பதவிக்காக எவனும், எவனோடும்
கூட்டணி அமைத்துக் கொள்வான் என்பது இந்த தேர்தலில் நமக்கு மிகவும் வெட்ட
வெளிச்சமாகி உள்ளது. இதை மக்களாகிய நாம் சற்றேனும் நமது எதிர்கால சந்ததிகளுக்காக
ஆலோசித்து வாக்களிக்கப் போகிறோமா ? இல்லை வழக்கம் போலவே கிடைத்தவரை லாபம்
என்று இரண்டு பக்கமும் பணத்தை வாங்கி கொண்டு வாக்களிக்கிறேன் என்ற பெயரில் நமக்கு நாமே வாக்கரிசி போடுகிறோம்.
மத்தியில் தொடங்கி மாநிலம்
வரையில் அனைவருமே குடும்ப அரசியலே நடத்துகின்றார்கள். இது தவறு என்று புரட்சியாக
பேசி கட்சி ஆரம்பித்தவனும் மனைவி, மைத்துனர், மகன், கொழுந்தியாள்
என்று எல்லோரையும் கொண்டு வருகிறான். நேற்று பிறந்தவன் எல்லாம் அரசியல் பேசுறான்
அதுவும் மரியாதையாக இதற்கும் கை தட்டுவதற்கு ஒரு கூட்டம் ஊடகங்கள் கேள்வி கேட்டால்
பதிலில்லை மேலும் கேட்டால் மக்களிடம் கேட்டு கூட்டணி அமைத்தோம் என்கிறான் அதற்கு
மேலும் கேட்டால் கோபப்படுகின்றான். எவனிடமாவது கொள்கைகள் இருக்கின்றனவா ? இதைத்தான் கேனப்பயல்கள் ஊருல
கிறுக்குப்பயல் நாட்டாமை என்பார்கள்.
இன்று நாடு நாசமாகி கொண்டு இருப்பதற்கு அடிப்படை
காரணவாதிகள் பணத்தை வீசி பதவியை பிடிக்கும் அரசியல்வாதிகளோ, அல்லது
ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு தனது தன்மானத்தை விற்கும் வாக்காளர்களோ அல்ல
அரசியல்வாதிகளின் பின்னாலேயே திரிந்து கொண்டு அவர்கள் என்ன பேசினாலும்
வார்த்தைகளின் அர்த்தம் கேளாமலேயே வாழ்க கோஷமிடும் அடிவருடிகளே காரணம். இவர்கள்
ஏன் இப்படி ஆனார்கள் வேலையில்லை
என்பதும் ஒரு காரணமே வேலையில்லா திண்டாட்டத்தின் காரணவாதிகள் யார் ?
அரசாங்கத்தை இயக்குபவர்கள்.
இந்த மக்களுக்கு அவசியமற்ற, பணவெறி, பதவிவெறி
பிடித்த அரசியல் வியாதிகளை தேர்ந்தெடுத்தது யார் ?
"மக்கள் என்னும் மாக்கள்"
இந்த கேவலம் அடுத்தடுத்த
சந்ததிகளையும் பாதிக்க வேண்டுமா ?
சிந்திப்பீர்... இனி மாறவேண்டியது மக்களே... மக்கழே... மக்கலே...
சிந்திப்பீர்... இனி மாறவேண்டியது மக்களே... மக்கழே... மக்கலே...
அன்றும், இன்றும் அரிச்சந்திரன் வாரிசின் வாய்மொழிகள் இதைக் கேட்டவர்கள் இவன்
வாயில வண்ணப்புத்து வைக்க என்று எனது தளத்தை திறந்து வைத்து திட்டக்கூடாது என்று
கேட்டுக் கொள்கிறேன் - கில்லர்ஜி
சாம்பசிவம்-
வாயில எதாவது வந்துடப் போகுதூ...
Chivas Regal சிவசம்போ-
வாந்திதான் வாயில வரும்...
ஆஆஆஆஆஆஆஆஅ மீ 1ஸ்ட் இல்ல்லேஏஏ மீ 1ஸ்ட்ட் இல்லே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ட்றுத் 1ஸ்ட் எனில் நயகராவில் தள்ளுவேன்ன்ன்ன்ன்ன்:)) இது அந்த ட்றுத்தின் காலையில காரில் சாப்பிடும் இந்தியக் கடலை மேல் ஜத்தியம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குநான் ப்ர்ஸ்டாக கருத்து இடலாம் என்றுதான் நினைத்தேன் பாவம் போனால் போகட்டும் என்று அதிராவிற்கு இடம் கொடுத்துவிட்டேன் அதிரா இப்ப சந்தோஷம்தானே... சரி சரி சந்தோஷத்தில் கவிதை கிவிதை எழுதிடாதீங்க அப்படி எழுதினால் நானே நேரில் வந்து உங்கள் முன்பு நிற்பேன் என்னை பார்த்த அதிர்ச்சியில் நீங்கள் தேம்ஸ் நதியில் குத்தித்து விடுவீர்கள்
நீக்குஇந்தியக் கடல் மேல் எதற்கு சத்தியம் ? இலங்கை கடல் மேல் செய்ய வேண்டியதுதானே...
நீக்குஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டாஆஆஆஆஆ ட்றுத் இல்லையோஒ.. போஸ்ட் பண்ணிய நேரத்தைப் பார்த்து மீ லேட்டூஊஊஉ என நினைச்சிட்டேன்ன்ன்.. சே..சே... ட்றுத்துக்கு இப்பவும் நல்ல காலம்தேன்ன்:))
நீக்குதாத்தாஆஆஆஆஆ என எல்லோருக் கூப்பிடப்போகினம் எனும் பயத்தில கில்லர்ஜி டக்குப் பக்கென புரொஃபைலை மாத்திட்டார்ர் ஹா ஹா ஹா:))... அது கடல் அல்ல கடலை:) இதுக்குத்தான் சொல்றது ட்றுத்தின் போஸ்ட்டை ஒழுங்காப் படிக்கோணும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குஹலோ கூகுள் ப்ளஸ் நேற்று காணாமல் போனதில் அந்த புகைப்படம் மறைந்து விட்டது.
நீக்குஆகவே இந்த புகைப்படத்தை போட்டேன் விரைவில் பத்து வயது பாலகன் கில்லர்ஜி படத்தை போடுவேன்.
அச்சச்சோ ட்றம்ப் அங்கிளைப் பார்த்து, தெரியாமல் காலை வச்சிட்டேன்ன்ன்ன் இது அடசியல்.. மீஇ ஓடிடுறேன்ன்ன் எனக்கு அலர்ஜி:)).. சி றீ சிவசம்போ அங்கிளுக்கு ஏனாம் வாண்டி:) வருது?:) ஓவரா ஏதாவது ஜாப்பிட்டு விட்டாரோ என்னமோ சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:))
பதிலளிநீக்குட்றம்பும் அங்கிள், ஒபாமாவும் அங்கிள் என்று சொல்கின்றீர்கள்.
நீக்குஅப்படியானால் அவர்கள் இருவரும் சகலையா ?
அதிரா வாந்தி ஏன் வருதுனா தேர்தல் நேரம்ல்ளோ!! ரீகல் ஏற்கனவே மப்புலதான் இப்ப தேர்தல் நேரம் வேற..!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஓ தேர்தல் நேரத்தில பப்புல சே சே மப்புலதான் நிற்கோணுமோ கீதா?:)..
நீக்குவாக்களிக்கும் நாள் பொன்னாளாவது புத்தி கூர்ந்து யோசிக்கும் நாட்களே.
பதிலளிநீக்குநன்றி தேவ கோட்டை ஜி.இனிய காலை வணக்கம்.
வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅரசியல். இங்கே எல்லாவற்றிற்கும் அரசியல் தான். அரசியல் மிகப் பெரிய வியாபாரம் கில்லர்ஜி! எத்தனை பணம் தேர்தல் நேரத்தில் புரள்கிறது எனப் பார்க்கும்போதே இந்த வியாபாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்!
பதிலளிநீக்குதமிழகம் மற்றும் சில மாநிலங்களில் பணப்பட்டுவாடா நடப்பது போல வட மாநிலங்களில் நடப்பதில்லை என்பதைச் சொன்னால் நம் மக்களுக்கு கோபம் வரலாம்! இங்கே பணம் கொடுப்பதில்லை. சில குடிசைப் பகுதிகளில் சாராய விநியோகம் நடப்பதுண்டு. மற்றபடி பணப் பட்டுவாடா இல்லை என்றே சொல்லலாம். தமிழக மக்களுக்கு பணம், இலவசப் பொருட்கள் எனக் கொடுத்துக் கொடுத்தே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இப்படி பிச்சை போட்டுவிட்டு வருடம் முழுவதும் கொள்ளை அடிக்க வசதி!
வாங்க ஜி தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குதங்களது சமூக கோபமும் விளங்குகிறது.
காசுக்கு தான் தமது வாக்கு என்பது 70களிலேயே திரைப்படங்களில் நாம் கண்டது தான் நண்பரே.அப்போதிலிருந்து நிலைமை இப்படி தான் என்பது வேதனைக்குரியது .
பதிலளிநீக்குஆம் நண்பரே உண்மைதான். வருகைக்கு நன்றி
நீக்குஇன்றைய நிலையில் மிகவும் லாபகரமானதொரு தொழில் அரசியல்தான். இதில் இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்ற பேதமே இல்லை!
பதிலளிநீக்குமக்களில் எத்தனை சதவீதம் நல்லவர்கள் ஜி ?
நீக்குஎனக்குத் தெரிந்து 15% நல்லவர்கள் இருந்தாலே ஆச்சர்யம். நிச்சயம் 30-40%பேர் ஜனநாயகத்துக்கு லாயக்கில்லாதவர்கள் (இவர்கள்தான் வாக்களிப்பதில்லை. நிச்சயமான உடல் பிரச்சனை உள்ள 1% விட்டுவிடுவோம். வாக்களிக்காத மக்களுக்கு இந்தியாவைப் பற்ற்ப் பேசவோ, அரசியலைப் பற்றிப் பேசவோ உரிமையில்லை). 15%மக்கள் பணத்துக்காக மட்டும் வாக்களிக்கிறவர்கள். இவர்கள்தான் தேர்தல் ரிசல்டை மாற்றி அமைப்பவர்கள்.
நீக்குஇந்த தேர்தல் முதல் சுயேச்சைகளில் நானறிந்த ஒரு நல்ல மனிதருக்கு வாக்களிக்கப் போகிறேன்
நீக்கு(அவர் நிச்சயம் தோற்று விடுவார் என்பது வேறு)
கில்லர்ஜி... உங்கள் முடிவுல ரெண்டு நன்மை உண்டு. 1. உங்களுக்கு ஏற்படும் திருப்தி. நல்ல ஆளுக்கு வாக்களித்தோம் என்பது 2. அந்த ஆளுக்கு ஏற்படும் திருப்தி. நல்லவங்கன்னா, கட்சி பார்க்காம அவங்களுக்கு வாக்களிக்கவும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை. இதனால் நல்லவர்கள் தேர்தல் அரசியலில் இன்னும் வருவதற்கு வாய்ப்பு. வாழ்த்துகள்
நீக்குஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள்.
நீக்குஐனநாயகம் பணநாயகமாகி பல காலம் ஆகி விட்டது... இன்று ஐனநாயகமே அழியும் நிலையில் உள்ளது...
பதிலளிநீக்குவிவசாயம் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது...
நீங்கள் சொல்வது உண்மையான வார்த்தை ஜி ஆனால் இதற்கு காரணவாதிகள் யார் ?
நீக்குஅடுத்த தேர்தல்ல நம்ம கட்சிகளில் ஒன்று டிரம்ப் கூட கூட்டணி வைக்க போகிறார்களா... அப்படி வைத்தாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை.
பதிலளிநீக்குவருக நண்பரே நடக்கலாம்... நமது மக்கள் இதையும் நம்புவார்கள்.
நீக்குதொழில் தர்மம் பாஸ்
பதிலளிநீக்குவருக தோழரே இதுதானா அது...
நீக்குகாசை எடுத்து நீட்டு..
பதிலளிநீக்குகழுதை பாடும் பாட்டு..
ஆசை வார்த்தை காட்டு..
உனக்கும் கிடைக்கும் ஓட்டு!...
கவியரசர் தீர்க்க தரிசனமாக அன்றே சொல்லி விட்டார்...
ஸூப்பர் வரிகள் ஜி
நீக்குஉங்க வீட்டுப் பிள்ளை...
பதிலளிநீக்குஅப்படின்னு சொல்லிக்கிட்டு அந்தக் காலத்தில வந்தவங்களை இழுத்துப் போட்டு சாத்தியிருந்தா இன்னைக்கு இந்த நிலமை வந்திருக்காது...
உண்மைதான் ஜி நம்ம ஆளு எல்லாத்தையும் நம்புனானே...
நீக்குவாயசைத்ததுக்காக... எம்ஜிஆர் பாட்டு சொல்றவன்தானே தமிழன்.
ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்...
பதிலளிநீக்குஒரு படி நிச்சயம்!....
தெரிந்தே பொய் பேசப்பட்டது..
போதாக்குறைக்கு
தின்ற கொழுப்பினால் சும்மா இருக்க முடியாமல் இந்த ஆள் அந்த ஆளை துருப் பிடித்த துப்பாக்கியால் சுட்டான்...
அன்றைக்கு பிடித்தது ஏழரை...
அந்த குருட்டுப்பயல் ஒழுங்காக சுட்டால் இந்நிலை வந்திருக்குமா ?
நீக்குகில்லர்ஜி...நிஜமாவா சொல்றீங்க..... அவர் இல்லைனா, 15 வருடங்களுக்கு முன்னாலேயே தமிழகம் முழுவதுமாக விற்கப்பட்டிருக்குமே... இப்பவே ஒவ்வொருவரும் 20-30 கோடி ரூபாய்னு பிடிபட்டுக்கிட்டிருக்கான்.
நீக்குதிரைப்படத்தில் நல்லவனாக நடித்தவனை அப்படியே உண்மையென்று நம்பி வாக்களித்த கூட்டம் தமிழக மா'க்கள்.
நீக்குநம்பியாரை திட்டாத தாய்மார்கள் உண்டா தமிழகத்தில் ?
கில்லர்ஜி.... நாஞ்சில் சம்பத்தோட தலைவர் வைகோவுக்கு இதுமாதிரி (இல்லை) மூன்றுவகையான காணொளிகள் உண்டே... அதையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குவைகோ தலைவன் என்ற சொல்லுக்கு அருகதை அற்றவர்.
நீக்குகையில்காசில்லாமல் கடவுளே வந்தாலும் கதவைச் சாத்தடி
பதிலளிநீக்குவாங்க ஐயா உண்மையான வார்த்தை.
நீக்குவட மாநிலங்களில் சிலவற்றில் பிச்சை எடுப்பதோ, இலவசமாய் ஏதேனும் வாங்கிக் கொள்வதோ கேவலம். இந்த ஓட்டுக்குத் துட்டு கொடுக்கும் வழக்கம் அங்கெல்லாம் அதிகம் பார்க்க முடியாது! இங்கேயோ பிஸ்கட் பாக்கெட் கொடுத்தால் கூடப் பாய்ந்து வருவார்கள். என்னமோ போங்க!
பதிலளிநீக்குஉண்மைதான் நம்மவர்கள் இலவசமாய் கிடைக்கும் நூறு ரூபாய் பொருளை வாங்க, நானூறு ரூபாய் சம்பளத்தை இழக்க தயாராவார்கள்.
நீக்குஇகழ்ந்த வாயே புகழ்ந்து பாடும் நேரம்.
பதிலளிநீக்குஇதுதான் உலகம்.
மக்கள் விழித்து கொண்டால் நல்லது.
வருக சகோ மிக்க நன்றி தங்களின் கருத்துக்கு...
நீக்குஓட்டுக்குப் பணம் கொடுப்பவன் வாங்குபவன் இருவரையுமே நடுதெருவில் நிறுத்திக் கசையடி கொடுக்க வேண்டும். இது ஜனநாயக நாட்டில் சாத்தியமில்லை. எனவே.....
பதிலளிநீக்குசர்வாதிகார ஆட்சி வேணும்னு நான் சொல்லல[எதுக்கு வம்பு?]. யானை [துதிக்]கையில் மாலையைக் கொடுத்து.....
தொகுதிதோறும், ஒருத்தனைத் தேர்ந்தெடுக்கச் செய்யலாம்! பைசா செலவில்லை!
யானையக் கொடுமைப் படுத்துறானுங்க..ந்னு எவனாவது ஒருத்தன் கோர்ட்டுக்குப் போய் தடை வாங்குவான்!...
நீக்குநண்பரே ஒருவேளை யானை மாலையை என் மீது போட்டால் ???
நீக்குநிறைய பேருக்கு உறியடி கிடைக்கலாம்.
கேரளத்தில் பணம் விநியோகம் இல்லை. ஆனால் அதற்கு பதில் கம்யூனிச இடது சாரிகள் working fund என்ற முறையில் நம்மிடம் இருந்து பணம் வசூலிப்பார்கள்.
பதிலளிநீக்குJayakumar
எது எப்படியாயினும் ஒருக்காலும் மலையாளிகள் வாக்களிப்பதற்கு விலை போவதில்லையே...
நீக்குரெண்டு காணொளியில் வருவதும் ஒரே ஆளா ?? எப்படி இப்படி மாத்தி பேச முடியுது ?
பதிலளிநீக்குநான் ஊரில் ஒரே ஒருமுறைதான் வாக்களித்தேன் முதலில் போட்ட ஒட்டு அது ..அப்போ கேன்வாஸிங் வந்தாங்க ஆனா பணம்லாம் கேள்விப்படல அதான் கடைசியா நம்மூர் இல் போட்ட வோட்டு அதோட ஓட்டு இங்கே வெளிட்டில்தான் போடறேன் ஒரு மைக் சத்தம் கூட கேட்காது :) அமைதியா இருக்கும் .
வாங்க சகோ இப்படிப்பட்ட பச்சோந்திகள்தான் தமிழக அரசியல்வாதிகள்.
நீக்குகேரளத்தில் ஒட்டு விலைக்குப் போகாது..தமிழ்நாட்டை நினைத்து வேதனை...நான் பிறந்த மண்..
பதிலளிநீக்குதுளசிதரன்
இது சிவாஜி கணேசன் நடித்த படத்தோட பெயராச்சே...
நீக்குகில்லர்ஜி..ஏம்பா இப்படி குதிரைவாலியோட பாஸ் படம் எல்லாம் போட்டு..அதுவும் நம் ஊர் தேர்தலுக்கு.....ஹாஹாஹா
பதிலளிநீக்குநம்ம கட்சி நோட்டாவாச்சே!!!! சுயேச்சைக்கு போடுங்க ஜி. நான் அங்கு இருந்த வரை சுயேச்சைக்கு தான்..அதுவும் நல்லவரா இருந்தா...மத்தபடி.மம்ம்ம்ம்ம்ம் நோ சாய்ஸ்...
கீதா
ட்றம்ப்செட் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆதரவு செய்கிராராமே... அதனால்தான் அவரோட படம்.
நீக்குநான் இந்த பக்கமே வரலை
பதிலளிநீக்குநீங்க இந்தப்பக்கம் வரமாட்டீங்கன்னு தெரியுமே...
நீக்குநேர்மையாக வாக்களிப்போம்
பதிலளிநீக்குசனநாயகம் காப்போம் நண்பரே
நண்பரின் வருகைக்கு மிக்க நன்றி.
நீக்குமக்களை விட மாக்கள்தான் அதிகம்..அதுவும் சுய நல மாக்கள்தான் இன்னும் அதிகம் நண்பரே..........
பதிலளிநீக்குஆம் நண்பரே உண்மையே...
நீக்குநாடு மேம்பட
பதிலளிநீக்குமக்கள் உள்ளத்தில்
மாற்றம் மலர வேண்டும்!
அது வராது நண்பரே... அதற்கான சாத்தியக்கூறுகளே இல்லையே...
நீக்குகொஞ்சம் கோபமாக சொன்னாலும், உங்கள் வருத்தம் நியாயமானது. இலவசமாக எதையும் பெற்றுக் கொள்வது கேவலம் என்னும் நிலை வந்தால் ஒழிய இந்நிலை மாறாது.
பதிலளிநீக்குவாங்க மேடம் சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.
நீக்கு‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற ப(பா)ட்டுக்கோட்டையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. வாக்காளர்களாய் பார்த்து பணம் வாங்குவதை நிறுத்தினாலொழிய இந்த ‘வியாதி’யை ஒழிக்கமுடியாது. மக்கள் மாறுவார்கள் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.
பதிலளிநீக்குவருக நண்பரே சரியான பாடலோடு அழகிய கருத்துரை தந்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு. மக்கள் படும் கஸ்டங்களை உணர்ந்து மக்கள்தான் திருந்த வேண்டும். நல்ல விலைக்கு, நேர்மையாக உழைத்து வாங்கும் பொருட்களே உத்திரவாதங்களுக்கு முன் கை கடிக்கும் போது இலவசங்கள் எத்தனை நாளைக்கு? இனியாவது மக்கள் புரிந்து கொண்டால் சரி.! அருமையான பதிவு.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்போம் நிலைமை மாறும்.
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி.
நீக்கு