இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2019

மூஸாலி கோயில் (2)


முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

வசியைக் காணவில்லை சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது தவசி தவசி என்று அலறி விட அந்த சத்தம் மலையில் எதிர் முகட்டிலிருந்து எதிரொலித்து மீண்டும் இவன் காதுக்கே வந்து பயமுறுத்த என்ன செய்யலாம் யோசித்தவன் அப்படியே கீழே உட்காரந்து கண்களை மூடிக்கொண்டு தனது குலதெய்வம் குலோத்துங்கன் சாமியை வேண்டினான் சாமி நீ என்னை மட்டும் வீட்டுக்கு பத்திரமாய் கொண்டு போயிட்டா இந்த வருஷம் களரிக்கு கிடா வெட்டுறேன்... மனதுக்குள் இப்படியே நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு திடீரென தூக்கி வாரிப்போட்டது காரணம்.

யாருடா நீ ?
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் சட்டென எழுந்தான் எதிரே இரண்டு பேர் சிவப்பு நிறத்தில் உடையணிந்து கையில் கம்பும் வைத்திருந்தார்கள்.

அது வந்து... வந்து... தவசி... தவசி....
யாருடா... தவசி ?

எங்கூட வந்தான் இப்போதான் திடீர்னு காணோம்...
நீ எங்கிருந்து வர்றே ?

வடங்காடு...
நீ தலைச்சன் புள்ளையா ?

ஆ... ஆமா...
ம்... கிளம்பு.


த... த...வ..சி... ?
அவனை மோனலிஷா தூக்கிட்டுப் போயிட்டா....
சிவமணிக்கு சர்வமும் அடங்கி விட்டது...

எந்திரிச்சு வா எங்கூட...
எ.....ங்கே... ?

வா கோயில் பலி பீடத்துக்கு...
இல்லை நான் வரமாட்டேன்... பயமா... இருக்கு.

மலங்கோடா நான் இவனை பீடத்துக்கு தூக்கிட்டு வர்றேன்.
இல்லை செங்கோடா நான் தூக்கிட்டு வர்றேன் இன்னைக்கு நான்தான் இவனது குருதியைக் குடிப்பேன்.
சிவமணிக்கு மயக்கம் வருவது போலிருந்தது...


இல்லை நேற்றுதானே நீ குடித்தாய் இன்று எனது முறை ஆகவே நான்தான் தூக்கி வருவேன்.
இல்லை எனக்கு இன்றைக்கு அகோரப்பசி நான்தான் குடிப்பேன்.

முதலில் உன்னை ஒழித்து விட்டுதான் எனக்கு மறுவேலை..
சட்டென மலங்கோடனும், செங்கோடனும் உக்கிரமாக மோதிக்கொண்டார்கள் இருமலைகள் மோதுவது போல் இருந்தது

உன்னால்தான் எனது பசி அடங்க மறுக்கின்றது உன்னை ஒழித்தால் எனக்கு தினம் முழுப்பசியும் அடங்கும் அவர்களின் கர்ஜனையே சிவமணியை பயமுறுத்த அரிக்கேன் விளக்கொளியில் அவர்களின் முகத்தைக் கண்டதும் மயங்கி கீழே விழுந்தான்.

தொடரும்...

37 கருத்துகள்:

  1. நடுச்சாமத்துல சாமந்திப்பூ
    ஆள உசுப்புது!...

    ஆகா.... முழிச்சுப் பாத்தா..
    சாமக் கோடாங்கி.. உடுக்கைச் சத்தம்..
    மணையோட்டு மாலை...

    இங்கே என்னான்னா..
    செங்கோடன் வங்கோடன் சண்டை..
    ரத்தத்துக்காக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஸூப்பர் பாட்டு ஜி மூதேவிங்க ஆளுக்கு பாதியா குடிச்சு தொலையாம அடிச்சுக்கிறாங்களே...

      நீக்கு
  2. ஏதேது.. போற போக்கைப் பார்த்தா
    மூஸாலி கோயிலுக்கு டவுன் பஸ் விட்டுடுவாய்ங்க போல இருக்கே!...

    மூஸாலி கோயிலுக்கு மூனு வாரம் விடாம போனா புதையல் கிடைக்குமாம்...
    குட்டிச் சாத்தான் குடி பஜார்....ல கேள்விப்பட்டேன்...

    ஓய்!.. மூனு வாரம் முழுசாப் போறதுக்குள்ளே மூளைய மூஸாலி உறிஞ்சிக் குடிச்சுடுமே!!... அதுக்கு என்ன செய்வீரு!...

    அதுக்குத் தானே தவசி மாதிரி ஆளை தள்ளிக்கிட்டுப் போறது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதையல் கிடைக்குதாமா... நீங்களே புரளியை கிளப்பி விடுறீங்களே... ஜி

      நீக்கு
  3. ஆஹா... ரத்தம் குடிக்க சண்டை போடறாங்களா.... தவசிய வேற மோனலிசா தூக்கிட்டுப் போயிருக்கா.... என்ன நடக்குது....

    அடுத்த பகுதிக்கு I'm waiting! :)

    தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் செம.....

    பதிலளிநீக்கு
  4. ரத்தம் என்ன மேங்கோ ஜூஸாய்யா...போட்டி போட்டு குடிப்பதற்கு! படிக்கவே பயங்கரமா இருக்கே..(இரண்டாவது வரியை காதலிக்க நேரமில்லை பாலையா குரலில் படிக்கவும்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்ஜி இவங்கே ஜூஸ் மாதிரித்தான் குடிப்பாங்கே போல...

      நீக்கு
  5. காலங்கார்த்தாலே நாம காஃபி குடிக்கிறாப்போல் இவங்களுக்கு ரத்தம் குடிக்கணும் போலிருக்கு! இஃகி,இஃகி, படங்கள் எல்லாம் தேடிப் பிடிச்சுப் போட்டிருக்கீங்க. செங்கோடன் பெயர் சரி! அதென்ன மலங்கோடன்! நல்லா இருக்கு. பேய், பிசாசெல்லாம் வருதா! ரசிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரை இப்படி எல்லாம் நக்கல்ஸ் பண்ணாதீங்க... இந்தப் பேரெல்லாம் அவங்க ஐயா வனங்கோடன் கொலைதெய்வத்துக்கு வேண்டிக் கொண்டு வச்சது.

      நீக்கு
  6. அடுத்த பதிவுக்கு வர்றப்ப
    வேப்பிலையும் கையுமாத்தான் வரணும்!...

    பதிலளிநீக்கு
  7. நல்லாவே பயமுறுத்தல் செய்கிறீர்கள்!
    படங்கள் வேறு பயமுறுத்துகிறது.

    தலைச்சன் புள்ளை என்றால் அந்தக் காலத்தில் ஆபத்து என்பார்கள், பாலம் கட்ட, ஆற்றில் வெள்ளம் நிற்க , புதையல் கிடைக்க என்று எத்தனையோ காரணங்களுக்கு தூக்கி சென்று விடுவார்கள் என்பார்கள்.

    தலைச்சன் பிள்ளை இல்லை என்று சொல்லவேண்டியது தானே சிவமணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      சிவமணி என்னோட சேர்ந்த அப்பாவியாக இருப்பான் போல... உண்மையை உளறிட்டான்.

      நீக்கு
  8. குலோத்துங்கன் சாமி வருவாரா...?

    ஜி... இணைப்பை சரிபார்த்து மாற்றவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பிறகு கணினிக்கு போகவேண்டும் சூழல் சரியில்லை.

      நீக்கு
  9. ரெண்டு பேரும் சண்டை போட்டு முடியறதுக்குள்ள நம்ம ஆளு மாயமாயிருவான் சரியா ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் (கில்லர்ஜி) எழுதிய விதி எப்படியோ... ?

      நீக்கு
  10. ஓ சைக்கோ த்ரில்லரா...ரெண்டு சைக்கோஸ் போல!!

    அது சரி ரெண்டு கோடனும் சண்டை போடும் போது சிவமணி டப்புன்னு சத்தம் போடாம நகர்ந்து போயி ஒளிஞ்சுருக்கலாமே!! எங்காச்சும் மரத்துகிடையில அப்படியே லைட்டையும் ஆஃப் செய்துவிட்டு....ஹூம் பயந்துவிட்டான் போலும்...

    பார்ப்போம் ரெண்டு கோடனும் ஒருத்தொருக்கொருத்தர் சண்டை போட்டு ரெண்டுமே செத்துவிடுவாங்களோனு...

    படங்கள் நல்லாருக்கு ஜி

    இதுக்கு வீடியோ போடாம விட்டுட்டீங்களே கில்லர்ஜி. ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிவமணிக்கு இந்த ஓசனை வந்தால் நல்லதுதான் பார்ப்போம் என்ன நடக்குது என்று...

      காணொளி இருக்கிறது தற்போது கணினியில் இருக்கிறது.

      நீக்கு
  11. பெயரை[மோனலிஷா]ப் பார்த்தா அழகான பொண்ணுன்னு தோணுது. தவசி கொடுத்து வைத்தவன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகினி தூக்கிட்டு போயிருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள்.

      லேட்டஸ்ட்டாக மோனலிஷா என்றதும் தங்களது சிந்தை வேறு வழியில் போய் விட்டதே...
      தவசி பாவம் இல்லையா ?

      நீக்கு
  12. ஆகா
    காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கதை நல்ல நகர்வு. கடைசியில் சிவமணி பயப்படுவதற்கு ஏற்றாற்போல் ரத்தம் குடிக்கிற ரத்தக்காட்டேரிகளா வந்து நிற்க வேண்டும்.! அவர்களின் பேர்கள் என்னவோ சாத்வீகமாகதான் இருக்கிறது. ஆனால், உருவங்கள் சிவமணியை மட்டுமல்லாது அனைவரையும் பயமுறுத்தும்படியாக உள்ளது. சிவமணி மயக்கம் தெளிவதற்குள், ரத்தக் காட்டேரிகள் சண்டையிட்டு முடிவதற்குள், தன்னை தூக்கிக் கொண்டு போன மோனாலிஷாவை தன் மயக்கும் புன்னகையில் சமாளித்து விட்டு தவசி திரும்பவும் வந்து விட்டால் நன்றாக இருக்கும். ஹா. ஹா. ஹா.

    படங்கள் கதைக்கேற்றவாறு நல்ல தேர்வாக உள்ளது.கதாரியரின் முடிவு எவ்வாறு கடமையை நகர்த்துகிறது என பயத்துடன் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

      தவசி வருவது அவசியமே...
      சிவமணிகூட தவமிருந்து பெற்ற பிள்ளையே...

      விதி எப்படி என்று எழுதியவருக்கே தெரியும்.

      நீக்கு
  14. கடமை என வந்து விட்டது.. கதையை என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. அது என்னங்க மலங்கோடன்.
    அப்புறம் - முதல் பகுதிக்கான இணைப்பு வேலை செய்யவில்லை நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது அவங்க ஐயா வனங்கோடனை கேட்க வேண்டிய கேள்வி.

      இணைப்பை சரி செய்கிறேன்.

      நீக்கு
  16. இதெல்லாம் சிவமணிக்கு கனவில் வந்தவைதானே? தொடர்கிறேன். கனவா அல்லது நனவா என அறிய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கு இப்படியொரு சந்தேகமா ?

      நீக்கு
  17. முந்தின பதிவில் தவசி பாட்டுப்பாட போயிருப்பார் என்பது எனது மொழியில் பாட்டு பாடுவது ஒன்பாத் போவது அதாவது சிறுநீர் கழிக்க செல்வது.அதைத்தான் தவசி பாட்டு பாட போயிருப்பார் என்றேன்...சரிங்களா...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இந்த மொழி எனக்கு இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன் நண்பரே...

      நீக்கு
  18. ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமென்பார்களே செங்கோடனும் லங்கோடனும் அடித்துக் கொள்ளும்போது சிவமணி தப்பித்து விட்டாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் பயன்படுத்தி புத்தி இருந்தால் தப்பிக்கலாம்.

      நீக்கு