பலரும்
நான் சைவம் அசைவம் சாப்பிட மாட்டேன் என்பதை பெருமைப்பட பேசுவதோடு அசைவம்
சாப்பிடுபவர்களை ஏதோ இரக்கமற்றவன் என்பது போல் நினைக்கின்றார்கள் இறைவன் படைப்பில்
ஒன்றை ஒன்று உண்டு வாழவேண்டும் என்பதே நியதி யார் ? உயிரினங்களை உண்ணவில்லை
சைவம் சாப்பிடுபவர்கள் செடி கொடிகளை உண்ணவில்லையா ? அதில் உயிர் இருப்பதால்தானே
வளர்கிறது உதாரணம் கடலில் உள்ள மீன், நண்டு மற்றும் மற்ற உயிரினங்களை நாம்
சாப்பிடக்கூடாது என்று வைத்துக் கொள்வோம் என்னாகும் ? கடலில் உயிரினங்கள் பெருகி
பெருகி இடப்பற்றாக்குறை காரணமாக கடலின் நீர் எங்கு வரும் வெளியேதானே அதாவது நாம்
வாழும் பூமிக்கு வரும் இல்லையா ? பிறகு நாம் எங்கு போவது கடலுக்கா ? இறைவன் இப்படியெல்லாம்
வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்றே ஏதோ ஒரு மனிதனை அதைப்பிடித்து சுட்டுத்திண்ணும்
யோசனையை கொடுத்து இருக்கிறான் அதைப் படித்துக் கொண்ட நாமும் அவ்வழியே வாழ்ந்து
கொண்டு போகிறோம் அதைப்போல ஆடு மாடுகளை மனிதன் உண்ணவில்லை என்றால் ? பூமியில் மனிதர்கள் நடக்க
இடம் கிடைக்காது அதைவிட முக்கியம் அவைகளுக்கு உணவு ? ? ? மனிதன் தனக்கு நாளை உணவு
வேண்டுமே என்ற சிந்தையில்லாமல் விவசாய நிலங்களை விற்று மாளிகைகள் கட்டிக்கொண்டு
இருக்கும்போது கால்நடைகளைப்பற்றி நினைப்பானா ? சைனா நாட்டுக்காரன்
எல்லாவற்றையும் சாப்பிடுகிறான் என்று கேவலமாக பேசுகிறோம் இதன் பின்னணி என்ன ?
உதாரணம்
எங்களது வீட்டில் இதுவரை மாட்டுக்கறி சமைத்ததில்லை அதன் காரணமாக நானும் உண்ணவில்லை
ஒருவேளை எனது வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அதை சமைத்துக் கொடுத்து பழக்கியிருந்தால்
நானும் அதை உண்பதை பெரிதாக நினைக்காமல் உண்டு கொண்டுதான் இருப்பேன் இதுதான் சூழல்
சைனாக்காரன் அனைத்தையும் தின்று பழக்கி கொடுத்தான் அவனது சந்ததியினரும் அதைத்
தொடர்கிறார்கள் மேலும் ஒரு உதாரணம் நமது குழந்தையை கைக்குழந்தையாக இருக்கும்போது
ஏதோவொரு சைனாக்காரனுக்கு தாரை வார்த்து கொடுத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்
அந்தக்குழந்தை அங்கு எப்படி வாழும் தேவகோட்டை குழந்தைபோல் வாழுமா ? இதுதான் சூழல் //பாம்பு
திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டு எனக்கு வேணும்// இந்தப்
பழமொழியை சொல்லித் தந்தது யாரு ?
தமிழனா ?
சைனாக்காரனா ?
இந்தியாவில்
இன்றும்கூட மனிதனின் சுட்ட சடலங்களை திங்கின்றானே மனிதன் இது அருவருப்பு இல்லையா ? சைனாக்காரன் கரப்பான் பூச்சியை தின்பதை
தவறாக சொல்கிறோம் நாம் கணவாய் சாப்பிடுவதில்லையா ? நண்டு சாப்பிடுவதில்லையா ? இது அருவருப்பு இல்லையா ? நமக்கு சாதகமானால் மட்டும் சரியானதா ? அவன் புழுவைத் தின்பதை சொல்கிறோம் நாம்
திங்கவில்லையா ? ஆம் மீனை பிடிப்பதற்கு புழுவை உணவாக கொடுத்து
மீனைப்பிடித்து அதனோடு புழுவையும் சேர்த்துதானே தின்கிறோம் உணவு வகைகள் மட்டுமல்ல
வாழ்க்கை முறையும் இடத்தை பொருத்தே அமைகிறது. அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்த சிலர்
மிகவும் புத்திசாலிகளாகத்தான் இருந்திருக்கின்றார்கள் அதேநேரம் அசைவம்
சாப்பிட்டவர்கள் கத்தியையும், அருவாளையும் எடுத்துக்கொண்டு குத்திக்கொண்டு
வாழந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது
உண்மைதானே...
நண்டு எனக்கு மிகவும்
பிடித்த உணவு சிறுவயதில் பள்ளி விடுமுறையில் பாம்பன் சின்னம்மா வீட்டுக்கு போய்
விடுவேன் எனது சின்னம்மா எனக்காக பெரிய தூக்குச்சட்டி
நிறைய நண்டு பொரித்து தருவார்கள் அதை எடுத்துக் கொண்டு பாம்பன் ரயில் பாலத்துக்கு போவேன் அதன் மத்திய
பகுதிக்கு வந்து கூடுபோல் இருக்கும் தலைக்கு மேலே ரயில் போய்க் கொண்டு இருக்கும் அதில்
உட்கார்ந்து தின்பேன். எவ்வளவு நேரம் தெரியுமா ? குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் அப்படியானால் எவ்வளவு
நண்டு நீங்களே கணித்துக் கொள்ளுங்கள் அது ஒரு நிலாக்காலம் தோணியில் போயி பிடித்து
வருபவர்களிடம்தான் சின்னம்மா வாங்குவார்கள் ஐஸ் அந்த வேளையே கிடையாது இவ்வளவு
நண்டுக்கு பணம் எவ்வளவு கொடுப்பார்கள் தெரியுமா ? கூடுதல் போனால் ஐந்து ரூபாய் இன்று அந்த
நண்டுகளின் விலை ? நினைத்துப் பார்த்தால்
தண்டுவடம் சிலிர்க்கிறது.
சிவாதாமஸ்அலி-
இப்ப
என்னதான்யா சொல்றே...
இன்னைக்கு வீட்ல பொண்டாட்டி நாட்டுக் கோழியடிச்சு குழம்பு வச்சு இருக்கா திங்கவா வேண்டாமா ?
Chivas Regal சிவசம்போ-
அட ஏய்யா நீ வேறே... கொன்றால் பாவம் தின்றால் போச்சு இஷ்டம் இல்லைனா கஷ்டப்படாதே
தூக்குச் சட்டியில அள்ளிப் போட்டு நம்மள்ட்ட கொண்டு வா.
காணொளி
மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:))..
பதிலளிநீக்குஅடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்...
அதில்தானே “கொன்றால் பாவம் தின்றால் போச்சு”.. வருது:))
அதிரா.. அந்த வரிகள் இடம்பெற்ற பாடல் "தெய்வம் தந்த வீடு.. வீதியிருக்கு" அதே படம்தான். ஆனால் வேறு பாடல்!
நீக்குஅதிரா பதில் கிடைத்து விட்டது.
நீக்குஓ ஸ்ரீராம் கரீட்டு:) முன் என் பக்கத்தில் போட்டு வைத்திருந்தேன் கொஞ்சக்காலம் அப்பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சது... ஜேசுதாஸ் அங்கிள் குரலில்தானே:)..
நீக்குயேசுதாஸும் அங்கிளா ?
நீக்குஅருமையாகச் சொல்லிட்டீங்க. எனக்கும் அடுத்தவர் உண்பதைப் பார்த்து கேலி செய்வது பிடிக்காது... உங்கள் கருத்துப் போலதான் நானும் சொல்லி சண்டைப்பிடிப்பேன்.
பதிலளிநீக்குஅதாவது ஐயே பாம்பையும் மனிசன் உண்பானா என்பார்கள் சைனாக்காரரைப் பார்த்து.... நாம் சிக்கின் மட்டினை மட்டும் ஏதோ பெருமையான உணவாக உண்கிறோமே அப்படித்தானெ அவர்களுக்கும்... எல்லாம் பழக்கத்தில் வருவதே.
ஒருவர் உண்ணும் பழக்கம் என்பது மட்டுமில்லை, அவர்களது வாழ்க்கை முறையையே மற்றவர்கள் விமர்சனம் செய்வது என்பது யாருக்குதான் பிடிக்கும்? அவரவர்கள் பழக்கவழக்கம் அவரவர்களுக்கு.
நீக்குஎனது கருத்தை ஏற்று கொண்டமைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி இன்னொன்றையும் சொல்ல நினைச்சு விட்டிட்டேன்:))... மீன் பிடிக்காட்டில் கடல் முட்டிடும் என என்னாஆஆஆஆஆ ஒரு அழகிய டத்துவம் சொல்லியிருக்கிறீங்க:))..
நீக்குஅப்போ ஆட்களைக் கொல்வதும் கரீட்டுத்தானே:)).. இல்லை எனில் பூமி முட்டி தவறிக் கீழே விழுந்திடப்போறோம்ம்:)).. நீதி நியாயம் என ஒன்று அனைத்துக்கும் பொதுவெல்லோ:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீக்கு இண்டைக்கு தேம்ஸ் கரையில மீட்டிங் இருக்கூஊஊஊஊஊஉ:)).
ஆட்களை எதற்கு கொல்லணும் ? அது உங்கள் அங்கிள் எமனோட டிபார்ட்மெண்ட் அவரு பார்த்துக் கொ'ல்'வார்.
நீக்குஅதுசரி... மேலே தலைப்பு.. “ஆசையே துன்பத்துக்குக் காரணம்”... கீழே கிலர்ஜி படம்:)) எங்கயோ இடிக்குதே:))..
பதிலளிநீக்குசிறீ சிவசம்போ அங்கிள்தேன் கரீட்டாப் பேசுறார்:))
வீடியோ .. ஓ மை கடவுளே.....:).
தத்துவம் சொன்னது யாரோ எவரோ...
நீக்குஉங்க அங்கிள் சரியாகத்தான் ஜொள்'ளுவார்.
உண்மைதான் .உணவு அவரவர் விருப்பம் .எனக்கு பிடிக்குது என்பதற்காக என்னை சுற்றி இருப்போரையும் எனக்கு பிடிச்சதை தான் செய்யணும் என்று சொல்வது தவறு .
பதிலளிநீக்குபிறரை இழிவாக பார்ப்பதும் தவறு ..
கில்லர்ஜி அந்த காணொளியை காட்டினேன் கணவருக்கு :) அலறிட்டார்
எனது கருத்தில் உடன்பட்டமைக்கு நன்றி.
நீக்குபோனவாரம் எங்கள் வீட்டில் பெரிய ஆணி கிண்டும்போது எடுத்தது.
ஒரு வாளி எடுத்து டேஸ்ட் பாருங்கோ...
பார்த்தீங்களோ என் செக்:) எவ்ளோ அயகாப் பேசியிருக்கிறா:) இப்போ அவோக்குத் தத்துவமா வருது:)) எல்லாம் அதிராவோட ரெயினிங்:))
நீக்கும்..ம்.. மழையா ?
நீக்குகாலையிலயே நல்லா கொயப்பி வுட்டுட்டீயே மருது!...
பதிலளிநீக்குஇப்போ -
தண்டு கறியப் பார்த்ததுமே
நண்டு வடம் ஜிவ்வுங்குதே!..
அடியே.. கண்ணம்மா.. மாமனுக்கு ஒருவேளையாச்சும் இந்த மாதிரி குளுகுளு..ந்னு குண்டு கறி சமைச்சு போட்டிருக்கியாடி?..
ஏ.. முண்டம்... நண்டு விக்கிற வெலைக்கு நமக்கு இதெல்லாம் கட்டுப்படியாவுமா!... மச்சான் அவுக போட்டுருக்கிற போட்டோவப் பார்த்துட்டு சும்மாக் கிடவே... தண்டம்!...
பார்த்தீயளா ஜாமீய்!... ஒரு குண்டுக் காலு.... அடச் சே... நண்டுக் காலு கேட்டதுக்கு என்னாமா அலப்பற... பண்றா!... இந்த பொம்பளைங்களே இப்பிடித்தான்...
ஏ.. வெளங்கா மட்டை... பொய்து விடிஞ்சிடுச்சே.. எந்திரிச்சு வேலைக்கு போனமா..ந்னு இல்லாம இன்னா சவுண்டு உட்டுக்கினு இருக்கே... சுடு தண்ணிய புடிச்சு ஊத்தணுமா?...
ஆகா.. இவுளுகள நம்ப முடியாது.. நான் ஓடிடுறேன்... ஜாமியோ...வ்!..
ஆஹா வாங்க ஜி பயணங்கள் எப்படி போகிறது ? வாழ்க நலம்.
நீக்குநண்டுக்கறியை கண்டதும் வார்த்தைகளே தந்தி அடிக்குதே ஜி
இரசித்தேன் கருத்துரையை...
துரை அண்ணனுக்கு என்ன ஆஅச்சு? நண்டுக்கறிபற்றி எல்லாம் பேசுறார்ர்.. ஊரால வந்திட்டாரோ?
நீக்குஆமா இப்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.
நீக்குஉணவுப் பழக்கம் அவரவர் சொந்த விருப்பம், வீட்டின் பழக்கத்தைப் பொறுத்தது. நமக்கு எது சரி என்று படுகிறதோ அது எல்லோருக்கும் சரியாக இருக்கணும்னு அவசியமில்லை. அதற்காக மற்றவர்களைக் குறைகூறவும் வேண்டாம். உங்கள் பாயின்ட் சரி கில்லர்ஜி.
பதிலளிநீக்குஎன்ன ஒண்ணு... சமூகப் பழக்கத்தை ஒருவன் மீறும்போது அது வித்தியாசமாத் தெரியும்.
வருக நண்பரே இதை அரசும் புரிந்து கொள்ளணும்.
நீக்குமனுசனை வெட்டிச் சாய்க்கிறான் அதை சாதாரணமாக நினைப்பவன் மாடு வெட்டுவதை பெரிதாக பேசுகிறான்.
தனியொருவனின் தவறு சமூகத்தை பாதிக்ககூடாது.
உணவு என்பது அவரவர் பழக்கம், அவரவர் விருப்பம் இதைக் கேலி செய்யவோ, குறை சொல்லவோ கூடாது.
பதிலளிநீக்குகீதா: எங்கள் இருவரின் கருத்துடன்....கில்லர்ஜி நான் பள்ளியில் படித்த போது எங்கள் வீட்ட்டில் ஏழ்மை காரணமாகப் பெரும்பாலும் ப்ழைய சாதம் மோர் விட்டுக் கலந்து தான் தருவார்கள், என் தோழிகள் அனைவரும் அசைவம் கொண்டுவருவார்கள்., நான் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடத் தயங்கியதில்லை. ஆனால் அவர்கள் என் உணவைக் கேலி செய்து மோர் ஸ்மெல் நாத்தம் அடிக்குது...இங்க எங்களோடு உக்காந்து சாப்பிடாத தள்ளி உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்லுவார்கள்.நானும் தனிமையில்தான் சாப்பிடுவேன். அப்புறம் போகப் போகச் சாப்பாடே கொண்டு சென்றது இல்லை. நான் அவர்கள் சாப்பாடைக் கேலி செய்ததில்லை. நீங்கள் பதிவில் சொல்லியிருப்பதற்கு எதிராகவும் ந்டக்கிறது என்பதைச் சொல்லத்தான் இது.
என் மகன் பள்ளி செல்லத் தொடங்கிய போது அவனுக்குச் சொன்னது இதுதான்...பள்ளியிலோ பொது இடங்களிலோ மதம் சாதி பற்றிப் பேசக் கூடாது. நாம் மனிதர்கள். அவ்வளவெ. அசைவம் உண்பவர்களுடன் உணவு சாப்பிட வேண்டியிருந்தால் முகம் சுளித்தல் கூடாது. உன் உடல் மொழியில் எதுவும் தெரியக் கூடாது. அது அவர்கள் சாப்பாடு. குறை கேலி சொல்லக் கூடாது அவர்களுடன் அமன்ர்து நீ உன் உணவைச் சாப்பிடணும். அரசியல் பேசக் கூடாது என்று சொன்னதை...அதுமட்டுமின்று ஒரு வேளை அசைவம் சைவம் இரண்டுமான ஹோட்டலில் நன்பர்களுடன் செல்லும் போது சாப்பிட நேர்ந்தால் அங்கு நாம் சாப்பிடுவது போல என்ன கிடைக்குமோ அதைச் சாப்பிடு....
அமைதியாக யாரையும் கேலி செய்யாமல் சைவ உணவைச் சாப்பிடுபவர்களையும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கேலி செய்வதுண்டு...கில்லர்ஜி...அதுவும் ந்டக்கிறது...என் மகனும், நானும் என் கணவர் உட்பட கேலிக்குள்ளாகியிருக்கிறோம்....ஆனால் நாங்கள் எங்கும் விவாதம் செய்ததில்லை. அமைதியாகக் கடந்து சென்று விடுவோம்...
வருக விரிவாக அலசி கருத்திட்டமைக்கு நன்றி.
நீக்குஉணவென்பது அவரவர் உரிமை இதில் பிறரின் தலையீடும், கேலியும் தவிர்க்கப்படல் வேண்டும்.
இதென்ன கீதாவுக்கு வந்த சோதனை:)).. பொதுவா அசைவம் சாப்பிடுவோரைத்தான் .. ஒரு மாதிரிப் பார்ப்பினம்:) இது மோருக்கு வந்திருக்கும் சோதனை ஹையொ ஹையோ.. இதுக்கு காரணம் உங்கள் ஸ்கூலில் சைவத்துக்கு சப்போர்ட் இல்லை:(. அனைவரும் அசைவம் உண்போர் போலும்.
நீக்குவீடியோவில்
பதிலளிநீக்குஅவ்வளவு பெரிய பிரியாணிச் சட்டியா? அதுவும் ஏணி போட்டு இறங்கும் அளவு? கால் வைத்து இறங்கி எடுத்துக் கொடுக்கிறார் போல... சூப்பர்.
வாங்க ஸ்ரீராம்ஜி எங்கள் வீட்டு காதுகுத்துக்கு எடுத்ததுதான்.
நீக்குமுதல் படத்தில் அந்தக் கடைசியில் அமர்ந்திருப்பவர் அமிதாப் போலெ இருக்கிறதே..
பதிலளிநீக்குஆம் அந்த உயர்ந்த கவரிமான் குடும்பத்து மனிதனே... சிவாஜி கணே... மன்னிக்கவும் பிரபு வீட்டில்தான்...
நீக்குசிவாஜி இருந்திருந்தால் இத்தனைபேர் அங்கு கொட்டமடிக்க முடியாது.
இதனால்தானே திருவையாறு தொகுதியில் திரு.ராஜசேகர் வெற்றி பெற்றார்.
உணவு அவரவர் விருப்பம். அதில் குறையொன்றும் சொல்வதற்கு இல்லை.
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குநல்ல பகிர்வு. உணவுப் பழக்கம் அவரவர் குடும்பத்தினரின் பழக்கங்களை ஒட்டியது. எத்தனையோ அசைவக் குடும்பத்தினரின் வீட்டில் முழுதும் சைவ உணவே சாப்பிட்டு வளரும் குழந்தைகள் உண்டு. சைவ உணவு உண்ணும் குடும்பத்துப் பிள்ளைகள் நாளடைவில் அசைவம் சாப்பிடுவதை வழக்கமாய்க் கொள்வதைப் பார்த்ததும் உண்டு. எல்லாவற்றிற்கும் அவரவர் மனமே காரணம்.
பதிலளிநீக்குஅன்று வெளியுலகம் போகாமலே வாழ்ந்த காலம்.
நீக்குஇன்று விண்வெளிக்கு சென்று வருடக்கணக்கில் தங்கி வருகின்றான் மனிதன்.
செடிகொடிகளுக்கு உயிர் இருந்தாலும் வெட்டும்போது அவற்றிற்கு வலி தெரியாது[உயிரற்ற செல்களால்[?] ஆனவை, நம் நகம், தலைமுடி போல] என்று சைவம் போற்றும் ஆன்மிகவாதிகள் பேசக் கேட்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குஇதை விஞ்ஞானம் உறுதிப்படுத்தியுள்ளதா என்பது தெரியவில்லை.
எது எப்படியிருப்பினும், அசைவம் தவிர்ப்பது சாத்தியமே இல்லை என்பது உண்மைதான்.
வருக நண்பரே நலமா ?
நீக்குஅசைவம் தவிர்த்து இருந்தால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வந்திருக்கலாம் என்பது எமது கருத்து நண்பரே.
வீடியோ பார்த்தோம் (கீதா: எனக்கு முதலில் பார்க்க முடியலை..பதிவு மட்டும் பார்த்துட்டு துளசியின் கமென்ட் (அவர் ராக்கோழி ஹிஹிஹிஹி) பார்த்து போட்டுட்டுப் போயிட்டேன்..)
பதிலளிநீக்குஎம்மாம் பெரிய அண்டா யம்மாடியோவ் கிணறு போல...ஏணி போட்டு எடுத்து எடுத்து விளம்புகிறாரே!!! ஆமாம் கேள்விப்பட்டதுண்டு..
ஆமாம் எங்கள் வீட்டு அண்டாதான் ஒரு வாளி எடுத்துக் கொள்ளவும்.
நீக்குஅசைவம் சாப்பிடும் குடும்பம் எங்கள் குடும்பமானாலும் 90 % சைவ உணவு உண்டுதான் வளர்ந்து வந்தோம். அதிலும் நான் 98 % சைவம்தான் சிறு வயதில் இருந்து,. இப்பொழுதும் எப்பவாது மட்டும் முட்டையும் பொறித்த மீனும் சாப்பிடுவேன் அவ்வளவுதான்
பதிலளிநீக்குவருக நண்பரே நான் மீனும், நண்டும், விறாலும் விரும்பி சாப்பிடுவேன்.
நீக்குஉங்கள் பதிவு எனது ரீடரில் வரவே இல்லை ட்விட்டரில் பார்த்து இங்கு வந்தேன்
பதிலளிநீக்குபதிவு வெளியாகும் முன்பு நான் திறந்து திருத்தம் செய்திருப்பேன் அது காரணமாக இருக்கலாம் நன்றி தமிழரே...
நீக்குபதிவு நன்றாகவுள்ளது.. தொடர எமது வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகுளம் குளமாக தவம் கிடந்த கொக்கு சிரிக்குது.
பதிலளிநீக்குஅது கொத்தப்போவதை மறந்து மீனும் சிரிக்குது....என்ற அரங்கேற்றம் பாடல் நினைவிற்கு வந்தது.
நல்ல பாடலை நினைவூட்டிய முனைவர் அவர்களுக்கு நன்றி
நீக்குஅன்னையை பழித்தாலும் அன்னத்தை பழிக்கக்கூடாது. அவரவர் இருப்பிடம், சூழல் சார்ந்துதான் உணவுப்பழக்கம்.
பதிலளிநீக்குவருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள்
நீக்குவீடியோவில் இருப்பது பிரியாணியா?! எனக்கு ஒரு பிளேட்
பதிலளிநீக்குபிளேட் என்ன ஒரு வாளி எடுத்து மாமாவுக்கு கொடுங்கோ...
நீக்குசைவமசைவம் என்னும்போது ஒரு சந்தேகம் எழுகிறதுச் நம்நாட்டில் பெரும்பாழ்லோர் சைவ உணவே எடுக்கின்றனர் சிலர் அசைவமும் சேர்க்கிறார்கள் அசைவம் மட்டும் உண்போர் இருக்கிறார்களா மனிதரின் உணவு உட்கொள்ளும் பகுதி சைவ உணவுக்க்காகவே ஏற்பட்டது போல் இருக்கிறது ஏற்றது சிலவிலங்குகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் வடகிழக்குப் பகுதியில் வாழும் மக்கள் மாடு எருமை போன்றவற்றை உண்கின்றனர் மாடு தின்கிறார்கள் என்பதால் இப்போதைய அரசில் உயிருக்கே ஆபத்து உண்டு
பதிலளிநீக்குஅசைவம் மட்டுமே உண்பவர்கள் இருக்கின்றார்களா ?
நீக்குஉண்டு ஐயா அரேபியர்கள் 95 சதவீதம் அசைவ உணவே உட்கொள்கின்றார்கள் நம்மில் பலருக்கும் தினம் அசைவ உணவுக்கு ஆசைதான் ஆனால் விலைவாசி ?
இது நமக்கு கட்டுபடி ஆகாதே... ? வருகைக்கு நன்றி ஐயா
ஜிஎம்பி ஐயா, எத்தனை பேரை அரசு உயிரை எடுத்திருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடன் சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பசுவதைத் தடுப்புச் சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இப்போது கூப்பாடு போடும் கழகங்களின் ஆட்சியில் தான் அமலாக்கம் செய்யப்பட்டது!
நீக்குபுள்ளி விவரங்கள் காட்டி நான் என்ன நிரூபிக்கப் போகிறேன் ஆனால் சில நிகழ்வுகள் மனைல் பதிந்து விடுகின்றன அவையே எழுத்தில் பலருக்கும் தெரிந்த வற்றை புள்ளிவிவரங்கள் கொண்டுதான்நிரூபிக்க வேண்டுமா நான் சட்டம் பற்றி பேச வில்லை நாட்டு நடப்பு பற்றியே கருத்திட்டேன்
நீக்குஉணவு விஷயம் அவர் அவர் விருப்பம்,கேலி கிண்டல் செய்ய கூடாது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் வீட்டில் சாப்பிடுவதால் குழந்தைகள் அந்த உணவை பழகி கொள்கிறார்கள். (வீட்டில் சாப்பிடாத பிள்ளைகள் ஓட்டலில் சாப்பிடுவதும் உண்டு)
பக்கத்து வீட்டில் பெரிய கருவாடு வெயிலில் காய வைப்பார்கள் மொட்டை மாடியில் , என் மகன் சிறு வயதில் பார்த்து விட்டு அம்மா இது என்ன காய வைத்து இருக்கிறார்கள் என்பான் மீன் காய்ந்தால் கருவாடு அதை சாப்பிடுவார்கள் என்றால் ஏன் நாம் சாப்பிட வில்லை என்று கேட்பான் நம் வீட்டில் பழக்கமில்லை என்பேன்.
இன்னொரு வீட்டில் வயல்காட்டு நண்டு உயிருடன் இருக்கும் வாழியில் வைத்து இருப்பார்கள், அது சமையல் செய்யும் முறை எல்லாம் அவர்கள் என்னிடம் சொல்வார்கள்.
உங்களுக்கு விருந்தினர் வந்தால் வடை, பாயாசம்செய்து போட்டால் போதும், எங்களுக்கு ஆடு, கோழி, மீன் என்று செலவும் அதிகம், வேலையும் அதிகம் என்பார்கள்.
காணொளி மிரட்டுகிறது.
பெரிய அண்டாவில் தவறி விழுந்தால் அவ்வளவுதான் போலும்.
வருக சகோ விரிவான அலசல் உண்மை அசைவம் இன்றைய நிலையில் அதிக செலவுதான் இப்பொழுது திருமணத்துக்கு அசைவம் இல்லாவிட்டால் தரக்குறைவாக பேசுகின்றார்கள்.
நீக்குமேலும் மறுபுறம் டாஸ்மாக் ஆட்களையும் கவனமாக கையாள வேண்டியது இருக்கிறது.
வேதகாலத்தில் உயிர்ப்பலி கொடுத்துள்ளார்கள். இஸ்லாம் ஹாலால் பற்றி சொல்கிறது. உயிரைக் கொல்வது இஸ்லாமிய மத சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செயல். பரிணாம விஞ்ஞானம் "வலியது வாழும்" என்கிறது.சைவம் அசைவம் என்ற உணவுப் பழக்கத்தில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்!
பதிலளிநீக்குவருக நண்பரே விரிவான அலசலுக்கு நன்றி.
நீக்குஅடடா! நான் செத்தா
பதிலளிநீக்குபுளுவா என்னுடலைத் தின்னும்
அருமையான பதிவு
தொடருங்கள்
வருக நண்பரே நன்றி
நீக்குஉணவு என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது
பதிலளிநீக்குகேலி செய்வதோ,
இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதோ
இதைச் சாப்பிடக் கூடாது என்று கட்டாயப் படுத்துவதோ தவறு
அருமையான பதிவு நண்பரே
வருக நண்பரே தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குதனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறு எனினும் உங்கள் எழுத்தில் ஒரு சில செய்திகளில் உடன்பாடில்லை. பேசுவோம் இது பற்றி
பதிலளிநீக்குவருக நண்பரே நன்று காத்திருக்கிறேன்...
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குமனிதன் பிறந்ததிலிருந்து சிந்தனை சார்ந்த எண்ணங்களுக்கு என்று சுதந்திரம் தர ஆரம்பித்தானோ அன்றிலிருந்து, உணவிலும் அவரவர் விருப்பபடி சாப்பிட ஆரம்பித்து விட்டான். காட்டில் இலை தழைகளிலிருந்து ஆரம்பித்து, காய் கனிகள் என துவக்கி, வேக வைத்து பின் அசைவம், சைவமென பிரித்து ருசிக்குமளவிற்கு வளர்ந்து விட்டான். இது அவரவர் தனக்கு தானே தந்து கொண்ட சுதந்திரமாகி விட்டது. இதில் மற்றவரை தாழ்த்தி உயர்த்த ஏதுமில்லை.. இன்றைய காலகட்டத்தில் மறுபடியும் இலை தழைகளை உடம்பு வெய்ட் போடாமல் இருப்பதற்காக பச்சையாக சாப்பிடும் பழக்கத்தையும் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டோம். காலமும் ஒரு சுழற்சிதானே..
நல்ல அலசலுடன் கூடிய பகிர்வு. நன்றி..
நேற்று பதிலிட இயலவில்லை அதனால் தாமத வருகைக்கு வருந்துகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ ஆதிமுதல் அழகிய விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி.
நீக்குஉணவுப் பழக்கம் தனி மனிதனின் விருப்பம். அதை கேலி செய்யவோ குறை கூறுவதோ அபத்தம்.
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஉண்ணும் உணவில் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை... ஆனால் எனக்கு கிடைப்பதில்லை..வருடத்தில் ஒருநாள் நவம்பர.புரட்சி நாள் ஏழாம் தேதிதான் தோழர்களின் சமத்துவ உணவான காங்கிரஸ் உணவு கிடைக்கும்..அன்றைக்கு ஒரு பிடி பிடிதான். காங்கிரஸ் என்றால் மாட்டுக்கறி, காந்தி என்றால் ஆட்டுக்கறி, இந்தியன் பார்லி மெண்ட் என்றால் பன்றி கறி, ஐரோப்பிய பார்லிமெண்ட் என்றால் வெள்ளை பன்றிக்கறி, நெடுமாறன் என்றால் மீன்...இப்படி..... நிறைய......
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் பிரிவுகள் இருக்கிறதா ?
நீக்கு