மாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா ?
இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு
வந்துச்சு.
என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படியிருக்கு ?
சரியில்லை மச்சான் வியாபாரம் சுமாராத்தான்
இருக்கு.
மாமாகிட்டே பணம் வாங்கி டெவலப் பண்ணுவேன்.
வேண்டாம் மச்சான் அவரு தர மாட்டாரு...
இங்கேதானா ஏதாவது வேலை பார்த்து கொடுங்க மச்சான் நானும் பொழைச்சுக்கிருவேன்
இங்கே மும்பையிலே உனக்கு என்ன தெரியும் ? ஹிந்தி
பேசுறவனையே ஏமாத்திடுவாங்கே.. நீயே கூமுட்டை.
என்ன இப்படி சொல்றீங்க, மச்சான் மச்சுவாடியிலருந்து
வரும்போது நீங்களும் என்னை மாதிரித்தானே இருந்திருப்பீங்க ?
ஏண்டா டேய் என்னை கூமுட்டைனு சொல்றியா... இதுதான்டா
உசிலை குசும்புனு சொல்றது ?
அப்படிச் சொல்லலை மச்சான் கோவிச்சுக்காதீங்க.
வா வெயிலா இருக்கு ஏதாவது ஜூஸ் குடிப்போம்.
சாலையோர பெட்டிக்கடையில்...
ஜீ ஸாப் தோ மேங்கோ ஜூஸ் டாலோ.
சொல்லி விட்டு பக்கத்திலிருக்கும் அண்டாவில்
சங்கிலியில் தொங்கி கொண்டு இருந்த டம்ளரை எடுத்து தண்ணீர் அள்ளப்போகும் போது..
கடைகாரன் சொன்னான்.
பையா தண்டபாணி ஸாகியே ஓ பர்தன்’’மே பக்கடோ.
மச்சான் என்னைப்பத்தி இவங்கிட்டே எல்லாத்தையும்
சொல்லிட்டீங்களா ? எவ்வளவு திமிரு ராஸ்கல்.
உன்னைப்பத்தியா... என்னடா சொல்றே ?
அதான் மச்சான் எம்பேரு இவனுக்கு எப்படித் தெரியும் ? பட்டப் பெயரையும் சொல்றான் முளைச்சு மூணு இலை விடலை என்னை
பையானு வேற சொல்றான்....
டேய் முடுமை அவன் பையா’’னு சொன்னது என்னை. அது ஹிந்தியில் மரியாதையான
வார்த்தை தண்டாபாணி’’னு உன் பெயரைச் சொல்லலை
குளிர்ந்த தண்ணீர் பிடிச்சுக்கோ’’னு சொல்றான் அது பக்கடா இல்லை பக்கடோ
இதுக்குத்தான் சொன்னேன் கூமுட்டை’’னு.
அப்படியா... எனக்கு தெரியாதுல, மச்சான்
ஹிந்தி ஈசியா படிச்சிடலாமோ... ?
நீ கிழிச்சே, முடுதாரு...
இருப்பினும் தண்டபாணியின் மனதில் சந்தேகம்
மச்சான் மச்சக்காளை கடைகாரனோட சேர்ந்து கிட்டு நம்மை லந்து கொடுக்கிறானோ... ஜூஸ்
குடித்ததும் பணத்தைக் கொடுத்து மீதி பாக்கியை கொடுத்த கடைகாரன் சுக்ரியா என்றான்.
மச்சான் என்னமோ... சுக்குனு சொன்னான் சுக்கு
எதுக்கு ?
டேய் நன்றி சொன்னான் வாடா...
நீங்க வேலை செய்யிற கம்பெனியில, எனக்கும்
வேலை வாங்கி கொடுங்க மச்சான் நல்லபடியா வேலை செய்யிறேன்.
சரி பார்ப்போம் என்னோட பெயரை கெடுத்துட மாட்டியே ?
சத்தியமா, இல்லை மச்சான்.
சரி வா ! முதலாளியைப் பார்ப்போம்.
மச்சக்காளை தனது கம்பெனிக்கு தண்டபாணியை
அழைத்துக் கொண்டு போய் முதலாளி கிஷோர் லாலை சந்தித்தான்.
நமஸ்கார் ஜி
சார் நமஸ்காரம்
நமஸ்கார் க்யா சமாச்சார் ?
நமஸ்காரம் என்ன விசயம் ?
