இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 26, 2018

கணபதி பப்பா மோரியா

गणपति पप्पा मोरिया

வணக்கம் நட்பூக்களே... 2014-இல் நான் வலைச்சர ஆசிரியராக இருந்த பொழுது அதில் எழுதிய தொடர் இதோ மீண்டும் சிறு கதையாய்...

னக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது குருந்தன் வாத்தியார் பிள்ளையாரைப்பற்றி பாடம் நடத்தினார் பிள்ளையார் பெயர் கணபதி, கணபதிக்கு ஒரு தம்பி உண்டு பெயர் முருகன் கணபதியை நாம் (பிள்ளையாரை) பெரியப்பா என்றே அழைக்க வேண்டும் என சொன்னார். உடனே நான்...
அப்படியானால் முருகன் சித்தப்பாவா ?
என்று கேட்டு விட்டேன் கேட்டதுதான் தாமதம் செவிட்டில் சட்டீரென்று ஓர் அறை விழுந்தது
முருகனை, சித்தப்பா என்றோ, பெரியப்பா என்றோ சொல்லக் கூடாது.
என அதட்டி சொல்லி விட்டார் இது எனக்கு குழப்பமாகவே இருந்தது ஏனெனில் வீட்டில் நான் கணபதியை அப்பா என்றும், முருகனை பெரியப்பா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன் வாத்தியார் சொன்னதால் நானும் வீட்டிற்கு வந்து கணபதியை (எனது அப்பா)
பெரியப்பா
என்று கூப்பிட்டேன் சொன்னதுதான் தாமதம் அவரும் சட்டீரென செவிட்டில் ஓர்   அறை விட்டார் இது எனக்கு மேலும் குழப்பத்தை உண்டு பண்ணியது குழப்பத்தை தீர்க்க, அம்மாவிடம் சென்று முறையிட்டேன்.

அப்பாவை எப்படி கூப்பிட்டே ?
பெரியப்பான்’’னு
இன்னொரு தடவை சொல்லு ?
பெரியப்பான்’’னு
என்னைப் பார்த்து சொல்லு ?
பெரியப்பான்’’னு
என் கண்ணைப் பார்த்து சொல்லு ?
பெரியப்பான்’’னு
அம்மா சட்டீரென்று ஓர்  அறை விட்டார் ச்சே என்ன இது ? குழப்பத்தை தீர்க்க முருகனிடம் (எனது பெரியப்பா) சென்றேன். வாத்தியார் சொன்னது ஞாபகம் வந்தது...
முருகனை சித்தப்பா, என்றோ, பெரியப்பா என்றோ சொல்லக் கூடாது
முருகா
என்றேன் சொன்னதுதான் தாமதம் சட்டீரென செவிட்டில் அறை விட்டார்.
முளைச்சு மூணு இலை விடலே என்னயவே முருகான்னு சொல்றியா ? 


என்னடாது இவரும் அறையுறாரு எனக்கு இது மேலும் மேலும் குழப்பமாகியது குழப்பத்திலேயே நடந்து போய் கட்டடியான் கோயிலோரம் போய் நின்று யோசித்துக் கொண்டு இருந்தேன் எனக்கு யோசிக்க, யோசிக்க வாத்தியார் மீது கோபம் கோபமாக வந்தது அவரால்தானே இத்தனை அறை விழுந்தது தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்த என் வாழ்வில் புயலை வீசி விட்டாரே... அந்த வழியாக JOGGING சென்று கொண்டிருந்த எனது ஐயா ஸ்ரீபூவு என்னைப் பார்த்து விட்டார்
கில்லர்ஜி இங்கே என்னடா செய்றே ?
இவரிடம் சொல்வோமா ? இல்லை இவரும் ஓர் அறை விடுவாரா ? குழப்பமாய் தயங்கி, தயங்கி வாத்தியார் மீது இருந்த கோபத்தை கொட்டி விட்டேன் ஐயாவும் வாத்தியார் மீது கோபமாகியதும் எனக்கு சந்தோஷமாகியது. ஹைய்யா நல்லவேளை ஐயா அறையலே,
அவன் யாருடா உன் அப்பனை பெரியப்பான்னு சொல்றதுக்கு ? காலைல நானும் உன்கூட பள்ளிக் கூடத்துக்கு வர்றேன் வா
என்று வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார். மறுநாள் காலை என்னுடன் ஐயா ஸ்ரீபூவும் வந்தார், நேராக வாத்தியாரிடம் போய்...

ஏய்யா, நீ என் பேரனை அப்பனை பெரியப்பான்னு சொல்லச் சொன்னியாம் ?
என்றார் ஐயா ஸ்ரீபூவு மிராசுதார் என்பதால், வாத்தியாரும் மிரண்டு விட்டார், அவரும் தயங்கி, தயங்கி பிள்ளையார் பாடம் நடத்தியதையும், உங்க பெரிய மகன் பெயர் முருகன் என்பதும், சின்ன மகன் பெயர் கணபதி என்பதும் சத்தியமா எனக்கு தெரியாது என்றார். சொன்னதுதான் தாமதம் சட்டீரென ஓர் அறை விழுந்தது எனக்கு. அறைந்தது சாட்சாத் எனது ஐயா ஸ்ரீபூவு.
இந்த பிள்ளையார் கதை எல்லாம் நீ எங்கிட்ட சொல்லலையே ஏண்டா ?
எனக்கு பொறி தட்டியது போல் இருந்தது என்னடா இது எல்லாருமே அறையுறாங்க ? கடைசியில் இதுக்கெல்லாம் காரணமான பிள்ளையார் மீது கோபம் வந்தது எல்லாக் கடவுளையும் போல இவரையும் கும்புட வேண்டியதானே... இவரை மட்டும் ஏன்... பெரியப்பான்னு சொல்லணும் ? குழப்பத்தை தீர்க்க, பேச்சிமுத்து சித்தப்பாவிடம் கேட்கலாமா ? வேண்டாம் நேற்றுதான் கடையில் பஜ்ஜி எடுத்து தின்னதற்கு பிச்சி எடுத்து விட்டார். மாரிமுத்து சித்தப்பாவிடம் கேட்கலாமா ? வேண்டாம் அவர் கோபம் வந்தால் மாறி மாறி குத்துவார், களஞ்சியம் சித்தப்பாவிடம் கேட்கலாமா ? அவர் லாஞ்சி வேலைக்கு லால்குடி போயிட்டாரே அப்பத்தா கல்லாப்பருந்திடம் கேட்போமா ? அது கொத்தி விடுமே வேண்டாமென, விட்டு விட்டேன்.

சாம்பசிவம்-
இத்தனை பேர் அறைஞ்சதுக்கு காரணம் உங்க ஐயா ஸ்ரீபூவுதான் உங்க அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் நித்திஷ், ரித்திஷ் இப்படி லேட்டஸ்ட் பேரா வச்சிருந்தா ? இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது.

இதோ ஞானி ஸ்ரீபூவுவின் கொள்ளுப் பெயர்த்தியின் மகன் எம்.ரித்திஷ்

72 கருத்துகள்:

  1. நான் இல்ல.. நான் இல்ல.. இன்று நான் 1ஸ்ட்ட்ட்டூ இல்ல:)).. சரி சரி ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வராமலா போகும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா .உங்க செக் சொன்ன அந்த சோமபானத்தை டேஸ்ட் பார்த்து ஆடிட்டிருந்தா!! மயங்கி..பின்ன எப்படி ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஉ வருவீங்க...ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. வரூம்... ஆனா.... வரட்டும்.

      சோமபானமா ? இதுவும் நடக்குதா ?

      நீக்கு
    3. நேரம் பார்த்தேன் போஸ்ட் போட்டு 2 அவேர்ஸ் எனக் காட்டிச்சுதா:) அதுதான் டவுட்டில மீ 1ஸ்ட்டு இருக்காது என நினைச்சேன் அது கரீட்டூ:))

      நீக்கு
    4. நீங்கதான் ஞானியாச்சே... சரியாக ஜொள்ளிடுவீங்க...

      நீக்கு
  2. ஹா ஹா ஹா மொத்தத்தில அனைவரிடமும் அறை:) வாங்கிய கதையை சிரிச்சுச் சிரிச்சுச் சொல்லிச் சமாளிச்சிட்டீங்க எம்மிடம்:)..

