இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 21, 2018

கேணிக்கரை, கேனயன் கேசவன்


ன்பே நீ கேட்டாய் என்று நெக்லஸ் வாங்கி தந்தேன்
ருயிரே நீ கேட்கா விடினும் என் அன்பைத் தந்தேன்
னியவளே நீ கேட்டதற்காக கொலுசு வாங்கி தந்தேன்
ருடலை சேர்த்திட ஈசனிடம் வரம் வாங்கி வைத்தேன்
னக்காக அழகான வைர மூக்குத்தியும் வாங்கி தந்தேன்
ரறிய நாம் இணைவோம் என்று சொல்லி வைத்தேன்
ன்னவளே வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்றாய்
ழரை வட்டிக்கு பணம் வாங்கி துவங்கி கொடுத்தேன்
ஸ்வர்யமே உன்னுடன் ஐக்கியமாவேன் என்றிருந்தேன்
ட்டியாணம் வேண்டுமென தூது சொல்லி விட்டவளே
டிவந்து வாங்கி கொடுத்தேன் ஓவர்டைம் சம்பளத்தில்
வைப்பாட்டி ஆன பின்பு சொன்னாயடி ஒரு வார்த்தை
Your application is not accepted, my Husband

கேனப்பயலாக்கி விட்டாய் கேள்விக்குறியாய் வாழ்கின்றேன்.
கேணிக்கரை K - 9 K – 7

Chivas Regal சிவசம்போ-
இந்த மாதிரியான K-9 னை எல்லாம் Dr. K-7 வச்சு A K 47 னாலே தூக்கணும்.

60 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி !


    கள்ளமிலாக் காதலில் கண்டவலி எல்லாமே
    உள்ளத் துணர்வால் ஊட்டிவிட்டாய் உயிரெழுத்தில் !

    அருமை ஜி தொடர்ந்து எழுதுங்கள் வாழ்க நலம் !

    பதிலளிநீக்கு
  2. ஒளவைப்பாட்டி ஆகிற வரைக்குமா கேசவன் காத்திட்டிருந்தார் !!??
    அ முதல் ஒள வரை சூப்பர் ..ஆனா தேம்ஸ்கரைக்காரம்மா அங்கிளை இந்த கோலத்தில் பார்த்தா அவ்ளோதான் :)
    மை மைண்ட் வாய்ஸ் ..நல்ல வேளை சித்தப்பா இப்டிலாம் நடிக்கலை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்க சித்தப்பா இப்படி நடித்திருந்தால் அன்றைக்கே பொட்டியைக்கட்டி அனுப்பி இருப்பாய்ங்கே...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    உயிரெழுத்தில் கவிதை அமர்க்களம்.
    "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" என்று கடைசியில் பாட வைத்து விட்டாளா உயிரெழுத்து நாயகி. கேள்விக்குறியாய் வளைந்த முதுகு வரும் வரை கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளைந்து விட்டால் இப்படித்தான்.. அருமை.. கவிதையின் வார்த்தைகளை ரசித்தேன்.பாராட்டுக்கள்

    எனக்கு முன்பே சகோதரி அதிரா அவர்கள் வந்து ரசித்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அதிராவை வாழ்த்துவது போல் வாழ்த்தி இப்படி
      எல்லோரும் சேர்ந்து கீழே தள்ளி விட்டீர்களே...

      நீக்கு
    2. போச்சு போச்சு எல்லாமே போச்சூ.. இப்போ என் நிலையும் அந்த கே 9 நிலைபோல ஆச்சேஏஏஏஏஏஏஏ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 3ம் இடம் கூடக் கிடைக்கல்ல:))

      நீக்கு
    3. இன்றிரவு முயலவும்.

      நீக்கு
  4. ஆவ்வ்வ்வ்வ் இண்டைக்கு மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)) ஓஓஓஓஒ லலலாஆஆஆஆஆஆ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்முறை மீ கொள:) வெரி:)யோடு இருக்கிறேன்ன்:) கில்லர்ஜியை தேம்ஸின் நடுவிலே தள்ளாமல் விட மாட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்:) இது அந்த தேம்ஸ்கரை நீலக்குருவின் வலது லெக்கின் இடது பக்க விரலின் நகத்தின் மேல் ஜத்தியம்ம்ம்ம்ம்ம்:))..

