இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 27, 2017

நான் சொல்வதெல்லாம் உண்மை


அந்தக் குழந்தை பிறந்ததும் குடும்பத்தில் குதூகலம் காரணம் ஆண் குழந்தை அதன் அழகைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினர் அவனது தாத்தா பேரனின் காலை தரையில் படாமல் காலின் தடம் பதிக்கும் இடத்தில் எல்லாம் டிஸ்யூ பேப்பர் போட்டு கொண்டே சென்று பார்த்து, பார்த்து வளர்த்தார். அவரே அழகான பெயரும் வைத்தார். இருப்பினும் கண்ணே, மணியே, பொன்னே, முத்தே, ராசா, தங்கம் என்றே அழைத்து வந்தனர். ஒன்றரை வயது நிறைவடைந்ததும் நல்லதொரு திருவோண நட்சத்திர தினத்தில் எல்.கே.ஜி.யில் சேர்த்தார்கள். 

ஊரிலிருந்த ஆயிரம் ஆண்டிகளை அழைத்து அன்னதானம் செய்தார்கள் அனைத்து ஆண்டிகளும் உண்டு களித்து அண்டாக்களை போண்டி செய்து விட்டு அந்தக் குழந்தைக்கு ஆசி வழங்கிச் சென்றனர். ஆசியின் பலனோ என்னவோ, எல்..கே.ஜி.யில் பயிற்றுவித்த ஆசிரியர் ஆவுடையப்பன் அந்தக் குழந்தையின் அறிவுப்பசியை கண்டு வியந்து பள்ளியில் சேர்த்த ஆறாவது மாதத்திலேயே முதல் வகுப்பில் சேர்த்து விட்டார். முதல் வகுப்பில் படிக்கத் தொடங்கிய மூன்றாவது மாதத்திலேயே வகுப்பு ஆசிரியர் ஆனந்தக்கூத்தன் பள்ளியின் தலைமையாசிரியரிடம் சொல்லி மூன்றாம் வகுப்புக்கு மாற்றி விட்டார். மூன்றாம் வகுப்பு ஆசிரியர் முடிசாத்தானிடம் குழந்தை அசாத்தியமான கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தது குடும்ப வறுமையின் நிலையறிந்த முடிசாத்தான் பொறுமை காத்து வாழ்ந்து வந்தார்.

அந்தக் குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளருவதோடு நாளுக்கு நாள் அறிவும் மின்னல் வேகத்தில் வளர்ந்தது அத்துடன் மட்டுமல்ல தர்மம் செய்யும் குணத்தில் கர்ணனையே வீழ்த்தும் அளவுக்கு சமூகத்தில் பரவலாக பேச்சு நிலவியது. காரணம் பள்ளிக்கூடம் கொண்டு செல்லப்படும் புத்தகங்களை இல்லாத ஏழை எளிய வீட்டு குழந்தைகள் கேட்டால் உடன் தனது மெமரி பவரால் படித்து விட்டு பிற குழந்தைகளிடம் கொடுத்து விடுவதால். இந்த விடயங்கள் பின்நாளில் திரைப்பட இயக்குனர் சங்கர் கேள்விப்பட்டுதான் எந்திரன் திரைப்படத்தில் புத்தகத்தை எடுத்து ரோபாட் மனிதன் படித்து மெமரியில் ஏற்றுவதாக காட்சி வைக்கப்பட்டது அரசல் புரசலாக பேச்சு வழக்கில் வந்தது. மேலும் இதனால் தினம் புதிய புத்தகங்கள் வாங்குவது பெரும் வேலையாக போய் விட்டதால் அவனது தாத்தா அரசாங்கத்திடம் மொத்தமாக ஆர்டர் செய்து வீட்டின் ஸ்டோர் ரூமில் ஒரு கன்டெய்னர் நிறைய புத்தகங்களை அடுக்கி வைக்க உத்தரவு இட்டார்.