ஜி ஏ மேரா சாலா மொளுக்ஸே ஆத்தா ஹே... நாம்
தண்டம் உஸ்கோ காம் ஸாகியே....
சார் இவன் என்னோட மாப்ளே ஊரிலிருந்து வந்துருக்கான் பெயர்
தண்டம் இவனுக்கு வேலை வேணும்
உஸ்கோ க்யா காம் மாலுமே ?
இவனுக்கு என்ன வேலை தெரியும் ?
லோடுமேன் காம் தேதோ ஜி.. பாத்மே தேக்கேகா..
லோடுமேன் வேலை கொடுங்க அப்புறம் பார்க்கலாம்
ஆத்மி பாகல் வாலா ஐஸாஹே...
ஆளு பைத்தியம் மாதிரி இருக்கான்
பகல் வேலையே பாக்குறேனு சொல்லுங்க மச்சான்.
டேய்... சும்மா இருடா முண்டம்.
பைலே தண்டம் போல்த்தே, அபி முண்டம்
போல்த்தா.... ஹே உஸ்கோ சகி நாம் க்யா ?
முதலில் தண்டம்’’னு சொன்னே, இப்ப முண்டம்’’னு சொல்றே சரியான பெயர் என்ன ?
நஹி... ஜி உஸ்கோ சகி நாம் தண்டபாணி.
இல்லை சார் இவன் சரியான பெயர் தண்டபாணி
தண்டபாணி ? க்யா நாம் யா... ஆர்..... ஹா ஹா ஹா.. ஓ.. பீ பாகல் போல்த்தா ஹே... னா... க்யூ ?
தண்டபாணியா ? என்னய்யா பேரு ஹா ஹா ஹா அவனும் பாகல் சொன்னானே ஏன் ?
ஜி ஒ... பாகல் நஹி பகல் போல்த்தே...
சார் பாகல் இல்லை பகல் சொன்னான்
பகல் க்யா மத்தலப்.... ?
பகல் என்ன அர்த்தம் ?
ஸாப் மேரா பாஷா தமிழ்’’மே Day
சார் எங்கள் தமிழ் மொழியில் பகல்
ஏ பாகல் பார் லேகி ஜாவ் காம் நஹி.
இந்த பாகலை வெளியே கொண்டு போ வேலை இல்லை
ஜி தொடா க்ருபயாக் கரோ...
சார் கொஞ்சம் தயவு செய்ங்க
தேக்கோ ஏ பாகல்வாலா அபி ரயில்வே ஸ்டேஷன்’’மே ஜாக்கே மொளுக்மே
பேஜாவ் நஹியே கல் ஸே... தும்க்கோ இதர் காம் நஹி பார் ஜாவ்.
இதோ பார் இந்த பைத்தியத்தை இப்பவே ரயில்வே ஸ்டேஷனுக்கு
கூட்டிப்போய் ஊருக்கு அனுப்பலை நாளை முதல் உனக்கு இங்கு வேலை இல்லை
சொன்ன கிஷோர் லால் ஃபைலை எடுத்து புரட்டத் தொடங்கினார்
இதற்கு மேல் நின்றால் மரியாதை இல்லை வெளியேறினான். அவர் சொன்னால் சொன்னதை செய்யும்
கறார் பேர்வழி என்பதை நன்கே அறிந்த மச்சக்காளை தண்டத்தை Sorry தண்டபாணியை அழைத்துக்
கொண்டு ரூமுக்கு வந்து அவனது மஞ்சள் துணிப்பையை எடுத்துக் கொள்ளச் சொன்னான் உடன்
ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டான்.
என்ன மச்சான் எங்கே போறோம்... முதலாளி
வேலைக்கு சம்மதிச்சுட்டாரா ?
உங்கிட்டே எவ்வளவு பணம் இருக்கு ?
பணம் ஏது மச்சான்.. நேத்துலருந்து...
நீங்கதானே எனக்கு செலவு செய்றீங்க ?
சரி முதலாளிக்கிட்டே எல்லாம் பேசிட்டேன்.
என்ன பேசினீங்க, அதை விபரமா சொல்லுங்க ?
உனக்கு அதெல்லாம் புரியாது ஹிந்தி தெரியாததால
உனக்கு சென்னை பிராஞ்ச் கம்பெனிக்கு அனுப்பச் சொல்லி இருக்கார் சென்னைக்கு
டிக்கெட் எடுத்து கொடுத்து உனக்கு வேலை தெரியுதானு செக்கப் நடக்கும் இனிமேல்
எக்காரணம் கொண்டும் மும்பை ரயிலில் மட்டுமில்லை எந்த ஊருக்குமே ரயில்ல ஏறவே கூடாது
நீ சென்னை போனதும் இந்தா கையில் ஐநூறு ரூபாய் செலவுக்கு வச்சுக்க, உடனே
உசிலம்பட்டி பஸ்ஸுல ஏறி வீட்டுக்குப்போ நான் மாமாவுக்கு போன் செய்து விபரம்
சொல்றேன்.
அப்ப வேலை ?
உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரும்.
சரி மச்சான் ரொம்ப சந்தோஷம்.
இருவரும் பாந்தர் ரயில்வே ஸ்ஷடேனுக்கு
டாக்ஸியில் போனார்கள். புனேவைக் கடந்த மும்பை எக்ஸ்ப்ரெஸ் தமிழ் நாட்டை நோக்கி மலைக்
குகைக்குள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, தண்டபாணி தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து
அந்த பொருளை எடுத்து ஆசையாய் தடவிப்பார்த்து மீண்டும் பாக்கெட்டுக்குள் நுழைக்க...
அதேநேரம்..
அலுவலக கண்ட்ரோல் ரூம் மானிட்டரில் இரண்டு
செக்யூரிட்டிகளுடன் கிஷோர் லால் மானிட்டரில் பார்த்துக் கொண்டு இருந்தார்
திரையில்... லால் அன்னாந்து பார்த்து தண்ணீர் குடிக்க, மச்சக்காளை குனிந்து
நெற்றியை தடவிக்கொண்ட, அதே நொடி டேபிள் மேலிருந்த லாலின் விலை உயர்ந்த ஆப்பிள்
போனை படக்கென்று எடுத்து பேண்டில் சொருகினான் தண்டபாணி.
சிவாதாமஸ்அலி-
மாப்பு ஆப்பிள் போன்’’னால் வச்சுட்டியே... ஆப்பு.
இதுதான் நடக்கப் போகுது ஜி... காவி கம்னாட்டிகள் இதை தான் செய்யப் போகிறார்கள்... பாவிகள்...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் ஜி.... மச்சான், உள்ளூர்ல வேலை இல்லைனு மும்பை போனார். அங்க போய் வேலை கேட்கும்போதே கேட்கற இடத்தில் செல்ஃபோனைச் சுட்டார். இதுக்கும் காவிகளுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியலையே.
நீக்குஇங்கே தமிழ்நாட்டையே சுட போகிறார்களே... அதுக்கு என்ன சொல்வது...,?
நீக்குதமிழ்நாட்டை ஏன் சுடணும் டிடி? புரியலை! அவங்களுக்குத் தமிழகத்தின் மீது மட்டும் என்ன வஞ்சம் அல்லது கோபம்? காரணம் அதுவும் சரியான காரணம் கொடுங்க! எங்கே போனாலும் தமிழ்நாட்டுக்காகப் பேசும் ஒரு ஆட்சியாளரைக் கண்டால் பிடிக்கலைனால் ஒதுங்கிக்கலாம்! தமிழ்நாட்டில் வந்து என்ன கெடுதல் செய்திருக்கிறார்கள் என்பதைப் பட்டியல் இடுங்கள்.
நீக்கு1/100? : தூத்துக்குடி
நீக்குபலவற்றை தெரிந்தே "அம்மா" அவர்கள் கேட்கிறார்கள்... பொள்ளாச்சி பற்றி கேட்டால், விதி என்று சொல்லும் உயர்ந்தவர்கள் அம்மா அவர்கள்... இங்கு அடிமை அரசு இருக்கும் வரை - என்ன செய்வது...? அந்த A1 JJ அம்மா இருந்தால் நிலை வேறு...!
நீக்குமட சங்கி கூட்டம்...
இன்று ஒரு பதிவை, (http://sivamgss.blogspot.com/2019/11/blog-post_11.html) முகநூலில் இருந்து சுட்டு போட்டு உள்ளார்கள்... அதையும் குறிப்பிட வேண்டும்... நன்றி...
அனைத்து உறவுகளுக்கும் வேண்டாமே இந்த சர்ச்சை வாழ்க வளமுடன்
நீக்குஅன்பன்
கில்லர்ஜி
இதுக்குத்தான் நாம இந்திய தெரிஞ்சு வச்சுக்கணும்னு சொல்றது. நாம இந்திக்கு எதிரி அல்ல. அதன் திணிப்புக்குத்தான் எதிரி.
