நட்பூக்களே.... மேலேயுள்ள புகைப்படத்தையும்,
அந்த வார்த்தைகளையும் படித்தீர்களா ?
இதனால்
நமக்கு பெருமையா ? சிறுமையா ? நாட்டில் அறியாமைவாதிகள்
நிறைந்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றதா ? இந்த நிலையை உருவாக்கிய அந்த ஜடங்கள் நம்
நாட்டிற்கு தேவைதானா ? அவன் எமது குடும்ப
அங்கத்தினராயினும் அவசியமில்லை என்பதே எமது கருத்து இந்த ராணுவ வீரர்களுக்கு
போகின்றதே சம்பளம் யாருடைய பணம் எங்கிருந்து போகிறது இவரென்ன நாட்டுக்கு உழைத்து
ஓய்ந்த தியாகியா ?
தனது
குடும்பத்துக்காக எல்லோரையும் போல விளையாண்டு உழைத்து அதன் மூலம் விளம்பரங்களில்
நடித்து கோடி கோடியாக சம்பாரித்து இருக்கிறார். யாரோ ஒரு அத்தக் கூலிக்காரன்
மலைகளில் பைக் ஓட்ட, அதை பக்கத்தில் காண்பிக்கும்போது இவர்தான் ஓட்டியதுபோல்
காண்பிக்க இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்களோ ? என்று நான் கேட்கமாட்டேன் இன்னும் எத்தனை
காலம்தான் ஏமாறுவது ? என்பதே கேள்வி. நச்சுத்தன்மை
நிறைந்தது என்று உலகறியப்பட்ட குளிர்பானத்தை குடிப்பதுபோல் நடித்து காண்பித்து
அதன் மூலம் கோடிகள் சம்பாரித்தவர் இது தியாகச் செயலா ? இவர் மட்டுமல்ல நிறைய பேர் உண்டு.
இப்படிப் பட்டவர்களுக்கு இந்த சமூகம் உயிரைக்
கொடுக்க நினைப்பது ஏன் ? மதுரையின் ஒரு தெருவுக்கு
இவரது பெயர் இவன் பிறந்த மாநிலத்தில்கூட இப்படி பெயர் வைக்கவில்லையே... தமிழ்நாட்டான்
மட்டும்தான் ஏமாளியோ இந்த விட்டில் பூச்சிகள் நாட்டிற்கு அவசியமே இல்லை இதே
வேலையின் பயிற்சியை நமக்கும் கொடுத்து அதில் நாம் முயற்சி எடுத்தால் நம்மாலும்
விளையாட முடியும் இதில் உயிரைக் கொடுக்க கூடிய கஷ்டங்கள் இல்லை ஆனால் மேலே
நிற்கிறார்களே ராணுவ வீரர்கள் அவர்களைப்போல் எல்லோராலும் வரமுடியாது எந்த நொடியும்
நாட்டுக்காக உயிர் துறக்க தயாராக இருக்கும் மாமனிதர்கள் இவர்கள் இத்தனை செய்தும்
நிறைய சம்பளம் பெற முடியவில்லையே ஏன் ? நல்ல உணவுகூட கிடைக்கவில்லையே
ஏன் ? உண்மையில் இவர்கள்தான் நிஜ நாயகர்கள். எந்தவொரு
அரசியல் தாலைவனோ, திரைப்பட நடிகனோ, கிரிக்கெட் வீரனோ, இதற்கு தயாராக முடியாது
ஆனால் யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த நிஜத்தை மறந்து நிழலுக்கு மரியாதை
கொடுக்கின்றானே தமிழக பாமரன். விளையாட்டில் வெற்றி தோல்வி இயல்பு வெற்றி பெற்றால்
கோயில் கட்டுவதும், தோல்வியடைந்தால் கொடும்பாவி எரிப்பதும் தமிழகத்தில் மட்டுமே
நடக்கிறது அதை பொழுது போக்காக நினைக்க மறுக்கிறான் மனிதன் ஏன் ? இப்படிப் போன்றவர்களால் நாடு முன்னேறுமா ? இல்லை பின்னேருமா ? இதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும்
ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள் காரணம் இவர்களைப் போன்ற
அறியாமைவாதிகளால்தான் அவர்களின் நிரந்தர உயர்வுக்கு பயன் அளிக்கும்.
மாறவேண்டும் நாம் மாறவேண்டும் நமக்காக அல்ல ! நாளைய நமது சந்ததிகளுக்காகவாவது நாம்
மாறவேண்டும்.
கொசு’’று.
மோடியாவது வந்து நமது வாழ்வாதாரத்தை
மாற்றுவார் என்றுதான் எதிர்பார்த்து மக்கள் பெரும்பான்மையாக வாக்கரிசி SORRY வாக்கு அளித்தார்கள் என்னாச்சு ? அவர் பதவி ஏற்று இந்தியாவில் வாழ்ந்ததைவிட வெளிநாடுகளில்தான் அதிகமாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றார் ஒருவேளை இதிலும் சாதனை செய்யத்திட்டமோ ? மானத்தை மறைக்க வழியில்லாத ஏழை மக்கள் வழி
நெடுகிலும் வாழ்ந்து கொண்டிருக்க... இவர் போடும் ஒரு கோட்-ஸூட் விலை பதினான்கு லட்சங்கள்
அவரும் சராசரி மோசடிப் பேர்வழி என்பதை நிரூபித்துக் கொன்று இருக்கின்றார்.
இனியும் காலம் மாறும் என்று நம்பிக்கொண்டு இருப்பது அறிவாற்றலா ? அறியாமையா ? பொறுமை கடலினும் பெரிது என்று சொன்னவர்களை
கடலில் தூக்கிப் போடவேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடுத்து
எதிரியை சிந்திக்க வைக்க நாம் காந்திஜி அல்ல, ஒரு அறை வாங்கினால் இரு கன்னத்திலும்
அறை விடுவோம் இனியெனும் நேதாஜியைப் போல் கலகம் பிறந்தாலே நியாயம் பிறக்கும்
இல்லையேல் நீதி இறக்கும். வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்வோரே... தன்
வாழ்நாளில் நீ ஒருமுறைகூட கடமை மீறியது இல்லையோ ? மக்களின் பிரதிநிதிகளிடம் நமது உரிமையை
கேட்பது கூடத்தான் கடமை எங்கே ஒரு எம்மெல்யே வீட்டு வாசலின் கேட்டைக் கடந்து உள்ளே
போய் விடு பார்ப்போம் ? திரைப்பட நடிகனும்,
அரசியல் கோமாளிகளும், கிரிக்கெட்காரர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற
நாட்டைக்காக்கும் இராணுவவீரனுக்கு சிறிய சம்பளம் இந்த அவலநிலை மாறவேண்டும்.
மாறவேண்டும் நாம் மாறவேண்டும் நமக்காக அல்ல ! நாளைய நமது சந்ததிகளுக்காகவாவது நாம்
மாறவேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னரே அதில் நானும் ஒருவனே.
ஸ்வீட் எடு கொண்டாடு
காணொளி
அனுப்பி வைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி
அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குகிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது சரி ஆனால் யாரு ஆட்சி செய்தாலும்அரசு வரிப்பணத்தில் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பது மிக தவறு.
வருக தமிழரே உண்மையான வார்த்தை காணொளியில் சேப்பாக்கத்தின் வாடகை எவ்வளவு என்பதை கேட்டீர்களா ?
நீக்குசே..சே... ட்றுத் முந்திட்டார்ர்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாளைக்கு பிரித்தானியாவிலயும் தேம்ஸ் கரை வீதிக்கு அடிரா..சே..சே அதிரா வீதி எனப் பெயர் வைக்க ஆலோசனை நடக்குதாம்:)).. எனக்குத் தற்பெருமை பிடிக்காது பாருங்கோ:).
உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குபிரித்தானியாவுல இதையும் செய்கிறவர்கள் உண்டா ?
''ஆச்சர்யந்தேங்''
கொஞ்சம் பிசியா இருந்ததில் அன்னிக்கு தோனி தெரு பற்றி சொல்ல மறந்துட்டேன் .
பதிலளிநீக்குஇந்த லிங்கில் பாருங்க
https://timesofindia.indiatimes.com/city/madurai/Passports-with-strong-anti-counterfeiting-features-launched/articleshow/20008194.cms
அந்த தெருவில் 10 வீடுகள் தான் இருந்திருக்கு அதில் tony என்ற பைரவர் ஒருவர் வீட்டில் வளந்திருக்கு அந்தஏரியாகாரங்க டோனி தெருன்னு சொல்வாங்களாம் .அதை இந்த கார்பொரேஷன் பணியாளர்கள் எழுத்து மாத்தி தோனி ஆக்கிட்டாங்க .
நல்லா இருக்கே இந்தக்கூத்து இதோ இணைப்புக்கு செல்கிறேன்.
நீக்குமதுரையில் பேரில்லாத தெருவுக்கு வீட்டுசெல்லத்தின் பேரை வைச்சாங்க அதை விளங்கா மண்டை கார்பரேஷன்காரன் dhoni ஆக்கிட்டாங்க .
பதிலளிநீக்குஆனா ஆனா நம்ம சென்னையில் SP அவென்யூவில ஒரு DHONI தெரு இருக்காம்
அந்த தெருவுக்கு போக வேண்டிய துர்பாக்கியம் எனக்கு ஏற்பட்டு போர்டுடன் செல்ஃபி எடுத்துள்ளேள்.
நீக்குசென்னையும் இதில் உண்டா ?
Pennycuick முல்லை பெரியாரை கட்டினார் என்பத மாத்தி போட்டு ஒரு காலத்தில் லிங்கா படத்தில் நடிச்ச சித்தப்பாதான் கட்டினார்னு மாத்தினாலும் மாத்துவாங்க :(
பதிலளிநீக்குஉங்க சித்தப்பாவை தமிழ்நாட்டான் கடவுளாக்கிடுவான் போலயே....
நீக்குநான் கிரிக்கெட்டலாம் பார்க்கறதில்ல சினிமாவும் அப்படிதான் யாராச்சும் சொன்னா ரிவ்யூ படிச்சி அப்பறம் பார்ப்பேன் அதுவும் கணினியில் தான் .என்னை பொறுத்தவரை நடிகர்களும் விளையாட்டு வீர்ரகளும் இலவசமா செய்யலை பணம் வாங்கறாங்க நடிக்கிறாங்க விளையாடறாங்க .நம்ம மக்கள்தான் புரியாத முட்டாள்கள் அரசியல்வாதிகிட்டயும் ஏமாறுறாங்க எல்லா மதத்து சாமியார்கிட்டயும் ஏமாறுறாங்க இவங்க ஏமாறாத இடம்னு ஒண்ணு இருக்கா ?
பதிலளிநீக்குஉண்மை எதில்தான் மக்கள் ஏமாறவில்லை நல்ல கேள்வி.
நீக்குமுந்தின கமெண்டில் லிங்க் கொடுத்தேனா தெரில .https://timesofindia.indiatimes.com/city/madurai/Tony-a-pet-loses-street-named-after-him-to-Dhoni/articleshow/20008202.cms
பதிலளிநீக்குஏற்கனவே கொடுத்திருந்தா இதை டிலீட் செஞ்சிடுங்க
நன்றி
நீக்குஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குசித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள்.. அவர்கள் சொந்தச் செலவில் தமது பாதுகாப்பைப் பார்த்துக் கொள்ளட்டுமே...
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குஇதை மக்கள் கேட்க நினைப்பதில்லையே ஸ்ரீராம்ஜி
உங்களுடைய ஆதங்கமே எங்கள் ஆதங்கம்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுடைய மன வேதனைகளை கொட்டித் தீர்த்துள்ளீர்கள். புரிகிறது. அனைவரும் மாற வேண்டும். இனி நம் சந்ததிகள் வாழ்வாவது சிறக்கட்டும்.
இனிய சித்தரைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான அலசலுக்கு நன்றி இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குநினைத்தேன். உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கு, பாதுகாப்பு வேணும்னா, யாரை அனுப்புவார்கள் என்று. இருந்தாலும் தோனியை தனி மனுஷனாகப் பார்க்கக்கூடாது. இந்திய நட்சத்திர வீரர், பல கோடி மக்களின் ஆதர்ச புருஷர் என்றுதான் பார்க்கணும்
பதிலளிநீக்குதமிழ் நாட்டு தெருவுக்கு பெயர் வைத்தானே அவனது மாநிலத்தில் வைப்பார்களா ? மாட்டார்கள் காரணம் இவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை இவன்.
நீக்குமோடி பற்றிய கருத்தையும் ஏற்கலை. புத்த மத்த் தலைவரை வணங்கியது சரி. எல்லா மத்த் தலைவர்களையும் மதிக்கணும்.
பதிலளிநீக்குவருக நண்பரே இதையாவது ஏற்றுக்கொள்ளலாம் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் நிர்வாணச் சாமியாரின் காலடியில் அமர்ந்து இருந்தாரே அது இதைவிட கேவலம்.
நீக்குஅருமை... மாற்றம் அனைத்தும் நம் கையில் (மனதில்)
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குதமிழ்நாடு நல்ல தமிழ்நாடு. உங்கள் ஆதங்கம் புரிகின்றது.
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குவந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்றும் சொல்வார்கள்....
பதிலளிநீக்குமாற்றங்கள் - பூனைக்கு யார் மணி கட்டுவது....
புத்தாண்டு நல்வாழ்த்துகள் கில்லர்ஜி!
வாங்க ஜி யாராவது கட்டிவிட முயலவேண்டும் நமது சந்ததிகளுக்காக...
நீக்குகில்லர்ஜி உங்கள் ஆதங்கம் அனைத்தும் தமிழ்மக்களைப் பற்றியது என்று நன்றாகவே தெரிகிறது. கேரளத்தில் மக்கள் இத்தனை ஏமாறுவது இல்லை. உங்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
பதிலளிநீக்குஇது போன்றவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவதை ஏற்க முடியவில்லை. அவர்கள் சம்பாதிப்பதோ கோடிக் கணக்கில். தங்கள் பாதுகாப்பைத் தாங்களே பார்த்துக் கொள்ள முடியும். அதற்குத் தனியார்ப்படையும் உள்ளது. அது சரி நம் மக்கள் எங்குதான் ஏமாறவில்லை என்று சொல்லுங்கள்? படித்தவனும் சரி படிக்காதவனும் சரி எல்லாம் ஒன்றுதான் இல்லை என்றால் இத்தனை கார்ப்பரேட் சாமியார்கள் முளைத்திருப்பார்களா என்ன?
இருவரின் கருத்தும்
எவ்வளவோ அரசியல் பட்டிமன்றங்கள் நடக்கின்றன, மக்கள் ரசித்து கேட்டு கை தட்டுகின்றனர்.
நீக்குதேர்தல் வரும்போது புத்தி பழைய நிலைக்கு போய் விடுகிறதே...
மலையாளிகளிடம் திரைப்பட நடிகனின் பருப்பு வேகாது.
உங்கள் கருத்தைக் கிரிக்கெட் வீரர்கள் பற்றியதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் பாதுகாப்பு விஷயத்தில் அவங்க கேட்டிருப்பாங்க. அரசு கொடுத்திருக்கும்! அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க கிரிக்கெட் விளையாடுபவன் தேசத்தியாகியா இவர்களை பாதுகாக்க அரசு பணம் மக்கள் பணம்தானே ?
நீக்குஅவர்களே தனியாக பூனைப்படை வைத்துக்கொள்ளட்டுமே...
அறிஞர் பெர்னாட்ஷா சொன்னது இன்றைய தமிழனுக்கு சரியாக பொருந்துகிறது.
ஜெயலலிதா தனி மனுஷி. வணங்குவது தப்பு; ஆனால் புத்தமதத் துறவியை மோதியும் ஜைனமதத் துறவியை அப்துல் கலாமும் வணங்கியதிலும் காலடியில் அமர்ந்ததும் தவறே இல்லை. நிர்வாணச் சாமியார் என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதற்காக அவங்க செய்யும் தியாகங்களைப் பற்றிப் படித்துப் பாருங்கள்.
