து எமது அடையாளம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் மனம் திறந்த வாழ்த்துகளால் இன்னும் எழுதுவேன் நன்றி.

      நீக்கு
  8. 6ம் வோட்டு என்னோடது:).. மதிவதனி உங்களுக்கே:) ஹையோ வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆகுதே... தமனாவில் முதலிடம் உங்களுக்கே:)..

    தயவு செய்து அரசியலுக்குள் குதிச்சிடாதீங்க.. உங்களிடம் நிறைய நகைச்சுவை இருக்கிறது, நகைச்சுவைக் கதைகள் எழுதுங்கோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அரசியலில் குதித்தால்தானே கோமாளியாகி எல்லோரையும் சிரிக்க வைக்கலாம்.

      நீக்கு
  9. உங்களுக்கு சுக்கிரன் உச்சிக்கு வருவதெனில், பகவான் ஜீக்க்கு உள்ளங்காலுக்கு சுக்கிரன் போனால்தான் உண்டு:)... ஹா ஹா ஹா:).

    500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... பரிசு பிளேனில வருது:) சைன் பண்ணி வாங்கிக்கோங்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசு பிளேனில் ப்ளைனாக வராமல் இருந்தால் மகிழ்ச்சி

      நீக்கு
  10. மிகவும் மகிழ்ச்சி ஜி... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் பல உதவிகளே இதற்கு காரணம் ஜி

      நீக்கு
  11. 500 எல்லாம் உங்களுக்கு ஜுஜுபி!
    விரைவில் 1000,2000 என்று பறக்கப் போகிறீர்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நிச்சயமாக எழுதுவேன் இன்றைய பதிவுக்கு வரும் வாழ்த்துகளால்....

      நீக்கு

  12. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    விரைவில் இதே இளமைத் துள்ளலுடன்
    ஆயிரம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வரவுகள் தொடர்ந்தால் கண்டிப்பாக எழுதுவேன் நன்றி

      நீக்கு
  13. வாழ்த்துக்கள். 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. த.ம ஓட்டுடன் உங்களை வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா மிக்க மகிழ்ச்சி தங்களது கருத்து சிறியதாகி விட்டதே... நன்றி

      நீக்கு
    2. ஐபேட் ல ஒவ்வொரு எழுத்தா அடிக்க நேரம் எடுக்குது. தொடர்ந்து எழுதுங்கள்.

      சலாமத் வார்த்தை விக்ரம் படத்தை ஞாபகத்துக்குக் கொண்டுவந்துடுத்து. நம்ம ஜனகராஜ் சலாமியா தேசத்துக்கு வரவேற்று படத்தின் டெம்போவைக் குறைப்பார்

      நீக்கு
    3. சலாமத் என்றால் பிலிப்பைன்ஸ் நாட்டு தகாளன் மொழியில் நன்றி என்று அர்த்தம்

      மீள் வருகைக்கு சலாமத் காய்பிகிட்.

      நீக்கு
  15. அய்..நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...!!! முழுமுதற்க் கடவுள் பகவான்ஜீ துணை இருக்க... பயமில்லாமல் ஆயிரமாவது பதிவைத் தாண்டியும் உடன் தொடருவது. பக்தி பழம் ........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹி.. பக்திப்பழம் கணேசரே முதற்கடவுள் நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  16. த.ம. வாக்குடன் பாராட்டுகள் எங்களுக்கும் அப்ப அப்ப ஏதாச்சிலும் கற்று கொடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கற்றுக் கொடுக்கும் வளர்ச்சியை முதலில் பெற்றுக் கொள்கிறேன் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  17. ஐநூறாவது பதிவுக்கு எனது அன்பு வாழ்த்துகள் ஐயா.
    இது ஆரம்பம் மட்டுமே இன்னும் பல ஆயிரங்கள் தொடுவதற்கும் எனது வாழ்த்துகள் ஐயா.
    தொடருங்கள் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  18. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ஜீ. இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம்.1000 வது பதிவுகள் சீக்கிரம் தொட்டுவீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  19. நண்பரின் 500 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். தமிழ்மணத்தில் முன்புபோல் ஓட்டு போட இயலவில்லை; அதிக நேரம் ஆகிறது. எனவே அந்த பக்கம் போவதில்லை. இதனாலேயே எனக்கும் யாரும் வாக்களிப்பது நின்று விட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  20. சுஜாதா கதை ஒன்றில் "மஜாக் பண்றீங்களா வஸந்த்?" என்று ஒரு வடநாட்டு நடிகை கேட்பதாக வரும். அதுவும் மஸ்கா என்பதன் பொருளும் ஒன்றுதானா!

    அரசியல் பதிவுகள் அதிகம் போடவேண்டாம். அவ்வப்போது போடுங்கள்!

    ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி வாழ்த்துகளுக்கு நன்றி
      ஹிந்தியில் இப்படி சொல்வது உண்டு நாம்கூட தாஜா பண்ணுறான் என்று சொல்வது போல...

      நீக்கு
    2. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி!மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்....இது மஸ்கா அல்ல....ஹஹஹ....மஸ்கா போடுரியானு சின்ன வயசுல பேசியது உண்டு.....ஆனால் அது அரபியில் னு தெரியாது.....

      நீக்கு
    3. வாங்க வாழ்த்துகளூக்கு நன்றி

      மஸ்கா அல்ல "மஸ்க்கா" இப்படி அழுத்தம் வேண்டும் ஒருவேளை அழுத்தமாய் சொன்னால்தான் காரியம் ஆகும் என்பதால் அரேபியர்கள் அழுத்தமாய் வார்த்தைகளை அமைத்தார்களோ...

      நீக்கு
  21. ஐநூற்றின் அதிசயம் கண்டேன். உங்களுக்கு ஐநூறு எல்லாம் தும்மாத்துண்டு என்பதை நாங்கள் அறிவோம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வாழ்த்துகளும், கருத்துகளும் இருக்கும்பொழுது இன்னும் எழுதுவேன் நன்றி

      நீக்கு
  22. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா கருத்தை ஏன் நீக்கினீர்கள் ?

      நீக்கு
    2. நான் நீக்கவில்லை ஜி. ஐநூறு என்பது வெறும் குறியீடே மேலும் எழுதுங்கள் என்று பின்னூட்டமிட்டதாக நினைவு

      நீக்கு
    3. நானும் படித்தேன் ஐயா மறுமொழி கொடுப்பதற்குள் மறைந்து விட்டது
      மீள் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  23. எல்லையின்றி வளரட்டும் எண்ணிக்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் ஐயாவின் வாக்கு பலிக்கும் வழக்கம் போல...

      நீக்கு
  24. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜீ

    500 பதிவுகள்...உங்கள் உழைப்பைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. கில்லர் ஜீயின் கம்பியூட்டர் சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கின்றோம் :)

    பதிலளிநீக்கு
  26. எல்லா லாங்குவேஜிலும் நன்றி சொல்லி இருக்கீங்க... பட் பிரெஞ்சுல ஏன் சொல்லல?

    ஐ ஆம் சேட் ஜீ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... மறந்து விட்டேன் நண்பா இதோ... ஜொள்'லுகிிறேன் மெர்ஸி

      நீக்கு
  27. ஐநூறு முறை வாழ்த்துகள். தொடர்ந்து எழுதி வரவும் இணையம் விரைவில் சரியாகவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நவமா ? அமெரிக்காவிலிருந்து வந்து பிஸியாக இருப்பீர்கள்.

      இருப்பினும் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  28. ஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! விரைவில் ஆயிரத்தை தொட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகளால் நிச்சயம் 1000 தொடுவேன் நண்பரே.

      நீக்கு
  29. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  30. ஐநூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஐநூறு பல்லாயிரமாய்ப்பெருகட்டும்!!!

    பதிலளிநீக்கு
  31. தொடர்ந்து எழுதுங்கள் தோழர்
    மனம் கனிந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு