இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 07, 2020

டால்மியாபுரம், டவுட்டு டவுசர்


ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே ?
வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்
ஏண்ணே அந்தப் பலகையில் கடை ரோஸ்ட்'னு போட்ருக்காங்களே இது எப்படிணே ?
அடமூதேவி அது கடை ரோஸ்ட் இல்லைடா, காடை ரோஸ்ட்

ஏண்ணே போலின்னு சொல்லியே விக்கிறாங்களே தெரிஞ்சும் அதை வாங்கித் திங்கலாமா ?
அட வெளங்காமட்டை அது போளி'டா
அண்ணே இங்கே கழுத்தறுத்தால் மாயம்'னு போட்ருக்கு போலீஸ் கேட்க மாட்டாங்களா ?
அட முடுதாறு அது கருத்தரித்தல் மையம்'டா

ஏண்ணே இதுல பீப்'னு எழுதி இருக்கே அசிங்கமான வார்த்தை இல்லையா ?
அட கொங்காமட்டை பீப்'னா மாட்டுக்கறிடா
ஏண்ணே இதென்ன விக்கிறியா பூக்கடைனு போட்ருக்காங்கே விக்கிறோம்னுல போடணும் ?
அடேய் அது விக்கிறியா இல்லடா விக்டோரியா'டா

ஏண்ணே மிதவை பேருந்து அப்படினு போட்ருக்காங்களே இதுக்கு என்னண்ணே அர்த்தம் ?
அடேய் பாலத்துல போகும்போது ஜேம்ஸ் ஊரணியில விழுந்துட்டா மூழ்கிடாமல் மிதக்கும்டா நாம அப்படியே நீந்தி கரைக்கு வந்திடலாம்டா
ஏண்ணே முதல் போடாமல் சினிமாவுல நடிக்க வர்றவங்கே எல்லோருமே முதல்வர் ஆகணும்'னு ஆசைப்படுறாங்கள்ல ?
ஆமா ?
ஆனால் முதல் போட்டு சினிமாவுல பந்தப்படுற எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளர் மட்டும் வரமுடியலையே ஏண்ணே ?
? ? ?
ஏண்ணே இறந்து போனவங்களை பூமிக்கு கீழேதானே புதைக்கிறோம்
ஆமாடா இதுல என்ன சந்தேகம் ?
அப்ப எதுக்குணே இறந்தவங்களை மேலே போயிட்டாருனு சொல்றாங்க ?
? ? ?
ஏண்ணே நரகாசுரன் செத்ததுனாலதானே தீபாவளி கொண்டாடுறோம் ?
ஆமாடா
அப்ப எப்படிணே ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு தேதியில இறந்த நாள் வருது ?
? ? ?

ஏண்ணே "கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே" அப்படினு ஒரு பாட்டு கேட்டு இருக்கியலாணே ?
ஆமா அதுக்கு இப்ப என்னடா ?
அப்படீனாக்கா மத்த கடவுள் எல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்களாண்ணே ?
? ? ?
ஏண்ணே மாங்கா மரத்துல முளைக்கிறதால மாங்காய்'னு சொல்றோம், தென்னை மரத்துல முளைக்கிறதால தேங்காய்'னு சொல்றோம் அப்படினா பனை மரத்துல முளைக்கிறதுனால பாங்காய்'னுதானே சொல்லணும் ஏண்ணே நுங்கு'னு சொல்றாங்க ?
? ? ?

ஏண்ணே நெல்லு விதைச்சுதானே நெல்லு முளைக்குது ?
ஆமாடா...
அப்படினா நெல்லுலருந்து எடுத்த அரிசியை விதைச்சா விளையாதாணே ?
அடேய் அரிசி மேலே இருக்கே தோலு அதுலதான்டா உயிர்ச்சத்து இருக்கு அதுல இருந்துதான் நெல்லுக்கதிர் விளையுது
அப்படீனாக்கா அரிசியை எடுத்துப்புட்டு உமியை விதைச்சா நெல்லு விளையாதாண்ணே ?
? ? ?

என்னண்ணே எதுக்குமே முடிவு சொல்லாமல் முழிக்கிறீங்க ?
தம்பி டவுசர் பாண்டி இன்னைக்கு வியாழக்கிழமை தெட்ஷிணாமூர்த்திக்கு விரதம் இருக்கேன் நாளைக்கு சொல்றேன்டா...
சரிண்ணே நாளைக்கு எங்கே வரட்டும்ணே ?
கொழிஞ்சிக்காட்டுக்கு வடக்காலே வாடா
என்னண்ணே அங்கிட்டு சுடுகாடுல இருக்கு ?
அங்கே வச்சுத்தான்டா உனக்கு முடிவு கட்டணும் கண்டிப்பா வந்துருடா...
? ? ?

கேட்டுக் கொண்டிருந்த டவுசர் பாண்டி மேற்காலே தெறித்து ஓடினான்

44 கருத்துகள்:

  1. பொதுவாக இந்து (இந்திய) வழக்கப்படி இறந்தவர் இறந்த மாதம், திதி ஆகியவற்றையே கணக்கில் கொள்வோம். ஆகவே நரகாசுரன் இறந்தது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசி திதியில். ஆகவே அன்று நரக சதுர்த்தசி என்று சொல்லி தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தேதியில் வரும். அக்டோபர் 15 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 15 தேதிக்குள் திதி என்று வருகிறதோ அப்போது நரகாசுரனின் நினைவு நாள் வரும்.

    பனங்காய் எனத் தஞ்சை, கும்பகோணம் பக்கம் சொல்லுவதுண்டு. (நொங்கு), நுங்குவை பனஞ்சுளை என்று சொல்லுவார்கள். இது மிக மிகப் பழகியவர்களுக்கே தெரியும். ஏனெனில் இப்போதுள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. என் மாமனார், மாமியார் இப்படிச் சொல்லிப் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நரகாசுரனின் வரலாறு பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி சகோ.
      டவுசர் பாண்டிக்கு வந்த சந்தேகம் பனங்கம் அல்ல பாங்காய்.

      பனங்காய் நானும் கேட்டதுண்டு.

      நீக்கு
  2. கேள்விகளை அதிகம் ரசித்தேன்.   சூப்பர் ஜி.

    பதிலளிநீக்கு
  3. டவுசர் பாண்டி போன்ற ஆட்களால் தான் பொழுது கை கலப்பாக இல்லாமல் கலகலப்பாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. 1.புதிய இந்தியா புதிய இந்தியான்னு சொல்லுறாங்களே அது பிறந்துடுச்சா? அப்படி பிறந்து இருந்தால் நீங்கள் வசிப்பது புதிய இந்தியாவிலா அல்லது பழைய இந்தியாவிலா?

    2. ரஜினி எப்ப கட்சி ஆரம்பிப்பாருன்னு உங்களுக்கு தெரியுமா அண்ணே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நாம இருப்பது புதிய இந்தியாதான் ஆனால் பழைய இந்தியா.

      எனக்கு தெரியும் நண்பரே இன்னும் பத்துப்படங்களை ஓட்டிடணும் அதற்கு பிறகு இதே பகுமானத்தோடு போயிடணும்.

      நீக்கு
  5. செந்தில், கவுண்டமணி பேசுவதாய் நினைத்துக் கொண்டு கேள்விகளையும் பதில்களையும் படித்தேன்.அருமை.

    கவுண்டமணியே நிறைய தடவை செந்திலை பனங்காய் மண்டையா என்று கூப்பிடுவார்.
    பனம்பழம், காய்க்குள் இருக்கும் சுளைக்கு பேர்தான் நூங்கு. பனச்சுளை. பனங்கிழங்கு
    பாங்காய் நல்லத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி பனங்காய் பற்றிய விரிவான கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  6. தலைப்பே சிரிப்பை வரவழைத்தது நண்பரே.
    படிக்க படிக்க மேலும் சிரித்தேன். தங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. //எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளர்// - கில்லர்ஜி... கோஹ்லி, ஷர்மா என்று அனைவருக்கும் சம்பளம் கொடுக்கிற பி.சி.சி.ஐ பற்றி நாம கவலைப்படுவோமோ, அவங்க முகத்தை டி.ஷர்ட்ல போட்டுக்கிட்டுத் திரிவோமா இல்லை கோஹ்லி, ஷர்மா இவனுங்க படத்தை போட்டுக்கிட்டுத் திரிவோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாம்தான் காலம் காலமாக சொல்கிறோமே.... பாடிய டி.எம்.எஸ் சை மறந்து விட்டு எம்.ஜி.ஆர் பாட்டு என்று அது போலத்தான்,,,,

      நீக்கு
  8. //கந்தன் காலடியை வணங்கினால்// - இந்தப் பாட்டில் 'அதனால் கந்தனுக்கு பிரம்மனும் மிரளுவான்' என்றெல்லாம் வரிகள் வருமே.. அதெல்லாம் கவனிக்கலையா? இந்த சினிமாப் பாடல் எழுதறவங்களுக்கு விவஸ்தையே கிடையாது. எதையோ எழுதிப் பொழப்பு நடத்துவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதனால் கந்தனுக்கு பிரம்மனும் மிரளுவான்//
      ஏதோ அடித்த பதிவுக்கு அடி போடுறீங்களோ.... கவிதைம் என்பது பொய்யே... பொய்யே...

      நீக்கு
  9. அதுக்கு பனங்காய்னுதான் பேரு. அதுக்குள்ள இருக்கறதுக்குப் பேரு நுங்கு. சரி.சரி... இதெல்லாம் நெல்லைலதான் கிடைக்கும். தேவகோட்டைக்காரங்கள் எங்க பனம்பழம், நுங்கு, பனங்கிழங்கு சாப்பிட்டுருக்கப் போறாங்க. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரே தேவகோட்டையில் கிடைக்காததா.... நெல்லையில் கிடைக்கப் போகிறது ? உண்மையிலேயே தேவகோட்டை அல்வா நல்ல சுவைதான் ஏனோ தெரியவில்லை மக்கள் இப்படி பொய் பேசுகின்றார்கள்.

      நீக்கு
    2. கில்லர்ஜி... அது தேவகோட்டை அல்வா அல்ல. தேவகோட்டைக்கார்ர் கொடுக்கும் அல்வா. ஹா ஹா

      இன்னமும் மகன் திருமண இனிப்பு கொரியருக்குக் காத்திருக்கிறேன் ஹா ஹா

      நீக்கு
    3. என்னது கூரியர் இன்னும் வரவில்லையா... ? இதோ போகிறேன்.

      நீக்கு
  10. நிறைய கேள்விகள், பதில்கள். இண்டெரெஸ்டிங் ஆகத்தான் இருக்கு.

    என் பெண் (கொஞ்சம் சின்ன வயதில்) கேட்டா... வராஹ அவதாரத்தில் கடலிலிருந்து பூமியை மீட்டு அதனைக் கொண்டுவந்தார்னு சொல்றீங்களே..அப்ப பூமி எங்க இருக்கு, கடல் எங்க இருக்குன்னு கேட்டா. அதுக்கு சரியான பதிலை இன்னும் யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... கேள்வி ஸூப்பர்தான் நண்பரே....

      நீக்கு
  11. சூப்பர் நையாண்டி. ரூம் போட்டு யோசித்துன்ளீர்கள். வாழ்த்துக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ரூமிலிருந்துதான் எழுதுகிறேன் ஹோட்டலில் ரூம் போட கட்டுபடியாகாது.

      நீக்கு
  12. கில்லர்ஜி இப்போ டால்மியாபுரத்துக்கு மூவ் ஆகிட்டாரோ? அதுசெரி தேம்ஸ்ல என்ன மிதக்குது?..

    சந்தடி சாக்கில நிறைய விசயங்களைப் போட்டு ஏறி உளக்கினமாதிரி இருக்கே:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:) ஹா ஹா ஹா நல்லா சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க... ஐடியாத் திலகம் நீங்கதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேம்ஸ் நதியில் பஸ் மிதக்குதாமே...

      "ஐயியாத்திலகம்" உங்களோட அடுத்த பட்டம் போல...

      நீக்கு
  13. பனங்காய்க்கு முன் நொங்கு
    தேங்காய்க்கு முன் குரும்பை:)

    பதிலளிநீக்கு
  14. ஹாஹா.... ரசித்தேன் கில்லர்ஜி.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  15. மிக உற்சாகப் படுத்துகிறது உங்கள் பதிவு அன்பு தேவகோட்டைஜி.

    பல கேள்விகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கின்றன.
    தைரியமாக் கேள்விகளைக் கேட்பவருக்கும்
    சரியாகப் பதில் சொன்னவருக்கும் கேடயம் வழங்க வேண்டும்.:)

    நெல் பற்றின கேள்வி அதீதக் கற்பனை சக்தி உங்களிடம்
    இருப்பதைக் காட்டுகிறது. நிறைய எழுதுங்கள் ஜி.
    மிக மிக சுவாரஸ்யமான பதிவு.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது ரசிப்பு கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  16. டவுட்டு வரவேண்டும்தான். அதுக்காக இப்படியா டவுட்டு வரும் டவுசர் பாண்டிக்கு... ரசித்தேன் அண்ணா ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அதானே அதிராவோட அங்கிளாக இருப்பாரோ.... டவுசர் பாண்டி.

      நீக்கு
  17. கில்லர்ஜி சார் எனக்கும் ஒரு டவுட்டு ... பெரிய மனசு பண்ணி தீர்த்துவையுங்கோ .... ''மாடு''தான குட்டி போடுது அப்ப அத ''மாட்டு குட்டி''ன்னு தான சொல்லணும் .... அனா அத ஏன் கண்ணு குட்டி - ன்னு சொல்லுறோம் .... இப்பவே சொள்ளுங்க சார்.. சுடுகாடு பக்கமெல்லாம் கூப்பிடாதீங்கோ ... ஐ ஆம் வெரி பிஸி ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா எழுதி வச்ச அடுத்த பதிவின் கேள்விகள் வெளியே வந்துருச்சே... கணினிக்கு பூட்டு போட்ற வேண்டியதுதான்...

      நீக்கு
  18. டவுசார் பாண்டியின் கேள்விகளை இரசித்தேன். அதுவும் இறந்தவர்களை பூமியில் புதைக்கும் போது ஏன் மேலே போயிட்டாரு என்று சொல்கிறோம் என்ற கேள்வி நாம் நினைப்பது போல் டவுசர் பாண்டி சாதரண ஆள் அல்ல என சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஹா.. ஹா.. டவுசர் பாண்டி அறிவாளிதான் போலும்...

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    என்னதான் பாண்டியை கிண்டலடித்து மட்டந்தட்டி பேசினாலும், டவுசர் பாண்டியின் சில கேள்விகளுக்கு பதில்கள் சொல்ல முடியாவண்ணம் நிறைய இடங்களில் தொடர்ந்து தடுமாறுகிறாரே அந்த அண்ணன். இதிலிருந்து அவர் பாண்டியின் புத்திசாலிதனத்தை உணர்ந்து கொண்டால் சரிதான்..! பாண்டியின் எதார்த்தமான கேள்விகளில் பல அறிவார்ந்த உண்மைகள் புலப்படுகிறது. அந்த கால கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி யோசித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் ரசித்தேன். தாமதமாக வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ டவுசர் பாண்டி அறிவாளிதான் ஆகவேதான் அண்ணன் விரட்டி விட்டார்.

      நீக்கு