பதிலளிநீக்குமதத்துறவியை வணங்குவதை ஏற்றுக்கொள்ளளலாம் அதேநேரம் இந்தியாவின் முதல்குடிமகன் என்ற பதவி சாதாரணமானதா ?
நீக்குஇப்படிப் பார்க்கும்போது அந்த நிர்வாணச் சாமியாரின் பதவியே உயர்வாக தெரிகிறது.
இவர் என்ன தியாகம் செய்து விட்டார் ?
என்னைப் பொருத்தவரை உணவருந்தி மலம் கழித்து ஒருநாள் மரணிப்பவன் சாதாரண மனிதனே...
இன்று 90% ஃப்ராடு சாமியார்களே... உண்மையான துறவிகள் மறைந்து 300 வருடங்கள் கடந்து விட்டன...
நானாவது எனது குடும்பத்துக்காக வாழ்ந்து இருக்கிறேன், இப்படி ஒவ்வொரு மனிதனும் வாழ்கிறான்.
சாமியார்கள் வேலை செய்யாத சோம்பேறிகள் தனது உணவுக்கே உழைக்காதவர்கள்.
//இவர் என்ன தியாகம் செய்து விட்டார் ?
நீக்குஎன்னைப் பொருத்தவரை உணவருந்தி மலம் கழித்து ஒருநாள் மரணிப்பவன் சாதாரண மனிதனே...// கடவுளே, கடவுளே! ஜைனத் துறவிகள் பற்றித் தெரியலை உங்களுக்கு! ஜைன மதத் துறவியாக ஆக மிகுந்த மனோதிடம் வேண்டும்! இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கிறேன். எல்லோருமே வேடதாரிகளும் அல்ல! உண்மைத் துறவிகள் இப்போதும், எப்போதும் இருக்கின்றனர்.
வருக உண்மையில் எனக்கு தெரியாதுதான்.
நீக்குஇருப்பினும் மனிதர்களாக பிறந்த நாம் மரணம்வரை யாருக்காகவாவது பயனாக வாழவேண்டும் என்பதே எனது எண்ணம்.
அரபு தேசத்தில் என்னைப்போல் குடும்ப நலனுக்காகவே உழைத்து வாழ்ந்து வரும் சம்சாரியான பிரமச்சாரிகள் ஏராளம்.
இவர்கள் பொதுநலவாதிகள்.
துறவியாக மனோதிடம் வேண்டும் உண்மையே... முடிவில் பிரதிபலன் இறைவனிடம் பலன் பெறத்தானே ?
இவர்கள் சுயநலவாதிகள் (ஒரு வகையில்)
ஆத்தாடி பயமாவுல இருக்குது... உங்களுக்காவது மத்திய அரசு ஆதரவு இருக்கு. எனக்கு ? எந்த வகையில் பார்த்தாலும் நான் சுயேட்சை.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமாற்றங்கள் வரும்.
காணொளி அருமை.
வருக சகோ காணொளியை கண்டமைக்கு நன்றி
நீக்குகிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு தேவையா? சித்திரைத் திருநாளில் தாங்கள் நிகழ்த்திய பட்டிமன்றம் என்று தோன்றுகிறது. நாட்டில் சிறுமிகளுக்குக் கூடப் பாதுகாப்பில்லை. ஆனால்...
பதிலளிநீக்குவருக நண்பரே சுதந்திர நாடு என்று வெட்டியாக பீற்றிக்கொள்கிறோம்.
நீக்குபெண் குழந்தைகள் தைரியமாக வெளியில் செல்ல முடியவில்லையே...
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்குதங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே
பதிலளிநீக்குகாலம் மாறும்
காலமாற்றம் உண்டானால் மகிழ்ச்சியே நண்பரே.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குகாலப் போக்குல நம்ம ஆளுங்க தோணி தெருன்னு எழுதி தமிழாக்கிடுவங்க கவலைப் படாதீங்க .
பதிலளிநீக்குவருக நண்பரே நான் இதற்கும் கவலைப்படவா ?
நீக்குதங்களின் ஆதங்கத்திற்கு கால்ம் தானா பதில் சொல்லவேண்டும். நான் அனுப்பிய காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்கு