      முன்பெல்லாம் முதன் கொமெண்ட்டை பப்ளிஸ் பண்ணிட்டே படுப்பார்ர்.. இப்போதெல்லாம் வேணுமெண்டு எதையும் பப்ளிஸ் பண்ணாமல் சேஏஏஏஏஏஏஏஏஏஏஏர்த்து வச்சு காலையில எழும்பி ரீஈஈஈஈஈ குடிச்சூஊஊஊஊஊஊ இட்லியை எடுத்து வாயில வச்ச பின்பே பப்ளிஸ் பண்றார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    2. ஆம் சற்று கண் அயர்ந்து விட்டேன்.

      நீக்கு
  5. ஹா ஹா ஹா அருமையான கவிதை.... அதுசரி ஒளவைப்பாட்டி ஆகும் வரைக்குமா அவர் லவ் பண்ணிக்கொண்டிருந்தார்ர்.. அப்போ சஞ்சேகமே:) இல்லை.. எங்கட சிறி சிவசம்ப்போ அங்கிள் சொன்னதுபோல அவர் கே...9 ...னேஏஏஏஏஏஏஏஏஏஏதான் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டுல இப்படி சகடைகள் நிறையப்பேரு திறியுதுங்க...

      நீக்கு
  6. ///ஏழரை வட்டிக்கு பணம் வாங்கி துவங்கி கொடுத்தேன்////

    இதிலயே தெரிஞ்சு போச்சு செவின் பொயிண்ட் பைவ் ஸ்ராட் பண்ணிட்டுதென்பது:)

    பதிலளிநீக்கு
  7. அவ உங்களிடம் அன்பைக் கேட்டாவோ இல்லைத்தானே? கேட்காமலே நீங்களாக் குடுத்திட்டு.. இப்போ திட்டினா எப்பூடி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இது கேசவனிடம் கேட்க வேண்டிய கேள்வி.

      நீக்கு
  8. மிகவும் பரிதாபமான நிலைதான் கேசவனுக்கு.

    "எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே" ங்கிற பாட்டை கேசவனுக்காக டெடிகேட் செய்யறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி டெடிகேட் எல்லாம் சரிதான் இருந்தாலும் இவ்வளவு காலம் கடந்த பிறகா செய்வது ?

      நீக்கு
  9. ஆஹா...

    அகரத்தில் ஆதங்கம் - பாழும்
    தகரத்தில் தாத்பர்யம்!...

    நீங்க முன்னே பின்னே விசாரித்து இருக்கலாம்...

    இப்படி வீணாகிப் போனதே!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் எதற்கு விசாரிக்கணும் ?
      ஒருவேளை கேசவனிடம் சொல்லுறீங்களோ...

      நீக்கு
  10. நவீன ஆத்திச்சூடி படித்தேன் மிகவும் அருமை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  11. என்னவோ போங்க! பெண்கள் என்றாலே நகையும், புடைவையும் தான் கேட்பாங்க என்று ஆகி விட்டது. எனக்கு இதிலே எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனாலும் இத்தனையும் கொடுத்தும் ஏமாற்றம் தானா! :((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிக சதவீதத்தை வைத்துதானே கணிப்பு.
      எனது மகளும்கூடத்தான் உங்களைப்போல் நகைக்கு ஆசைப்படுவதில்லை.

      நீக்கு
  12. ஒளவைப்பாட்டி ஆகும்வரைக்கும் இருந்த அவர் K 9 தான்.
    உயிரெழுத்தில் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  13. ஐயகோ...கேசவன்..


    வழக்கம் போல் வித்தியாச முயற்சி..

    பதிலளிநீக்கு
  14. கவிதை நன்றாக இருக்கிறது. ஆனாலும் ஒரு கேள்வி.
    ஔவ்வை பாட்டி எப்போ திருமணம் செய்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே ஔவையை இழுத்தது வயதின் அளவைக் குறிப்பிட மட்டுமே வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. Your application is not accepted, my Husband என்றிருக்கவேண்டும் நண்பரே. மறுத்தவுடன் சொற்றொடரில் பிழை வந்துவிட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே மாற்றி விட்டேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. நல்லா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி. கேசவன் ஏன் இப்படி ஏமாறணும்...

    கீதா: அந்தக் கருத்துடன்....அது சரி கில்லர்ஜி பொண்ணுங்கனாலே கிஃப்ட் எதிர்பார்ப்பாங்களா என்ன? வாங்கித் தரலைனா ஏமாத்துவாங்களா....என்ன ஜி...! பொண்ணுங்க மட்டுமே ஏமாத்துவது போல கவிதை எழுதறாங்கப்பா எல்லாரும்...ஹா ஹா ஹா அது சரி கேசவன் புரிந்து கொள்ள வேண்டாமோ இது வேலைககாவாதுனு....வயசாவது வரையா...ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேசவனுக்கு அறிவு வளர்ச்சி அவ்வளவுதான்.

      ஏமாற்றுகின்ற பெண்கள் பணம், பொருள், நகை எல்லாவற்றையும் சுருட்டவேண்டும் என்பதுதானே கொள்கை.

      கேசவன் சிக்கிய கிராக்கி இப்படி இருந்தாலும் இவ்வளவு காலம் ஏமாறவும் கூடாதுதான்.

      நீக்கு
  17. பாட்டியாகும்வரை காத்திருந்தது கில்லர்ஜீ யின் பெருந்தன்மையா? பேராசையா? இன்றிரவு நியூஸ் K9 தொலைக்காட்சியில் அனல்பறக்கும் விவாதம்.. காணத்தவறாதீர்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிறிது காலமாக காணவில்லையே.....

      எனக்கு பெருந்தன்மையும் இல்லை, பேராசையும் இல்லை இந்தக் கேள்வியை நீங்கள் கேசவனிடம் கேட்கவும்.

      நீக்கு
    2. பணிச்சுமை நண்பரே.. இப்போதுதான் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறோம்..

      நீக்கு
    3. நல்லது உங்களது பதிவுகளும் வரட்டும்.

      நீக்கு
  18. முயற்சி நல்லா இருக்கு. ஆமாம்.... உன் 'அப்ளிகேஷன்' ஏற்கப்படவில்லை கணவனே என்று ஏன் அவள் சொல்லணும்? அதுதான் குழப்புது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே, அவளது கணவன் ஏற்கவில்லை என்றுதானே சொல்கிறாள் ?
      மேலும் கணவனிடம் அனுமதி வாங்கத்தான் முடியுமா ? என்று கேட்காதீர்கள்.

      எல்லாவற்றையும் சுருட்டிய பிறகு கல்யாணம் செய்வதற்கு அவசரப்பட்ட, கேசவனை கழட்டி விடவே அப்படி பொய் சொல்கின்றாள் என்று நான் சொல் வேண்டியது வரலாம்.

      வருகை தந்து ஒருநொடி இடிபோல் கேள்வி எழுப்பியதற்கு நன்றி

      (மைன்ட் வாய்ஸ் - ஆத்தாடி கவிதை எழுதிப் பார்க்கலாம் என்று முயன்றால் ஆளாளுக்கு நம்மளையும் கேசவனைப் போல் ஆக்கிடுவாங்க போலயே.... பயமாவுல இருக்கு)

      நீக்கு
  19. இவ்வளவு செலவழிச்சதுக்கு இன்னும் பத்துப்பேரையாவது காதலிச்சிருக்கணும். ஒரே ஒருத்தியைக் காதலிச்ச கேசவன் கேனயன்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையிலேயே கேசவன் கேனயன்தான்.

      நீக்கு
  20. கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து பின் அழுவதில் என்னலாபம் வாங்கி கொடுத்துதானன்பைப் பெற வேண்டுமென்பது தவறல்லவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இது கேசவனுக்கு தெரியவில்லையே...

      நீக்கு
  21. காத்திருந்து எல்லாம் கொடுத்தும் ஏமாற்றம் தானா?

    பதிலளிநீக்கு
  22. அ..முதல் ஓள வரை படித்து பார்த்ததில் கேனப்பயலாகத்தான் தெரிகிறது..... இது திமிறா..ஏமாலி, பேராசை ..எந்தக் கணக்கில் சேர்ப்பது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கூமுட்டை என்ற கணக்கில் சேர்க்கலாமா ?

      நீக்கு
  23. உயிர் எழுத்தில் உலாவருகிற கவிதை அழகு....வாங்கிக் கொடுத்தும் வாடியே நிற்கிறார் கேசவன்...

    பதிலளிநீக்கு