இது மட்டுமல்ல குழந்தை யார் வந்து உனது கழுத்தில் கிடக்கும் செயினை எனக்கு கொடு ராசா என்று கேட்டு வாங்கிப் போவோர்களும் உண்டு. மேலும் பள்ளியில் பிற குழந்தைகள் கேட்டாலும் கொடுத்து விடும் பழக்கம் அந்தக் குழந்தைக்கு இருந்தது இப்படியே மூன்றாம் வகுப்பில் கூடவே படிக்கும் கூடலிங்கம் அடிக்கடி நகையை கேட்டு வாங்கி வீட்டில் கொடுத்து அவனது மூத்த சகோதரி கரை ஏறுவதற்கு வழி வகுத்து இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் காரணமாகவே அந்தக் குழந்தையை பார்க்க உறவினர் கூட்டம் தினம்தோறும் வந்து போனது. நகை மட்டுமல்ல யாராவது இல்லாத வீட்டு குழந்தைகள் கேட்டால் மேல்சட்டையை கழட்டிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வரும் நாட்களும் இருந்தது. ஒருமுறை பள்ளி விட்டு கையிலும் புத்தகம் இல்லாமல் வெறுமனே பிறந்த மேனியாக வந்த அந்தக் குழந்தையை பார்த்து அவனது தாத்தா கேட்டார் ராசா உன்னோட உடை எல்லாம் எங்கே ? தன்னுடன் படிக்கும் இனியா கேட்டதால் கழட்டிக் கொடுத்து விட்டதாக சொல்ல, பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கய்யா உன்னோட உடையை கொடுத்தே ? என்று கேட்க அதற்கு நான் கொடுக்கணும்னு தீர்மானிச்சுட்டா எதைக் கொடுப்பேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லி இருக்கிறது அந்தக் குழந்தை. பின்நாளில் இந்த வசனத்தை கேள்விப்பட்டுத்தான் எலைய தலைவிதி வெசய் ஒரு திரைப்படத்தில் ///நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்சை நானே கேட்க மாட்டேன்/// என்று வசனத்தை உல்டா செய்து எழுதியதாக அரசல் புரசலாக மக்கள் பேசிக்கிட்டாங்க...

மூன்று மாதம் ஆனது மூன்றாம் வகுப்பு ஆசிரியர் முடிசாத்தான் எப்படியோ தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனது குடும்ப நிலையை சொல்லி அழுது அந்தக் குழந்தையை நான்காம் வகுப்புக்கு கடத்தி விட்டார். நான்காம் வகுப்பில் நுழைந்த மறுநாளே வகுப்பு ஆசிரியர் வணங்காமுடி சற்றே நிலை குலைந்தே போனார் காரணம் பதில் சொல்லி முடிப்பதற்குள் அந்தக் குழந்தையிடமிருந்து அடுத்த கேள்வி வந்து விழுந்தது பிற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவே நேரமில்லை அவரும் ஆறு மாதம் பார்த்தார், நேராக தலைமையாசிரியரிடம் முறையிட அவருக்கு ஏற்கனவே பிடிக்காத காரணத்தால் நான்காம் வகுப்பு ஒரு வருடம் படிக்கட்டும் அப்பொழுதுதான் இந்தக் குழந்தையின் அறிவு இன்னும் கூர்மையாகும் என்று உறுதியாக சொல்லி விட்டார். மீண்டும் ஒரு மாதம் கடந்தது வாழ்வை வெறுத்து வேறு வழியின்றி கடிதம் எழுதி வகுப்பின் கரும்பலகையில் ஒட்டி வைத்து விட்டு விட்டத்தில் தொங்கி விட்டார் வணங்காமுடி வாத்தியார். மூன்றரை வயது நிறையாமல் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு அறிவா ? பதினெட்டு பட்டியும் பரவலாக பொறணி பேசியது. நிலையை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் வீட்டுக்கே வந்து அந்தக் குழந்தையின் தாத்தாவிடம் இனியும் நாங்கள் வாத்தியார்களை காவு கொடுக்கத் தயாரில்லை என்று சொல்லி விட்டு மழைக்குகூட எங்கள் பள்ளி பக்கம் தயவு செய்து ஒதுங்க விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு போய் விட்டார்.

பள்ளி செல்லாமலேயே... அந்தக் குழந்தை ஊர் வம்பு இழுத்து வந்தது காலம் உருண்டோட குழந்தை ஞானத்தால் தன்னைத்தானே உணர்ந்து வாழ்க்கைப்பாடம் கற்றது பிறர் தன்னை அடிக்க நினைக்கும் முன்னே மற்றவரை அடித்து விடும் குழந்தை. திடீரென்று ஒரு கன்னத்தில் அறைந்தவுடன் மறு கன்னத்தையும் காட்டியது இதுதான் சந்தர்ப்பம் என்று கருதிய பிற குழந்தைகள் சாத்தி விட்டு நகன்றது விசயத்தை கேள்விப்பட்ட தாத்தா மனம் வருந்தினார் வீட்டில் சாயா குடித்துக் கொண்டு இருந்த அந்தக் குழந்தையிடம் ஏண்டா நம்ம பரம்பரைக்கே கொடுத்துதானடா பழக்கம் நீ வாங்கிட்டு வந்து நிற்கிறேயடா என்று சொல்ல சாயா சாயா எல்லாம் மாயா என்று சொல்லி விட்டு தேநீர் கோப்பையை கவிழ்த்தி விட்டு நடந்தது. பின்நாளில் இவைகளை கேள்விப்பட்டுதான் மாயா மாயா மாயா எல்லாம் சாயா சாயா என்று திரைப்படத்தில் பாடல் வந்ததாக செவி வழிச்செய்தி. மனம் வருந்திய தாத்தா படுத்த படுக்கையில் வீழ்ந்தார் இறுதியில் அந்தக் குழந்தையை அழைத்து நாட்டில் வில்லங்கத்தார் நிறைய வாழ்கின்றார்கள். இது மட்டுமல்ல அப்பாவி என்று பெயர் வைத்துக்கொண்டு அதிரடியாய் பேசி வாழ்பவர்களும் உண்டு நீ எப்படித்தான் இதையெல்லாம் கடந்து போகப்போகிறாயோ.... எதற்கும் நீ ஜேம்ஸ் ஊரணிப்பக்கம் குளிக்கப் போகவேண்டாம் என்று சொல்லி ///ஹும் உனக்குப்போயி கொலை தெய்வத்துக்கு வேண்டிக்கிட்டு கில்லர்ஜி''னு பேர் வச்சேனே.... என்னைச் சொல்லணும்/// என்று மனம் நொந்தே கிடந்து திருவோண நட்சத்திர தினத்தில் ஒருநாள் மறைந்தார்.

Chivas Regal சிவசம்போ-
ஹும் சரித்திரம் தறுத்திரம் புடிச்சதா இருக்கும் போலயே...


காணொளி

74 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா.. திருவோண நட்சத்திரத்தில் மறைந்த அந்தத் தாத்தாவை நான் ஒருக்கால் சந்திச்சுக் கேட்கோணும்.. தாத்தா அந்த அப்பாவியான அதிரடி என ஆரைச் சொன்னீங்க என?:)...

    தேம்ஸ் ஐ ஜேம்ஸ் ஆக்கி.. அழகிய ஆற்றை ஊரணியாக்கிய கில்லர்ஜி அவர்களை பிரித்தானியா நீதிமன்றம் இருகரம் நீட்டி மருவாதையாக அழைக்கிறது:)...

    அந்தக் கொயந்தையை பயப்பூடாமல் சங்கிலி போட்டுக் கொண்டு ஜேம்ஸ்ல.. வெரி சோரி தேம்ஸ்ல குளிக்கச் சொல்லுங்கோ முதலை கிதலை எதுவும் கடிச்சிடாது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருதான் சமாதி ஆகிட்டாரே..... இனி எங்கே கேட்கிறது ?
      பிரிட்டானியா வரத்தோது இல்லை.

      நீக்கு
    2. கில்லர்ஜி எனக்கொரு டவுட்டூஊஊ?:).. ஏன் அக்குழந்தை.. “நாளொரு மேனியும்.. பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது” எனப் போட்டிருக்கிறீங்க?:)..

      ஒரு நாளைக்கு ஒரு உடம்பாகவும்.. ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு கலராகவும் மாறுமோ?:) ஹையோ மீ கொன்பியூஸ்ட்:))

      நீக்கு
    3. தத்துவம் சொன்னால் ரசிக்கணும் இப்படி நக்கல்ஸ் பண்ணக்கூடாது.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இல்ல கில்லர்ஜி.. உண்மையிலேயே பரம்பரை பரம்பரையா இப்படித்தான் எழுதுறாங்க... இதன் உண்மையான அர்த்தம் அறிய ஆவல்.. ஆராவது ஜொன்னால் நல்லாயிருக்குமெல்லோ:))

      நீக்கு
    5. நாளொரு மேனி பொழுயொரு வண்ணம் என்றால் அழகு பொழிவுடன் வளர்ந்து வருகிறது என்று அர்த்தம்.

      நீக்கு
  2. 3 வயதிலிருந்தே பாரி வள்ளல், கவச குண்டலங்களையே கழட்டிக் கழட்டிக் கொடுக்கும் கர்ணன் என்றெல்லாம் பெயரெடுத்த கொயந்தை:) எப்போ கஞ்சத்தனத்துக்கு மாறியது?:)).. இப்போ ஒரு போஸ்ட்ல ஒரு லைனைக்கூட யாரும் களவெடுத்திடாதபடி.. ஆமைப்பூட்டு பூனைப்பூட்டெல்லாம் போட்டுக் கிடக்கே கர்:)).. அந்தர அவசரத்துக்கு ஒரு வசனத்தைக் கொப்பி பண்ண முடியுதோ இங்கின?:).. ஏதோ வைரம் வைடூரியம் எல்லாம் எழுத்துக்குள்ளயே இருப்பதைப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹையோ ஓவராப் பேசிட்டமோ:))... எதுக்கும் நைஸா எஸ்கேப் ஆகிடுவோம்ம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா சொன்னீங்க கவிப்புயல்!!! ப்ளீஸ் அதிரா எங்க ஊர்ல வந்து மட்டும் மையம் கொண்டுராதீங்க!! ஏற்கனவெ யாரோ சொன்னா அறிவியல் ஆரூடம் எங்களை எல்லாம் பயமுறுத்திக்கிட்டுருக்கு...!!!!

      கீதா

      நீக்கு
    2. சரியான கேள்வி அதிரா.

      நீக்கு
    3. நாங்க இப்பவும் கர்ணன் பரம்பரைதான். என்ன கேட்டாலும் கொடுப்போம்.

      நீக்கு
    4. கீதா.. உங்க ஊருக்கு ஒரு சுழட்டு சுழட்டிட்டு வர ஆசை:) மையம்தானே கொள்ளக்கூடாது?:) ஹா ஹா ஹா..

      டாங்ஸ் நெ.தமிழன்:) இப்பூடி உற்சாகப் படுத்தினால் நான் பக்குப் பக்கென இன்னும் கேள்விகள் கேட்டு.. அடிகிடியும் வாங்கிடுவேன்ன்:)) என்னை ஆராவது கொன்றோல் பண்ணுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))...

      கில்லர்ஜி வாக்குத் தவற மாட்டீங்களே?:)).. எங்கட மூண்டு விட்ட அண்ணன் ஒருவர் உங்கட மீசையைக் கேய்க்கிறார்:).. தர முடியுமோ?:)).. ஹா ஹா ஹா.. ஹையோ ஆராவது மீக்குச் சப்போர்ட்டுக்கு ஓடியாங்கோ:)..

      நீக்கு
    5. ஒண்ணேகால் மில்லியன் பவுண்டு கொடுத்தாலும் கிடைக்காது.

      எதற்கு ஒருமுறை கொடுத்து முயற்சிக்கலாமே....

      நீக்கு
    6. கர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ மேலே சொன்ன கர்ணன் பரம்பரை??? என்ன ஆவுறதூஊ??? நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:)..

      நீக்கு
    7. பவுண்டு கொடுத்து பார்க்கலாமே...

      நீக்கு
    8. ஹா ஹா ஹா காரியத்திலேயெ கண்ணாயிருக்கிறீங்களே கர்ர்:)

      நீக்கு
  3. கூடலிங்கம் அங்கிளிண்ட மூத்த சகோதரிக்கு இந்த மட்டர்:) தெரியுமோ?:).. அவ இப்போ உகண்டாவில இருக்கிறாவோ என்னமோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே என்னுடன் படித்தவன் பெயர் கூடலிங்கம் அவனுக்கு பட்டப்பெயர் கூடமாம்பழம் அவனை நினைத்தே எழுதினேன் அவனைப் பார்த்து முப்பது வருடமிருக்கும் எங்கு இருக்கிறானோ... ?

      நீக்கு
  4. நாங்க சீக்கிரமே வந்துட்டோம்ல காலை வணக்கம் கில்லர்ஜி அண்ட் ஆல்...

    அதென்ன கவிப்புயல் இரவு எல்லாம் வீசிக் கொண்டிருந்ததா? நடு சாமத்துல வந்து கமென்ட் போட்டுருக்குது...இப்பத்தானே போட்டீங்க பதிவு இல்லையா கில்லர்ஜி?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு இந்திய நேரம் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியானது

      நீக்கு
    2. கீதா இங்கு எங்களுக்கு விடிய 4 மணிதான்:) நடுச்சாமம்:).. இரவு 11 மணி எல்லாம் பின்னேரம்:) ஹா ஹா ஹா:). கில்லர்ஜி எங்கட 6.30 க்கே போஸ்ட் போட்டிட்டாரே...

      நீக்கு
  5. திருவோண நட்சத்திரத்தில் அப்படி என்ன விசேஷமோ? இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கில்லர்ஜி. (எதற்கும் சொல்லி வைப்போம்!) எனது இரு மகன்களும் திருவோணம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தோன்றியதுண்டு. எல்லா நட்சத்திரங்களுமே நல்லவைதான் என்னுடையத் தனிக் கருத்தின்படி....எல்லா நாளும் நல்ல நாளே!!! ஆனால்...சமூகத்தில் வழக்கமாக இருப்பது... திருவோண நட்சத்திரத்தில் விசேஷம் நா ஒன்று ஓணப் பண்டிகை...பெருமாளின் (விஷ்ணு) நட்சத்திரம் திருவோணம் என்பதால்..ச்ரவண அதான் திருவோணம் நட்சத்திரத்தன்று பெருமாள் வழிபாட்டாளர்கள் விரதம் இருப்பார்கள். உப்பு சேர்த்தோ இல்லை உப்பில்லாமலோ... அப்புறம் புரட்டாசித் திருவோணத்தன்று மாவிளக்கு ஏற்றுபவர்களும் உண்டு. புரட்டாசித் திருவோணத்தன்று ஆரம்பித்தோ இல்லை அதில் முடிவதாகவோ தேசிகர் (அவரது நட்சத்திரம் இதுவே) உற்சவம் கொண்டாடப்படுகிறது.

      ஹேய் அப்ப கில்லர்ஜிக்கு பிறந்த நாளா!! பரவால்ல ஸ்ரீராம் எல்லா நாளும் பிறந்த நாள் தானே..ஒவ்வொரு காலையும் புதிதாய் பிறப்பதால் எனவே கில்லர்ஜிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

      கீதா

      நீக்கு
    2. வைணவர்களுக்கு முக்கியமான நட்சத்திரம். 'பெருமாள் நட்சத்திரம்' என்று உருகுவார்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. என்ன கணக்குல எல்லோரும் எனக்கு பிறந்தநாள் கொண்டாடுறீங்க ? அடுத்த மாதம் வரும் பிறந்தநாளை பிறகு எப்படி கொண்டாடுவது ?

      நீக்கு
  6. ஹாஹாஹா நினைச்சேன் சொல்லிட்டு வரும் போதே அந்தப் புள்ளை கில்லர்ஜியாத்தான் இருக்கும்னு...சரியாப் போச்சு...

    அது சரி இதுல அப்பாவி தேம்ஸ் அதிராவும், வில்லங்கத்தாரும் எங்க வந்தாங்க...

    அதிரா!!! வாங்க கோஷம் போடுவோம்!!! கூட்டுங்க பஞ்சாயத்த!!! நாட்டாமை தீர்ப்பு சொல்லுங்க!!! அதிரா இதுல உங்க ஊர் கோர்ட் எல்லாம் செல்லுபடியாவாதுநும் சொல்ல முடியலையே...ஏன்னா உங்கூர்ல தானே விவேக் நாட்டாமைச் சொம்பைத் தூக்கிட்டுவந்து பஞ்சாயத்து வைப்பாரு அங்க!!!!.. .ஹா ஹா ..ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஐயாவின் கடைசி வாக்குமூலத்தை சொன்னேன் அவ்வளவுதான்.

      நீக்கு
    2. ஹையோ கீதா, இங்கின ஒரு அந்தர ஆத்திரத்துக்கு ஒரு வரியைக் கொப்பி பண்ண முடியுதில்ல கர்:) கொப்பி பண்ணிப்போட்டுப் பதில் போட்டால்தானே .. அயகாச் சொல்லலாம்:).. இதனாலயே எனக்கு தேம்ஸ்ல தள்ளோனும்போல வருதூஊஊ.. ஆரைத் தள்ளப்போறீங்க அதிரா எனக் கேய்ட்டிடாதீங்க:) பிறகு வாய் தடுமாறிச் சொல்லிப்போடுவன்:)) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. முன்பு ஒருவன் எனது பதிவுகளை கொஞ்சம், கொஞ்சமாக கோப்பி எடுத்து அவனது முகநூலில் அவனது கருத்து போலவே போட்டான்.

      அது அறிந்த பிறகு இப்படி மாற்றினேன்.

      நீக்கு
  7. திருவோணம் எப்படி இங்கே வந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் சேர்க்கும் பொழுது அன்று திருவோணம் நட்சத்திரம் நிறைந்த நாள்.

      நீக்கு
  8. தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை..உண்மையைத்தவிர வேறு இல்லை என்கிற தங்களின் முற்கால வரலாற்றை தெரிந்து கொண்டேன் நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையை அறிந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  9. நல்ல அடைமழை நேரத்தில வத்தக் குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கு..

    என்ன ஓய்.. வத்தக் குழம்பை சும்மாவே சாப்பிடறீர்!?..

    அதான் அடை மழை பெய்றதேங்..கானும்!..

    உம்மைச் சொல்லிக் குத்தமில்லை.. எல்லாம் கிழம் பண்ணுன வேலை.. நடுச் சாமத்தில சாமக் கோடாங்கி மாதிரி சுத்திண்டிருக்கீர்.. பேய் பிசாசுகளை அடிச்சுடாதீர்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நீங்க காலையில்தானே வந்தீங்க...

      நீக்கு
  10. அப்படியே எங்கூட்டுக்கும் வாங்க வள்ளல் சார். எங்கூட்டுல ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்கு இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனுக்கு கட்டிருவோம் கவலையை விடுங்க சகோ.

      நீக்கு
  11. அந்த குழந்தை நீங்கதான்னு ஆரம்பத்துலயே புரிஞ்சுக்கிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு விபரமாகத்தான் இருக்கீங்க...

      நீக்கு
  12. நான் சொல்லவதெல்லாம் உண்மை...


    ஆமா...ஆமா ...உண்மை.....உண்மை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  13. கில்லர்ஜிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நல்லா புத்திசாலியாத் தான் இருந்திருக்கீங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்றீங்களே....

      நீக்கு
  14. கில்லர்ஜி ரொம்ப புத்திசாலின்னு அவரே சொல்லியிருக்கார்னா, நிச்சயம் புத்திசாலிதான். ஆனால் 3 வயதிலேயே 3ம் வகுப்பு என்பதுதான் கொஞ்சம் டூ டூ மச்சா தெரியுது.

    எந்த உயிரைப் பார்த்தாலும் (ஏழையோ, அல்லது குற்றவாளியோ அல்லது நல்ல நிலைல இருக்கறவங்களோ), எனக்கு, அவங்க பிறக்கும்போது, பெற்றோருக்கும் உற்றாருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருப்பாங்க, நம்மைப்போல்தானே அவங்களையும் பாலூட்டி சீராட்டி வளர்த்திருப்பாங்கன்னு தோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் சொல்வதெல்லாம் உண்மை.
      நல்ல கொள்கை நண்பரே நன்றி

      ஹிட்லர் உமாநாத் ஏழாவது வயசுல எட்டாவதும், பனிரெண்டாவது வயசுல பதிமூணாவதும் படித்தது உண்மை என்றால் இதுவும் உண்மைதான் காணொளி பார்த்தீர்களா ?

      நீக்கு
    2. அப்போ பார்க்கலை. இப்போ பார்த்தேன். ஒரு இடுகைக்காக, சரியான காணொளியையும், அதிலயும் சரியான இடத்துல உங்க பேரை எடிட் பண்ணிச் சேர்த்தும் - ரொம்ப சின்சியரா செய்திருக்கீங்க. ரசித்தேன்.

      நீக்கு
    3. மீள் வருகை தந்து காணொளியின் சிரத்தையை குறிப்பிட்டு பாராட்டியமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  15. உண்மை சொல்ல நாட்டிலே யாருமே இல்லாமற்போய்விட்டார்களே எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்...

    பதிலளிநீக்கு
  16. நேத்தே வாசிச்சிட்டு வரிக்கு வரி காப்பி செஞ்சி கமெண்ட பார்த்தேன் முடியலை :)
    அதே விஷயத்தை அதிராவும் கேட்டாச்சி :)

    ஹாஹா இனியாவுக்கு உடை தானம் செய்தது ,சாயா கப் சீனை பாபா வுக்கு தாரை வார்த்தது ,தளபதி பஞ்சு டயலாக்கை அவருக்கு எழுதி கொடுத்தது ,கூடலிங்கத்தின் அக்காவுக்கு திருமண சீர் செஞ்சது என அனைத்தும் ரசித்தேன் .

    என் உள்ளுணர்வு சொல்லுது சமீபத்தில் உங்களுக்கு பிறந்த நாள் வந்து போயிருக்கணும்னு :)
    எல்லா நாளும் திருநாளே அதனால் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்துரைக்கு நன்றி

      டிஸம்பரில்தான் எனது பிறந்தநாள் வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லலாம் நன்றி

      நீக்கு
  17. //டிசம்பரில்தான் எனது பிறந்த்நாள்..//

    டிசம்பரா? நீங்கள் கடமையிலே கண்ணாயிருப்பவர். கடும் உழைப்பாளி. எதைச்செய்யவேண்டுமோ அதை முடிக்காவிட்டால் தூக்கம் வராது..

    சும்மா கொஞ்சம் அஸ்ட்ராலஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களுக்கு சோலந்தூர், சோசியர் சோனைமுத்து சொந்தக்காரரோ ?

      நீக்கு
    2. @ athiraaav ..கவிப்புயல் :) இங்கே ஏகாந்தன் சார் டிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கு சொன்னதை டேபிள் மேலேறி நின்னு 100000 முறை வாசிக்கவும் :)

      நீக்கு
    3. இல்லை,இல்லை - ஆலந்தூர் ஜோசியர் ஆறுமுகசாமி அடுத்தவீட்டுக்காரரு..!

      நீக்கு
    4. அதானே பார்த்தேன் ஒட்டுக்கேட்டே படித்துக் கொண்டீர்கள் ஸூப்பர்.

      நீக்கு
    5. அச்சச்சோஓஓஒ... பெப்ரவரியைச் சொல்லியிருந்தாக்கூடப் பறவாயில்லையே ஏகாந்தன் அண்ணன்:) டிசம்பர் எனச் சொல்லிப்புட்டீங்களே!!:)..

      இங்கின சில மீன் வகையும் டிசம்பரிலதான் பொரிச்சிருக்கு குஞ்சு:)) ஐ மீன் பிறந்திருக்கு:)... ஹையோ ஆண்டவா இனி நான் இருந்த பாடில்லையே:)..

      அந்த ஆலந்தூர் ஓசியர்:) மட்டும் என் கைல மாட்டினார்ர்ர்ர் அவ்ளோதேன்ன்ன்:)..

      நீக்கு
  18. கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வரலாறு ஜி நாட்டின் தலையெழுத்தையே மாறி அமைக்கக்கூடிய ஜாதகத்தை இப்படி முடக்கி பாவத்தை தேடி கொண்டார்களே பிஞ்சிலேயே பழுக்க நினைச்சா பொறுக்காதே பாருங்க அப்பவே முக்காலமும் உணர்ந்து இருக்கார் தாத்தா தீர்க்கதரிசி ஆமாம் ஜி தேம்ஸ் அதிராக்கு சொந்தமானது அம்ம்புட்டு துராம் தான் போகமுடியாது இந்த ஜேம்ஸ் ஊரானியாவது எங்க இருக்குனு குறிப்பு கொடுங்கோ சுற்றி பார்க்க அந்த வள்ளல் குழந்தை நீடுழி வாழட்டும் எங்கிருந்தாலும் (மிகவும் சிறப்பு உங்கள் கற்பனை திறன் நீங்க அருமையா கதை எழுதலாமேஜி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எல்லாவற்றுக்கும் காரணம் வணங்காமுடி வாத்தியார்தான்.

      நீக்கு
  19. ஹா ஹா ஜி சொல்ல விட்டு போயிடுச்சி ... காணொளி பற்றி எப்படித்தான் யோசித்து செலக்ட் பண்ணிங்களோ செம சூப்பர் காணொளி, சிவ சம்போ தான் சொதப்பிட்டாரு பொறாமையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியை ரசித்தமைக்கு நன்றி

      சிவசம்போ இப்படித்தான் உளறும் போதை மட்டை.

      நீக்கு
    2. ஆரை வேணுமெண்டாலும் குறை சொல்லுங்கோ:) ஆனா சிறீ சிவசம்போ அங்கிளில மட்டும் கை வைக்க விடமாட்டேன்ன் சொல்லிட்டேன்ன்:) அவர் எவ்ளோ அறிவு பூர்வமாப் பேசுறார் தெரியுமோ?:)..

      நீக்கு
    3. உங்க அங்கிள் மட்டை அடித்தாலும் அறிவாளிதான்.

      நீக்கு
  20. ஆகா
    அந்த கர்ண மகாராசா தாங்கள் தானா?
    வாழ்த்துக்கள் நண்பரே
    தம=1

    பதிலளிநீக்கு
  21. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் எங்கப்பா குதிருக்குள் இல்லை என்பது போல சொல்வதெல்லாம் உண்மை என்பதால் கொஞ்சம் டவுட் வருகிறது. மற்றபடி எனக்கு தெரியுமே நீங்கள் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரை நல்லாயிருக்கு ஆனால் ஏதோ "ஊமைக்குத்து" போல் இருக்கிறதோ... என்ற சந்தேகமும் வருகிறது.

      நீக்கு
  22. பதிவுக்கு காணொளி பொருத்தம்.
    என் தங்கை திருவோண நட்சத்திரம்.
    கிருஷ்ண பக்தர் என் அப்பா என் தங்கைக்கு ராதா என்று பெயர் வைத்தார்.

    பதிவுக்கு நேரம் கிடைக்கும் போது வருகிறேன். தொடர்ந்து வர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  23. இப்படியும் சுய சரிதை எழுதலாம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நடந்த உண்மைகளைத்தானே எழுதினேன்.

      நீக்கு