    அதாரது புதுசா ஒரு ஞானி ஸ்ரீபூ:))?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரு ஜேம்ஸ் ஊரணி கருவேலமரத்தடியில் உட்கார்ந்து இருந்தவர் அல்ல!

      1900-க்கு முன்னால் பிறந்த எமது தாத்தா ஞானி ஸ்ரீபூவு.

      நீக்கு
    2. ஹலோ அதிரா நீங்க ஞானியாகிட்டீங்கனு இப்பூடியெல்லாம் ஸ்ரீபூவைப் பத்திக் கேய்க்கப்படாது...ஞானி ஸ்ரீபூவு கில்லர்ஜியின் தாத்தா (உங்கள் வயதுதான் ஹிஹிஹிஹி!!!!!) கில்லர்ஜி இவரை அடிக்கடி சொல்லுவாரே...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அப்போ கீதாக்கா சொல்றது சரி சரியா போஸ்ட் படிக்கலனு...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. நல்லா நாலு டோஸ் விடுங்க...

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கில்லர்ஜி, அவங்க செக் "செக்" வைப்பதற்கு அடுத்தாப்ல நமக்கு பூஸாரின் வாலைப் பிடிப்பதுதானே வேலையே!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. இதுக்கு ஏஞ்சல் வந்து என்ன சொல்வாங்களோ...?

      நீக்கு
    6. ஓ ஸ்ரீபூ த் தாத்தா..:) அவரையும் ஞானி ஆக்கிடலாம்:)).. என் செக்கை மிரட்டி விட்டிருக்கிறேன்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  3. ஹீஹீ நல்லவேளை எங்களிடம் எப்படி சொல்லி அழைப்பது என்று கேட்கவில்லை ஒரு வேளை கேட்டிருந்தால் நாங்களும் அங்கே வந்து சேர்ந்து அடித்து இருப்போம்..... அடித்து இருப்போம் என்று சொன்னது தண்ணியை உங்களை அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே இங்கு அடிகுழாயில் தண்ணீர் அடிப்பதே பெரிய வேலைதான்.

      நீக்கு
  4. ஹாஹா :) ஸ்ரீபூவு இப்பிடி குழப்பிவிட்டாரே :) இனிமே ரித்தீஷ் நித்திஷ் லாம் கூட பெரிய பேர்னு அதையும் சுருக்கி ரித் நித் னு கூப்பிட வசதியா வச்சிக்கலாம் .
    கல்லாப்பருந்து ,களஞ்சியம் பேச்சிமுத்து ம்ம்! வித்யாசமான பேர்கள் ,இங்கேயும் இருக்கு அதை தமிழ்படுத்தினா சிப்பா வரும்
    ஜான் பிரெட் ,பாப் கார்டினர் ,ஜேக்ப் egg :) டக் ,ஹென்,ஜூன் பாஸ்கெட் இப்டிலாம் கூட sur நேம்ஸ் வைக்கிறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நல்லவேளை இரண்டெழுத்தில் சொன்னீர்கள். மூன்றெழுத்தில் நித்தி, ரஞ்சி என்று சொல்லாமல்...

      நீக்கு
  5. வாழ்க அந்த வாத்தியார். நாரதர் என்று பெயர் இருந்திருக்கவேண்டும் அவருக்கு. சின்னஞ்சிறு மனதில் எவ்வளவு குழப்பங்களை உண்டுபண்ணி விட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எனது பசுமை நினைவுகளில் அவர் வாழ்கிறார்.

      தற்போது காலமாகி விட்டார்.

      நீக்கு
  6. ஹிஹிஹிஹி, சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கும் போலே! நல்ல பெயர்க்குழப்பம் போங்க! இதை விட விசித்திரமாக எனக்குத் தெரிந்த ஒரு அம்மாவின் பெயர் "வேண்டாம்!" அவங்க வீட்டிலே நிறையக் குழந்தைங்க பிறந்ததாலே இனிமேப் போதும் வேண்டாம்னு அப்படிப் பெயராம். அதுக்கப்புறமா 2,3 குழந்தைங்க பிறந்தாங்களாம். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குடும்பத்தில் 7 ஆண் குழந்தைகளுக்குப்ப பிறகு ஆணும் பெண்ணுமாய் இரட்டைக் குழந்தைகள் பிறக்க, போதும்ராசா, வேணும்பொண்ணு என்று பெயர் வைத்தார்கள்.

      பிறகு வேணும்பொண்ணு இறந்து விட்டது அதுவே கடைசி குழந்தையாகி விட்டது.

      நீக்கு
  7. படத்திலிருக்கும் குழந்தை கொள்ளை அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பெயரன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. பாருங்க கில்லர்ஜி நீங்க ஓபனா எனக்குப் பெயரன்னு சொல்லிக்கறீங்க நம்ம பூஸார் இவரையும் என் அண்ணன் என்பார்!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. இருக்கும் அதிரா அப்படியானவர்தான்.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இங்குள்ளோர் எல்லோரும் என்னை நன்கு புரிஞ்சு வச்சிருக்கினம்.. சே..சே அந்தக் குட்டியைப் பார்த்து அப்படிச் சொல்வேனோ அவர் எனக்குத் தம்பி ஆக்கும்:) ஹா ஹா ஹா:))

      நீக்கு
    5. தம்பியா ? பரவாயில்லையே...

      நீக்கு
  8. ஹஹஹா.....நல்ல குழப்பம்....ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ கடைசியில் அறைதான் மிச்சம்.

      நீக்கு
  9. ஹா ஹா ஹா ஹா பெரியப்பா சித்தப்பா சட்டீர் எல்லாம் அங்கும் வாசித்த நினைவு எங்களுக்கு இருக்கு கில்லர்ஜி!!!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீபூவு சேம் சைட் கோல் போட்டுவிட்டார்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அப்பப்பா...பெரியப்பா சித்தப்பான்னு சாமிகளைக் கிண்டல் பண்ணி எழுதுறது தப்பப்பான்னு நான் கில்லர்ஜிக்குப் புத்தி சொல்ல மாட்டேன். ஏன்னா, ''எல்லாரும் சிரிங்கப்பா''ன்னு எக்குத்தப்பா இப்படி ஒரு கதை எழுதக் கில்லர்ஜியால் மட்டுமே முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டுவது போல்தான் இருக்கிறது இருப்பினும்...

      எக்குத்(தப்பா இப்படி ஒரு கதை எழுதக் கில்லர்ஜியால் மட்டுமே முடியும்)

      அடைப்புக்குறிக்குள் உள்ளது ஐயத்தை கொடுக்கிறதே...

      நீக்கு
  12. ஹையோ கில்லர்ஜி இன்னிக்கு உங்களுக்குக் கருத்து போட்டு பப்ளிஸ் கொடுத்தா முதல்ல ஹிந்தி பேஜ் ஒன்னு போகுது...சரி கில்லர் இதை ஹிந்தியிலும் போட்டுருக்கார் போலனு பார்த்தா அது ஏதோ ஒன்று அடுத்து மீண்டும் பேஜ் எடுத்து கருத்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணி பப்ளிஷ் பண்ணினா இண்டியா டுடே போகுது...அட கில்லர்ஜி இண்டியா டுடேல கூட போட்டுருக்கார் போல அப்போ ஏஞ்சலின் சித்தப்பா பத்தி பூஸாரின் அங்கிள் மோதி கமல் பத்தியோனு பார்த்தா ஹூம்...மீண்டும் அதே ஹிந்தி பேஜ் व्यवसाय
    वित्त
    सरकार
    कैसे मैंने अपने सपनों की कार खरीदने के लिए केवल चार महीनों में 1,16,00,000 रुपए कमाए ஹா ஹா ஹா கில்லர்ஜி இது வேற தொடங்கிட்டாரானு....ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டத்துல கட்டுச்சோத்தை அவுத்து விடாதீங்க.... நாட்டுல ஏஞ்சலின் சித்தப்பாவோட அடிமைகள் நிறைய திரியுது...

      நீக்கு
    2. ஹா ஹ ஹா ஹா ஹையோ சிரிச்சு முடியல...புரிந்தது!!!!

      கீதா

      நீக்கு
    3. புரிந்தால் சரிதான்...

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இந்த கதை சடீர் சடீர்ன்னு அடி வாங்கிய கதை படித்தவுடன் சடாரென மறக்க முடியாததாகி போன கதை. நன்றாக நினைவில் உள்ளது. ஆம். உண்மைதான் வாயில் நுழையாத பேராகத்தான் தற்சமயம் வைக்கிறார்கள். நீங்கள் சொன்ன அந்தப் பெயர்களை அப்போதே வைத்திருந்தால், குழப்பமின்றி நீங்கள் அடி வாங்கியதை தவிர்த்திருக்கலாம்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்கள் பெயரன் மிக அழகாக இருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நினைவில் வைத்திருப்பமைக்கு நன்றி.

      நான் அடி வாங்குவதற்காகவே தாத்தா பெரியப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெயரை மாற்றி வைத்து இருக்கிறார்.

      பெயரனை வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  14. நண்பரே... நித்திஷ் ..ரித்திஷ்.. பெயரில் அங்கும் குழப்பம்..அதாவது செவிட்டு அறை விழாதா...????

    பதிலளிநீக்கு
  15. கில்லர்ஜி ரித்தீஷ் இப்பவும் அப்படியேவா இருக்கார்!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரித்தீஷ் ஸ்கூல் போகிறான் சமீபத்திய போட்டோ அடுத்த பதிவுகளில் வரலாம்.

      நீக்கு
  16. ஒரே நாளில் 3 பேரிடம் அறையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரேநாளில் நான்கு, மறுநாள் ஒன்று மொத்தமாக, மொத்தியது ஐந்து.

      ஐயாம் பாவம் நண்பரே...

      நீக்கு
  17. சிரிச்சு முடியல இன்னும். ஶ்ரீபூவு, குருந்தன் வாத்தியார் நீண்டநாளைக்குபின் வந்திருக்காங்க. கூடவே பெயரனும். பெயரனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ரசித்தமைக்கு நன்றி பெயரனை வாழ்த்தியமைக்கும்...

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி அது பெயரன் இல்லை பேரன் ஆக்கும்..:)

      நீக்கு
  18. திருவிளையாடல் மாம்பழம் நினைவிற்கு வந்துவிட்டது. பெயரை வைத்து நாடகத்தை ஆரம்பித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  19. ரசித்தேன். பெயர் குழப்பத்தை வைத்து நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.

    புதுமைப் பெயரில் நித்தியானந்தாவை ஞாபகப்படுத்தினீங்களே. அதுக்கு யாரு உங்களுக்கு செவிட்டில் பரிசு கொடுப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தேன். சாம்பசிவம் ஸ்டெடியா இருந்தால்தான் சாத்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே... ரசித்தமைக்கு நன்றி.
      ரஞ்சிதா காதில் விழாமல் இருக்கணும் இல்லையென்றால் அறை விழும் போலயே...

      நீக்கு
  20. எம். ரித்தீஷுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. இதற்குத்தான் கதையை கதையாகவே பார்க்க வேண்டும் என்று சொல்வ்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று இது தெரியாமல்தான் வாங்கி கட்டிக் கொண்டேன் ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. சிறுவயதில் அடி வாங்கியதை அழகான் கதையாக் எழுதி விட்டீர்களா ஜி?

    குழந்தை ரித்திஷ் அழகு. அவர் நிற்கும் தோரணை தாத்தாவை யார் அடித்தது என்று கேட்பது போல் இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  23. கண் வலி ஆதலால் தாமதம் நகைச்சுவையாக உள்ளது முதலிலேயே அப்பா பேர் சித்தப்பா பேரையும் சொல்லி இருந்தால் அறைகள் வாங்கியிருக்க வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது விதியின் வினையாட்டு.

      நீக்கு
  24. அடக் கொடுமையே.... எத்தனை அறை வாங்கி.... எவ்வளவு கஷடம். படிக்கும்போதே வலிக்குதே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எனக்கு எப்படி இருந்திருக்கும் ?

      நீக்கு
  25. பிள்ளையாரையும் முருகனையும் உறவினராக ஏற்றுக்கொள்ள ஆசிரியர் மற்றும் உறவினர்களுடன் ஏற்பட்ட வாத விவாத அனுபவங்களை நகைச்சுவை ததும்ப எழுதியவிதம் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு