இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 20, 2017

மனிதாபிமானம்


இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும், மனிதன் விஞ்ஞான பாதையில் முன்னோக்கி ஓட முயற்சித்து அதன் விளைவாய் இறைவனிடமும் முந்திக் கொண்டு போய் விடுகிறான், இது இறைவனுக்கு முன் கூட்டியே தெரியாதா ? தெரிந்திருக்கும் என்பதே எமது கருத்து. புதிய முயற்சியென விண்கலம் உருவாக்குகிறான் தவறுதலாக எங்கோ போய் விழுந்து மனிதர்களை அழிக்கிறது, புதிய முயற்சியென விஷவாயுவை கண்டு பிடிக்கிறான் சோதனை ஓட்டமாக அப்பாவி மக்களின் உயிர்களை கொல்கிறான், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?


ஸ்பெயின் நாட்டில் காளையை மைதானத்தில் விட்டு நான்கு வீரர்கள் சிவப்புத் துணியை காளையிடம் காண்பித்து மிரட்சியடைய வைக்கிறார்கள், காளை முட்ட வரும் பொழுது பாதுகாப்பான மரப்பெட்டிகளில்... மரப்பட்டியைப் போல் ஏறிக்கொள்கிறார்கள், அப்பொழுது ஒரு வீரன் குதிரையில் சுற்றி வருகிறான் கையில் மீன் தூண்டில் போலுள்ள மூன்று ஈட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக காளையின் முதுகில் பாய்ச்சுகிறான், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை காளை தாங்குகிறது, பிறகு குருதி மொத்தம் வடிந்து வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்து போகிறது, உடன் தோற்று விட்டதென... அறிவித்து இரண்டு குதிரைகளில் கட்டி இறைச்சிக்காக இழுத்துப் போகிறார்கள், உடன் கூடியிருந்த மனிதர்கள். கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள்..


ரஸ்லிங் என்ற பெயரில் இரும்புக் கூண்டுக்குள் மனிதனை மனிதன் மிருகங்களைப்போல் ஆயுதங்கள் எடுத்து அடித்தே கொல்கிறான், இதை ஆயிரக்கணக்காண மனிதர்கள் ரசித்து கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள் எந்த பாவமும் செய்ய பக்குவப்படாத நான்கு வயதுக்குழந்தை ஸர்ப்பம் தீண்டி துடிதுடித்து இறந்து போகிறது, இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

விபத்தில் அடிபட்டு துடிதுடிக்கிறான், உடனடியாக மருத்துவரிடம் தூக்கி கொண்டு போனால் காப்பாற்ற முடியும், சட்டத்தின் காரணமாய் எல்லோருமே ஒதுங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

மனிதனிடம் கேட்டால் விதி என்றும் முன் ஜென்மப்பாவம் என்றும் சொல்கிறான். மனிதாபிமானம் இது மனிதனிடம் இல்லை, இது இறைவனிடம் இல்லை, சட்டத்திடமுமா இல்லை ? அது எப்படி இருக்கும் ? சட்டத்தை அமைத்ததே மனிதன்தானே... ஆகமொத்தம் இதன் விடையென்ன ? இறைவன் தனது பொழுது போக்கிற்காக உலகமெனும் நாடக மேடையை அமைத்து மனிதன் என்ற பூச்சிகளை நடிகனாக உலாவ விடுகிறான், இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும் என்பதே எமது கருத்து. தங்களின் கருத்தென்ன நட்பூக்களே...

காணொளி

48 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  2. அச்சச்சோ வீடியோவை ஓன் பண்ணிய வேகத்தில் மூடி விட்டேன் என்ன கொடுமை.. என்ன மூட நம்பிக்கை.. கடவுள் என்ற பெயரை வைத்து, பெரும்பாலும் எல்லோரும் உழைக்கப் பார்க்கின்றனர்.. ஏனெனில் எதுக்கும் அஞ்சாதவர்கள்கூட, கடவுளுக்கு கொஞ்சம் பயப்படுவர்.. அதனாலேயே அப்பெயரைப் பாவித்து அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கின்றனர்...

    நானும் பல விசயங்களுக்கு நினைப்பதுண்டு, ஏன் கடவுளால் இதனைத் தடுத்திருக்க முடியாதா அல்லது கடவுள் நினைத்தால் இதனைக் கொடுக்க முடியாதா.. இப்படி பலவாறு.

    மனிதனால் ஒரு விசயம் முடியாமல் போகும்போது அல்லது பல முயற்சி செய்தும் கை மீறிப்போகும்போதும்.. அது விதி எனக்கூறி ஆறுதல் அடைகிறோம்ம்.. விதி என்று ஒன்று இல்லை என நினைச்சால் .. மனதை ஆற்றுவது கஸ்டம்.

    இன்னொன்று ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு நோக்கத்துடனேயே பிறக்கிறதாம்.. அந்நோக்கம் நிறைவேறியதும் மரணம் வந்து விடுகிறதாம்.. எப்படி இறக்கப் போகிறோம் என்பது எமக்குத் தெரியாதெல்லோ? ஆனா நாம் பிறக்கும்போதே எழுதப்பட்டு விடுகிறது.. இப்படித்தான் இறப்போம் என.

    கண்ணதாசன் அங்கிளின் ஒரு வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறதே:)..
    “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக்கொள்ளும், அதற்காக அழுது பலனில்லை”:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விரிவான விடயம் அழகாக தந்தமைக்கு நன்றி
      உங்களது அங்கிள் நல்லாத்தான் சொல்லி இருக்கின்றார் அவருக்கும் நன்றி.

      நீக்கு

  3. சில விஷயங்களில் மிக அதிக அளவு சிந்திக்க கூடாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறை விடயங்களுக்கு மரணிக்கும்வரை விடை இல்லை நண்பரே

      நீக்கு
  4. இறைவனை பற்றி நீங்க கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவையே .ஆனால் நடக்கும் எல்லாத்துக்கும் இறைவன் காரணமில்லை .
    நேத்து டவுன் வரைக்கும் போயிட்டு இனிமே வின்டர் முடியறவரைக்கும் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாதுன்னு முடிவெடுத்திட்டேன் .ஏன்னா மைனஸ் 3 டிக்ரீ குளிரில் ஒரு வெள்ளைக்கார வீடற்றவர் தரையில் கார்ட்போர்டில் தூங்கறார் ..அப்போ இறைவனை அவசரப்பட்டு நல்லா திட்டி தீர்த்தேன் படைச்சவர்தானே காக்கணும் !! இப்படி குளிரில் தவிக்க விடலாமா மனுஷரைன்னு ..பிறகு கேள்விப்பட்டது இங்கே சால்வேஷன் ஆர்மி வீடற்றவங்களுக்கு தங்க இடம் தரங்களாம் ஆனால சில RESTRICTIONS ரூல்ஸ் உண்டு (குறிப்பிட்ட நேரத்தில் வரணும் .குடி சிகரெட் கூடாது )இது பலருக்கு பிடிக்காது . ரூல்ஸ் பிடிக்காதவங்க ரோட்டில் :(
    இங்கே இறைவன் சால்வேஷன் ஆர்மி மூலம் ஆதஹ்ரவற்றோர் வீடில்லாதவங்களுக்கு உதவறார்
    பயன்படுத்த தவறியது மனுஷர் தவறு .
    அதே போல ரெஸ்லிங் மற்றும் ஸ்பெயின் காளை விஷயங்களிலும் அதை ரசிக்கனு சில கொடூர மிருகமாக மாறிய மனுஷ ஜந்துக்கள் இருப்பதே காரணம் .
    ஒரு நாள் அதை பார்க்கும் பார்வையாளர்களே தங்களை தாங்களே குத்திக்கொண்டு சாவாங்க .
    பூமில நடக்கிற ஒவ்வொன்னுக்கும் நாம இறைவனை குறை சொல்லக்கூடாது .ரோட்டில் நடந்து போறோம் சில நேரம் முட்டுச்சந்து வரும் சில நேரம் குறுக்கு சந்து வரும் எது வருதோ அதன் பாதையில் போய்கிட்டே இருக்கணும் ..நாம் செய்யும் செயல்கள்தான் பின்னாளில் விதியா மாறி ஆடுது நம்மை ஆட்டுவிக்குது நாம் என்பது ஒவ்வொரு மனுஷரையும் குறிப்பது . .அதே போல் கண்டுபிடிப்புக்கள் .கடவுள் அறிவை கொடுத்தது முன்னேற்றத்துக்கு யூஸ் செய்ய . பாழாய்ப்போன மனுஷன் அடுத்தவன் இடத்தை அபகரிக்க பக்கத்து நாட்டை நாசம் பண்ணவா சொன்னார் ?




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நிறைய விடயங்கள் சொன்னீர்கள் தவறுகளின் தொடக்கம் மனிதன் வகுத்து வைத்த மதரீதியான கொள்கைகளே....

      இருப்பினும் எல்லா மதங்களும் அன்பையே போதித்து வைத்துள்ளது மனிதன் அதை ம்டும் கடைபிடிக்க மறுக்கின்றான் இதன் விளைவே... இப்படி வாழும் சூழ்நிலை.

      நீக்கு
  5. ஆமாம் :) இறைவன் சிறந்த ரசனையாளர்தான் :) நல்லது மட்டும் படைச்சிருந்தா அவருக்கு எப்படி பொழுது போகும் அதான் கெட்டதையும் படைச்சி மனுஷர் மத்தியில் உலவவிட்டு நாம் எப்படி சமாளிக்கிறோம்னு ஒளிஞ்சி இருந்து ரசிக்கிறார் :)

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கேள்விகளைப் போல் எனக்கும் சிறு வயதில் தோண்றியதுண்டு....அதன் பின் ஒரு சில புரிதல்களால் எழுவதில்லை..ஆனால் அவ்வப் போது எழுவதுண்டு...குறிப்பாக...பசி பரமசிவத்தின் ஒரு பதிவு எண் சிந்தனையை தூண்டியது...
    . ..நான் உங்களின் இது போன்ற பதிவுகளுக்கு முன்வே கொடுத்த பதில்தான்....இதில் குறிப்பிடப்பட்டவர்கள் மனம் சிதைந்தவர்கள்...நல்ல முறையில் வளர்க்கப்படாதவர்கள்..அவர்கள் மனம் முழுவதும் எதிர்மறை சிந்தனைகள்..
    .நம்மை மீறிய சக்தியைப் பற்றிய சரியான விளக்கங்கள், போதனைகள்,புரிதல் இல்லாததும் ஒரு காரணம்...திரைப்படங்களும் சரி, ஊடகங்களும் சரி இந்த சக்தியைப் பற்றி ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளன....இதைப் செய் அதைச் செய். நடக்கும்.....இல்லைனா சாமி கண்ண குத்தும்....இப்படித்தான்....

    நம்பிக்கை...அதுதான் வாழ்க்கை....நம் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவை பல உள்ளது....

    மனிதன் தனக்கு கொடுக்கப்பட்ட மூளையை சரிவர பக்குவப்படுத்துவதில்லை...மனிதம் மறுப்பதும், மரிப்பதும்... அதனால்....

    மொபைலில் அடிப்பதால்..அடிக்க சிரமமாக இருக்கு...சில வார்த்தைகளை அடிக்க இயலவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மனிதன் மதக்கொள்கைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
      எல்லோருமே நல்லவனாக இருந்தால் எல்லோருமே நியாயமாக உழைத்தால் எல்லோரும் செல்வந்தரே....

      பிறகு கழிவறையை சுத்தம் செய்வது யார் ?

      நீக்கு
  7. சில விஷயங்கள் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது. புரிந்து கொள்ள முடியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்ஜி புரிந்து கொண்டால் உலகில் இன்னும் அட்டூழியங்கள் நிகழலாம்

      நீக்கு
  8. மனிதம் பல இடங்களில் மரித்துப் போய்விட்டது நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையான வார்த்தை நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. சுவாமி ஜி!..
    உங்க ஊருக்குப் பக்கத்தில காரைக்குடிக்கு அங்கிட்டால திருப்பத்தூர்..ன்னு ஒரு ஊர் ..

    இன்னைக்கும் அந்த ஊர் இருக்கு..

    அந்த ஊர்ல ஒரு சம்பவம் - ஆயிரம் வருசத்துக்கு முன்னாலே!..

    அது என்னா..ன்னு தெரியுமா?..

    ராஜா தங்கத் தூண் நாட்டியிருதான்..
    ஆனா - இவரோ வைரத்தூண் நட்டு வெச்சிருந்தார்..

    திடீர்..ன்னு ஞானம் வந்துடுத்து...
    எல்லா சொத்தையும் தான தர்மம் பண்ணிட்டு
    கோவணத்தைக் கட்டிக்கிட்டு கிளம்பிட்டார்..

    அவரு செஞ்சதா ஒரு பாவமும் இல்லை..
    ஆனா அவருக்குப் பரிசாக் கெடைச்சது கழுமரம்..

    மனசு ஒடைஞ்சி ஒரு பாட்டுப் பாடினார்..
    அந்தக் கழுமரம் உருகக் கூட இல்லை..
    அப்படியே பொடிப்பொடியாகப் போச்சு..

    அவர் ஒரு ஒரு தத்துவம் சொல்றார்..
    அது தான் நமக்கு உண்மை..

    நெய்யில் பொரிச்ச முழு ஆட்டை கொஞ்சம் பிய்த்து தின்னுட்டு மிச்சத்தை வீணாக்கிட்டுப் போகுது ஒரு பிள்ளை..

    ஒரு சொட்டு அழுக்குத் தண்ணிக்குக் கூட வழியில்லாம பரலோகம் போய்ச் சேருது இன்னொரு பிள்ளை..

    இந்த இரண்டுமே - அரபு மண்ணுல மட்டுமில்லாம உலகம் பூராவும் நடக்குது..

    உண்மையில கடவுள் ரசனையாளன் தான்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி வருக
      அருமையான உண்மைச் சம்பவம் சொன்னீர்கள்
      இது உலகம் முழுவதுமே நடப்பது உண்மைதான்.

      ஏழை நாடு என்று உலகமே அங்கீகாரம் கொடுக்கிறது ஆனால் அந்த நாட்டையும் ஆள்பவர்கள் பணக்கார நாட்டுக்கு இணையானவர்களின் வாழ்க்கைதானே...?

      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  10. அந்த இறைவன் முழிச்சு இருக்கின்ற நேரம் பார்த்து அவரையெ அல்லாக்கா தூக்கிட்டு செல்லும்போது தன்னையே காப்பாத்திக்க முடியாதவர் எப்படி...இந்த ஒலகத்தை காப்பா.....த்துவார் நண்பரே........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி-
      வருக நண்பரே இதற்கு பதில் சொல்வது கடினமே....

      சாம்பசிவம்-
      உங்களது கேள்வியில் எழுத்துப்பிழை இருக்கிறது.

      Chivas Regal சிவசம்போ-
      எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் குவாட்டரை குறைத்துக் கொள்ளுங்களேன்.

      சிவாதாமஸ்அலி-
      ''அலாக்'' என்று எழுதவும் வேறு பிரச்சனையை தூக்கி தலையில போட்டுடாடாதீங்கோ....

      நீக்கு
    2. எமது மொழியில் அல்லாக்கா என்பது...பிடத்திலிருந்து அப்படியே..எந்த ஆட்டம் அசைவும் இல்லாமல் என்பதை குறிப்பது நண்பரே.... சிவசம்போவிடம் தெரிவித்து விடுங்கள்...சிவாதாமஸ்அலியை பயப்படவேண்டாம் என்று சொல்லுங்கள்

      நீக்கு
    3. நல்லவேளை விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

      நீக்கு
  11. "விஞ்ஞானப் பாதையில் முன்னோக்கி" - எனக்கு மேடம் க்யூரி ஞாபகம் வந்தது. அவர்தான் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தவர். அவரது எக்ஸ்ரே மிஷின், கண்டுபிடிப்பு, உலகம் முழுவதும் எல்லாவித பயன்பாட்டுக்கும் உபயோகப்படுகிறது. அவர் கண்டுபிடித்தது மருத்துவத்தில் எக்ஸ் ரேயினால் நோயாளியைக் குணப்படுத்தலாம் என்று. இப்போது அதனையே நாம் உடமைகளை, ஆளை பரிசோதிக்க என்று பல்வேறு பயனுக்காக உபயோகப்படுத்துகிறோம்.

    மேடம் க்யூரி நோபல் பரிசு வாங்கினார், தன் ஆராய்ச்சியின் விளைவாகவே உயிரும் துறந்தார்.

    எல்லாம் இருக்கிறது. நம்மிடம் மனமும் இருக்கிறது. நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதில்தான் நம்முடைய முன்னேற்றமும் (பணம் அல்ல) இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல விடயம் பகிர்ந்தமைக்கு நன்றி

      உண்மைதான் எல்லா விஞ்ஞானிகளுமே பெரும்பாலும் நன்மையை கருதியே கண்டு பிடிக்கின்றார்கள்.
      ஆனால் சில ஜடங்களுக்கு அவை வேறு வகையில் பயன் பட்டுப்போகின்றது.

      நல்லதும், கெட்டதும் நமது மனதில்தான்.

      நீக்கு
  12. ஸ்பெயின் நாட்டைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

    அரபு நாடுகளில் ஒட்டக ஓட்டப்பந்தயத்தில் ஒட்டகங்கள் வேகமாக ஓடவேண்டும் என்பதற்காக சிறுவர்களை ஒட்டகக் காலில் கட்டிவிடுவார்கள். அவர்கள் கத்துவதைக் கண்டு ஒட்டகம் இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்பதற்காக. இதுக்காக பங்களாதேஷ் போன்ற ஏழை நாடுகளின் சிறுவர்களை விலைகொடுத்து வாங்கிவருகின்றனர். நிறையச் செய்திகளைப் படித்தால் மனது வருத்தம்தான் அடையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு காலமாக நான் எழுத நினைத்து இருந்த விடயத்தை இன்று ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

      தாங்கள் சொன்னதில் சிறு திருத்தம் காலில் கட்டி விடுவது இல்லை முதுகில்தான் இதன் முழு விபரத்தை நான் அறிந்த வகையில் விரைவில் தருவேன் நன்றி நண்பரே

      நீக்கு
    2. அச்சச்சோ என்ன நெல்லைத்தமிழன் சொல்றீங்க? இது உண்மைச் சம்ப்வமோ? எனக்கு உடம்பெல்லாம் கூசுதே.. அப்போ அக்குழந்தையின் கதி???

      நீக்கு
    3. To, அதிரா விரைவில் முழு விபரம் எழுதுகிறேன்.

      நீக்கு
  13. இறை எதுவென உணராததை காணொளி காட்டி செல்கிறது

    பதிலளிநீக்கு
  14. அடக்கடவுளே என்னது இப்படி வீடியோ ஹா ஹா ஹா நிஜமா தப்புக்கு தன்னடனை வாங்க யோசிப்பவர்கள் எல்லாம் இப்படி மறைமுகமாய் மனதை தனித்து கொள்கிறார்களா பம்மாத்தாய் ஆம் இது வேண்டுமென்றால் சரி
    இங்கே மனித சமூகமே இல்லை ஆனாலும் பூச்சிகள் என்ற இடத்தில் இன்னும் ஒன்றை சேர்த்துவிடுங்கள் பாதி பூச்சிகள் பாதி விஷ ஜந்துக்கள்
    வரலாறு படைக்க அறிவியல் உதவி
    இங்கே மனிதமே இல்லை கடவுளின் சேர்ச்பாக்ஸில் கடவுளே தேடி கொண்டிருக்கிறானாம் அவன் தேடியது கிடைக்கவில்லை எனும்போதெல்லாம் சே என்ற சலிப்பு சீறல்கள் இயற்க்கையின் மீது

    பதிலளிநீக்கு
  15. முதலில் ஆரம்ப படம் வெகு கலக்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் விஷ ஜந்துக்களே... மனிதம் மரணித்து விட்டது

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. இந்திராணி வளர்த்த கிளியின் கதை தான்! கிளிக்கு உயிர் போகப் போகிறதை அறிந்த இந்திராணி அதைப் பிரிய மனமில்லாமல் கணவனிடம் அதை உயிர்ப்பித்து வாழும்படி கட்டளை இடச் சொல்ல அவனோ தனக்கு அதிகாரம் இல்லை என பிரம்மாவிடம் செல்கிறான். அவரோ விஷ்ணுவிடம் போக, விஷ்ணுவோ, ஈசனைக் கையைக் காட்ட, ஈசன் நான் இதில் தலையிடுவதில்லை! எனினும் யமதர்மனிடம் போய் இந்தக் கிளியின் விதியை மாற்றி எழுதும்படி கேட்டுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி இந்திரன், பிரம்மா, விஷ்ணு, ஈசன் நால்வரும் யமனைச் சந்திக்கச் செல்கின்றனர். முழுக்கதையையும் கேட்ட யமன் ஓர் அறையைக் காட்டி அங்கே தான் ஒவ்வொருவர் விதியும் ஓலைச் சுவடிகளாகத் தொங்குகின்றன. யாருடைய விதி முடியுமோ அவர் ஓலை தானாகக் கீழே விழும். அங்கே போய் அந்தக் கிளியின் விதி எழுதப் பட்டிருக்கும் ஓலையைக் கண்டறிந்து காப்பாற்ற முயற்சி செய்யலாம் எனச் சொல்லி நால்வரையும் அழைத்துக் கொண்டு அந்த அறையில் நுழைகிறான். அனைவரும் நுழைகையிலே ஓர் ஓலை தானாகக் கீழே விழ அதை எடுத்து ஆவலுடன் பார்த்தான் யமதர்மன். பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் நால்வருடன் யமனும் இந்த அறைக்குள் நுழையும்போது இந்திராணியின் ஆசைக்கிளியின் ஆயுள் முடிவடைகிறது! என எழுதப் பட்டிருந்தது. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான எடுத்துக்காட்டு கதை நன்று வருகைக்கு நன்றி்

      நீக்கு
  17. மற்றபடி அதிரடி கவிதைப்புயல் அதிராவுடனும், ஏஞ்சலினுடனும் கன்னாபின்னாவென்று ஒத்துப் போகிறேன். அவர்கள் கருத்தே என் கருத்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ''அதிரடி'' இப்பொழுது ''கவிப்புயலாகி'' விட்டாரே தெரியாதா ?

      நீக்கு
    2. ஆமாம், அவருக்குனு பெயர்கள் கிடைக்கின்றன. :)

      நீக்கு
    3. அவுங்க அங்கிள் கண்ணதாசன் கொடுத்து இருப்பார்..

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கண்படுத்தாதீங்கோ:) இன்னும் பல பட்டங்கள் கிடைக்க இருக்கின்றன..:)

      நீக்கு
    5. வாழ்த்துகள் எமது...

      நீக்கு
  18. உலகில் உள்ள எல்லோரும் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்க இயலாது. மனித இயல்பே விசித்திரமானது. எனவே படைத்தவனை கூறிய சொல்வதைவிட வளர்த்தவர்களை குறை சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. எதையும் காட்டுவது மட்டுமே இறைவன் மற்றவை முற்றும் மனித
    தவறுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அருமையாக சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  20. கடவுள் என்பதே ஒரு கான்செப்ட் மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வென்றே சொல்லப்பட்ட கதைகள் விதி என்பதெல்லாம் நம்மை நாமே சமாதானப் படுத்த உதவும் வகையறாக்களில் ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  21. என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
    பொம்மலாட்டம் நடக்குது
    புதுமையாக இருக்குது நாலு பேரு நடுவிலே நூலூ ஒருவன் கையிலே! என்ற பாடல் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அருமையாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு