கண்ணழகி கண்ணே நீ வாயேன்டி
கல்லடித்து பகைக்க வேண்டாமடி
கண்ணடித்து நகைக்க வேணுமடி
கண்ணாலம்தான் கட்டிக்குவோமடி
கல்லல் கலக்கல் கண்ணனே
கண்ணாடி போட்ட மச்சானே
கண்ணடி எனக்கு வேண்டாம்னே
கல்லடியும் உனக்கு வேண்டாம்னே
கண்டனூரு சந்தைக்கு வாயேன்டி
கண்ணன் கல்கோனா தருவேன்டி
கள்ளச்சிருக்கியே உனக்கு நாந்தான்டி
கருவாயன் நாந்தான் மாமேன்டி
கருதறுக்கும் வேளையிலே கருவாயா
கள்ளத்தனம் செய்யத்தான் வந்தாயா
கடுப்படிக்காம கழண்டு கிட்டு நீ போயா
கருப்பாயி அதோ வாறா ய்யேன் ஆயா
கண்ணு தெரியாத ஆயா கெழடி
கள்ளு நெஞ்சுக்காரி தொட விடடி
கனைத்து நான் ஊதட்டுமா மகுடி
கட்டிப்புடிச்சு விளையாடுவோம் கபடி
கள்ளு குடிச்சுருக்கியா நீ கருவா
கழனித் தண்ணியத் நான் தரவா
கரும்புக் காட்டுக்குள்ளே அருவா
கட்டிப் போட்டுருவேன் படுவா
Chivas Regal சிவசம்போ-
மகனுக்கு கல்யாண நேரத்துல இவருக்கு ஏன் இந்தப்பாட்டு.... ?
கல்யாணம் கூடி வரும் வேளையிலும் கலக்கலா பாட்டு வருதே .
பதிலளிநீக்குஉங்கள் எழுத்தின் மீதான பற்று மிகவும் பாராட்ட தகுந்தது
வருக நண்பரே பாராட்டுக்கு நன்றி.
நீக்குகல்கோனா என்றால் என்ன?!
பதிலளிநீக்குஅதுவொரு மிட்டாய் வகைதான் ஜி
நீக்குகில்லர்ஜி... என் 9ம் வகுப்பின்போது, கல்கோனா ஐஸ்க்ரீம் என்று எங்கள் ஹாஸ்டல் வாசலில் ஐஸ் பெட்டியில் வரும். 5 பைசா விலை. லெமன், ஆரஞ்சு என்று வேறு வேறு வாசனைகளில் வரும். அதுக்குப் பேர் 'கல்கோனா ஐஸ்'.
நீக்குகல்கோனா மிட்டாய் கேள்விப்பட்டதில்லையே..
சர்க்கரைப்பாகுவில் நிலக்கடலையை அரைத்து சிறு, சிறு உருண்டையாக உருட்டி இருக்கும்.
நீக்குகடித்து தின்பதற்கு சற்றே கடினமாகவும் இருக்கும் நல்ல சுவையானது.
கில்லர்ஜி... அது கம்மர்கட்டுன்னா. பாண்டிச்சேரி (புதுகை)ல நிறைய கடைகள் இப்போவும் கம்மர்கட்டுக்கு ரொம்ப ஃபேமஸ். ஆனா, தேங்காய் வெல்லப் பாகில் செஞ்சது, கடிப்பது கடினம்.
நீக்குஆஆஆ எனக்கு தெரியும் கல்கோனா நான் சாப்பிட்டிருக்கிறேன்ன்ன்:)... உகண்டா சவுணில தாவுத்தர் கடையில விற்கிறார்கள்:) ஹா ஹா ஹா
நீக்குகமர்க்கெட்தான் கல்கோனா
நீக்குஹையோ கல்கோனாவை எல்லாம் நினைவு படுத்திட்டீங்களே!!!!!! நிறைய சாப்பிட்டிருக்கேன். வாயில் வைத்து சப்பி சப்பி!!!
நீக்குகீதா
ஹா... ஹா.... ஹா... அருமை. கடைசி கண்ணி புன்னகைக்க வைத்தது.
பதிலளிநீக்குரசித்து சிரித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி.
நீக்குரசித்தேன் கில்லர்ஜி..... கல்யாண வேலைகள் நடுவிலும் பதிவு.... மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குமகனுக்கு கல்யாண நேரத்துல... - நான் நினைத்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஹா ஹா
பதிலளிநீக்குநீங்கள் இப்படியெல்லாம் நக்கல் பண்ணுவீங்கனு தெரிஞ்சுதான் இந்த சிவசம்போ ஏற்பாடு நண்பரே
நீக்குமகனுக்குத் திருமணமா
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே
வருக நண்பரே முந்தைய பதிஸில் தகவல்கள் உள்ளது.
நீக்குகலக்கல்...
பதிலளிநீக்குஎதற்கும் பாட்டிற்கு காப்பிரைட்ஸ் வாங்கி வையுங்கள் ஜி...
வாங்க ஜி இதற்குமா கிராக்கி வரும் ?
நீக்குகல்கோனா கடிக்காத பள்ளி நாட்களும் உளவோ?....
பதிலளிநீக்குநிலக்கடலையை வறுத்து அரைத்து சர்க்கரைப்பாகுடன் சேர்த்து செய்யப்பட்ட உருண்டைகள்.. எடுத்து அடித்தால் மண்டை உடைந்து விடும்...
இன்னமும் நம்ம ஊர் பக்கம் கிடைக்கிறதே...
ஆமாம் ஜி எனக்கு பிடித்தமானது இரண்டாம் வகுப்பு படிக்கும்போது... இனியாவுக்கு அடிக்கடி வாங்கி கொடுப்பேன்.
நீக்குநெல்லைக்காரர்களுக்கு கல்கோனா தெரியாதாம்ல... ஐயோ... ஐயோ.
அட... துரை செல்வராஜு சாரும் சொல்றாரே....
நீக்குசரி... உங்கள் இருவரில் யார் எனக்கு கல்கோனா வாங்கித்தரப் போகிறீர்கள்? அல்லது எங்கே கிடைக்கும் என்ற விவரமாவது சொல்லுங்கள்.
நெல்லைத்தமிழன் நான் விபரம் ஜொள்ளிட்டேன் மேலே
நீக்குதமிழரே தஞ்சை ஏரியாவில் கிடைக்கிறதாமே...
நீக்குஅன்பின் ஜி..
பதிலளிநீக்குக க க!....
வாழ்க நலம்.
நன்றி ஜி
நீக்குஅது என்ன.. க க க!..?..
நீக்குநீங்க கேட்பீங்க.ந்னு நெனனச்சேன்...
ஹா ஹா ஹா இதுதால் பல்ப்பு வாங்கிறதென்பதோ துரை அண்ணன் ?:)
நீக்குமருமகள் வரும் நேரத்தில் இப்படி கவிதையா ! என்று கேட்க நினைத்தேன், சிவசம்போ கேட்டு விட்டார்.
பதிலளிநீக்குவாங்க சகோ சிவசம்போ வில்லங்க பார்ட்டிதான்.
நீக்கு///Chivas Regal சிவசம்போ-
பதிலளிநீக்குமகனுக்கு கல்யாண நேரத்துல இவருக்கு ஏன் இந்தப்பாட்டு.... ?///
ஹா ஹா ஹா அதிரா நினைச்சதை சிவசம்போ அங்கிள் கேட்டிட்டார்ர்ர்ர்... அதானே கிளி ஏதும் மாட்டிடுச்சா கிக் கிக் கீஈஈஈஈ:)
உங்கள் அங்கிள் உங்களைப் போலவே இருக்கிறார்.
நீக்குகீழிருந்து மேலே 3 ம் பந்தி பிங்கி முதல் வரியில் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊ அது கருத்தரிக்கும் எனத்தானே வரும்..
பதிலளிநீக்குமீ க்கு டமில்ல டி எல்லோ:)
அடடே இப்படியும் எழுதலாமோ...
நீக்குஅது கதிர் அறுக்கும் என நான் நினைச்சேன். கவி அமுதம் வேறே மாதிரிச் சொல்றாரே!!!!!!!!!!!!!!!
நீக்குகதிர் அறுக்கும் இதைத்தான் 'கருதறுக்கும்' என்று சொல்லி இருக்கிறேன்.
நீக்குகர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
நீக்குகதிர் + அறுக்கும் = கதிரறுக்கும்
நிஜமாவே கவிஅமுதம் தமிழ்ல டி தானே!! சூப்பர் அதிரா!!!
நீக்குபாருங்க கில்லர்ஜி கரீக்டா பாயிண்டை பிடிச்சுட்டாங்க..
அதிரா கருதறுக்க = கதிரறுக்க.....சரிதான் அதிரா அது நாட்டுப்புற இலக்கியம்...பாருங்க கில்லர்ஜி எழுதியிருப்பது நாட்டுப்புறப்பாடல்!!
கீதா
இன்றுபோல் என்றும் மகிழ்வில் திளைத்து எழுத வேண்டுகிறேன்
பதிலளிநீக்குவாங்க ஐயா மிக்க நன்றி.
நீக்குமகனுக்கு கல்யாண நேரத்துல//
பதிலளிநீக்குபழைய நினைப்புதான்
வாங்க சகோ, இது ஊமைக்குத்து இல்லையே...
நீக்குஹாஹா சூப்பர் சகோ :)
பதிலளிநீக்குநேத்துதான் கோலி சோடாவே என்ற வாழ்வின் தத்துவார்த்தமான பாடல் வரிகளை படிச்சி பாதி மயங்கினேன் :) மேதையை உங்க கவிதை நிறைவேற்றிடுச்சி :)ஹாஹா ..ஆனா இப்படித்தான் எப்பவும் ஹாப்பியா இருக்கணும் :)
எதுக்கும் கவிதைக்கு காப்பிரைட்ஸ் வாங்கி வச்சுக்கோங்க ..சினிமாக்காரங்க சுட்ருவாய்ங்க :)
அப்புறம் அந்த கல்கோனாவை கண்ணில் காட்டுங்க ப்ளீஸ் .நான் பார்த்ததில்லை அந்த சுவீட்டை
ஏற்கனவே எனது பதிவுகளை நிறைய சுட்டுட்டாய்ங்கே...
நீக்குகல்கோனாவை கட்டாயம் தேடி படம் போடுகிறேன்.
வருகைக்கு நன்றி.
சரி கில்லர்ஜி அந்த கண்ணழகி யாருன்னு என் கிட்ட மட்டும் ரகசியாம சொல்லிடுங்க ஒகேவா. ஆனா கற்பனை நாயகின்னு மட்டும் சொல்லிடாதீங்க அப்புறம் எனக்கு கோபம் வந்துடும்
பதிலளிநீக்குவருக தமிழரே இரண்டாவது படிக்கும்போது இனியாவை கரைக்ட் பண்ணினேன்.
நீக்கு"அந்த" நினைவுகளே சங்கீதம்.
பாருங்கள் நண்பரே எப்படி சமாளித்து விட்டார் என்று.
நீக்குமீசையை பெருசா வச்சுக்கிட்டு எல்லோரையும் பயமுறுத்துறாரே தவிர, இவர் உண்மையிலேயே பயந்த சுபாவம் உள்ளவர். பாருங்க அந்த கண்ணழகி யாருன்னு ரகசியமா கூட சொல்றதுக்கு பயப்பிடுறதை.
ஹலோ, கல்யாண வேலையை பார்க்காம, இப்படி கண்ணழகின்னு படிக்கிட்டு இருக்கீங்க.
நீக்குஇருந்தாலும் பாட்டு நல்ல இருக்கு
காரைக்குடி கல்கோனா சென்னையில் கமர்கட். நல்ல பதிவு
பதிலளிநீக்குவருக நண்பரே தகவலுக்கு மிக்க நன்றி.
நீக்குஅதானே, மகன் கல்யாண நேரத்தில் எதுக்கு இந்தப் பாட்டு?
பதிலளிநீக்குபாட்டுனு வரும்போது அர்த்தத்தை மட்டுமே ரசிக்கணும்.
நீக்குபாட்டும் நடனமுமா கலக்கல் கண்ணன். படமும் அழகு. வாழ்க மணமக்கள்.
நீக்குவாங்க அம்மா மிக்க நன்றி
நீக்குசிவ சம்போ கேள்விக்கு பதில் என்னான்னு தெரிய்யலைய்யே....!!!!!!!!!!!
பதிலளிநீக்குஎனக்கும்தான் தெரியவில்லை நண்பரே
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் மகனின் திருமணம் நன்றாக நடந்தேறி இருக்கும். இன்று மணநாள் கண்ட தங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் என்னுடைய மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
மணமக்கள் நீடுழி பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
தங்கள் கலக்கல் கவிதை பிரமாதம். தடங்கலில்லாத வரிகளை மிகவும் ரசித்தேன். கல்லல் கண்ணன் கலக்கி விட்டார். கல்கோனா இடிபர்பி என்ற பெயரில் அந்த காலத்தில் சாப்பிட்டதாய் நினைவு. (வெறும் 2 பைசாக்கள்தான்.) ஒரு வேளை இது வேறோ என்னவோ.!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ திருமணம் நலமுடன் நிகழ்ந்தது வருகைக்கு நன்றி
நீக்குகலக்கல் பா/கவிதை, கலக்குங்கள்
பதிலளிநீக்குதொடருகிறேன்
வருக பாவலரே மிக்க நன்றி
நீக்குஅசத்துகின்றீர்கள் வழக்கம்போல.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி
நீக்குநாட்டுப்புறப் பாடல் வடிவில் கலக்கல் பாடல்
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குகிராமத்து ஸ்டைலில் அழகான பாடல் கில்லர்ஜி!
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
தங்களது வருகைக்கு நன்றி
நீக்குPlay The Real Money Slot Machines - Trick-Taking Game - Trick-Taking
பதிலளிநீக்குHow to Play. air jordan 18 retro men blue super site Play The Real Money Slot Machine. If you max88 are searching for a fun, exciting game jordan 18 white royal blue great site to play online, we 게임종류 have you air jordan 18 retro red from me covered.