இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 21, 2018

கேப்பையில் டால்டா



தமிழ் திரைப்படங்களில்... கதைக்காக கசாநாயகனா ? சாநாயகனுக்காக கதையா ? என்பது இதுவரை விளங்கவில்லை கசாநாயகன் ஒரு போலீஸ் அதிகாரி என்றால் காவல்துறை மிகமிக கண்ணியமாக, நியாயமாக, காவலர்கள் மிகப்பெரிய வீரர்களாக, பொதுமக்கள் கசாநாயகனை கண்டால் மரியாதை கொடுக்கிறார்கள் ரௌடிகள் பயப்படுகிறார்கள் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறது.

அதேநேரம் போலீஸ் அதிகாரியாக வில்லன் இருக்கிறார் என்றால் காவல் துறையினர் அநியாயக்காரர்களாக, லஞ்சம் வாங்குபவராக, அரசியல்வாதிகளின் கைத்தடிகளாக, அங்காடிகளில் மாமூல் வாங்குபவராக, பாவப்பட்ட பெண்களின் கற்பை சூறையாடுபவராக, பொதுமக்கள் அவரைக் கண்டால் பயப்படுகிறார்கள், மொத்தத்தில் அயோக்கியனாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கசாநாயகன் இவருக்கு பயப்படமாட்டார் பொது இடத்தில் வைத்து போலீஸ் அதிகாரியை சர்வ சாதாரணமா அடித்து விட்டு போய்க் கொண்டே இருப்பார் போலீஸ் அதிகாரி கையில் துப்பாக்கி இருக்கும் சுடமாட்டார், ஆனால் இதே போலீஸ் அதிகாரி ஏற்கனவே பொது இடத்தில் வைத்து பதிமூன்று பேரை சுட்டுக்கொன்று விட்டு பைலை மூடியிருக்கிறார், யாருமே கேட்டதுமில்லை, ஆனால் கசாநாயகனை மட்டும் சுடாமல் வசனம் பேசுவார்

//உன் சாவு என் கையிலதான்//
என்று இதன் அர்த்தம்
//என் சாவு உன் கையில்தான்//

என நாம் புரிந்து கொள்ள வேண்டும் இத்தனைக்கும் கசாநாயகனுக்கு எந்த பதவியும் கிடையாது ஒரு வேலையும் இல்லாமல் கசாநாயகியை கடைசிவரை டாவடித்து கொண்டிருப்பார்.

அதே நேரம் போலீஸ் அதிகாரியாக நகைசுவை நடிகர் இருக்கிறார் என்றால் காவல் துறையினர் கோமாளியாக, பயப்படுபவனாக, ரௌடிகள்கூட இவரை தூக்கிப் போட்டு மிதிப்பார்கள் கசாநாயகன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் அதிகாரிகளை கேள்விகள் கேட்பார் அந்த அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது காரணம் இவர் கசாநாயகனாம் அவர்கள் சாதாரண நடிகர்களாம். ஒரு போலீஸ் அதிகாரி அவர் மனைவியோடு ஹோட்டலில் சாப்பிடும்போது கசாநாயகன் அவர் மனைவியை ஓசியில் கூப்பிட்டால் கூட ஒருத்தன்கூட வரமாட்டான் என்று டாவடிப்பார் இதைக் கேட்டும் கூட இந்த போலீஸ் அதிகாரியால் ஒன்றும் செய்ய முடியாது காரணம் இவர் காமெடியனாம் ? ? அவர் கசாநாயகனாம் ? ?

ஏண்டா... டேய் என்னாங்கடா... நியாயம்... உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா என்ன ? சரி உண்மையிலேயே போலீஸ் அதிகாரிகள் நல்லவர்களா ? கெட்டவர்களா ? கோமாளிகளா ?

பதில் சொல்ல வேண்டியது சென்ஸார் போர்டு அதிகாரிகள்தான் காரணம் திரைத்துறையினர் என்பது தனியார் போலீஸ் அதிகாரிகளும் சென்ஸார் போர்டு அதிகாரிகளும் அரசாங்க ஊழியர்கள் ஒரு அரசாங்க ஊழியர் அவமதிப்படுவதை மற்றொரு தடுக்க வேண்டிய அரசாங்க அதிகாரி அனுமதிப்பது ஏன் ?

Chivas Regal சிவசம்போ-
ஏதோ... நாரதர் வேலை மாதிரி தெரியுது.... ஆனா சரியாத் தெரியலையே..

காணொளி

நட்பூக்களே அபுதாபியில் பல வருட எனது தேடுதலின் சேகரிப்பை இங்கு தொகுத்து ஒரு முழுமையான திரைப்படம் அளவு செய்து இருக்கிறேன் ஆகவே நேரமிருக்கும் பொழுது அவசியம் காணுக – கில்லர்ஜி

56 கருத்துகள்:

  1. காமெடி போலீசும் ஹீரோ போலீசும்.. காணோளி .. நல்லா ஓடுதே.. இப்படியே நிறைய உங்க கிரியேஷன் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சினி லாஜிக்ஸ் என்று நான் கூட ஒரு பதிவு எழுதி இருந்தேன். இது போன்றும் இன்னும் சிலவும் அதில் சேர்த்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. தமிழ்த் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத விதி இவை எல்லாம். மாற்ற முடியாது! இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்களோ...

      நீக்கு
  4. காணொளி ஒரு மணி நேரமா? இப்போது பார்க்க நேரம் கட்டுப்படி ஆகாது சாமி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும்போது பாருங்கள் ஜி

      நீக்கு
  5. எங்கள் பெரியப்பா, சித்தப்பாக்கள், எல்லாம் உயர் காவல்துறை அதிகாரிகள், என் அப்பா சுங்கத்துரை அதிகாரி, இரண்டு சித்தப்பா வக்கீல் அரசாங்க வக்கீல்.(அப்பாவுடன் பிறந்தவர்கள் எட்டு பேர்) அப்பாவின் அப்பாவும் காவல்துறை உயர் அதிகாரி.
    இவர்களை பற்றி எல்லாம் சினிமாவில் தவறாக காட்டும் போது மிகவும் கஷ்டமாய் இருக்கும்.

    சினிமாக்களில் கதாநாயகனுக்கு ஏற்பதான் கதை அமைக்கப்படுகிறது.(சில் படங்கள் விதிவிலக்கு)
    தெரிந்த கதை தானே தேவகோட்டை ஜி.

    காவல்துறையை சேர்ந்தவர்களில் நல்லவர்களும் , கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
    அதுவும் இப்போது தொலைகாட்சிகளில் காட்டப்படும் நல்லகாவல்துறை அதிகாரி, கெட்ட காவல்துறை அதிகாரிகளை பார்க்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது நிலைப்பாடு சங்கடமாகத்தானே இருக்கும்.

      விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  6. காணொளி நன்றாக இருக்கிறது.
    தேர்ந்து எடுத்து தொகுத்து இருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுமையாக பார்த்து விட்டீர்களா ? ஆச்சர்யமாக இருக்கிறது நன்றி சகோ.

      நீக்கு
  7. பல படங்கள் வெளிவரும்போதே சென்சார் என்ன செய்கிறது என்று தான் தோன்றும் எனக்கும்.

    காணொளி - ஒரு மணி நேரம் எடுக்கும் போல.... கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன் - நல்ல தொகுப்பு. முழுதும் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதற்கு தனியாக நேரம் ஒதுக்கித்தான் பார்க்க முடியும்.
      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  8. பதிவிற்கேற்ற காணொளி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. இடுகையில் உங்கள் ஆதங்கம் புரிகிறது. கதைக்கேற்ற சூழல்தானே. ஆனால் சில பதவிகளை/வேலைகளை (ஆசிரியர், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்களை) தவறாகவோ நகைச்சுவையாகவோ காண்பிப்பது அந்த ப்ரொஃபஷனுக்கு கெடுதி செய்யும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    காணொளி 1 மணி நேரம் இருக்கும்போலிருக்கே. ஓட்டிப் பார்த்தால் எல்லாம் சினிமாப்படத் தொகுப்புகள். பிறகு நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்.

    இலையில் உள்ள இனிப்புகளில் ஒன்றிரண்டுக்கு டால்டா தேவைப்படாது. அவை எவை என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நேரம் ஒதுக்கி அவசியம் காணுக...

      ஆஹா இந்த இனிப்பு வகைகளே எனக்கு பிடிக்காதது. சமையலும் ரொம்பத்தூரம் இதில் இந்தக்கேள்விக்கு பதில் நான் எங்கு போவேன் ?

      "சொக்கா"

      நீக்கு
    2. கில்லர்ஜி... அதான் நீங்க உங்க சைசுல இருக்கீங்க, நான் மூணு கில்லர்ஜி சைசில் இருக்கிறேன்.

      தெரியாத இனிப்பு, பிடிக்காத இனிப்பு தேவகோட்டைலதான் செய்யறாங்களா? கல்யாண இனிப்புகளைப் படம் எடுத்துப் போட்டீங்களோன்னு பார்த்தேன்.

      நீக்கு
    3. ஹி.. ஹி.. ஹி.. இது இணையத்தில் கிடைத்தது நண்பரே...

      நீக்கு
  10. இப்படியே -
    பழனியாண்டி மூவி மேக்கர்ஸ்.. - ந்னு ஆரம்பித்து விடலாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனி பிழைப்புக்கு அங்கிட்டுதான் போவோணும்.

      நீக்கு
  11. அப்பவே
    இந்த சஞ்சிதாமணி ஒரு தீர்க்கதரிசியாத் தான் இருந்துருக்காங்க!...

    இவனுங்க போயி மூஞ்சியில கரிய அப்பிக்கிட்டது தான் மிச்சம்...

    பதிலளிநீக்கு
  12. அதென்ன கேப்பையில டால்டா?..

    அதுவுஞ்சரிதான்...

    கேப்பையில குருடாயில்.. எடுக்கிற காலத்தில
    டால்டா எம்மாத்திரம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் விடையை சொல்லி விட்டீங்களே ஜி

      நீக்கு
  13. தலைப்பை ரசித்தேன், வழக்கம்போல. காணொளியினை விரைவில் காண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. காணொளியை சின்ன சின்னதா ஒவ்வொரு பதிவிலும் போட்டிருக்கலாம்ண்ணே. முழுசா யாராலும், எப்பயுமே பார்க்கமுடியாது என்பதே உண்மை. ப்ளீஸ் சின்ன சின்னதா மறுஒளிப்பரப்பு செய்ங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சொதப்பி விட்டேனோ... ஒரு நாளைக்கு சினிமாவுக்கு போறதா நினைச்சிண்டு மாமாவோடு உட்கார்ந்து பாருங்கோ....

      நீக்கு
  15. கில்லர்ஜி காணொளி பார்த்தேன் ஒருத்தரை மிஸ் பண்ணிட்டிங்க :)
    ஆனா சிங்கம் அண்ட் ஆறுச்சாமி தான் உங்களை ரொம்பவே தாக்கிட்டாங்களோ அவங்க படம் நிறைய காணொளில இருக்கு .
    உங்கள் வாதம் சரியே ..நேர்மையானன்னு ,பலசாலின்னு போலீசை காட்டிட்டு அடுத்தசீனில் ஹீரோயின் கிட்ட அசடாட்டம் ஏமாறுவதெல்லாம் ஏத்துக்க முடிலதான் .சினிமா போலீஸ் வேற நிஜ போலீஸ் வேற
    அது சரி தேவகோட்டை டால்டாவில் இனிப்பு மட்டும்தான் செய்வார்களா எனக்கும் இனிப்புக்கும் இடைவெளி அதிகம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல் முழுவதும் பார்த்து விட்டமைக்கு நன்றி,
      அவங்கே ரொம்பத்தான் பூ சுத்துறாங்கே....

      தேவகோட்டை செட்டிய வீட்டில் பலகாரங்கள் வாங்கினால் மாதக்கணக்கில் கெடாது. இதோ திருமணத்துக்கு செய்த முறுக்கு இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றதாம் பரமக்குடியில்...

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    சினிமாவில் எல்லாமும் சினிமாதனந்தான்.. ஆனால் சில நேரங்களில் சினிமாவை போல நிஜத்திலும் நடந்து விடுகிறது. இல்லை.. காப்பியடிக்கிறார்களா என்ற ஐயமும் வருகிறது. சினிமாவை பற்றிய உங்கள் கணிப்பு சரிதான். கதாநாயகன் எப்படியோ அந்த ரோலுக்கு தகுந்தபடி எல்லாமும் மாறிவிடுகிறது.

    காணொளி இரு சீன்கள் கண்டேன். மிகவும் நன்றாக தொகுத்துள்ளீர்கள். முழுவதையும், பிறகு கண்டிப்பாக காணுகிறேன்.

    இனிப்பு படங்கள் நன்றாக உள்ளன. நானும் தங்கள் இல்லத் திருமணத்தில் எடுத்த போட்டோவோ என நினைத்தேன். ஆனால் டால்டா கலந்த இனிப்புகள் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் குரல்வளையை பதம் பார்க்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ காணொளி கண்டமைக்கும், விரிவான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  17. ரசிக்கிறார்களே ஜி... என்ன செய்வது...?

    காணொளி பிறகு பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கேப்பையில் டால்டா வடியுது என்றாலும் நம்புவது தமிழக ரசிகனின் இயல்பு குணம் ஜி

      காணொளி காண்பவமைக்கு நன்றி

      நீக்கு
  18. காணொளி :- அங்கங்கே உங்களின் கருத்துக்கள் அசத்தல்...! இத்தனையும் தொகுத்தது வியக்க வைக்கிறது ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதான் சொன்னேனே பல வருட சேகரிப்பில் உழைப்பு.

      முழுவதையும் பொறுமையாக கண்டமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  19. நல்லவர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களைக் கெட்டவர்களாக சித்த்ரிக்கவும் செய்கிறார்கள் போலிருக்கிறது அதற்கேற்றபடி பாத்திரப்படைப்பும் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஆக மக்களுக்கு நல்லதை, உண்மையை சொவ்லும் எண்ணம் இவர்களுக்கு கிடையாது போலும்.

      நீக்கு
  20. என்ன கில்லர்ஜி படத்துல போய் லாஜிக் பத்தி எல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு.... திரைப்படங்கள் மக்களின் மனதில் அதில் காட்டப்படும் துறையைப் பற்றி எண்ண ஓட்டங்களைப் பாதிப்பது சரியே..

    காணொளி வேலை செய்யலையே...சரி திரும்ப ரெஃப்ரெஷ் பண்ணிப் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஒரு துறையைப்பற்றி தொடர்ந்து
      தவறாக சொல்வது முடிவில் அதுவே உண்மையாகி விடும்.

      நீக்கு
  21. கில்லர்ஜி டால்டாவே நல்லதில்லை இதுல சுத்தமான டால்டா??!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கில்லர்ஜி காணொளி வேலை செய்யுது. பெண் போலீஸ் உதைப்பது வரை பார்த்தேன். நல்ல எடிட்டிங்க்....கூடவே உங்க கமென்ட்ஸ்..சூப்பர் ஜி. மீதியும் பார்த்து முடிக்க முயற்சி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அவ்வளவு தூரம் பார்த்து ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  23. உன் சாவு என் கையில தான்
    என்பதை
    நான் உன்னை வாழவைக்கின்றேன்
    என்றவாறு
    திரைக்கதை எழுத மாட்டாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவனுகளுக்கு நல்ல புத்தியே வராது போலயே...

      நீக்கு
  24. ஆஆஆஆஆஅ நீண்ட நாட்களின் பின்பு சிறி சிவசம்போ அங்கிளைப் பார்த்ததில் மீக்கு மட்டில்லா மகிழ்ச்சி:)).. அவர் சொன்னதுக்கு மேல என்ன இருக்கு அதிரா சொல்வதற்கு.. ஹா ஹா ஹா..

    கில்லர்ஜி வீடியோவை நைட் பார்த்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்க அங்கிள் ஊமைக்குத்து வைத்து பேசுறாரே...

      காணொளி கண்டு எழுதுங்கள் நன்றி.

      நீக்கு
    2. வீடியோப் பார்த்திட்டேன்.. முழுக்க முழுக்க பொலீஸ் ஐயே பிடிச்சு வச்சு ஒரு வீடியோவாக்கிட்டீங்க.. இடையில வடிவேல் அங்கிளையும் கோவை அக்காவிடம் வாங்கு வாங்கென அடி வாங்க வச்சிட்டீங்க:)).. இதிலிருந்து தாங்கள் ஜொள்ள வருவது யாதெனப் புரியவே இல்லையே:))..

      ஒண்ணு மட்டும் புய்யுது:) திட்டுவதும் சினிமாவையும் நடிகர்களையும்:,) பின்பு வேலை மினக்கெட்டு தொகுத்துப் போடுவதும் அவர்களையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் ஏதோ அபுதாபியில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு என நினைச்சு ஏமாந்திட்டேன்ன்ன்ன் சிறி சிவஜம்போ:) அங்கிளைப்போல:)) ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. வருக முழுமையாக கண்டு களித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  25. என் வீட்டுப் பிரச்சனை படி போலீஸ் கொடுங்கோலர்கள்...என் எதிரிகளுக்கு காசு வாங்கினாலும் அவர்கள் நல்லவர்கள்... மொத்தத்தில் போலீஸ் என்பது இந்த அரசமைப்பை கட்டி காக்கும் ஈவு இரக்கம் மற்றும் நேர்மையற்ற படை.. இந்தப் படையில் நல்லவர்கள் இருப்பது தூசி மாதிரி...போலீசை பற்றிய வழக்கு, வழக்கு எண் போன்ற ஒரு சில படங்கள் வந்துள்ளன..நண்பரே...தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொன்ற கொடூரமே... போலீஸ் படை கொடூரப்படை என்பது உள்ளங்கய் நெல்லிக்கனி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய உண்மை நிலையை அழகாக சொன்னீர்கள் நண்பரே...

      நீக்கு
  26. கேப்பையிலே நெய்க்குப் பதில் டால்டா வடிகிறது. தமிழ் சினிமாவில் காமெடி போலீஸ் வருகை காலகாலமாக தொடரும் நிகழ்வு. இத்தலைப்பில் பலமணிநேரம் விடியோ கூட சாத்தியம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு