இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 23, 2018

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்


புதாபியில் இருக்கும் பொழுது ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் சைனா நாட்டு நண்பன் திரு. லீங் ஸுவாங் டுஸ்பு விடுமுறைக்கு சென்றவன் அவனுடைய கொழுந்தியாளுக்கு சடங்கு என்று பத்திரிக்கை அனுப்பி இருந்தான் கூடவே விசிட் விசாவும் வைத்திருந்தான் சரி டிக்கெட் செலவு மட்டும்தானே மேலும் விஷேசம் வெள்ளிக்கிழமை வைத்து இருந்ததால் அரசு வெள்ளி. சனி விடுமுறைதானே என்று பைஜூங் ரிட்டன் டிக்கெட் போட்டு பயணித்தேன் விஷேசம் கோலாகலமாக நடந்து முடிந்தது

நண்பனின் மூத்த சகலையின் மகள் லீ ஸிங் பீஜூவுடன் கில்லர்ஜி

மறுநாள் சனிக்கிழமை ஹூவாங் ஸௌட் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தோம் வழியில் ஒரு பெண் பல பொருட்களை விரித்து வைத்து சைனா மொழியில் நம்மூரில் எதை எடுத்தாலும் பத்து ரூவா என்பது போல கூவிக்கொண்டு இருந்தாள். நண்பன் சொன்னான் நான் இப்ப செய்யிறதை காணொளி எடு முகநூலில் போடுவோம் என்றான். நானும் நமக்கென்ன பிரச்சனை வந்தால் அவன் பார்த்துக் கொள்வான் மேலும் நண்பனின் மூத்த சகலை ஊர் நாட்டாமையாக இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருந்தான் நேற்றுகூட சடங்கில் சந்தித்து பேசினோமே என்ற தைரியத்தில் எனது செல்லில் காணொளி எடுக்க தயாரானேன்.



தனது பர்ஸில் இருந்து பத்து யென் எடுத்துக்கொண்டான் நேராக அவளிடம் சென்றவன் காசை கீழே விரிப்பில் போட்டு விட்டு என்ன செய்தான் தெரியுமா ? அவனது செயலைக் கண்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மேலும் அப்படியே பக்கத்தில் இருந்த மூத்திரச்சந்தில் ஓடினான் இதற்கு மேல் இங்கிருந்தால் நமது உயிருக்கு ஆபத்து என்று அப்படியே விமான நிலையத்துக்கு நடையைக் கட்டி அபுதாபிக்கு சென்று விட்டேன். அதன் பிறகு மறுமாதம் அவன் அபுதாபிக்கு வந்ததும் இனிமேல் உனது சங்காத்தம் எனக்கு ஆகாது என்று அவனுடன் க்கா விட்டு விட்டேன் என்ன நண்பர்களே நான் செய்தது சரிதானே ? இதோ அவன் செய்த செயலை நான் எடுத்த காணொளியில் நீங்களே பாருங்களேன் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..
 
காணொளி.
நஹ் யான், நஹ் யான், ஸெம்பூ நஹ் யான்
Nah yen, nah yen, shempoo nah yen
日元 日元 洗发水 日元
 (தமிழாக்கம் பத்து ரூபா, பத்து ரூபா, எல்லாமே பத்து ரூபா)

55 கருத்துகள்:

  1. நீங்க உலகம் முழுதும் பிரயாணம் செய்திருக்கிங்க ..எத்தனை அனுபவங்கள் ஹாஹ்ஹா :) ஆனாலும் நண்பர் பொல்லாதவர்தான் :) கா விட்டதில் தப்பேயில்லை ..
    ஒரு சந்தேகம் சீனர்களுக்கும் சடங்கு போன்ற நம் நாட்டு பழக்கம் இருக்கா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் முழுவதும் சுற்ற நானென்ன... மோ(ச)டியா ?
      நான் உழைச்ச காசுல சுத்துறவன் இதை படிச்சுட்டு கிழிச்சுருங்க... திருச்சிகாரவுங்க பார்த்துறாம...

      நீக்கு
  2. கில்லர்ஜி இப்பவும் ஷொக் லதான் இருக்கிறீங்களோ?:).. இங்கும் கடைகள் இருக்குது பவுண்ட் ஷொப் என... அங்கு எதை வாங்கினாலும் வன் பவுண்ட். இதேபோல கனடா அமெரிக்கா விலும் இருக்குது டொலர் ஷொப் என...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எதை எடுத்தாலும் ஒன்று" இந்த வார்த்தைதான் எனது நண்பனை கடைக்காரியை தூக்கிட்டு போக வச்சது

      நீக்கு
  3. கில்லஜியின் கொளுந்தியா பிரச்சனை எப்போதான் தீருமோ?:)... கடசி வீடியோ எங்கு எடுத்தீங்க?:) ஹா ஹா ஹா.. வீடியோவோடுதான் பிளேனில ஏறினனீங்களோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கொளுந்தியாள் பாக்கியமெல்லாம் கிடையாது. எனது மனைவி வீட்டில் ஒருஆள் மட்டுமே...

      இன்று அவர்கள் குடும்பத்தில் தாய்-தந்தை மூவருமே இல்லை.

      நீக்கு
  4. ஹா... ஹா..... ஹா.... புத்திசாலிதான்!

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா ஹா ஹா ஹா....கில்லர்ஜிக்கு லக்கே இல்லை!!! ஹும்!!! சரி விடுங்க...அடியிலருந்து தப்பிச்சீங்களே!!!

    இங்க கூட நம்மூர்லயும் எதை எடுத்தாலும் 10 ரூபா உண்டே....ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நல்லவேளை தலை தப்பியது தமன்னா புண்ணியம்
      (ஸ்ரீராம்ஜி கோவிக்கப்படாது)

      நீக்கு
    2. ஹையோ கில்லர்ஜி ஓடுங்கோ ஓடுங்கோ.. தேவர்கோட்டை சுவருக்குப் பின்னால ஒளியுங்கோ:)) தமானாக்கா ஸ்ரீராமின் ஆள் இல்லை:) நெல்லைத்தமிழனின் ஆளாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களுக்கு வரவர மறதி அதிகமாகுதூஊஊஊஊ:))

      நீக்கு
    3. அப்படியா ? இது எனக்கு தெரியாதே...

      நீக்கு
  6. இங்க டாலர் ஸ்டோர் உண்டு.
    துபாயில் 5 திரம் கடை உண்டு.
    படா தில் வாலா உங்க தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா உலகம் முழுவதும் இப்படி கடைகள் இருக்கத்தான் செய்கின்றன... வருகைக்கு நன்றிம்மா.

      நீக்கு
  7. இங்கேயும் நூஸ் தினார் ( அரை தினார்) மிய்யா ஃபில்ஸ் ( 100 ஃபில்ஸ்) கடைகள் இருந்தன.. காலப் போக்கில் நூஸ் தினார் கடைகள் அழிந்து போக மிய்யா ஃபில்ஸ் கடைகள் மட்டுமே உள்ளன..

    அரபியில் மிய்யா (மிய்யா..வ் அல்ல) என்றால் நூறு என்டு அர்த்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அரபு தேசங்களில் 'மிய்யா ஃபில்ஸ்' கடைகள் இருப்பது உள்ளதுதான் ஆனால் குவைத்தில் 'நூஸ்' கடைகள் அழிந்து போவது கவலைக்கிடமானதே...

      காரணம் உலகம் முழுவதும் விலைவாசி ஏறுவதின் பின்னணியில் இயங்கும் சூத்திரதாரி அமெரிக்காகாரன்தான்.

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மிய்யா:)) எனக்கு அரபியில் இப்போ ரெண்டு சொல்லுத்தெரியுமே...

      மஃப்ரூத்.. மிய்யா:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. இதையும் தெரிந்து கொள்க... நூஸ் என்றால் (அரை, பாதி)

      நீக்கு
  8. நல்ல கற்பனை கில்லர்ஜி! ஒரு வீடியோவை வைத்து அனுபவ விவரணம் போல அழகா சொல்லிட்டீங்களே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது கற்பனையா ?
      நான் எவ்வளவு ஆபத்துலருந்து சைனாவிலிருந்து தப்பிச்சு வந்து இருக்கேன் இப்படி சொல்லலாமா ?

      நீக்கு
  9. தமன்னாவுக்குக் கோபம் வந்துருச்சு போல!!!பதிவு இணையவே இல்லைனு காமிக்குது. நானும் முயற்சி செஞ்சேன்...போகவே இல்ல..இங்குட்டு வராதேனு சொல்லுது!! ஏன் நீங்க கண்டுக்கலையோ!!?? ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமன்னா வலையுலகத்தை தள்ளி வச்சு ஒருவாரம் ஆச்சு தெரியாதா ?

      நீக்கு
  10. அவரிடம் பழமாயிருந்ததால்தானே இது உங்களுக்குத் தெரிந்தது அவளைத்தூக்கிச் சென்றவன் என்ன செய்தான் என்பது தெரியவே வாய்ப்பில்லாமல் போச்செ அவனோடு கா விட்டதால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நாந்தான் அவனது சங்காத்தம் வேண்டாமென்று ஒதுங்கி விட்டேனே... அவ எப்படிப் போனால் எனக்கென்ன ?

      என் தலை எனக்கு முக்கியம்

      நீக்கு
  11. நம்மூர் ஆட்கள் விவரமானவர்கள். அதனால் தான் எந்த 'பொருள்' எடுத்தாலும் ரூ.10 மட்டும். கல்லாப் பெட்டித் தவிர
    என எழுதியிருக்கிறார்கள். பொருள் என எழுதியிருப்பதால் உங்கள் நண்பர் செய்ததுபோல் விற்பனையாளரைத் தூக்கிக்கொண்டு போகமுடியாதல்லவா?

    பதிவையும் காணொளியையும் இரசித்தேன்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கும், இரசித்தமைக்கும் நன்றி

      நீக்கு
  12. துபாய்ல எதை எடுத்தாலும் 1, 2 திர்ஹாம் கடைகள் இருந்தன (கராமா, பர்துபாயில்). பெரிய கடைகள், எதை எடுத்தாலும் 5, 10 திர்ஹாம் என இருந்தன. இப்போது 15-20 திர்ஹாமாக அவை ஆகிவிட்டன. கராமால இருந்த 1, 2 திர்ஹாம் கடைகள், 5 திர்ஹாம் கடையாகிவிட்டன.

    டைசோ (DAISO) கடைகள், ஜப்பானியப் பொருட்களை எதை எடுத்தாலும் 5 திர்ஹாம் (500 fils) என்று விற்றுக்கொண்டிருந்தவை, இப்போ 7 திர்ஹாமாகிவிட்டது, பல பொருட்கள், இதைவிட அதிகமாக அங்கு விக்கறாங்க. விலைவாசிதான் ஏறிக்கிட்டே போகுது.

    'நீங்க ஷாக் ஆனதுக்குக் காரணம், உங்களுக்கு முன்னால் அவன் செஞ்சுட்டானே என்பதுதான (சும்மா ஜோக்கா எடுத்துக்குங்க. உங்கள் குணம் பற்றித் தெரியும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே அபுதாபியிலும் விலைகள் கூடி விட்டன...

      கடைசியில் என் மனதில் இருந்ததை இப்படியா பப்ளிக்கில் போட்டு உடைப்பது ? அதிரடி அதிரா பார்க்காமல் இருக்கோணும்....

      நீக்கு
    2. Haaaa haaaa.ஆனா நான் பார்த்து விட்டேன் இதொ சொல்லிடரென்

      நீக்கு
    3. ஐயய்யோ வம்பை யூரோ கொடுத்து வாங்கிட்டேனே...

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுவோ கில்லர்ஜியின் சாக்குக்குக் காரணம்.. ஹையோ அது ஷொக் கூ:))...

      என் செக்:) எனக்கு புறாவின் காலில் கட்டி மெசேஜ் அனுப்பி இருந்தாவே:))... இனிமேலும் கில்லர்ஜி ஏதும் நல்லபிள்ளையா பேசுவாரோ?:).. விடமாட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:)).

      நீக்கு
    5. ஆஹா... நெ.த. தண்டவாளத்தை வண்டவாளத்தில் ஏற்றி விட்டாரே...

      நீக்கு
  13. ஷாக் ஆனேனோ இல்லையோ ஆனா சிரித்து இன்னும் முடியல... 😂 😂 😂
    இந்த வீடியோவோடு சீனாவிலிருந்து (தப்பி)வந்ததே பெரிய காரியம்.
    இங்கும் 1யூரோ கடை இருக்கு. ஆனா இப்படி ஆளை தூக்கமுடியாது.
    மேலே விளம்பரம் வைச்சவர் விபரமான ஆளுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் வச்சவன் சொந்த ஊர் தேவகோட்டையாம்.

      இரசித்தமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  14. ஹாஹாஹா, ரசித்தேன், எல்லா நாடுகளிலும் இப்படி நடைபாதைக் கடைகள் உண்டு போல! அம்பேரிக்காவில் நடைபாதைகளில் இல்லை! ஆனாலும் டாலர் கடைகள் உண்டு! அங்கே போனால் எதுவும் வாங்கறாப்போல் இருக்காது! :))) சும்மாப் போய்ப் பார்த்துட்டு வருவோம். உங்க நண்பர் நல்லவேளையாத் தனியாப் போனாரோ, நீங்க பிழைச்சீங்களோ! இல்லைனா மாட்டிக் கொண்டிருப்பீங்க! :)))) ஹிஹிஹி, நல்ல கற்பனை தான் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் பார்த்ததுவரை ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்விஸ் இங்கும் உண்டு ஆனாலும் அவைகள் நம்மூர் போல பாதையை அடைத்துக்கொண்டு இல்லை.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. திருச்சிக்காரவுஹ பார்த்துட்டோமே! :)))

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    பதிவையும் விளம்பரத்தையும் ரசித்தேன். காணொளி நல்ல காமெடி! நடை பாதையில் யாரையுமே காணவில்லையே! (ஒரிருவரை தவிர) நம்முர் என்றால் தூக்கிக்கொண்டு நகர கூட இயலாது. உண்மையிலேயே நீங்கள தப்பி வந்தது தம்பிரான் புண்ணியந்தான்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  17. இன்னும் இந்தமாதிரி மசாலா வீடியோ எத்தனை கைவசம் இருக்கு ? ஆடிக்கொன்னு, அமாவாசைக்கொன்னு என்றாவது போடலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவுகளுக்கு அவசியப்பட்ட காணொளிகளை நான் தொடர்ந்து உபயோகப்படுத்திதான் வருகிறேன்.

      தாங்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சி வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. காண் ஒளியை பார்த்தபடியே நானும் ஜாக் ஆயிட்டேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே நேரில் பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும் ?

      நீக்கு
  19. ஹா...ஹா....
    அந்த வீடியோ முகநூலில் பார்த்தபோது நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே இருந்தேன் அண்ணா...
    இன்றும் இருமுறை பார்த்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் எடுத்ததை அனுமதி கேட்காமல் முகநூலில் போட்டு விட்டார்களா ?

      நீக்கு
  20. நானும் ஷாக் ஆயிட்டேன் அந்த சீனநங்கை குங்பூ ஏதும் பயன்படுத்தா நிலையைக்கண்டு))) சூப்பர் கமடி ஜீ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நானும் நினைச்சேன் குஷ்பு மாதிரி இருக்காளே... குங்பூ தெரியாமலா இருக்கும் என்று.

      நீக்கு
  21. சைனீஸ் நூடுல்ஸ் நல்லாவே இருக்கு. ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நூடுல்ஸை ருசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  22. சுவாரஸ்யமான பதிவு. உண்மையிலேயே அவன் தில்லான ஆளுதான். ஆனால் வடிவேலு காமெடி மாதிரி, சந்துக்குள் அந்த பெண் அவனை பின்னி எடுத்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவன் எப்படி போனால் நமக்கென்ன நான் வந்து விட்டேன்.

      நீக்கு