இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 23, 2017

மேலே வானம் கீழே பூமிகா

1991 - ///லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா... உன் இடுப்பசுத்தி திருப்பி பாரம்மா எண்ணை இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்கம்மா மரம் இழுக்கிற கையெப்பாரம்மா ஏ... அடக் படக் சடக்/// இதை கவிதை என்று இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும்போது நாமேன் கவிதை எழுதக்கூடாது ? என்று எனக்கு தோன்றியது அதன் விளைவாய் என் மனதில் உதித்த 1991 ஆண்டின் எனது கவிதைகளில் முதல் கவிதை.


இக் கவிதையின் கரு..

தற்காலம் ஈருடலாயினும் பிற்காலம் ஓருடலாவோமென கருதியிருந்த கன்னியின் மரணத்தால் வேருடல் வடித்த சிவப்பு கண்ணீர் அஞ்சலி....



பூமாஞ்சலி

பூத்திருந்த பூந்தளிரே...
காத்திருந்தாய் கனியதற்கு,

தேன் கொட்டும் நேரத்திலே...
தேள் கொட்டி விட்டதென,

தேர் ஏறி போனவளே...
ஊர் தேடிவந்து விட்டாய்,

கொஞ்சுகின்றாய்... கொஞ்சுகின்றாய்...
துயில் கொள்ளும் எனைக்கண்டு

அஞ்சுகின்றேன்... அஞ்சுகின்றேன்...
அஞ்சுகமே உனைக்கண்டு

தறிகெட்டு ஓடினாலும்-கழுத்து
நெறிபட்டு விடுவேனோ

விழி பிதுங்கி விடும் முன்னே...
வழி தேடி வாரேன் பின்னே...

சாம்பசிவம்-
அந்த வேருடல் தனிமையில் இந்தக் கவிதையை ரேவதி ராகத்தில் பாடும்போது நான் கேட்டிருக்கிறேன்.

காணொளி

74 கருத்துகள்:

  1. தாங்க முடியாத துயரத்தின் ஓலம்
    கவிதையில் ....
    காணொளியில் மிகச் சரியாய்
    அதே வரிகள் வரும்படியாய்
    எடிட் செய்திருப்பது இன்னும்
    சோகம் கூட்டிப்போகிறது
    காலமே காயம் ஆற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே படத்தொகுப்பு குறித்து எழுதியது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது நன்றி.

      நீக்கு
  2. இப்போ என்னதான் பிரச்சனை கில்லர்ஜி க்கு?:).. கவிதை எழுதுவதா? இல்ல காதலிச்ச பெண்ணைக் கைப்பிடிக்க முன் போய்விட்டாவே எனும் பிரச்சனையா?:) இல்ல சினிமாப்பாட்டில் இருக்கும் எரிச்சலா?:)

    தெளிவாச் சொன்னால்தானே நான் தீர்ப்புச் சொல்ல முடியும்?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ... கவிதையின் "கரு" என்னவென்று சொல்லி விட்டேன் இல்லையா...
      சின்ன, சின்ன வரிகளை எழுதிக்கொண்டு இருந்த நான் கவிதை(?)என்று மனதில் தைரியத்தை வரவழைத்து எழுதிய முதல் கவிதை

      இதற்கு மூலகாரணம் "லாலாக்கு டோல் டப்பிமா"தான்

      இப்பொழுது தீர்ப்பு சொல்லுங்க... நாட்டாமை.

      நீக்கு
    2. நீங்க எழுதும் போஸ்டுக்களே ஒரு அழகிய கவிதைபோலவேதானே இருக்குது கில்லர்ஜி... நிஜமாத்தான்.. ஒன்று சிரிக்க வைக்கிறீங்க.. இல்ல அழ வைக்கிறீங்க.. இல்லாட்டில் எல்லோரையும் பொயிங்க:) வைக்கிறீங்க:) ஹா ஹா ஹா..

      அடுத்த ரஜனி அங்கிளின் படத்துக்கு மொத்தப் பாடலும் நீங்கதான் எழுதப்போறீங்க:). எப்பூடியாவது கேட்டு என்னையும் அஞ்சுவையும்:), ஒரு பாட்டில் டூயட் பாட வச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:)

      நீக்கு
    3. வாங்க அதாவது மற்றவரிலிருந்து மாறுபடணும் இதுவே எமது கொள்கை.

      நான் பாடல் எழுதினால் அது கில்லர்ஜி பாடல் அப்படினு பேசப்படணும் உங்களது தொடக்கமே தவறாக இருக்கிறதே இப்பொழுது இவனுக்கு காவடி தூக்கி பாட்டெழுத நானென்ன வைரமுத்துவா ?
      மேலும் எனது வரிகள் தமிழில்தானே வரும்.

      குறிப்பு வைரமுத்துவின் வரிகளை மிகவும் ரசிப்பவன்

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அரசியல்:) பிரச்சனையை மீ மறந்தே போயிட்டேன்ன் அப்போ ஜெயம்ரவி என மாத்திடலாம்:)

      நீக்கு
    5. நான் பாட்டு எழுதினால் லைட்பாய் முதல் ப்ரொட்யூஸர் வரை தமிழராக இருத்தல் வேண்டும் இது நடக்கிற காரியமா ?

      நீக்கு
    6. அதிரா..... ரஜினி அங்கிள் இல்லை... சித்தப்பா!!!! அதுவும் யாருக்குத் தெரியுமா!!!

      நீக்கு
    7. ///நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும்////

      ஹா ஹா ஹா உங்கள் இந்த வசனத்தை ...மீ படு பயங்கரமாக இப்போ ஆதரிக்கிறேன் கில்லர்ஜி:).. கரீட்டூஊஊஊ:)

      நீக்கு
    8. நானும் வர்றேன்..
      எனக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க ஜி!..

      நீக்கு
    9. நீங்கள்தானே ஜி டைரக்டரு...

      நீக்கு
    10. @ஸ்ரீராம் :))) ஹாஹாஹா ..

      நீக்கு
    11. சரியாப் போச்சு!..
      படம் ஓடணுமா.. வேணாமா!..

      நீக்கு
    12. ஹா ஹா ஹா ஸ்ரீராம் அது நம்மட அஞ்சுக்கு:) ஹா ஹா ஹா.. படிச்சதும் கிழிச்சிடுங்கோ பீஸ்ஸ்:)..

      ஹா ஹா ஹா டைடக்கரூஊஊ துரை அண்ணனோ.. அப்போ ஸ்ரீராமிடம் லைட் செக்‌ஷனைக் கொடுத்திடுங்கோ கில்லர்ஜி.. அவர் ஹிந்திப் பாட்டின் ரசிகர் என்பதற்காக அவர் தமிழர் இல்லை எனச் சொல்லிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:)..

      பகவான் ஜீ க்கு என்ன பதவி கொடுக்கலாம் கில்லர்ஜி?:)

      நீக்கு
    13. பகவான்ஜி நகைச்சுவை விடயங்களை பார்த்துக் கொள்வார்

      குவைத் ஜி உங்களால் இயக்க முடியும்.

      நீக்கு
    14. படம் ஓடணுங்கிற எண்ணமே உங்களுக்கு இல்லையா ஜி :)

      நீக்கு
    15. வலைப்பதிவர்கள் குடும்பத்துடன் கட்டாயம் தியேட்டரில் பார்த்தாக வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவோம் ஜி

      நீக்கு
  3. அக்கா!.. இது சாதாரண மானுடர்கள் எழுதிய பாடலே அல்ல!..

    எலும்பு சதை ரத்தம் நாளம் அத்தனையிலும் கவித்துவம் ஓடக்கூடிய ஒருவராலேயே இப்படி எழுதக் கூடும்..

    ஆமாம்.. அந்தக் கவிஞர் யார்!?.

    வேற யார் தாமரை!.. நம்ம பாசக்கார கில்லர் ஜி தான்!...

    ஆகா.. அருமை!..

    (நம்ம ஆளுங்க பேசிக்கொண்டது.. ஒளிஞ்சிருந்து கேட்டேன்!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி தங்களது கருத்துரையே... கவிதை போல் இருக்கிறதே நன்றி

      நீக்கு
  4. மனம் கனத்துப் போய்விட்டது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே 1991-ல் எழுதியது வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. அருமை கில்லர்ஜி. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    துரை செல்வராஜூ ஸார் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  6. துயரத்தை சுமந்து கொண்டே இருக்காதீர்கள் . அதைவிட்டு வெளியே வாருங்கள் ஆறுதல் அடையுங்கள்.
    உங்கள் கவிதையும், சந்திரபாபுவின் பாடலும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ இது நான் 1991-ல் எழுதிய முதல் கவிதை அதற்காக வெளியிட்டேன் வேறொன்றும் இல்லை இதை என்னவள் நினைவு நாளுக்கு வெளியிட்டு இருந்திருக்கலாமோ... என்று தோன்றுகிறது நட்புகளின் கருத்துரைகளால்....

      நீக்கு
  7. சோகத்திலிருந்து வெளியே வாருங்கள் என்று சொல்வது எளிது ஆனால் காலம் மாற்றும்.
    ஆறுதல் அடையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      எனது உறவுகள் தரும் துயரமே என்னவளை நினைக்க வைக்கிறது காரணம் சொல்லி அழ மடியில்லையே என்ற ஏக்கம்...

      அதேநேரம் அவளிருந்திருந்தால் இந்த உறவுகளின் தொல்லை என்னை நெருங்கி இருக்கவும் முடியாது
      மீண்டும் நன்றி சகோ.

      நீக்கு
  8. கவிதை அருமை கில்லர்ஜி! மிக அழகாக எழுதுகின்றீர்கள்! இன்னும் நிறைய எழுதுங்கள் ஜி. ஏற்கனவே நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்று நினைவு உங்களுக்குக் கவிதை எழுத நன்றாக வருகிறது என்று!!!

    அது சரி லாலாக்கு டோல் டப்பி கவிதையா? அப்படியா? ஹஹஹ்

    சோகம் சொட்டுகிறது ஜி! இழந்ததை மீண்டும் பெற முடியாதுதான்! பொருளா என்ன? இது உயிருடன் கலந்த ஒன்றாயிற்றே!!! சரி சோகத்திலிருந்து அடுத்து ஜாலி பதிவு ஓகேயா??!!!!

    எடிட்டிங்க் சூப்பர் ஜி! கரெக்டா வரிகள்!!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எடிட்டிங்கை குறித்து சொன்னது மகிழ்ச்சி

      என்னைப் பொருத்தவரை அது வசனம்தான் ஆனால் சமூகம் இதை கவிதை, என்றும், பாடல் என்றும் சொல்கிறதே....

      அடுத்தபதிவு வில்லங்கத்தாருக்காகஹஹாஹாஹாஹாஹ

      நீக்கு
    2. மிக்க நன்றி எங்களுக்காக அடுத்த பதிவை ஜாலியாகப் போட்டமைக்கு

      நீக்கு
  9. தேன் கொட்டும் நேரத்திலே
    தேள் கொட்டி விட்டதென்ன?

    ஆஹா.. வலி இருந்தாலும் வரிகள் சூப்பர்.

    1991 இல் எழுதியதா? வாவ்வ்..!

    அப்புறம் 'லாலாக்கு டோல் டப்பிம்மா' வ குறைச்சு மதிப்பிடாதீங்க ஜி. அது ஒரு தேச பக்தி பாடலாம். லியோனி பட்டிமன்றத்தில் தூயவன் சொன்னது.

    கேட்டிருக்கீங்களா..??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எனது முதல் கவிதை இக்கவிதையை கடந்த 17 வருடமாக நான் எந்த நொடியும் மனப்பாடமாக சொல்லிக் கொள்வேன்.
      தேசபக்தி பாடலா ? அறியாத விடம் தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. ஆகா..கவிதை..கவிதை....அருமை....அப்பவே காதல் சோகம்தானா...?????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது படிக்கும் பொழுதே தொடங்கியாச்சு நண்பரே....

      நீக்கு
  11. ஒவ்வொரு பதிலும் மனதை கனக்க வைத்து விடுகின்றீர்கள். பூமாஞ்சலி என்ற சொல் இனி கில்லர்ஜி அகராதியில் இடம் பெற்றுவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே பூமிக்குள் போன பூமிகாவுக்கு அஞ்சலி செய்வது பூமாஞ்சலிதானே... பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  12. வணக்கம்
    ஜி
    சோகமான வாழ்வில்தான் சுகம் அதிகம்
    கவிதையை படித்த போது மனம் கனத்து விட்டது த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே //சோகம்கூட சுகமாகும்// என்று ஒரு தமிழ் பாடல்கூட உண்டு வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. சோகமான மனோநிலையிலிருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள். என்றாலும் கவிதையின் பொருள் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இது எனது முதல் கவிதை நான் மிகவும் நேசித்து எழுதியது இருப்பினும் உண்மையின் பின்னணியே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. கில்லர்ஜியின் புதிய பாதை தொடங்குகிறது...

    அடுத்த பதிவர் மாநாட்டில் கவிதை நூல் வெளியீடு - சரி தானே ஜி.....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முயற்சிப்போம் உங்களைப் போன்றோரின் ஆதரவுடன்....

      நீக்கு
  15. நும் பெயரென்னவோ ‘கில்’லர்ஜிதான்
    நகைச்சுவைப் பதிவுகளால்
    எம்
    மனத்துயர் போக்கும் ‘எனர்ஜி’ நீவிர்!
    வாழ்க நீடூழி!
    வளர்க நும் கவியுள்ளம்!!!
    [த.ம.போடும்போதே கைவசம் இருந்த கவிதை இது.அப்போது பதிவு செய்ய மறந்தேன். இப்போது உங்கள் பார்வைக்கு.]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ''கில்'' என்றால் கொலைகாரன் என்று பொருளாயிற்றே ? அப்படீனாக்கா நீங்க என்னை பாராட்டுவது மாதிரி தெரியவில்லையே....

      இருந்தாலும் உங்களது பாராட்டு கவிதை அருமை நண்பரே

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அறிவுப்பசி ஜி யின் கவிதையை:)க் கண்டு மீ வியக்கேன்ன்ன்ன்:)

      நீக்கு
    3. 'கில்லர்’ என்றால்தான் கொலைகாரன் என்று அர்த்தம் வரும். அதனால்தான், ‘கில்’ என்று ‘கில்’லுக்கு மட்டும் மேற்கொள் குறி போட்டேன். கில் > கொல்...கெட்ட எண்ணங்களைக் கொல்பவர்.

      அப்பழுக்கற்ற மனம் கொண்ட நண்பர் கில்லர்ஜியை நான் கிண்டல் செய்வேனா?

      என் வாழ்த்து மனப்பூர்வமானது.

      அதோடுகூட, இது மனம் கவரும் ஒரு புனைபெயர். பெயர் ஆராய்ச்சியெல்லாம் கூடாது.

      அதிராவின் பாராட்டுக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    4. ஆஹா அற்புதமான விளக்கம் பெயரின் உட்கருத்தை அழகாக சொன்னமைக்கு நன்றி நண்பரே
      சும்மா தாமஸ் ஸூவல்லர்... ஸாரி தமாசுக்காக சொல்லி இருந்தேன் மீண்டும் நன்றி

      நீக்கு
  16. 1991ல் எழுதியதா சும்மாச் சொல்லக் கூடாது அப்போதைய எழுத்து நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      //அப்போதைய எழுத்து நன்றாகவே இருந்தது//
      என்றாவ் இப்பொழுது ???

      நீக்கு
  17. உண்மையில் கவிதை மிகவும் சூப்பர் ..
    நேற்று முழுக்க விவாத மேடையில் அதகளம் செய்ய வச்சிங்க இன்னிக்கு மனம் வலிக்கும் வரிகளை கோர்த்து கவிதையா எழுதியிருக்கீங்க ..

    ..உங்கள் கவிதை வரிகளும் //சேர்ந்து வாழும் மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை // பாடல்வரியும் அந்த இறுதிப்பயண பெட்டியும் மனதை பிசைந்தது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை வரிகளை உணர்வாய் ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  18. பெரும்பாலோனோரின் முதல் கவிதை சோகக்கவிதையாக இருக்கும் போல! இக்கவிதை எழுதும் போது உங்கள் மனைவி உடனிருந்தார் தானே? 1991 ஆம் ஆண்டில் வெளி நாட்டுப்பணியில் இருந்தீர்களா? லாலாக்கு டோல் டப்பிம்மா என டப்பாங்கூத்து பாடலை வைத்து கிராமிய வாசனை வீசும் வரிகல் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மனைவி இருந்த நேரமே உள்நாட்டில்தான் இருந்தேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. வணக்கம் ஜி !

    அறிதுயில் கொள்ளும் போதும்
    ...அஞ்சுகம் அவளின் அன்பை
    நெறியிட வைக்கும் எண்ணம்
    ...நித்தியம் நெஞ்சில் ஊரும்
    பிறிதொரு காதல் வேண்டாப்
    ...பிறப்பினைத் தந்து ஆசை
    எறிந்துயிர் இருப்பைக் கொன்றும்
    ...இன்னிசை பாட வைக்கும் !

    நினைவுகள் எவ்வளவு அழகானது என்பதை பிரிந்தவர்களால் மட்டுமே உணர முடியும் ஜி ! அருமையா எழுதி இருக்கீங்க அப்போதே வாழ்த்துகள் ஜி
    இதுவும் கடந்து போகும் !

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே பிரிவின் வலியே...
      வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
    2. சீராளன் நல்லா எழுதியிருக்கீங்க. ரசித்தேன்.

      நீக்கு
  20. அருமைண்ணே. மனசை பிசையுது வரிகள்

    பதிலளிநீக்கு
  21. எழுத எழுத்த்தானே எழுத்து வசப்படும். உங்கள் அப்போதைய முயற்சி நல்லா இருந்தது. த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களைப் போன்றவர்களின் வருகைகளால் எனது எழுத்துகள் செம்மைபட்டு வருவது உண்மையே மனம் நிறைந்த உண்மை.

      நீக்கு
  22. தையல் மெஷினை மூடுற மூடி மாதிரி அதென்ன படம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி யாருமே அதனைக்குறித்து எழுதவில்லையே.... ஆனால் நீங்கள் கண்டிப்பாக கேள்வி கேட்பீர்கள் என்று நினைத்தேன் நன்றி.

      நீங்கள் கேட்ட இரண்டாவது படம் சவப்பெட்டி
      முதல் படம் அந்தக் காவியப்பாடலை இயற்றியவர் யாரு ?

      நீக்கு
  23. //தேன் கொட்டும் நேரத்திலே
    தேள் கொட்டி விட்டதென...// கொட்டுவது வார்த்தையல்லவோ...தேனாக...!

    பதிலளிநீக்கு
  24. பதில்கள்
    1. வாங்க நண்பா தங்களது பதிவுகளை தொடருங்கள்....

      நீக்கு
  25. ‘லாலாக்கு டோல்டப்பி’ என்ற பாடலை எழுதியவருக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லாவிடில் தங்களின் கவிதை கிடைத்திருக்காதே! பகிர்ந்தமைக்கு நன்றி!

    சந்திரபாபுவின் பாடலை பொருத்தமாக இணைத்தமைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாலாக்கு டோல் டப்பியை எழுதியவர் யாரென்று உங்களுக்கு தெரியும் இருப்பினும் அவரின் பெயரைச் சொல்லவில்லையே... வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. சவப்பெட்டி...எதற்கு அது..அப்போ இந்தக் கருத்து போட நினைத்து முடியல.

      வாலி தான் டோல் டோப்பிக்கு சொந்தக்காரர்....ஆனா அவரது பிற கவிதைகள் நன்றாக இருக்கும்......

      கீதா

      நீக்கு
    3. பாடலாசிரியரைத்தான் படமாக்கி இருக்கிறேன்

      நீக்கு