இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 14, 2018

பாசிபட்டணம், பசி பஷீர்


Just two days back I received an E-mail to my devakottaiyan@yahoo.co.in id. Sender is a small baby from Malaysia. This baby asked me Uncle I read your blog. Why don’t you write children stories, Comics or humorous stories for children ?
This is for that baby… வாழ்க தமிழ் மலேசியாவிலும்.

பாட்டி பட்டம்மாவும், பேத்தி ப்ரீத்தியும்


பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு...
சரி உட்காரு பசி கதை சொல்றேன் பாசிபட்டணம்ங்கிற ஊர்ல பசி பஷீர்னு ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு ஏழை வறுமை, அவன் வயிற்றுக்கு பட்டினியாய் கிடப்பது எப்படி ? என்று சொல்லிக் கொடுத்தது. அதைக் கற்றுக் கொண்ட வயிறு இப்படியே கிடந்து பணம் சேர்ப்பது எப்படி ? என்று அவனது மனதுக்கு சொல்லிக் கொடுத்தது இப்படியே....

பணமும் கொழித்தது
மனமும் செழித்தது
வளமும் நிறைந்தது

மனம் சொன்னது ஒருநாள் வயிற்றிடம் நீ பட்டினியாய் கிடந்தது போதும் என்று... உடன் வயிறு கேட்டது மனதிடம்...
பட்டினியா ? அப்படினா... என்ன ?
வேதனைப்பட்ட அவன் மருத்துவரிடம் போய் வயிற்றுக்கு பசித்து புசிக்க வழிவகை கேட்டான் மீண்டும்...

வளமும் நிறைந்தது
மனமும் செழித்தது
பணமும் கொழித்தது

யாருக்கு ? மருத்துவருக்கு. (ராமதாசுக்கு அல்ல)
மீண்டும் வறுமை அவன் வயிற்றுக்கு பட்டினியாய் கிடப்....
ஓஹோ அதனாலதான் நீ என்னை டாக்டருக்கு படிக்கச் சொல்றியா ?


சாம்பசிவம்-
பேத்தி ப்ரீத்தி வெவரமான ஆளுதான்.

Chivas Regal சிவசம்போ-
பேத்தி நீடாமங்கலம் நீட் நீலாம்பரி மாதிரி இருக்குதே....

காணொளி
கில்லர்ஜியின் பொங்கல் நல்வாழ்த்துகள்

28 கருத்துகள்:

  1. ஹாஹாஹா...
    சர்தான்....சிவாசுக்கும் சாம்பசிவத் த்துக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
    சிவாஸ் பொங்கல் அன்னைக்காவது ரீகல் பக்கம் போகாம இருப்பாரா..ஹாஹாஹா..

    பதிலளிநீக்கு
  2. முதல்ல சைன் வச்சிட்டு பின்புதான் போஸ்ட்டைப் பிரிக்கோணும்:) இல்லையெனில் மீஈஈஈ த 1ஸ்ட்டாக வர முடியாது:))

    பதிலளிநீக்கு
  3. அந்த பேபி ஆங்கிலீசில லெட்டர் போட்டிருக்கு.. அப்போ எப்பூடி அவோக்கு டமில் தெரியும்னேன்ன்ன்ன்?:) உங்கள் புளொக் படிக்க:))..

    பாட்டி கதை ஒரு சுவீட் 16 க்கே புரியுதில்ல கொயந்தைக்கெங்கே பிரியப்போகுது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா கேட்டிருக்கும் கேள்வி
      கவ
      னி
      க்கத்த
      க்கது!

      நீக்கு
    2. என் பெண் தமிழை ஓரளவு படித்துவிடுவாள். ஆனால் தொடர்புக்கு அவள் ஆங்கிலம் மட்டும்தான் உபயோகப்படுத்துவாள், இல்லைனா தமிழை ஆங்கிலத்தில் எழுதுவாள்.

      நீக்கு
  4. பேத்தியின் பேரை சுறு:)க்கி வச்சிருக்கலாமோ....:)..

    அழகிய பொங்கல் வாழ்த்து.

    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீராளன்... உங்கள் கவிதை எப்போதும்போல் மிக அருமை. உங்கள் தகவலுக்கு, எனக்குத் தெரிந்து கங்கையில் தாமரை கிடையாது (எப்போதும் ஓட்டத்தில் இருப்பதால்). உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      நீக்கு
  6. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அதற்குரிய விளக்கங்கள் தங்கள் பாணியில் அசத்தல். காணொளி மிகவும் நன்றாகவிருந்தது. இவ்வினிய நாட்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன். தைத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. பொங்கலோ பொங்கல்..
    பொங்கலோ பொங்கல்..

    பதிலளிநீக்கு
  10. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  11. கதை பிரமாதம்! பொங்கல் வாழ்த்துகள் சகோ . நலம்தானே?

    பதிலளிநீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. விலையில்லா ஆடு
    விலையில்லா கணினி
    விலையில்லா ஸ்கூட்டர்
    இதெல்லாம் தருகிறார்களே
    பசியில்லா வயிறும்
    பணம் இல்லா உலகும்
    இலவசமாக தருவார்களா?

    இளம்பசி
    புளிச் ஏப்பப்பசி என்று
    பசி எழுத்துக்கள்
    மிக அருமை!

    அன்புடன் ருத்ரா

    பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  14. கில்லர்ஜி, ரசித்தேன். கிடைக்கும்போது பசிக்காது, பசிக்கும்போது வேண்டியது கிடைக்காது என்பதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

    பதிலளிநீக்கு
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும் குடுமத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  17. பண்டிகை நாட்களில் வரும்பதிவுகளுக்கெல்லாம் வாழ்த்துகள் மட்டுமே இருக்கும் கவனித்து பதிவெழுத வேண்டாம்

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே!

    அன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!

    இன்பத் தமிழ்போல் இனித்து!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. மருத்துவரானல் பணம் கொழிக்கலாம் என சொல்கிறாரா பாட்டி?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. இனிய பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்,,,/

    பதிலளிநீக்கு
  23. புதிய முயற்சிகள் வெல்லட்டும்
    வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு
  24. ஹாஹாஹா, பாட்டிக்கும் பேத்திக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு