இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 07, 2018

மீண்டு(ம்) வருமா ?


நான் சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிப்பை ரசிப்பவன் ரசித்து சிரித்தவன் ஆனால் சிரிப்பை இழந்து மறந்தவன், ஒரு காலத்தில் நான் இருக்குமிடம் எந்த மொழி நண்பர்களானாலும் எப்பொழுதுமே என்னால் பிறருக்கு சந்தோஷமாக இருக்கும். (Not Now) அந்தக் காலத்தின் இடைவெளி அளவு தூரம் எனது தற்போதைய ஆயுளின் நான்கில் இரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டது. 

எமது இன்றைய சமூகப் பார்வையில் நியாய தர்மத்தை மறந்தவனே சந்தோஷமாக வாழ்கின்றான். எனக்கும் அந்த வாழ்வு மீண்டு(ம்) வருமா ? ஒருக்கால் வந்தாலும் பிறவியின் நான்கில் ஒரு பகுதியைக்கூட தொடாதென்பது எமக்குத் தெரியும் இருப்பினும் நான் முயற்சிக்கிறேன் அதைக் கண்டு தொடர்ந்து ஓடுகிறேன் அந்தக் காலம் என்னைக் கண்டு ஓடுகிறது...

சிவாதாமஸ்அலி-
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே...

50 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆ வ்வ்வ்வ்வ்வ்வ்வ்மீ தான்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  2. என்னாச்சு கில்லர்ஜிக்கு இருந்தாப்பொல டத்துவம் பேசுறார்ர்:).. தத்துவப் பாடல் பாடுறார்:).. என் கதை படிச்சு ஞானியாகிட்டாரோ?:)... அப்பூடியெனில் பீஸ் ஐ வாங்கச் சொல்லோணும் என் செக் இடம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்கள் தளம் வந்து கு'ச'ம்பிட்டேன் அதான் இந்தப்ப'சி'வு ஸாரி... பதிவு.

      நீக்கு
  3. நீங்க சரியான நப்பி கில்லர்ஜி:) ஹா ஹா ஹா ஏன் தெரியுமோ உங்களுக்குள் நிறைய நகைச்சுவை இருக்கு ஆனா எங்கே அது வெளியே லீக் ஆகிடுமோ என கஸ்டப்பட்டு கஞ்சத்தனம் பண்ணி அடக்குறீங்க:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரைட்டு விரைவில் உங்களுக்காக நகைச்சுவை பதிவு எழுதுகிறேன்.

      நீக்கு
  4. நீங்க சிரித்துப் பேசினால், உங்களைப் பார்ப்போர்.... என்ன இவர் இவ்ளோ ஹப்பியா இருக்கிறாரே.. இவருக்கு எந்தக் கவலையும் இல்லையோ என நினைச்சிடுவார்களோ எனும் பயம் உங்களுக்குள் இருப்பதுபோலவும், அதனாலேயே உங்கள் நகைச்சுவை உணர்வுகளை வெளியே வர விடாமல் தடுப்பது போலவும் ஒரு உணர்வு.... நீங்கதான் சமூகத்துக்குப் பயப்படாதவராச்சே பிறகென்ன? ஆரும் எதுவும் சொல்லட்டும் நீங்க நீங்களா இருங்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பேயிடமே பயப்படாதவன் ஆகவே மனித உருவில் இருப்பவரிடம் பயப்படுவதில்லை.

      நீக்கு
  5. பற்றுக பற்றற்றார் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.

    பதிலளிநீக்கு
  6. சித்தன்போக்கு சிவன் போக்கு என்று சொல்வார்கள். உண்மையான அர்த்தம் என்னவோ தெரியாது, ஆனால், சந்தோஷங்களால் கவரப்படாமலும், சோகங்களால் கவலைப்படாமலும் இருக்கப் பழகி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இடம் மாறுங்கள் ஜீ சந்தோஷம் தானாகவரும், நியாய தர்மத்தை மறந்தவன் சந்தோஷமாக வாழ்வதாக நாம் நினைத்து கொள்கிறோம் ஆனால் அவர்களிடம் கேட்டுபார்த்தால் அதும் அவர்கள் உண்மைய பகிர்பவ்ராக இருந்தால் அவர் நிச்சய்ம் சொல்லுவார் சந்தோஷம் இல்லை என்றுதான்

    பதிலளிநீக்கு
  8. காலம, நம் எல்லோர் வாழ்விலும் நம் நடத்தை, குணத்தில் மாற்றங்கள் கொண்டுவரும். உங்கள் தற்போதைய கடமைச் சுமை உங்கள் இயல்பை மாற்றியிருக்கும். விரைவில் அவை தீர்ந்து சந்தோஷத் தருணங்களைக் கொண்டுவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பனின் நம்பிக்கையான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. அந்தக் காலம் விரைவில் வரும். முடிந்தவரை நேர்மறை எண்ணங்களை மனதில் கொள்வோம். கொள்வதற்கு முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. வாரோம்... கொஞ்சம் அப்பால்....

    பதிலளிநீக்கு
  11. ஜி என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது.....ஆனா மகிழ்ச்சி நம் மனதில் தான் இருக்கு....நியாயம் தர்மம் பார்ப்பவர் மகிழ்ச்சியா இல்லைனு சொல்ல முடியாதே....அநியாயம் செய்பவர் மகிழ்வாக இருக்கங்கன்னு நாம் நினைகிறோம்...ஆனால்... அது போலி....உண்மையான மகிழ்ச்சி இல்லை....

    இருங்க இன்னும் வரோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை இன்பமும், துன்பமும் மனதின் வெளிப்பாடுதான்.

