இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 16, 2018

இரை தேடி உழைத்ததில் இறை தந்த பரிசு



ணக்கம் நட்பூக்களே... இவ்வருடம் ஜனவரி ஒன்று அதிகாலை கோயமுத்தூர் ஆதி மோட்டார்சில் MURUTI SUZUKI WagonR என்ற மகிழ்வுந்து ஒன்றை என்னைச் நேசிக்கும் நல்ல உள்ளங்களின் ஆசியால் வாங்கினேன். குடும்பத்தோடு முதலில் அம்மாவின் ஆசைப்படி பிள்ளையார் கோவிலுக்கு சென்று மகிழ்வுந்துக்கு பூஜை போட்டு பிறகு எனது ஆசைப்படி Coimbatore The United Physically Handicapped School சென்றோம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக முதல்நாளே இனிப்பு (லட்டு) வாங்கி வைத்து விட்டேன். லட்சங்கள் செலவு செய்து மகிழ்ச்சிக்காக மகிழ்வுந்து வாங்குகின்றோம். 

அதில் சிலநூறு ரூபாய் செலவு செய்து இந்த தூய உள்ளங்களை மகிழச் செய்வதை நான் வணங்க விரும்பாத இறைவன் விரும்புகின்றான் என்பதை ஆத்மார்த்தமாக நம்புகின்றேன். கில்லர்ஜியின் இச்செயலை அவன் நேரலையில் காண்கிறான். அதை விடுத்து சராசரி மனிதர்களைப்போல மகிழ்வுந்து வாங்கியதற்காக அதிராவின் அங்கிள் Chivas Regal சிவசம்போ போன்ற மண்ணு முக்குழிகளுக்கு பார்ட்டி வைப்பதில் உடன்படாதவன். இருபது ரூபாய்க்கு தேங்காய் வாங்கி இறைவனுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் தெருவில் உடைத்து அது சிதறி மண்ணுக்கு போவதைவிட, அந்த இருபது ரூபாயை நான்கு நபர்களுக்கு ஆளுக்கு ஐந்து ரூபாயாக தர்மம் செய்வதை என்னைப் படைத்த உலக மேலாளன் விரும்புகின்றான் என்பதை நான் ஆணித்தரமாக நம்புபவன்.




மேலும் நான் முன்பு அபுதாபியில் இருக்கும் பொழுது இப்படி ஏதாவது மகிழ்வுந்து, விமானம், இரயில், கப்பல் (மன்னிக்கவும் இதுவரை கப்பல் வாங்கியதில்லை ஏதோ ஃப்ளோவுல விரல் தவறிழைத்து விட்டது) வாங்கியபோது இதற்கு பணம் அனுப்பி செய்யச் சொல்லியது உண்டு. சென்னை சிவாநந்தா குருகுலம், ஸ்ரீ சாரதா சக்தி பீடம் மற்றும் கோயமுத்தூர் தி யுனைடெட் ஹேண்டிகேப்பிட் ஸ்கூல் இவற்றோடு எனக்கு கடந்த பதினைந்து வருடங்களாக கடிதத் தொடர்பு மற்றும் தொலைபேசி அழைத்தல் போன்றவை உள்ளது. சென்னை சிவாநந்தா குருகுலம் சென்று விட்டேன் நான் சென்றபோது நிறுவனர் டாக்டர். திரு. ராஜாராம் அவர்களை சந்திக்க இயலவில்லை அடுத்த முறை நானும், வில்லங்கத்தாரும் அங்கு செல்வதாக இருக்கிறோம். மேலும் ஸ்ரீ சாரதா சக்தி பீடம் செல்லவேண்டும். எல்லா முறையும் சொல்வார்கள் தாங்கள் பணம் அனுப்புவதைவிட ஒரு முறையாவது இங்கு வந்து இந்த குழந்தைகளை பார்த்து செல்லுங்கள் என்று. அதற்கு இப்பொழுதே சந்தர்ப்பம் கிடைத்தது அதுவும் அம்மாவையும், எனது குழந்தைகளோடு ஒருமித்து செல்லும் பாக்கியம். ஒரு வாரம் முன்பே அங்கிருக்கும் நண்பர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தகவல் கொடுத்து விட்டேன். நான்தான் கில்லர்ஜி என்பதற்காக 2004 மற்றும் 2016 ஆம் வருட இவர்கள் எனக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களை எடுத்து வைத்துக் கொண்டேன். அங்கு சென்றதும் நண்பர் திரு. ராதாகிருஷ்ணன் அன்புடன் வரவேற்றார். அறிமுகங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். எனது குழந்தைகளை இனிப்பு வழங்க வைத்து கண்டதில் மனதில் மகிழ்ச்சி. முதன் முதலாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை மொத்தமாக, கூட்டமாக கண்டதும் எனக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்குமே மனம் கனத்து விட்டது. எனது பலநாள் முயற்சி இன்று இங்கு வந்ததை பெருமையாக நினைத்துக் கொண்டு இல்லம் வந்தேன். எனது மனதின் ஓரம் இந்த மகிழ்வுந்தில் பயணிக்க எனது தங்கை வனிதா இல்லாமல் போனது மனதை உறுத்தியது.






அம்மா, மகன், மகளுடன் நான்.
என்னை இந்நிலையில் வைக்காத எனது தாய்-தந்தைக்கு நன்றி
என்னை இந்நிலையில் வைத்த இறைவனுக்கும் நன்றி.

புதிய மகிழ்வுந்தில் முதலில் எங்கு பயணித்தீர்கள் ? என்ற கேள்விக்கணையை தொடுத்த சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்காக இப்பதிவு

காணொளி

68 கருத்துகள்:

  1. நான்தான் முதல் வருகை :) இருங்க பதிவை வாசித்துவிட்டு வருகின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 🐍🐍🐍🐍🐍🐍கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    2. பூஸார் எப்போது பாம்பாய் சீறத் தொடங்கினார்!!! யம்மாடியோவ்!! விடு ஜூட்!!

      கீதா

      நீக்கு
    3. முதல் வருகைக்கு ஏஞ்சலுக்கு நன்றி

      அதிரா அடிக்கடி இப்படி கடித்தால் பல் டாக்டர் பல்ராமனிடம் போக வேண்டியது வரும்.

      அதற்காக அதிராவை பாம்பு என்று சொல்லலாமா ?

      நீக்கு
    4. அதுதானே நல்லாக் கேழுங்கோ கில்லர்ஜி:)) இப்பூடி எல்லாம் ஜொன்னா இனி நான் மதராட்டியில் தான் பேசுவேனாக்கும் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
    5. அவங்க உண்மையை ஜொள்ளிட்டாங்களோ... ஹி.. ஹி..

      நீக்கு
  2. தங்கள் சந்தோஷத்தை அந்த இறைவனின் குழந்தைகளோடு கொண்டாடியது மனதை மிகவும் நெகிழவைத்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது முத் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. கில்லர்ஜி அது கோயமுத்தூரா? கோயம்புத்தூரா???

    சிறீ சிவசம்போ அங்கிளைத் திட்டியமைக்கு என் படு வன்மையான கண்டங்கள்:)... அவரையும் ஏத்திக்கொண்டு ஒரு ரவுண்ட். வந்திருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்:)..

    ஊசிக்குறிப்பு:)
    சிறீ சிவசம்போ அங்கிளை ஏத்திப்போகும்போது பாட்டை மாத்தவும்.... குடிமகனே... பாடல் போடவும்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> சிவசம்போ அங்கிளையும் ஏத்திக் கொண்டு ஒரு ரவுண்டு..(?)..<<<

      இந்த கருத்தில் ஏதோ உள்குத்து இருக்கிறாப்பல!...

      அவரே ரவுண்டு(!).. ல இருக்குறப்போ
      அவருக்கு எதுக்கு ஒரு ரவுண்டு?..

      ஹப்பா!.. நாம வந்தவேலை நல்லபடியா முடுஞ்சது!..

      நீக்கு
    2. கோயமுத்தூர் என்றுதான் பல இடங்களிலும் எழுதி இருக்கிறது நீங்கள் சொல்வது போலவும் சில இடங்களில் எழுதி இருக்கிறது மேலும் கோவை என்றும் ஆங்கிலத்தில் Coimbatore என்றும் எழுதி இருக்கிறது.

      அவரை ''ஏற்றி'' விட்டு பவுண்டு போனால் போலீஸ் பிடிச்சுருமே....

      நீக்கு
    3. ஹையோ துரை அண்ணன் இது வேற ரவுண்டை ஜொன்னேன்:)) ஹா ஹா ஹா காரில ரவுண்டடிக்கப்போகும் ஆசையிலயாவது ஒழுங்கா இருக்கிறாரோ பார்ப்போம் என:))

      நீங்க வேற:) ..தன் காரில ஏத்த ரெடியாயிருக்கும் கில்லர்ஜிக்கு:).. இப்படி ஏதும் கொழுத்திப் போட்டு... சிவசம்போ அங்கிளை ஏத்தாமல் பண்ணிடப்போறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  4. ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்:)... நீங்க செய்வது மிக நல்ல விசயம்தான்... அதுக்காக மற்றவர்களைத் திட்டுவது நல்லதல்ல ஜொள்ளிட்டேன்ன்ன்:)...

    நானும் கையை விட்டிட்டெல்லாம் கார் ஓடுவனே:) ஹா ஹா ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையை விட்டு இறங்கி ஓடுவீங்களா....?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நிஜமாத்தான்:)..

      நீக்கு
  5. ///கிழ்வுந்து, விமானம், இரயில், கப்பல் (மன்னிக்கவும் இதுவரை கப்பல் வாங்கியதில்லை ஏதோ ஃப்ளோவுல விரல் தவறிழைத்து விட்டது) வாங்கியபோது///

    அப்போ ரெயின் வாங்கியிருக்கிறீங்க? கப்பல்தான் வாங்கேல்லை?:)

    கார் க்கு டமில்:) மகிழ்வூந்தோ??? கேள்விப்பட்டதா நினைவில் இல்லை...

    இனிமேல் மகிழ்வுந்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்று கேட்க மறந்திட்டேன்.. லெவ்ட் காண்ட் சைட் ட்றைவிங்காக இருக்கே கார்.. ஏன் அப்படி? இந்தியாவில் ரைட் காண்ட் தானே?

      இது அபுதாபி வீடியோவைப் போட்டு எங்களை ஏமாத்தப் பார்க்கிறீங்க:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    2. இரயில் உகாண்டாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
      மகிழ்வுந்து இன்று முதல் அறிந்து கொள்க...

      காணொளியை கண்டு பிடித்தமைக்கு பாராட்டுகள் பரிசு கடையில் பெற்றுக்கொள்க...

      நீக்கு
  6. எங்களின் வாழ்த்துகள் கில்லர்ஜி!

    நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள்! இறைவனின் ஆசி என்றென்றும் உங்களுக்கு உரித்தாகுக!

    கீதா: அக்கருத்துடன்...ஆம் வில்லங்கத்தார் வருவதாகச் சொல்லியிருப்பது தெரியும்....நேரம் வரவில்லை போலும்.

    நட்சத்திரக் குழந்தைகளுடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது மனதிற்கு இனிமை. அக்குழந்தைகள் பாவம்...(வயதானவர் சிறியவர் எல்லோருமே குழந்தைகள்தான் இவர்களைப் பொருத்தவரை)

    கில்லர்ஜி ரீகலை நீங்கள் திட்டினாலும் அவருதான் உருப்படியா பல தத்துவ முத்துக்களை உதிர்க்கிறார். தான் கெட்டாலும் பரவாயில்லை மத்தவங்க நல்லாருக்கட்டும்னு நினைக்கிறாரே!! அது பெரிய விஷயம் இல்லையா!!!!! ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
      சிவசம்போவை திட்டவும் பயமாக இருக்கிறது காரணம் அவர் அதிராவின் அங்கிளாம்.

      நீக்கு
  7. படத்தில் இருப்பது அம்மாவா? என் வணக்கங்கள்

    நெகிழ்வான செயலைச் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்ஜி எனது அம்மாதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. இந்தியாவில் லெஃப்ட் ஹாண்ட் ட்ரைவிங் சரிபட்டு வருமா ஒன்றே செயினும் நன்றே செய்க அந்நன்றும் இன்றே செய்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சற்று கடினமாகத்தான் இருக்கிறது ஹாரன் அடிப்பதைத்தான் மறந்து விடுகிறேன்

      மேலும் இரவில் ஓட்டுவது மிகவும் கடினமாக இருக்கிறது சமீபத்தில் எழுநூறு கி.மீ. தனியாக போய் வரவேண்டிய நிலை போய் வந்தேன் ஆகவே வலையுலக வரவு குறைவு.

      நீக்கு
  9. அன்பின் ஜி..

    தங்களது புகழ் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்!..

    உற்ற தெய்வத்தைத் தாங்கள் வணங்குதற்கு விரும்பா விட்டாலும்

    பெற்ற தெய்வத்தைத் தாங்கள் வணங்குகின்றீர்கள் தானே!..

    இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தாய் காணும் தெய்வம் இதில் யாருக்கும் எள்ளளவும் ஐயமில்லை எல்லா மதங்களுமே தாயை போற்று என்றே போதிக்கின்றன.....

      நான் இறைவன் இல்லை என்று சொல்லவே மாட்டேன் காரணம் இறைசக்தி நிச்சயம் உண்டு.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  11. Arumai anna....

    Puthiya carukku vazhththukkal.

    pongal vazhththukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்.

      நீக்கு
  12. புதிய மகிழ்வுந்து வாங்கியதற்கும் அந்த மகிழ்ச்சியை மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டதற்கும் இனிய வாழ்த்துக்களும் மனம் நிறைந்த பாராட்டுக்களும்!!

    பதிலளிநீக்கு
  13. முதல் படம் பார்த்த தும் ஷோ ரூம் வாங்கி விட்டீர்கள் என நினைத்தேன்.சீக்கிரம் ஷோ ரூம் வாங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.. ஹி... ஹி... ஷோரூம் இதெல்லாம் ஓவரு...

      ஒருக்கால் இப்படி நடந்தால் ஷோரூமிலிருந்து உங்களுக்கு ஒரு மகிழ்வுந்து பரிசு.

      நீக்கு
  14. நல்ல செயல் கில்லர்ஜி. வாழ்க. அதுவும் அம்மாவுடன் அங்கு சென்றது மிக்க மகிழ்ச்சி.

    எனக்குத்தான் நம்ம ஊரில் கார் ஓட்டமுடியுமா என்ற பயம் இருக்கிறது. அதனால் அங்கு வந்தால் கார் வாங்குவதில்லை என்று நினைத்திருக்கிறேன் (இன்று வரை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி.

      நம்மூரில் இரண்டு தினங்கள் தயக்கமாக இருக்கும் இதோ நான் தொலைதூர இரவுப் பயணத்தையே முடித்து விட்டேன்.

      உங்களுக்கு பயமாக இருந்தால் ஆட்டோமேட்டிக் கியர் வாங்கி கொள்ளுங்களேன்.

      நீக்கு

  15. இறைவனுக்கு கிடைத்த
    மிகச்சிறந்த பரிசு மனிதன்.
    மனிதனுக்கு கிடைத்த‌
    மிகச்சிறந்த பரிசு இறைவன்.

    இப்படி
    ஆத்திகமும் நாத்திகமும்
    கை குலுக்கிக்கொண்டால் கூட‌
    வெட்டணும் குத்தணும்னு
    கும்பமேளா நடத்துபவர்களை
    குப்பையோடு தான்
    கொட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அழகான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  16. ஆஹா சூப்பர் .... வணக்கம் ஜி வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்
    ரெட் லைனில் உங்கள் அடக்கம் அப்படியோ கண்ணை கட்டுது
    காணொளியில் உங்களுக்கு மகிழ்வுந்து ஓட்டத்தெரியும் என்பதையும் காண்பித்துவிட்டீர்கள் சூப்பர் ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நலம்தானே ? இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      (சிவப்பு எழுத்து) எனக்கு பொய் சொல்லும் பயக்க, வயக்கம் கிடையாது.

      காணொளிகள் எனது தளத்தில் நிறைந்து இருக்கிறதே...

      நீக்கு
  17. புதிய மகிழுந்து வாங்கியமைக்கு வாழ்த்துகள்! புதிய வாகனம் வாங்கியதை மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அம்மாவுடன் கொண்டாடியது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்!

    எல்லோருக்கும் இந்த எண்ணம் வராது. உங்களுக்கு வந்திருக்கிறது. வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  18. மகிழ்வுந்து வாமஇயதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  19. மகிழுந்து வாங்கிய மகிழ்ச்சியில் ஆதரவற்றவர்களை அரவணைத்தமைக்கு மிக்க பாராட்டுகள் த.ம.வுடன்

    பதிலளிநீக்கு
  20. குடும்பத்துடன் ஆதரவற்றவர்களுக்கு அரவணைப்புக் கொடுத்துப் பாசம் காட்டியமைக்கு வாழ்த்துகள். உங்கள் அன்னைக்கு எங்கள் வணக்கம். எனக்காக வெளியிட்ட இந்தப் பதிவுக்கு நான் தாமதமாக வர நேர்ந்து விட்டது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  21. வணக்கம் சகோ!

    உங்களின் மனதிற்குச் சரியெனப்படுவதைச் சரியாகச் செய்துகொண்டு போகின்றீர்கள்.
    உங்களை மகிழ்வுப்படுத்தும் விசயங்களையும் செய்திருக்கின்றீர்கள்.
    பெற்றவளையும் பெற்றவர்களையும் மகிழ்வித்த நல்ல செயலினையும் மெச்சுகிறேன்!

    மகிழ்வுந்தில் மகிழ்வான உலா காட்சிப்பதிவும் பார்த்தேன்...:) நன்று!
    வருங்காலமும் உங்கள் மனம் போல் இனிதாக
    எல்லாம் அமைய நல் வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது விரிவான கருத்தை தந்து வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் கோடி.

      நீக்கு
  22. Congrats. For the car. You have nicely shared your experiences @ various orphanages.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  23. மா உறுதி மாண்புடையார்
    மாருதி மகிழ்வுந்து வாங்கியமைக்கு வாழ்த்துகள்

    ஆனந்தத் தோப்புக்குள் அடிவைத்து ஆசி பெற்ற செயல்
    போற்றுதற்குரிய பண்பு செயல்!
    வாழ்க! வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே ?
      தேவகோட்டை திசை கண்டு வந்து எம்மை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  24. வாழ்த்துகள். உங்கள் நல்மனம் மேலும் உங்களுக்கு வளம் சேர்க்கட்டும்

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துகள் நண்பரே புதிய காருக்கும்......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே


    புகைப்படங்களும் பயணமும் இனிமை.புதிதாக வாங்கிய காருக்கும்,
    தங்களின் மனிதாபிமான செயலுக்கும் மனம்நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..
    புதிதாக கார் வாங்கியதும் தங்களின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் சொல்லாமல் தங்களுடன் ஒத்துழைத்த தங்கள் குடும்பத்திற்கும் மனமுவந்த பாராட்டுகள். தங்களை புதல்வராக பெற்ற தங்கள் தாயார் கொடுத்து வைத்தவர்.அவருக்கு என் வணக்கங்கள். தாமதமாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மன்னிக்கவும்.நேற்று வர இயலவில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும், எனது தாயாரைப்பற்றி குறிப்பிட்டமைக்கும் மனமார்ந்த நன்றிகள் கோடி.

      தாமதத்திற்காக மன்னிப்பு வேண்டாமே...

      நீக்கு
  27. புதிய கார் வாங்கியமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா ஜீ. அதில் நீங்கள் முதலில் சென்ற இடம் மிகவும் பாராட்டத்தக்கதும், போற்றலுக்குரியதும். அம்மாவுக்கு நிகரான உயிர் எதுவுமில்லை இது என் கருத்து. உங்கள் அம்மாவுக்கு என் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மீண்டும் எமது தளம் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  28. உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு