இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 21, 2019

நத்தம், நண்பன் நம்பிராஜன்


இன்று கண்டிப்பாக
சொல்லிவிட
வேண்டியதுதான்
ஆம்
எத்தனை காலம்தான்
மனதுக்குள் வைத்து
பூட்டி வைப்பது
அவள் எனது டேபிளுக்கு
அடுத்த டேபிள்க்காரி
பணியில் சந்தேகமெனில்
உடன் வந்து கேட்பது
என்னிடமே..
காரணம் எனக்கு எல்லாம்
தெரியும் என்று அவள் நம்பி
வாழ்கிறாள் இந்த நம்பிராஜனை
நம்பியார் காதல் பாட்டு
பாடினால் நம்ப முடியுமா ?
அதைப்போல்தான் எனக்கு
எல்லாம் தெரியும் என்பதும்
இதற்கு காரணம் நானா ?
இல்லை இவள் என் மீது
வைத்திருக்கும் காதல்தானோ...
அவள் கேட்கும் சந்தேகங்களுக்கு
மட்டும் என்னிடமிருந்து உடன்
கிடைக்கின்றதே விடை
கடந்த ஒரு வாரமாகவே அவளது
பார்வையில் ஒருவித மாற்றம்
பேச்சுகளில் தடுமாற்றம் ஏன் ?
காதலேதான் இது காதலேதான்
நேற்று உங்களிடம் தனியாக
பேசவேண்டும் என்றாள்ல் ?
அர்த்தமென்ன ?
காதல் காதல் காதல்
இல்லை நாளை நாம்
நம் காதலைச் சொல்ல
முந்திக்கொள்ள வேண்டும்
இல்லையென்றால் இவ்வளவு
பெரிய மீசைக்கு அர்த்தமில்லை
மறுநாள் காலை குளித்து முடித்து
டிப்-டாப்பாக உடையணிந்து
அலுவலகம் சென்றேன்
எனக்கு முன்பே அவள் அலுவலகத்தில்
நாணத்தோடு என்னைப் பார்த்தாள்
பக்கத்தில் போய் நின்றேன் தாபத்தோடு
அவள்தான் முதலில் சொன்னாள்
ஐ லவ் யூ நம்பிராஜன்
நானும் சொன்னேன் ஐ லவ் யூ நர்மதா.
செருப்பு பிஞ்சுடும் மூதேவி முளைச்சு மூணு இலை விடலை அய்லவவாம்ல... அய்லவு நானும் பிஞ்சக்காட்டுக்கு போயி கத்திரிக்கா பரிச்சாந்துட்டேன் வெயிலு ஏறி வந்துடுச்சு இன்னும் சமுக்காளத்தை போத்திக்கிட்டு கெடக்கே ஏண்டா... கொங்காமட்டை எந்திரிச்சு மாட்டைப் பத்திக்கிட்டு வயலுக்கு போடா எல்லாம் ஆத்தாக்காரி கொடுக்கிற செல்லம் அவளைத் தூக்கிப் போட்டு மிதிச்சா சரியா வரும்.....

பிஞ்சையிலிருந்து வந்த அப்பா திட்டவும் எழுந்து முகத்தை கழுவி விட்டு ஆத்தாளிடம் நீராத்தண்ணி வாங்கி குடித்து விட்டு மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வயலுக்கு உழுவதற்கு போனான் நமது நத்தம் நண்பன் நம்பிராஜன்.

64 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ.. மாட்டு வண்டிச் சவாரி எனக்குத்தேன்ன்ன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைன் போட வச்சிருந்த பேனாவை காணாம தேடிட்டிருந்தேன் :) அதுக்குள்ளே பூனை அரைவ்ட் :)

      நீக்கு
  2. ஹா ஹா ஹா நம்பிராஜன் பாவம்:)). என்ன பண்ணுவது கனவிலதான் இப்படி அனுபவிக்க முடியும் .. அதையும் விட மாட்டேனென்கிறீங்களே கர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நிறையபேர் கனவில்தான் காலத்தை கடத்துகிறான்.

      நீக்கு
    2. கனவில்தான் தைரியம் வரும்போல

      நீக்கு
    3. இது சிலருக்குதான் ஐயா.

      நீக்கு
  3. நல்லவேளை .. ஐ லவ் யூ சொல்லும்வரை பொறுத்திருந்தே, அப்பா ஏசியிருக்கிறார்ர்:)) இல்லை எனில் சொல்லாமலே போயிருக்குமெல்லோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிராஜன் அப்பாவுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  4. வைரமுத்து அங்கிளின் கவிதை வரி ஒன்று நினைவுக்கு வருகிறது.. ஆரம்பம் நினைவிலில்லை.. யாராவது தெரிந்தால் இங்கு எழுதினால் மகிழ்ச்சி..

    “கிழிஞ்ச பாயில்
    கிடந்துகொண்டே
    கிளியோப்பத்ராவைக்
    கனவு காணும் தம்பி”..

    இப்படி ஒரு வசனம் வரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறக்க முடியாத சிலுவைகள்
      லிங்க் அனுப்பிட்டேன் மயில் கொண்டுவரும் பாருங்க :)
      இங்கே போட்டா வால் கணக்கா நீளுது :)பெரிய லிங்க்

      நீக்கு
    2. இறக்கமுடியாத சிலுவைகள்
      இறக்கமுடியாத சிலுவைகள்
      ————————–

      சொன்னவள் நான் தான்!
      உங்களுக்கும் சேர்த்து
      நான் தான் சுவாசிக்கிறேன்
      என்று சொன்னவள் நான் தான்!

      //கிழிந்த பாயில் படுத்தபடி // also its not thambi its annan :)

      நீக்கு
    3. ஆமாம் அதிரா உங்கள் சின்மயி ஆன்ட்டிக்கும் பிடிச்ச கவிதைனு சொல்லி இருந்தாங்க...

      நீக்கு
    4. ஆஆஆவ்வ்வ்வ் மியாவும் டாங்சூ... ஆராட்சி அம்புஜமெ... இதுதான்.. இதுதான்...

      நீக்கு
    5. பெரிய லிங்கைச் சுருக்க tiny url மூலமாகப் போய்ச் சுருக்குங்க ஏஞ்சல்!

      நீக்கு
    6. தாங்க்ஸ் அக்கா .நெக்ஸ்ட்டைம் செய்றேன்

      நீக்கு
  5. அவ்வ்வ் அப்போ அத்தனையும் கனவா :)
    சொன்னதுதான் சொன்னீ ங்க கண்ணை திறந்து சொல்லியிருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் நம்பிராஜனின் அப்பா வரும்போதுதான் கனவு என்று தெரிய வந்து பதிவை ரசிக்க முடிகிறது.

      நீக்கு
  6. மாடுமேய்க்கும் குட்டி நம்பி அழகோ அழகு :) இதே வீர நடையுடன் நர்மதாகிட்ட பேசச்சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நர்மதா காலேஜ் போகின்றவள்.
      நம்பிராஜனை நம்பி வருவாளா ?

      நீக்கு
  7. நல்ல கவிதை....
    முடிவு அருமை....

    பதிலளிநீக்கு
  8. அதுல என்ன சந்தேகம்?..

    நம்பியாரும் காதல் பாட்டு பாடிட்டு தான்
    வில்லன் ஆனார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாவுல இவனும் அப்படித்தான் வருவான் போல...

      நீக்கு
  9. கிழிஞ்ச பாய்..ல
    படுத்துக் கிடந்தா
    கிளியோபாட்ராவைக்
    கனவு காணக்கூடாதா!..

    ஒரு நொடியில எல்லாமே மாறிப் போவுமுங்கோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே... நொடியில் காட்சிகள் மாறுமே...

      நீக்கு
  10. கனவில் வந்த நர்மதா சூப்பர்.
    மாடு ஓட்டி செல்லும் சிறுவன் நம்பிராஜனா?
    இவன் வளர்ந்து கனவு காணுவதை முன்கூட்டியே சொல்லும் நீங்கள் தீர்க்கதரிசிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. இப்படியும் தீர்க்கதரிசியா ?

      நீக்கு
  11. தம்பிக்கு வந்திருப்பது பிஞ்சுக்காதல் போல... கனவிலேனும் கடிதம் போடுகிறான்! ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வெம்பி விடாமல் இருந்தால் சரிதான்.

      நீக்கு
  12. ஹாஹா கனவில் காதல்....

    படத்திற்கான உங்கள் பதிவு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. கனவுலயாவது சந்தோஷமா இருக்கட்டுமே...

    அதைக் கெடுக்கணுமா? இருக்கவே இருக்கு கத்தரிக்கா வரப்பு வேலைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் சில மனிதர்கள் நல்ல கனவை சிதைத்து விடுவார்கள்.

      நீக்கு
  14. முதல்ல படத்தைப் பார்த்ததுனால, நம்பிராஜன் கனவைப் படிக்கும்போதே, குழந்தை பெற்று அவனும் மாடு ஓட்டும் கனவுதானா காணணும்னு நினைச்சுக்கிட்டே படித்தேன்....

    பதிலளிநீக்கு
  15. முடிவில் ஆப்பு வைச்சிட்டீங்களே ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானில்லை ஜி நம்பிராஜனின் அப்பாதான்...

      நீக்கு
  16. ஹா ஹா ஹா ஹா....நம்பிராஜன் தம்பி ராஜனாத்தான் இருக்கார் போல!!! அண்ணன் ஆகலையோ.....

    பாவம் அது சரி இப்படி யாருக்குத்தான் கனவு வராது அதுவும் பருவ வயதில்!! என்ன சத்தமா தூக்கத்துல ஒளரிட்டான் போல! பாவம் நம்பி தம்பி! இதெல்லாம் அப்பாக்குத் தெரியாதா என்ன அவரும் இந்த வயசக் கடந்து வந்தவர்தானே!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவனோட அப்பா பழைய பஞ்சாங்கமாக இருப்பாரோ...

      நீக்கு
  17. பிஞ்சிலே பழுத்தது!! ஹிஹிஹி...

    ஆனா பரவல்லா இவன் கனவுதான் கண்டான்...ரன்சிட் போல ஏமாறலை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இவனுக்கு ரத்தமும் எடுக்கவில்ஸை, ஒரு மில்லியனும் கிடைக்கவில்லை.

      நீக்கு
  18. ஹாஹாஹா! என்னை பத்திதான் ஏதோ எழுதிப்போட்டீங்கன்னு பதறி போய் வந்தேன்! எல்லாம் கனவு ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் ஊரின் தலைப்புதான் இழுத்து வந்ததா ?
      வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  19. இத்தனை சின்னப்பையருக்குக் காதலா? திரைப்படங்கள் அதிகம் பார்ப்பாரோ? யார் அந்த நர்மதா? நிஜம்மாவே அப்படி ஒருத்தி இருக்காங்களா? இந்த இளங்காதலையா அம்மா, அப்பா இருவரும் ஏசுகின்றனர்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கனவு தானே கண்டு மகிழட்டுமே! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவு காணச்சொன்னது அப்துல்கலாம் ஐயா என்று நம்பிராஜன் சொல்றானாமே...

      நீக்கு
  20. பதிவைப் படிக்கும்போதே முடிவில் ஏதோ ஒரு எதிர்பாரா நிகழ்வு நடக்குமென்று எண்ணினேன். அது போலவே கண்டதெல்லாம் கனவு சென்று சொல்லி முடித்துவிட்டீர்கள். ‘விருப்பங்கள் குதிரைகளானால் பிச்சைக்காரர்களும் குதிரை ஏறலாம்.’ என ஆங்கிலத்தில் சொல்வதுபோல் நம்பிராஜனை கனவில் சிறகடித்து பறக்கவிட்டு கவிழ்த்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. நம்பிராஜனை கவிழ்த்து விட்டது நானல்ல! அவனது அப்பாதான்.

      நீக்கு
  21. நத்தம் நண்பன் நம்பி ராஜன் நம்பிக் கண்ட கனவு கண்டதும் கனவு கலைந்ததும் நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு
  22. அய்யோ..எனக்கு அய்யிலவ்வு சொல்றமாதி கன்வு வர்ரமாட்டுதே!!இவ்வளவு மீமீசைவைத்தால்தான் கன்வு வருமோ..???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மீசைக்கும், கனவுக்கும் பந்தம் உண்டா ?

      நீக்கு
  23. கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் என்று அவன் பாடிக் கொண்டே மாடுகளை ஓட்டிக் கொண்டு போவதாக என் கற்பனை. ஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பதிவை ரசித்து சிரித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  24. கில்லர்ஜி நல்லாருக்கு கனவும் கனவு கண்ட அந்தக் குட்டிப் பையனும். எனக்குத் தோன்றியது என்னவென்றால் இந்தப் பையன் அந்த ரஞ்ஜித்தேதான். இதற்கு முந்தைய பதிவான மெல்லேந்தியைத்தான் அவன் அந்த வயசுலயே கனவு கண்டுருக்கான்...கனவும் பாதியில் கலைந்தது போல ரஞ்சித்தின் காதலும் கானல் நீரானது ஆனால் நல்ல பேக்கேஜ்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்லாவே பொருத்தி பார்த்து விட்டீர்கள். கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    நம்பி ராஜனின் அழகான கனவு பலித்து விட கூடாதா என நம்பியோடு நானும் ஆண்டவனை நம்பி கவிதைக்கு உருகி பின் படத்தை பார்த்தால், சிறுதம்பி அவன். நல்ல கற்பனை தங்களுக்கு.. என்று ரசித்து விட்டு, நமது நண்பனிவன் என்பதினால், அவன் வளர்ந்த பின் அவனின் கனவுகள் பலிக்க வேண்டுமென உங்களோடு சேர்ந்து நானும் வேண்டிக் கொண்டேன். நல்ல ரசனையான கவிதை..ரசித்து படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. ஆம் நண்பரே வடை 'போச்சே' என்ற வடிவேல் காமெடிபோல் ஆச்சு.

      நீக்கு
  27. கனவா? அடடா. நானும் ஏமாந்துபோய்விட்டேனே.

    பதிலளிநீக்கு
  28. நானும் ஏமாந்து விட்டேன் நண்பரே.இருப்பினும் குமுதம் ஒரு பக்க கதைகளுக்கு பொருத்தமான ஒன்று

    பதிலளிநீக்கு