இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 18, 2018

தலையணை மந்திரம்


இப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக.

மங்களூர் தொழிலதிபர் அசோக் வர்மா பங்களா ஆசை மனைவி மணீஷாவின் மடியில் கிடந்தான் விவேக் ஸுக்லா...

ஏங்க நீங்க புதுசா வாங்கின பெங்களூரு கம்பெனியில உங்க தங்கச்சி புருஷனை மேனேஜிங் டைரக்டரா போடப்போறதா... உங்க அப்பா சொன்னாராமே அப்படியா ?
ஆமா அதனால என்ன ?
அதனால என்னவா ஏங்க நீங்க தனியா சம்பாரிச்சு வாங்குனதுல எப்படி உங்க தங்கச்சி புருஷனை போடலாம் ?
அவரு யாரு... உங்க பெரியப்பா மகன், உனக்கு அண்ணன்தானே ?
சரிதான் இப்படிப் பார்த்தா இந்த வீட்லதான் வரிசையா நாலு அண்ணன்மாரு வந்துருவாங்க யேன் வயித்துல வளர்ற உங்க புள்ளைக்கு நாளைக்கு என்ன சொல்லப் போறீங்க ?
பரவாயில்லையே. நம்ம புள்ளையப்பத்தி இப்பவே கவலைப்படுறியே ?
இந்த மழுப்புற வேலை வேண்டாம் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ?
மணீஷா நம் மகன் நம்ம அமைச்சர் தயவுல இந்த ஸ்டேட்ல இருக்குற எல்லா கம்பெனிக்கும் மேனேஜரா வருவான்.
ஹும் நான் நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதைப்பத்தி பேசுறேன் நீங்க நம்ம புள்ளையவும் மேனேஜராவான்னு சொல்றீங்க ?
மணீஷா இன்னைக்கு என்னாச்சு உனக்கு எங்க அம்மாகூட ஏதும் பிரச்சனையா ?
உங்க அம்மாகிட்ட பிரச்சனை செய்ய இங்கே நான் யாரு ?
யேன்... வில்லங்கம் விமலா மாதிரியே பேசுறே ?
நான் நேராவே வர்றேன் அந்த கம்பெனிக்கு நீங்க மேனேஜிங் டைரக்டராகி நாம பெங்களூரு பங்களாவுக்கு போகணும் உங்களால முடியுமா ? முடியாதா ?
கொஞ்சம் பொறும்மா நாளைக்கு எங்கப்பாகிட்ட பேசுறேன்.
வேண்டாம் உங்க அப்பாகிட்ட கேட்டா ? என்ன சொல்வாருன்னு தெரியாதா ?  யேன் நீங்க வாங்குன கம்பெனிக்கு, நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதுல என்ன பிரச்சனை ?
அப்படியெல்லாம் ஆக முடியாதுமா... கொஞ்சம் பொறு.
ஏன் முடியாது ? நம்ம லிங்குசாமி கம்பெனி வச்சுயிருக்காரு, நாஸர் வச்சுயிருக்காரு, உங்க நண்பரு அஷ்ரப் வச்சுயிருக்காரு அவங்களெல்லாம் வச்சுருக்கும்போது நீங்க வச்சு நடத்த முடியாதா ?
இன்னைக்கு அவுங்க குடும்ப நிலைமையை பார்த்தியா ? இது என்னவோ நடக்கும்னு தோனலை.
அப்படினா நான் நாளைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.
மணீஷா இது தப்பு அடுத்த வாரம் வளைகாப்பு போட உங்க வீட்ல வர்றாங்க இந்த நேரத்துல போககூடாது.
வேண்டாம் எங்க வீட்ல வளைகாப்பு வச்சுக்கிறலாம் நான் போன் பண்றேன் நீங்க மட்டும் வந்தா போதும்.
வேண்டாம் இது சரியில்லடி.

விவேக் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விருடென எந்திரிச்சு கீழே வந்து வேறு அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டாள் மணீஷா.

அடுத்து இதை மற்றொரு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி

56 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது அநியாயம் அநீதி:) அதெப்பூடி கீதாவுக்கு மட்டும் வெளியூர் போகிறேன் எனச் சொல்லிட்டுப் போயிருக்கிறார்:)) விடுங்கோ என் டொக்டர் பட்டத்தையே விடப்போகிறேன்ன்:)) நேக்கு நீடி தேவை:))

      நீக்கு
    2. இதுக்காக ஊரணிக்கு போக வேண்டாம்.

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது ஊரணி இல்ல.. ஊரணி இல்ல:)).. இதை இப்பவே குயின் அம்மம்மாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறேன்:))

      நீக்கு
    4. அவுங்களை ஊரணியில் தள்ளி விடாமல் இருந்தால் சரி.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அவட வைரம் என் கைக்கு வரும்வரை, அவவை ஒண்ணும் பண்ண மாட்டேன்:)..

      நீக்கு
    6. தோமஸ் ஜூவல்லரி போனால் கிலோ கணக்கில் வாங்கலாமே...

      நீக்கு
    7. இது எந்த நாட்டில இருக்குதூஊஊஊஉ?:) free ஆக் கிடைக்குமோ? கொஞ்சம் அட்றஸ் தாங்கோ பீஸ்ஸ்ஸ்:).

      நீக்கு
    8. இது உலகம் முழுவதும் உள்ள பேமஸ் ஜூவல்லர்ஸ்

      நீக்கு
  2. இதுவும் அதேதானா....அந்தக் காலத்துலருந்து இப்ப வரைக்கும் இதேதான் நடக்குதுன்னு...சொல்ல வரீங்களா...இன்னும் மனுஷன் வளரலைன்னு...

    அப்ப இன்னும் அடுத்து Eதிர்கால யுகம்... அதுல ராக்கெட் தளம் அல்லது ஸ்பேஸ் க்
    கோளுக்கும் இப்படித்தான் மாற மாட்டாங்கன்னு சொல்ல வரீங்களா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காலம் மாறினாலும் காட்சிகள் சில மாறவே இல்லையே....

      நீக்கு
  3. அறிவியல்ல எவ்வளவு வளர்ந்தாலும் இந்த மந்திரம் மட்டும் அழியாதுனு சொல்ல வரீங்களோ ஜி...அதாவது பெண்கள்?

    ம்ம்ம்ம் அப்படினா கொஞ்சம் எதிர் அணியா நான் நிற்கவேண்டி வருமே ஜி!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் சமயத்துல மனுஷன் பூம்.. பூம்... மாடுதான் போலயே...

      நீக்கு
  4. பெண்கள் ஆண்களை முன்னேற்றி பெரிய பதவியில் அமரவைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர்! ஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இப்படியும் நினைக்கலாமோ...

      நீக்கு
  5. அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. அவங்க ஹஸ்பண்ட் நல்லா இருக்கணும்னு மனைவி நினைக்கறதுல என்ன தவறு இருக்கு? நீங்க ஜோசபின் அவர்களது தளத்தைப் படிச்சிருப்பீங்க. அவர் கணவர், தன் உறவினர்களுக்கு உதவி உதவி, கடைசியில் அவர் மரணமடைந்துவிட்டார், மனைவி கஷ்டத்தைப் பெற்றுவிடுகிறார்.

    கணவனின் அப்பா அம்மாவை கட் பண்ணிவிடாதவரை மனைவி செய்வதில் அர்த்தம் உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.

    ஆனா இந்த மாதிரி விஷயங்களை தலையணை மந்திரமாகச் சொல்லுவதுதான் நெருடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆண்டாண்டு காலமாக கணவரை கவிழ்த்துமிடம் இதுதானே...

      நீக்கு
  7. ///விருடென எந்திரிச்சு கீழே வந்து வேறு அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டாள் மணீஷா.///

    என்ன இது நல்லாத்தானே போய்க்கொண்டிருந்துது திடீரென மர்மக்கதை ரேஞ்க்கு மாத்தி நம்மை டென்ஷனாக்குறார் யுவ ஆனர்::::... கதவைப் பூட்டிட்டு ஏதும் விபரீத முடிவெடுத்திட்டால் பின்பு கதை படிச்ச குற்றத்துக்காக மீயும் எல்லோ கம்பி எண்ண வேண்டி வரப்போகுதூஊஊஊ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவு "மஞ்சத்து மர்திரம்" அதன் கருவே இதுவும் ஆகவே பயம் வேண்டாம்.

      நீக்கு
  8. //யேன் நீங்க வாங்குன கம்பெனிக்கு, நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதுல என்ன பிரச்சனை ?///

    அதானே கிளவி ஹையோ கேள்வி கரீட்டுத்தானே? என்னா தப்புங்கிறேன்ன்ன்ன்ன்?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையேதானே இளமாறனிடம் நளாயினியும் கேட்டாள் ?

      நீக்கு
  9. வளைகாப்பு நேரத்துல வந்ததா வில்லங்கம்!?...

    விவேக் சுக்லா வாழ்க்கையில
    விதி இப்படியா வெளையாடணும்!?...

    காலக் கொடுமையடா காத்தமுத்து - காலக் கொடுமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி சந்தர்ப்பம் பார்த்துதானே கணவனை பணிய வைக்கமுடியும்.

      நீக்கு
  10. இதன் அடுத்த கோணம் எப்போது வரும். சுவாரசியம் சகோ. மன்னர் பாணியில் இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் அடுத்த பதிவு விரைவில்... நன்றி சகோ.

      நீக்கு
  11. ஆஹா !!இந்த கதைக்கு முடிவேயில்லை போலிருக்கே :) மார்ஸுக்கு போனாலும் இந்த வாரிசு தலைமை முக்கியத்துவப்பிரச்சினை ஓயாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை மாமாங்கம் ஆனாலும் இது தீர்வுக்கு வராது.

      நீக்கு
  12. ஆனால் சில நேரங்களில் வெள்ளந்தி அப்பாவிகளான கணவர்கள் அமையும்போது அந்த அப்பாவிகள் அடப்பாவிகளால் ஏமாற்றப்படும்போது பெண்கள் அப்பர் ஹேண்ட் எடுக்கிறார்கள் அது தவறில்லையோன்னும் தோணுது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவர் அப்பாவியாக இருக்கும் பொழுது மனைவியின் கை ஓங்கி இருப்பதே நல்லது.

      நீக்கு
    2. இப்போ கில்லர்ஜிக்கு என்னதான் பிரச்சனை?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    மன்னர் காலம் மாதிரியே இந்தக்காலமும் அதேபாணி. மாட மாளிகையும் கூடகோபுரங்களுக்கு பதிலாக அரண்மணை மாதிரி ப்ளாட்டும், சொகுசு காரும், ஏ.சியுமாக...காலங்கள் மாறினாலும் ஆசைகளுக்கு முடிவேது? இ்ன்னமும் மற்றொரு கோணத்தில் ஆசைகளின் ஆர்பாட்டமா? காத்திருக்கிறேன் தொடரும் பதிவுக்காக.. சுவாரஸ்யமான உரையாடல்களுடன் தலையணை மந்திரங்கள் நகர்கிறது. தொடரவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் எல்லாம் மாறிவிட்டது இந்த ஆசையின் கோணம் மட்டும் மாறவில்லை.

      நீக்கு
  14. கிட்டத்தட்ட ஒரே நடையில் செல்வதுபோல இருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களுக்கு எல்லாமே கதை ஒன்றுதான் கோணங்கள் வேறு வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை மனைவிகள் இப்படித்தான் என சொல்ல வருகிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  16. கதை ஒன்று காட்சிகள் வேறு.
    காலங்கள் சென்றாலும் சொத்து பிரச்சனைகள் மாறாது
    போலவே!










    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதுதானே நடைமுறை உண்மை வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. அடுத்தபகுதியையும் ரசிக்க ஆவலாக உள்ளேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி இதன் முந்தைய பதிவு ''மஞ்சத்து மந்திரம்'' படித்தீர்களா ?

      நீக்கு
  18. அடுத்து என்ன .காத்திருப்போம்

    பதிலளிநீக்கு
  19. மகா பிரபு...இங்கேயுமா...?? ஆ...இது அம்பானி.டாட்டா குடும்ப மாதிரி முதலாளிமார்களின் ரகசியமான பிரச்சினையாக இருப்பதால்..இது பற்றி நான் எதாவது கருத்து சொல்ல..ஆட்சியாளர்களின் படை எண்ணை குண்டர் சட்டத்தில் அடைக்கும் பயமிருப்பதால்... நான..வாயை திறக்கல சாமியோவ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மோதியோட ஆட்களாக இருந்தாலும், நாமும் மோதிப்பார்க்கலாம் பயப்படவேண்டாம்.

      நீக்கு
  20. மஞ்சத்து மந்திரம்,தலையணை மந்திரம், இனி அடுத்து என்ன மந்திரம் வரப்போகுதோ.....
    இந்தகாலத்துக்கு ஏற்றவாறு எழுதுவீங்க போல....வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி
      இன்று நள்ளிரவு 12:00 மணிக்கு அடுத்த மந்திரம் வருகிறது.

      நீக்கு
  21. அசோக் வர்மா-வின் மகன் விவேக் வர்மா-வாகத்தான் இருக்க முடியும். விவேக் சுக்லா ஆக முடியாது.

    ஒரு வீடு, பல வாசல் போல இருக்கே கதை.

    அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். தலைப்பு என்ன படுக்கையறை மந்திரமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்றிரவே பதிவு வரும் தலைப்பை அறிந்து கொள்க!

      நீக்கு
  22. காட்சிகள் வேறு. தலையணை மந்திரம் ஒன்று தான். காட்சிகள் தொடரும்! காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  23. வளைகாப்பு நடந்ததா இல்லையா என வந்து பார்க்கிறேன். கணவனின் முன்னேற்றம் என்னும் வகையில் சரியான நினைப்புத் தான்! ஆனால் குடும்பத்தில் பிரச்னை வரும் எனில் சரியில்லை. பேசித் தீர்த்துக்கச் சொல்லுங்க! :)

    ஆனால் இதைத் தலையணை மந்திரம்னு ஏன் சொல்லணும்! பகலில் கூட இதைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தாங்கள் முடிவில் சொன்னதை ஏற்கிறேன்

      ஆனால் இதன் தொகுப்பான மற்ற மந்திரங்களை படித்தால் விடைகள் தெளிவுக்கு வரும்.

      நீக்கு