      நீக்கு
  12. துளசி: மகிழ்ச்சி நம் மனதில்தான் இருக்கிறது கில்லர்ஜி. என்பது எனதுதாழ்மையான எண்ணம்.

    கீதா: எஸ் அதே டிட்டோ...இதற்கு முன்பு சொன்ன கருத்துடன்....ஜி அநியாயம் செய்பவர்கள் நிம்மதியாகத் தூங்கமுடியும் என்று நினைக்கிறீங்களா...நிச்சயமாக இருக்காது எந்த ஏசி அறையில் படுத்தாலும்...பெரிய பங்களாவாக இருந்தாலும்...நாளை யாரை எப்படி ஏமாத்தாலாம் என்ற கணக்கிலேயே மனம் உறங்காது

    ஆனால் நம்மைப் போன்றவர்கள் அப்படி இல்லை படுத்தால் தூக்கம் வரும். இதைவிட என்ன மகிழ்ச்சி வேண்டும் சொல்லுங்க..

    படுத்துட்டு ஹையோ இந்தச் சமூகம் இபப்டிச் சீரழியுதே மக்கள் இப்படி அநியாயம் செய்யறாங்களே அப்படினு நினைச்சுக்கிட்டா? அப்படிக் கவலைப்படுவதை விட பொங்குவதை விட முடிந்தால் நாம் வெளியில் தெரியாமல் சில நல்லதைச் செய்துவிட்டுப் போகலாமே அப்போது மகிழ்ச்சி வருமே..தர்மம் பார்க்காதவர்களைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும். அதைவிட நாம் நம்மால் முடிந்தால் நலல்து செய்துவிட்டுப் போகலாமே ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விரிவான அழகிய கருத்துரைகளுக்கு நன்றி

      நீக்கு
  13. தலைப்பு....மீண்டு (ம் ) வரும் உங்கள் மனதில் இருக்கிறது அது வெளியில் தேடாதீங்க ஜி!! ஹையோ ரொம்ப தத்துப்பித்திட்டேனோ...அதிரா ஞானி என்ன சொல்லப் போறாரோ...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தங்கள் எண்ணங்கள் புரிகிறது. ஒவ்வொரு மனதிற்குள்ளும் ஆண்டவன் அனைத்து விதமான உணர்வுகளையும் வைத்திருக்கிறார். (சதவீகித வித்தியாசத்தில்) கவலைகள் நெஞ்சை கத்தியை விட கூர்மையான ஆயுதம் கொண்டு அறுக்கும் சமயம் வாழ்வே வீண்னென்றுதான் தோன்றுகிறது. ஆனால் நம் குடும்பத்திற்காக மகிழ்வைதான் முன்னிறுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம். தங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மீண்டு வரும். நம்பிக்கைதானே வாழ்வின் அஸ்திவாரம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் விரிவான அழகிய கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. அனைத்திற்கும் ஒரு நல்ல காலம் உண்டு ஜி... நம்பிக்கை தானே வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
  16. குழந்தைகளுடன் விளையாடி களித்து இருங்கள், கவலை மறந்து விடும், எப்பேர்பட்ட கவலையை கூட தூர விரட்டி விடும்.
    குறை சொல்பவர் பக்கம் அமராதீர்கள்.
    மனதுக்கு பிடித்த வேலை செய்யுங்கள்.
    காலம் சிறிது கவலைகள் பெரிது என்று இருக்க கூடாது.

    இருக்கும் காலம் வரை நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையுடன் வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
  17. மயக்கமா? கலக்கமா? இளமை மீண்டும் வருமா? - நினைத்துப் பார்த்தால் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கவலை. கவலைகளை மறக்க உங்களுக்கு பிடித்தமான செயல்களில் மனதை திசை திருப்புங்கள். இனிமையான நினைவுகளை மட்டும் அசை போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  18. வாழ்க்கை ஒருவழிப்பாதைண்ணே. திரும்பி பார்க்கலாம், ஆனா திரும்ப போகமுடியாதுன்னு யூ டோண்ட் நோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. சந்தோஷம் என்பது பட்டாம்பூச்சியைப் போல,அதை பிடிக்க வேண்டும் என்று நீங்கள் துறத்தினால் உங்கள் கைகளில் அகப்படாமல் ஓடும், அமைதியாக அமருங்கள் உங்கள் கைகளில் வந்து உட்காரும் என்பார்கள். உங்கள் தோளிலும் அது வந்து அமர பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    3. அழகிய விளக்கம் அருமை மேடம்

      நீக்கு
  19. காலம் நல்லதொரு மருந்து... நல்லதே நடக்கும் என நம்புவோம் கில்லர்ஜி! பிரச்சனைகள் இல்லாதவர்கள் இங்கே எவருமே இல்லை......

    பதிலளிநீக்கு
  20. மனம் வைத்தால் மாற்றம் தானே வரும் நண்பரே
    தொடர்ந்து முயலுங்கள் அனைத்தும் தங்கள் வசப்படும்

    பதிலளிநீக்கு
  21. சந்தோஷமென்பதை அளக்க முடியுமா ஜி சந்தோஷமாகத் தெரிபவர்கள் எல்லோரும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறார்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சற்று சிக்கலான கேள்விதான் இது.

      நீக்கு
  22. உன் மனம் வலிக்கும் போது நீ சிரி பிறர் மனம் வலிக்கும் போது நீ சிரிக்க வை - எங்கோ படித்த கவிதை!

    பதிலளிநீக்கு
  23. சந்தோஷம் என்பது நமக்கு நாமே அளித்துக் கொள்வது தானே! விரைவில் மீண்டு(ம்)வரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  24. எப்போதும்போல் மகிழ்ச்சியுடன் இருங்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே.

    பதிலளிநீக்கு