பதிலளிநீக்குவாங்க ஐயா உண்மை இந்தி அவசியமே ஆனால் கட்டாயத்திணிப்பு கூடாது.
நீக்குநல்லா இருந்துச்சு கில்லர்ஜி... நான் ஹிந்தியை மட்டும் படித்து அர்த்தம் புரியுதான்னு பார்த்து பெரும்பாலும் புரிஞ்சுக்கிட்டேன். ஹிந்தி தெரியலைனா, இந்த ஊர்ல கங்கா ஸ்வீட்ஸ், நாதன் ஸ்வீட்ஸ், மற்றும் எங்க போனாலும் பேசி எதையும் வாங்க முடியறதில்லை. எங்க பார்த்தாலும் ஹிந்தி ஆட்கள் உட்கார்ந்துருக்காங்க. நாட்டு நிலைமை அப்படியாயிடுச்சு.
பதிலளிநீக்குமீயும் மீயும் படிச்சேன் அப்பூடியே ஹிந்தி புரியிந்தி எனக்கு.... ச்சோ ஈசி:)
நீக்குஆம் இப்பொழுது தமிழகம் எங்கும் ஹிந்தி பரவித்தான் செல்கிறது
நீக்குவள்ளுவம் எல்லாம் பேசுகின்றார் திண்டுக்கல் தனபாலன்...
நீக்குஆனல் காவி கம்னாட்டிகள் என்கிறார்..
கம்னாட்டி என்றால் என்ன அர்த்தம் என்று சொல்வாரா?...
நானும் தான் காவி கட்டுகிறேன்...
இன்சொல் வழுவாதீர்... இன்னலைத் தழுவாதீர்...
( கீ!.. எனது கருத்தைத் தாங்கள் வெளியிடுவீர்களா தெரியவில்லை...
ஆயினும் திண்டுக்கல் தனபாலன் அவர்களது கருத்தை வெளியிட்டிருக்கின்றீர்கள் தானே!...)
இன்னா சொன்னார்க்கும் இனியவே சொல்லாக்கால்
நீக்குஎன்ன பயத்ததோ சால்பு..
வள்ளுவப் பெருந்தகை மன்னிக்கட்டும்...
எல்லோரது கருத்தையுமே வெளியிடுவேன் ஜி ஆயினும் கடுஞ்சொல் வேண்டாம் என்பதே எமது கருத்து.
நீக்குஉங்களுக்கு மொழி கத்துக்கற திறமை நிறைய இருக்கு. அது எல்லோரிடமும் இருக்காதாம். சிலருக்கு மட்டும் நிறைய மொழிகள் கத்துக்கும்படியான திறமை இருக்குமாம். பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநான் வாழ்வில் மொழிகள் அதிகம் அறிந்தவர்களைக் கண்டால் பொறாமைப்படுவேன் இது தவறு என்றாலும் வெட்கமின்றி ஒத்துக் கொள்கிறேன்.
எனக்கு 15 அகவை இருக்கும்போது பாடகர் திரு. பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் மீது பட்டதே முதல் பொறாமை காரணம் அன்றே அவர் 12 மொழிகள் எழுதப் படிக்க, பேசுபவர்.
அன்று எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை அருமை.. கடைசியில் மும்பையில் அவருக்கு இருக்கிற வேலையை கெடுக்கவென்றே அங்கு வந்திருக்கிறார் போலும் அந்த தண்டபாணி. இப்படியும் உபத்திரவம் செய்யவே சிலர்....! இனி சோகந்தான் மச்சக்காளையின் நிலை..பாவம்..! என்ன செய்யப் போகிறாரோ ..! ஹிந்தியை தெளிவாக தமிழாக்கத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குரயிலேறிப் போனாலும் மச்சினன் உதவி அவசியம்.
அதே நேரம்.... காணொளி... இரண்டையும் தொடர்பு படுத்தி நிறைவு செய்தது சிரிப்பை வரவழைத்தது. யோசிக்கவும் வைத்தது...
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கு எமது பூங்கொத்து நண்பரே...
நீக்குசிரித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்ஜி
நீக்குஇது அநியாயம். பதிவு என்ற பெயரில் கில்லர்ஜீ இந்தி பாடம் சொல்லித்தருகிறார். அப்படியாகத் தானே தமிழ்ப் பதிவில் இந்தியை திணிக்கிறார். தனித்தமிழ் பதிவுகள் எழுதும் திரு நடன சபாபதி இக்கண்டனத்தை ஆமோதிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசும்மா ஒரு கலாய்க்கல் தான் அண்ணே விட்டிருங்க. Jayakumar
வாங்க ஐயா ஹிந்தி சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு புலமை இல்லை.
நீக்குஐயா திரு ஜெயக்குமார் அவர்களே! நானும் இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறேன். இந்தி மொழியை அல்ல. அது தங்களூக்கும் தெரியும்.
நீக்குவருக நண்பரே எனக்கும் தெரியும்.
நீக்குதண்டபாணி இப்படி செய்யலாமா?
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையாக கஷ்டத்தை சொல்லி விட்டீர்கள்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறீங்க கில்லர்ஜி.. அப்போ போன கதை மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்க்கும் படலத்தை நிறுத்திட்டீங்களே...:)
பதிலளிநீக்குவாங்க அது அலமேலுவோட வேலை நமக்கு எதற்கு ஊர் வம்புஸ் ???
நீக்குதண்டபாணிக்கு மட்டும் ஹிந்தி தெரிஞ்சிருந்துதோ:).. மச்சானின் கதை முடிஞ்சிருக்கும்:) ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஆமா ஆமா அப்படித்தான் எனக்கும் தோணுது.
நீக்குஹலோ கில்லர்ஜி நீங்க இப்படியே இந்த பதிவில் ஹிந்தியை திணிக்கிற மாதிரி இருக்கே.......மோடிகிட்ட பணம் ஏதும் வாங்கினிங்களா என்ன?
பதிலளிநீக்குஅவரு இடத்துல நீங்க இருந்தால் பணம் கொடுப்பீங்களோ ?
நீக்குமும்பையில் எப்படியும் பிழைச்சுக்கலாம். அந்த ஊரிலேயே இருக்க முடியலைனா தண்டபாணி நிஜம்மாவே தண்டம் தான் போல! அது சரி ஆப்பிள் ஃபோனை விற்கவானும் விற்றிருந்தால் எடுத்ததுக்கு ஓர் அர்த்தம் கிடைத்திருக்கும். உசிலம்பட்டிக்குக் கொண்டு போய் என்ன செய்யப் போறார் தண்டபாணி?
பதிலளிநீக்குஆமாம் தண்டம்தான்.
நீக்குபோனை எடுத்தது அவனது கைப்பழக்கம், உசிலம்பட்டிக்கு திரும்புவது அப்பாயிண்மெண்ட் வரும் என்ற நம்பிக்கை.
போனை அதிரா மாதிரி ஆளுகளிடம் பாதி விலைக்கு தள்ளி விடலாமே...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜிக்கு இப்பூடி நாலு4 கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).... இதனாலதான் நான் அப்பிள் ஸ்ரோரிலதான் வாங்குவேன்:)...
நீக்குஆப்பிள் பழக்கடையில் வாங்கலாமே.... ஸ்டோர் எதற்கு ?
நீக்குபதிவை ரசித்தேன் கில்லர்ஜி! நல்லகாலம் ஹிந்திக்கு தமிழில் அர்த்தம் சொல்லியிருந்தீர்கள் இல்லை என்றால் எனக்கு எதுவும் புரிந்திருக்காது. தண்டம் போல!
பதிலளிநீக்குஉங்களுக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தாத்தாவானதற்கு வாழ்த்துகள் கில்லர்ஜி! மகிழ்வான தருணம். மகிழ்வான தருணங்கள் இனியும் உங்களுக்குக் கிடைத்திட பேத்திக்கும் வாழ்த்துகள்!
துளசிதரன்
வருக நீங்களும் என்னை மாதிரிதானோ ?
நீக்குபெயர்த்தியை வாழ்த்தியமைக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
நீக்குதங்களுக்கு பேத்தி பிறந்திருக்கிறாள் என்பதை சகோ துளசிதரன் அவர்கள் இந்த பதிவில் வெளியிட்டிருக்கும் செய்தி மூலம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுக்கும் தங்கள் பேத்திக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மகள் வழி பேத்தியா?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாவ்வ்வ்வ்வ்வ் கில்லர்ஜிக்கு பேரக்குழந்தை கிடைத்துவிட்டதோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... கில்லர்ஜி இனி தாத்தாக்கு மீசை இருக்கக்கூடாது இல்லை எனில் குழந்தை பயப்பிடப்போகுது ஹா ஹா ஹா...
நீக்குவருக சகோ மீண்டும் வந்து பெயர்த்தியை வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குஅதிராவின் வாழ்த்துகளுக்கு நன்றி.
ஹா ஹா ஹா கில்லர்ஜி தண்டம் தண்டம்னா அவன் ஆட்டைய போட்ட அந்த ஃபோனை பயன்படுத்தத் தெரியுமோ அவனுக்கு?!! மச்சக்காளையும் லேசுப்பட்ட ஆளில்லை போல?!!!!!
பதிலளிநீக்குகீதா
திருட்டுப்பயலுக்கு கணினி இயக்கத் தெரிந்தால்தான் திருடணுமா ?
நீக்குதண்டத்துக்கு கிடைச்சதுவரை லாபம்.
கில்லர்ஜி பையா, இந்தியில் கலகல பதிவு போட்டதற்கு என் மனம் நிறைந்த சுக்கிரியா!
பதிலளிநீக்குதாத்தா ஆனதற்கு வாழ்த்துகள்.
வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபதிவு ஓரளவு புரிந்தாலும் காணொளி சுத்தம்
பதிலளிநீக்குவாங்க ஐயா காணொளியும் அதேதானே ஐயா.
நீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குகதை அருமை...
பதிலளிநீக்குஇங்கே குவைத்தில் பிலிப்பினோ இந்தி பேசுறான்..
நம்ம ஊர்க் கூ முட்டைகளோ ஆங்கிலமும் தெரியாமல் இந்தியும் புரியாமல் தடுமாறுகின்றன...
சொன்னால் தமில் வாள்க.. என்று ஒரு சத்தம்...
மேலும் சொல்லலாம்... வேண்டாம்...
வாழ்க நலம்...
வாங்க ஜி
நீக்கு//ஆங்கிலமும் தெரியாமல்,
இந்தியும் புரியாமல்,//
இதுதான் உலக அளவில் உண்மை.
ஆகா பேத்தி பிறந்து விட்டாளா!...
பதிலளிநீக்குமீசை பத்திரம்...
அன்பின் நல்வாழ்த்துகளுடன்...
இரண்டு தினங்களாக மாஸ்க் கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
நீக்குமீசைக்காகவா!...
நீக்குஅதே... அதே...
நீக்குஎனக்குத் தெரியும் ஜி..
பதிலளிநீக்குஅவருக்கு ஒரு நியாயம் ..
எனக்கு ஒரு நியாமா?..
வாழ்க வள்ளுவம்....
இரண்டு தினங்களாக மருத்துவமனையே வாசம். இப்பொழுதுதான் கருத்துரையை கண்டேன் ஜி
நீக்குஎன் கருத்தையும் ஏற்றுக் கொண்டதற்கு வணக்கம் ஜி....
பதிலளிநீக்குஜி நான் யாருடைய கருத்தையும் இதுவரை மறைத்ததே கிடையாது.
நீக்குதலைப்பினை எப்படித்தான் தேர்ந்தெடுக்கின்றீர்களோ?
பதிலளிநீக்குமுதன் முதலாக மச்சுவாடி (புதுக்கோட்டை) சென்றபோது தோன்றிய தலைப்பு தொடர்ர்து பதிவு....
நீக்குநண்பரே நீங்கள் என்ன, வெண்ணிற ஆடை மூர்த்திக்கு நண்பரா . அவரை போலவே கோழியூர் கோவிந்தன் , நடுத்தெரு நாராயணன் போன்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறீர்களே
பதிலளிநீக்குவெ.ஆடையோடு என்னை ஒப்பிடும்போது எனது அகவை கூடுகிறதே... இது நியாயமா ?
நீக்குநண்பரே! கொள்ளை புறமாக வந்தாலும் இந்தியை எதிர்ப்போம். தங்களின் வலைப்பக்கம் வழியாக வந்தாலும் இந்தியை எதிர்ப்போம்...
பதிலளிநீக்குநான் எங்கே வந்தேன் ???
நீக்குநீங்க வரல... மச்சுவாடி மச்சான் வந்தாரே...!!
நீக்குமச்சானுக்குத்தான் தண்டபாணி ஆப்பு வச்சுட்டானே...
நீக்குதண்ட பாணி ஆப்பு வச்சுட்டாரா...!!! அப்ப சரி.....
நீக்கு