இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 01, 2017

வாக்காளர்கள்...


சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் மஞ்சுளா என்பவரால் எழுதப்பட்ட சிறு கவிதை இன்னும் என் மனதில் பதிந்து கிடக்கின்றது.

அழியாமைக்கு விரல் நீட்டும் அறியாமைகள்.
              - கே.மஞ்சுளா

நான் காணா சகோதரி மஞ்சுளா இதுவரையிலும் நான் இந்த அறியாமை பட்டியலுக்குள் வரவில்லை என் இறுதிக்காலம் வரையிலும் என உறுதி சொல்ல முடியும்.

வாக்களிக்காமல் இருப்பது முட்டாள்தனமானது என்று சொல்பவர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளில் 65 ஆண்டு காலமாக வாக்களித்து விட்டு ஏமாந்து நிற்பது மட்டும் முட்டாள்த்தனமாக உன் மனதிற்கு படவில்லையா ?

உனக்கு எப்படித்தெரியும் முதலில் நீ நியாயமான நியாயம் பேசும் மானிடனாக இருப்பதில்லை உண்மையான உண்மை பேசும் மானிடனாக இருப்பதும் இல்லை இரண்டு கைகளை வீசிக்கொண்டு இரண்டு காலில் நடந்து செல்லும் ஜந்துக்கள் எல்லோருமே மானிடர்கள் கிடையாது நூறு ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டுப் போடச் செல்லும் ஜந்து வழியில் மூத்திரச்சந்து ஓரம் இருநூறு ரூபாய் கிடைத்தால் மற்றவனுக்கு ஓட்டுப் போடும் இந்த ஜந்துவை எப்படி அறிவுள்ள மானிடன் என்று சொல்வது ?

பரமக்குடி டீக்கடையில் ஒருநாள் எனது தந்தை வயதிருக்கும் அவர் சிம்புவை என் தலைவன் என்கிறார் இந்த ஜடத்தை எல்லாம் எப்படி மானிடன் என்பது ?

பின்குறிப்பு : என் வாழ்வில் தவறு என்று தெரிந்தே நான் செய்யும் தவறு வாக்களிக்காமை காரணம் ஒரு நன்மைக்கு வேண்டி..... ஒரு உயிரைக் காப்பாற்ற ஒருபொய் சொல்லலாமென அய்யா மஹாத்மா சொல்ல வில்லையா ? அதைப் போலவே இதுவும் இருக்கட்டுமே.... ஒருரூபாய் சம்பளம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்து இன்று பலரும் உரிமை கொண்டாடி சண்டையிடுவதற்கு காரணமானவரை முதலில் கைது செய்யட்டும் இது தவறு என்று அரசு சொன்னால் சட்டப்படி பெட்டி பெரியசாமியை வைத்து பார்த்துக்கொள்ள நான் தயார் - கில்லர்ஜி.

சிவாதாமஸ்அலி-
மேலே போனவரை எப்படி கைது செய்யமுடியும் ? 

46 கருத்துகள்:

  1. என் சார்பாக, சிவா தாமஸ் அலி கேட்டு விட்டாரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அந்த ஆளு எப்பவுமே இப்படித்தான்.

      நீக்கு
  2. குதிரை ஓடிப் போன பிறகு ஒரு ஆள்
    லாயத்தை இழுத்துப் பூட்டினானாம்!..

    ஏதோ நினைவுக்கு வந்தது.. சொன்னேன்!..

    ஆனாலும் -
    கடல் காய்ந்தாலும் கருவாடு துள்ளிக் குதிக்கும் இந்தக் காலத்தில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஒருவேளை கழுதை நுழைந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இருக்குமோ.....

      அபுதாபிக்கு பேத்தி வர்ஷிதாவைக் காணச்செல்லும் உங்களுக்கு வாழ்த்துகள் ஜி

      நீக்கு
  3. நல்லதை செய்ய நினைப்பவர்கள் நமக்கேன் வம்பு என ஒதுங்காமல் அரசியலுக்கு வந்தால் சீராகும் சகோ ..வாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      திரு. காமராஜரை தோற்கடித்த மக்கள்,
      இன்றுவரை திரு. கக்கன் அவர்களின் குடும்பத்தை கை விட்ட மக்கள்,
      மலையாளி எம்ஜிஆரை அமோகமாய் வெற்றிடைய வைத்த மக்கள்.
      தமிழன் சிவாஜியை M.L.A வாககூட விடாது தோற்கடித்த மக்கள்,

      இந்தியாவின் முதல் குடிமகனை நிர்ணயிப்பது ஒரு ஜெயில் குற்றவாளியின் கையில் இது மானக்கேடு இல்லையா ?

      கார் டயரையும், பறக்கும் ஹெலிகாப்டரையும் வணங்கும் மக்களை ஆளும் ஆட்சியாளர்கள்.

      கேரளத்தில் முதல்வரை பேட்டி காண்பவன் சோபாவில் சாய்ந்து கொண்டு கேள்வி கேட்கிறான் பதில் சொல்லும் முதல்வர் சோபாவின் நுனியில் அமர்ந்திருக்கிறார்.

      தமிழ் நாட்டில் ?

      நீக்கு
  4. அறியா'மை' இல்லாவிட்டாலும், வேறு வழியில்லா'மை' இருக்கிறதே!!!! அப்படித்தான் வாக்களிக்க வேண்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி
      மாற்றுக்கருத்து வராதவரை நமது சந்ததிகளின் வாழ்வு நாளை இன்னும் மோசமாகும்.

      நீக்கு
    2. மாற்றுக் கருத்து ஓகே, மாற்று ஆள் இல்லையே! தேர்ந்தெடுக்கும் முறை மாறவேண்டும். அல்லது வாக்காளர்களுக்கு உருசிய முறையில் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை திரும்பப்பெறும் வழி இருக்கவேண்டும்!

      நீக்கு
    3. இப்பொழுது சொன்னீர்களே இது சரி
      அதாவது உரிமையை கொடுக்கத் தெரிந்த மக்களுக்கு, தவறு செய்தால் அதை பறித்துக் கொள்வதற்கு அதிகாரம் வேண்டும்

      இங்குதான் M.L.A வீட்டுக்கு போனால் நாயை விட்டு விரட்டுகின்றார்களே.... பிறகு எங்கே நீதி ?

      நீக்கு
    4. // வாக்காளர்களுக்கு "உருசிய முறையில்" தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை //

      *உரிய முறையில்..

      நீக்கு
  5. ஒட்டு போட்டுட்டோம்......இதோ வாசிச்சிட்டு வரோம்..... பாலக்காட்டு ராசாவுக்கு போஸ்ட் போயிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாலக்காட்டு ராசா, ஆ.ராசா மாதிரி பேசுவாரே...

      நீக்கு
    2. அது யார் ஆ ராசா??!! ஜி என்ன ஜி என்னைய இப்படி யாரோ ஒருத்தருடன் ஊர் பேர் தெரியாதவருடன் சொல்லி விட்டீர்கள் ஹஹஹ்ஹஹ்

      நீக்கு
    3. அதாவது ஆ.ராசாவும் வில்லங்க கோஷ்டிதானே...

      நீக்கு
  6. மேலே போனவரின் ‘ஆவி’ கோட்டையைச் சுற்றித்தானே அலைந்துகொண்டிருக்கும். நம்ம உலகப்புகழ் போலீசாரால் கைது செய்ய[அவதாரங்களின் உதவியுடன்] முடியாதா என்ன!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செத்த கிராக்கிகளை விடுங்கள் நண்பரே உயிரோடு எவ்வளவு துரோகிகள் வாழுறான் மற்றவர்கள் உயிரை வாங்கி கொண்டு.

      நீக்கு
  7. 'நோட்டு'-க்கு 'ஓட்டு' என்பதை பற்றி எழுதி புலம்பலாம்...விடியல் உள்ளதா என்பது கேள்விக்குறிதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஓட்டின் நன்மையை அறியாத அறியாமைகள்தான் ஓட்டுக்கு பணம் வாங்கி விட்டு பிறகு அரசு சரியில்லை என்று சொல்வது வேடிக்கை.

      நீக்கு
  8. தங்களைப் போன்றே நானும் இதுவரை இந்த ஆமைகளிலிருந்து
    தப்பித்து வந்துள்ளேன். ஜனநாயகத்தின் பெயரால் ஏமாற்றப்படுகிறோம். ஆமை கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அரபுத்தமிழன் நான் இனி நோட்டோவுக்கு இடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

      காரணம் என்னுடைய உரிமையை மற்றவன் பணமாக்கி விடுகிறான்.

      நீக்கு
  9. ஒவ்வொருமுறையும் வாக்களித்து ஏமாறுவது வேதனையானது கில்லர்ஜி. நல்ல மாற்றம் விரைவில் வரட்டும்..??

    பதிலளிநீக்கு
  10. கில்லர்ஜி, உங்கு அண்ணன் சீமான் முன்னெடுக்கும் அரசியல் எத்தகையது..? அவரால் மாற்றத்தை உண்டாக்க முடியுமா?

    இங்கிருந்து பார்க்கும் போது, அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதுபோக தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைப் பிடிக்கும்..! அவரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை..!

    ஆனால் உங்கு அது பயன்படுமா? அவரால் பயன் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது கருத்துகள் புரட்சிகமாகத்தான் தெரிகிறது

      ஆனால் பெரியவர்களை மதிக்கும் பண்பு இல்லை அவசியமின்றி கோபத்தை காட்டுகிறார், சவால் விடுஙிறார் இந்த மக்களின் நாடித்துடிப்புகளை படிப்பதற்குள் அவரது காலம் கடந்து விடும்.

      பொதுவாழ்வுக்கு வருபவர்கள் எல்லாவற்றையும் பொருத்துப்போகும் தன்மை வேண்டும்.
      றஜீவன் கடந்த பதிவு அவசியம் படிக்கவும் நன்றி

      நீக்கு
    2. அவரது கருத்துகள் புரட்சிகரமானாதா??!! சுத்த ஹம்பக் ராரா அண்ட் கில்லர்ஜி. ஹிப்போக்ரைட் அவர். நிச்சயமாக அவர் நல்ல தலைவர் இல்லை என்பது மட்டுமல்ல ஆட்சிக்கு வரும் தகுதியும் அற்றவர்.

      கீதா

      நீக்கு
    3. அதாவது மற்றவர்கள் சொல்லாத வகையில் சற்று மாறுபடுகிறார் என்பதுதான் மற்றபடி புரட்சி செய்ய நினைக்கிறார் என்று சொல்ல வந்தேன்.

      அவருக்கு தலைவர் தகுதியில்லை என்ற உங்கள் கருத்தை மறுக்கவில்லை ஆனால் உங்கள் "தூ" புகழுக்கு இவர் இல்லை.

      நீக்கு
  11. ஜெயிலில் இருப்பவர் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கவில்லை! அந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்பது நிரூபணம் ஆகி விட்டதே! :))) போகட்டும்! நாங்களும் அப்படித் தான் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என நினைப்போம். ஆனால் கடைசியில் தேர்தல் அன்று முதலில் போய் எங்கள் வாக்கைப் பதிவு செய்வோம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சின்னம்மா சொன்னவருக்கே அ.தி.மு.க.வினர் ஓட்டு அளிப்போம் இதுதானே அர்த்தம்.

      என்னைப் பொருத்தவரை இனி நோட்டோதான் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  12. கில்லர்ஜி! வாக்களித்து ஏமாறுவது மக்கள். ஏனென்றால் புரட்சி செய்யத் தெரிவதில்லை அதில் நாமும் அடக்கம். நல்ல ஆட்சியாளர் ஒருவரைக் காட்ட முடியுமா? (கேரளத்திற்கல்ல இங்கு எதுக்கெடுத்தாலும் போர்க்கொடி தூக்குபவர் உண்டு. மக்களை அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாது...இங்கு ஊழல் உண்டு என்றாலும்..தமிழ்நாடு பண்டு போல் இல்லையே என்ற வருத்தம் உண்டு..)

    கீதா: ஜி மேற் சொன்ன கருத்துடன்....நானும் நோட்டா சப்போர்ட்டர். ஆனால் நோட்டா என்று நாம் சொன்னால் அவ்வளவுதான் நமக்கு பொறுப்பில்லை என்று சொல்லிவிடுவார்கள் ஜி. என்னைப் பொருத்தவரை மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடிந்தது நோட்டாதான். இல்லை என்றால் அது கூடாது என்றால் எங்களுக்கு எந்தத் தலைவரையும் பிடிக்கவில்லை நேர்மையான தலைவர் வரும் வரை நாங்கள் ஓட்டளிக்க மாட்டோம் என்று ஒரு மனதாக எதிர்க்க வேண்டும். முடியுமா? செய்வார்களா நடக்குமா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது நாம் கொடி பிடிக்க வேண்டாம், இருக்கும் ஆட்சியை இறக்கிவிட வேண்டாம், பேருந்துகளுக்கு தீ வைக்க வேண்டாம், புதுமை போராட்டம் என்ற பெயரில் தலையை அரை மொட்டை அடிக்க வேண்டாம், போலீசாரிடம் தடியடி வாங்க வேண்டாம், அமைதியாக தேர்தல்வரை இருப்போம்.

      ஓட்டுப்போட போகவேண்டாம் அப்படியே போடத்தான் வேண்டுமென்றால் நோட்டோவுக்கு போடுவோம்.

      ஆனால் நடக்காதே டாஸ்மாக்கில் மூழ்க வைத்து மூளையை குழப்பி விட்டார்களே...

      இராணுவ ஆட்சியும் ஒருமுறை வரட்டுமே அதையும் பார்த்து விடுவோம்.

      நீக்கு
  13. த ம போட்டாச்சு. நம்ம ஊர்த் தேர்தலைப் பத்திப் பேசி வீணா பிரஷரை அதிகரிச்சுப்பானேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே இதை நினைத்துதான் நான் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை.

      நீக்கு
  14. ஓட்டு போடாததும் சரியான நபரை தேர்ந்தெடுக்காமைக்கு ஒரு காரணம்ண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு காலம்தான் நாம் ஏமாறுவது ?
      மாற்றம் நம் மனதில் வராதவரை வாழ்வில் ஏற்றம் இல்லை.

      நீக்கு
  15. வக்காளர்களில் ஐம்பது சதவீத்தத்துக்கும் மேல் ஓட்டாக வங்க வேண்டும் இப்போதைய முறையிலாட்சிக்கு வருபவரில் குறைந்த வாக்குகளே பெற்றவர்கள் ஆகிறார்கள் காமராஜர் தோற்றது அவரது ஓவர் தன்னம்பிக்கைதான் காரணம் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொன்னாராமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்துரைக்கு நன்றி இப்படி சொன்னதால் மக்கள் பழி வாங்கி விட்டார்களோ...

      நீக்கு
  16. முறையில் சிக்கிவிட்டோம். மாறுவது சிரமமே.

    பதிலளிநீக்கு
  17. வாழும்போது அநியாயம் செய்துவிட்டவரை..செத்தபிறகு அவரைப் பற்றி பேசக்கூடாது என்பது பெரிய அநியாயம் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஆவி என்னை மன்னிக்கட்டும் நண்பரே

      நீக்கு
  18. இப்படி எல்லோரும் வாக்களிப்பதை தவிர்க்க நினைத்தால் ‘யார் தான் பூனைக்கு மணி கட்டுவது?’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராணுவ ஆட்சியையும் பார்த்து விடுவோமே நண்பரே

      நீக்கு
  19. ஜன நாயகத்தில் இருக்கும்
    மோசமானவர்களில் சுமார் மோசமானவர்களைத்
    தேர்ந்தெடுக்கத்தான் வாய்ப்பு உள்ளது
    அந்த வாய்ப்பையும் இழந்தால்
    மிக மிக மோசமானவர்களே தொடர்ந்து
    அதிகாரத்திற்கு வர வாய்ப்பு
    என்வே ஓட்டு போடாதிருப்பது
    ஒரு வகையில் மிக மோசமானவர்கள்
    தேர்வாக நாமும் காரணமாகிவிடும்
    வாய்ப்பே அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் ஆதாரப்பூர்வமான கருத்தை ஏற்கிறேன்.
      இருப்பினும் இப்பொழுது ஆடம்பரமாக தேர்தல் செலவு செய்பவனையே மக்களும் ஆதரிக்கின்றார்கள் இதில் நல்லமனம் படைத்தவர் இப்படி செலவு செய்ய முன்வரமாட்டார் ஆகவே மாற்றத்தின் தொடக்கம் மக்களின் மனதில் இருக்கிறது என்று சொல்கிறேன்.
      வருகைக்கு நன்றி கவிஞரே...

      நீக்கு
  20. இனி மக்களோ அரசியல் வாதிகளோ திருந்த மாட்டர்கள்!

    பதிலளிநீக்கு