இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 18, 2020

கொட்டாம்பட்டி, கொழுந்தியாள் கொடிமலர்


ணக்கம் நட்பூக்களே... மேலே புகைப்படத்திலிருக்கும் நபர்களை பார்த்தீர்களா ? இவர்கள் தந்தையும், மகளும் என்று நினைத்து இருப்பீர்கள் உண்மைதான் சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் எவ்வளவு தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து இருப்பீர்கள். இவளது கணவன் போகக்கூடாத இடத்துக்கு செல்கிறார் மனைவி தடுத்தும் கேட்காமல் செல்கிறார் உடன் மனைவி தனது தந்தையிடம் வந்து அழுது கொண்டே முறையிடுகிறாள் அவரும் மருமகனை போகவிடாமல் தடுக்க சொல்கிறார்.

மாப்பிள்ளையிடம் சொல்லுமா... என்றுதான் சொல்கிறார் ஆனால் அவர் எழுந்து வந்து சொல்ல மறுக்கிறார் ஏன் மாமனாருக்கும், மருமகனுக்கும் சண்டையோ.... என்று நினைக்கின்றீர்களா ? அதுதான் இல்லை அதாவது இவர் மருமகன் கண்ணுக்கு மட்டுமல்ல யாருடைய கண்ணுக்கும் தெரிய மாட்டாராம் அதாவது மகளுடைய கண்ணுக்கு மட்டும் தெரிந்து வந்து பேசிச்செல்வாராம். அதேநேரம் நாடகத்தை பார்க்கும் நமது கண்ணுக்கு தெரிவாராம். இதையெல்லாம் அதிரா போன்றவர்கள் நம்பணும் அப்படியானால் தயாரிப்பாளர் கண்ணுக்கு தெரிகின்றாரா ? சம்பளம் எப்படி வாங்கினார் ? என்று குதர்க்கமாக கேட்கப்படாது.

இது எப்படி சாத்தியம் என்பதுதானே உங்களது கேள்வி ? இவர் பேயாம் ஆம் பேய் இவர் இறந்து முப்பது வருசத்துக்கும் மேலாகி விட்டது இதே மகள் கைக்குழந்தையாக இருந்தபோது இறந்தவர் இப்பொழுதும் மார்க்கண்டேயன் போலவே முப்பது வயது இளைஞராகவே இருக்கிறார். கைக்குழந்தை வளர்ந்து ஆளாகி திருமணம் முடிந்து பிறகும்கூட தனது தந்தையை அடையாளம் கண்டு உரையாடுகிறார் ஒருவேளை இயக்குனர் புகைப்படத்தை காண்பித்து கசாநாயகியை வளர்த்து இருப்பாரோ... அட ங்கொய்யாலே என்னாங்கடா கதை எழுதி வுடுறீங்க... ?

இவை எல்லாவற்றையும் விட கூத்து என்ன தெரியுமா ? இவர் மினிஸ்டர் ஒயிட் வேட்டி கட்டிதான் வருகிறார் இந்த கம்பெனி திறந்து எத்தனை வருடமாச்சு ? என்று கேட்கப்படாது. அதேபோல் சட்டையும் ஒவ்வொரு முறையும் கலர் மாற்றிதான் போட்டு வருகிறார். பாக்கெட்டில் பேனாவும் வைத்து இருக்கிறார் ஒருவேளை எங்கள் பிளாக் வலைப்பதிவுக்கு கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு எழுதிக் கொடுப்பாரோ... என்னவோ யார் கண்டா ? எல்லாம் ஸ்ரீராம்ஜி அவர்களுக்கே வெளிச்சம்.

இப்படி எல்லாம் காதுல பூ சுற்றுறாய்ங்களே.... தமிழக தாய்மார்கள் உணரவே மாட்டார்களா ? பல குடும்பங்களில் பிளவு உண்டாவதே தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதால்தானே... சரி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ? நீயும் நாடகம் பார்க்கிறாயா ? என்று ஜியெம்பி ஐயா அவர்கள் என்னை கேட்டு விடாதீர்கள் கொட்டாம்பட்டிக்கு கொழுந்தியாள் வீட்டுக்கு போனபோது இரண்டு தினங்கள் தங்கியதால் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு. என்று நான் எழுதியதாக நினைத்துக் கொள்ளுங்களேன்.

Chivas Regal சிவசம்போ-
கொழுந்தியாள் வீட்டில் இரண்டு தினங்கள் தங்க வேண்டிய அவசியம் ?

சிவாதாமஸ்அலி-
நம்ம சின்னக்கடைத்தெரு சிக்கந்தர் பிரான்மலை தர்காவுல கிடா வெட்டி விருந்து வச்சாருல அதுல கலந்துக்கிற போனவரு... அப்படியே சகலை வீட்டுல தங்கி இருப்பாரு.

சாம்பசிவம்-
கொழுந்தியாள் இருக்கிறவரு அள்ளி முடியிறாரு... இல்லாதவனுக்குதானே தெரியும் அதன் வலி

86 கருத்துகள்:

  1. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. "அழகு" என்றொரு நெடுந்தொடர் வருது. அதிலே அக்கா, தங்கை இருவரும் ஒரே நேரத்தில் காணாமல் போய்ப் பிரிகிறார்கள். அதன் பின்னர் அவங்க அம்மாவுக்கு ஒரு பையர் பிறக்கிறார். அந்தப் பையரே கல்யாண வயசு. கல்யாணமும் பண்ணிக்கிறார். அவரோட மூத்த அக்கா காணாமல் போகும்போது சுமார் எட்டு அல்லது பத்து வயது இருக்கும். இரண்டாவது அக்கா கைக்குழந்தை ஒரு வயசுக்குள். அதன் பின்னர் பிறந்த இவருக்கே கல்யாண வயசுன்னா இவருக்கு 24, 25 வயசாவது இருக்கணும். இவரோட இரண்டாம் அக்காவுக்கும் இவருக்கும் குறைந்தது இரு வருடங்களாவது இடைவெளி இருக்கணும். மூத்த அக்காவுக்கும் இவருக்கும் 10 வயசாவது இடைவெளி இருக்கணும். அப்படி இருந்தால் மூத்த அக்கா 35 வயதுக்காரராக இருக்கணும். அம்மாவுக்கும் 55 வயதுக்கு மேலேயாவது இருக்கணும். அதிலும் 20 வயதில் கல்யாணம் ஆகி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் அம்மா முதல் பெண் பிறக்கையிலேயே பிரபலமான வக்கீல். இவருக்குக் கதைப்படிக் கல்யாணம் ஆகி 25 வருடம் தான் ஆகிறது. இரண்டாவது பெண்ணுக்கே 23 வயது தான் என்கிறார்கள். அப்படின்னா தம்பிக்கு 20 வயதுக்குள் தானே இருக்கணும். அதுக்குள்ளே கல்யாணமும் பண்ணிக் கொண்டு விட்டார். கல்யாணம் ஆகி 25 வருடமே ஆன அம்மாவுக்கு அதை விட வயதில் மூத்த பெண்! சரியாக தர்க்கரீதியாக யோசித்தால் தலை சுற்றும்.அநேகமாக இது எல்லா நெடுந்தொடர்களுக்கும் பொருந்தும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேபிள் ஒயரைப் புடுங்கிப் போடாதவரைக்கும்
      இந்த மாதிரியான ஆராய்ச்சிகள் தொடரத்தான் செய்யும்...

      நீக்கு
    2. அட...  மொத்தக் கதையையும் சொல்றாங்க!

      நீக்கு
    3. சகோ கீசா மேடம் அவர்கள்.
      சீரியல் விசயம் நாடி, நரம்பு, சதை, குறுதி, ரத்தம், நத்தம் இதெல்லாம் ஊறிப்போனவர்களால்தான் இவ்வளவு துள்ளியமாக கணித்து எழுத முடியும்.

      நீக்கு
    4. ஆஆ கீசாக்கா மீயும் 2,3 அழகு பார்த்தேன்ன் வெறுத்துப் போய் விட்டிட்டேன்ன்....
      நான் பார்ப்பது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு:).. அதுதான் கல்யாணவீடு:)... அதுவும் ஒழுங்காப் பார்ப்பதில்லை.. நேரம் கிடைக்கையில் யூ ரியூப்பில் பார்ப்பேன்... அந்த காவேரி நீர் ஓடும் அழகைக் காட்டுவினம் அதுக்காகவே பார்க்கத் தொடங்கினேன்...

      நீக்கு
    5. ஹாஹா, கில்லர்ஜி, வீட்டில் கேட்டுப் பாருங்க. அந்த நேரம் வேறே ஏதானும் செய்துட்டு இருப்பேன். சீரியல் ரசிகர் நம்ம ரங்க்ஸ் தான். என்னிக்காவது தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்க முடியலைனாக் கூட யூ ட்யூபில் பார்த்துடுவார். :))))) நமக்குக் காதில் ஆங்காங்கே அவ்வப்போது விழுவதே போதும்! :)))) மொத்தக் கதையும் எழுதிட மாட்டோமா?

      நீக்கு
    6. ஏதோ ஒரு நாள் பார்த்தாலே போதும் ஸ்ரீராம், மொத்தமும் புரிஞ்சுடும். :)))))

      நீக்கு
    7. கேபிள் எல்லாம் எடுத்துட்டாங்களே துரை! இப்போத் தமிழக அரசின் செட் டாப் பாக்ஸ் கொடுத்திருக்காங்க. அதில் எஸ் சிவி கொடுக்கும் சானல்கள் தான் வரும். நான்பெரும்பாலும் பார்ப்பது பொதிகை! இல்லைனா மக்கள். ஆனாலும் மாலை ஆறரையிலிருந்து எட்டரை வரைக்கும் நம்மவர் சீரியல் பார்க்கையில் எங்கே போய் ஒளிஞ்சுக்க முடியும்? ஆகவே இம்மாதிரித் தப்புக்களைத் தோண்டுவதற்காகவே கேட்டுவிட்டுச் சிரிப்பது உண்டு.

      நீக்கு
    8. கல்யாண வீடெல்லாம் பார்த்துச் சில மாதங்கள் ஆகிவிட்டன அதிரடி, மாமாவுக்கும் பிடிக்கலையாம். பார்ப்பதில்லை. சீரியல் விஷயத்தில் இம்மாதிரி முரண்பாடுகள் எல்லாம் இருப்பதால் தான் அவற்றையும் பார்க்கிறார்களே மக்கள் என மனம் நொந்து போய்ப் பார்ப்பவர்களிடம் இத்தனை முட்டாள்தனமாக எடுக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறார்களே என மனம் நொந்து சொல்லுகிறேன்.

      நீக்கு
    9. ஒருநாள் பார்த்தால் இரண்டு மாதத்தின் கதை புரிந்து விடும் என்பது உண்மையே...

      நீக்கு
  2. கொளுந்தியாள் வீட்டுக்கு போய் லவ் ஸ்டோரி படம் பார்ப்பதற்கு பதிலாக பேய் சீரியல் பார்த்து வந்திருக்கிங்க......இன்னும் உங்களுக்கு விபரமே பத்தலை கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொழுந்தியாளைப்பற்றி முழுமையாக அறிந்தவன் நண்பரே நான்.

      நீக்கு
  3. ஆவியா வர்றான்...இட்டிலியா வர்றான்..ந்னுட்டு ராத்திரி ஆறேழு மணிக்கு மேல
    அடுப்பங்கரைப் பக்கம் யாரும் போறது இல்லையாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி அதனால்தான் பூனைகளுங்கு நல்ல விருந்து கிடைக்குது.

      நீக்கு
  4. இவ்ளோ பிரச்னையிலும் எப்புடி ஜி உங்களால
    இந்த மாதிரி கோமெடி பண்ண முடியுது!...

    பதிலளிநீக்கு
  5. அவர் இதுவரை கதை எழுதும் கேவாபோவுக்கு அனுப்பவில்லையென்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ளும் அதே சமயம்  தாங்கள் ஏன் இது போன்ற தொடர்களை பார்க்க விரும்புகிறீர்கள் என்றும் கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்துக்கொள்(ல்)கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி நானா பார்த்தேன் பிரான்மலைக்கு விருந்துக்கு போன இடத்தில் எனது பிரானனை வாங்கி விட்டார்களே...

      நீக்கு
  6. ஆஹா... மாட்டிக்கொண்டீர்களா கில்லர்ஜி.... ரொம்ப சந்தோஷம்.

    நான் எந்த ஒரு சீரியலையும் பார்ப்பதில்லை. சீரியல் பார்ப்பவர்கள் எப்படி பைத்தியமாகி அதற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதை உணர்ந்தவன்.

    உங்க நல்லநேரம். அவருடைய பெண் சாமி சன்னிதியில் விளக்கைத் துடைத்தால் ஆவியாகி இறந்த அப்பாவுடன் பூங்காவில் பேசிவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறார் என்றெல்லாம் கதாசிரியர் யோசித்திருந்தால் லொகேஷன்கள் நிறைய மாற்றியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கொழுந்து வீட்டில் மாட்டியதில் உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா ?

      நீங்ஙள் சீரியலுக்கு நல்ல கதை வசனம் எழுதலாம் போலயே...

      நீக்கு
  7. கதாசிரியரோ இயக்குநரோ தேவகோட்டைக்கார்ராக இருந்திருந்தால் எப்படியெல்லாம் பாராட்டியிருப்பீர்கள் என யோசிக்கிறேன். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏ.வி.மெய்யப்ப செட்டியார், எஸ்.பி.முத்துராமன் இவர்களெல்லாம் தேவகோட்டையிலிருந்து சென்னை போனவர்களே இவர்கள் செய்த தவறுகள்தான் கன்னடன் தமிழகத்தை ஆள நினைக்கிறான்.

      ரஜினிகாந்துக்கு முதல்வர் பதவிக்கு தகுதி இருக்கிறது என்றால் ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்த இவர்களை ஆள விட்டால் என்ன ? என்று பல நேரங்களில் நான் நினைப்பதுண்டு

      நீக்கு
  8. சீரியல் பக்கமே செல்வதில்லை ஜி...

    பதிலளிநீக்கு
  9. எங்க வீட்டுல தாய்க்குலங்களை எதுவும் சொல்ல முடியுறதில்லை. நான் தொ(ல்)லைக்காட்சியில் எந்த சீரியலும் பார்க்குறதே இல்லை. எப்பவாச்சும் நான் வீட்டு ஹால்ல உட்கார்ற சூழ் நிலை வந்தா அவங்களாவே எதாவது பழைய பாடல் அல்லது நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்பாகும் சேனலை மாற்றி விடுவார்கள். (சும்மா 10 அல்லது 15 நிமிடம் மட்டுமே.) அதன் பிறகு நான் வேற வேலையை பார்க்க போயிடுவேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவாரூர் சரவணா அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

      ஆம் நண்பரே நமது வீட்டில் உள்ளவர்களையே மாற்ற முடியாதபோது....

      நீக்கு
  10. உறவினர் வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியே கிடையாது. மகன் 6ஆம் வகுப்பு படிக்கும்போதே தொலைக்காட்சியை விற்று விட்டு வானொலிப்பெட்டி போதும் என்று இருக்கிறார்கள். இரண்டு தமிழ் நாளிதழ், ஒரு ஆங்கில நாளிதழ் வாங்கி குழந்தைகளை வாசிப்பிற்கு பழக்கினார்கள்.

    மகன் 12ஆம் வகுப்பில் பெரிய அளவில் மதிப்பெண் பெறவில்லை. ஆனால் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே தெளிவாக இருக்கும். 19 வயதில் இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.

    அவன் தங்கையும் பள்ளிப்படிப்பு, வானொலி, நூலகம், செய்தித்தாள், மேற் படிப்புக்கான தேர்வுகளுக்கு தயாராகுதல் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல செயல் நண்பரே அந்த குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகளை சொல்லி விடுங்கள்.

      நீக்கு
  11. சீரியலை சீரியஸாக எடுக்காமல் சிரிச்சுகிட்டே அப்பாலிக்கா போயிறது நல்லது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ அதுதான் மனதுக்கும், உடலுக்கும் நல்லது.

      நீக்கு
  12. //தாய்மார்கள் உணரவே மட்டார்களா?//

    தந்தைமார்களைத் திருத்தலாம். இந்தத் தாய்மார்களைத் திருத்துவது அத்தனை சுலபமல்ல. போலிக் கதாசிரியர்கள் மட்டுமல்ல, போலிச் சாமியார்கள் பெருகுவதற்கும் இந்தத் தாய்மார்கள்தான் காரணம்.

    //என்னங்கடா கதை எழுதி வுடுறீங்க...?//... அவனுகளுக்கு உறைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் இரண்டு தலைமுறைக்குப் பிறகே இந்த சீரியல்கள் ஒழியும்.

      நீக்கு
  13. நான் தொலைக்காட்சியில் நாடகங்கள் பார்ப்பது இல்லை.
    உங்களுக்கு நகைச்சுவையாக பொழுது போய் இருக்கிறது.
    செத்தவர்கள் எத்தனை வயதில் இருந்தார்களோ அப்படியே தானே இருப்பார்கள் . ஜீவித்து இருப்பவர்களுக்கே முதுமை என்று நினைக்கிறேன்.
    இருக்கும் இடத்திலும் வயதாகி இருக்குமா? யாருக்கு தெரியும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இறந்தவர்களுக்கு இப்படி ஒரு ஆப்சன் இருக்கிறதோ...

      நீக்கு
  14. ///இவர்கள் தந்தையும், மகளும் என்று நினைத்து இருப்பீர்கள் உண்மைதான் சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் ///

    கர்ர்ர்ர்ர்ர் நீங்களே அப்பூடி ஒரு முடிவுக்கு வரக்கூடா ஜொள்ளிட்டேன்ன்... நான் கண... மனை.... எனத்தான் நினைச்சேன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ இப்படி அபாண்டமாக நினைக்க கூடாது ஜொள்'ளிட்டேன்.

      நீக்கு
  15. இவ்ளோ விலாவாரியாக எழுதுறீங்களே கில்லர்ஜி:)... அப்போ உங்களுக்கு நாடகங்களில் எவ்ளோ அக்கறை , ஆர்வம் இருக்கூ:)... ஒழுங்காப் பார்ப்போர்கூட இப்பூடி விளக்கம் சொல்ல மாட்டினம்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடிமலர் வீட்டுக்கு விருந்தாளி போன இடத்தில் இப்படி சூழ்நிலை இதை படிக்கவில்லையா ?

      நீக்கு
  16. சித்தி 2 வருகுது, பாருங்கோ நல்லாயிருக்கும் என ஐடியாத் தந்தார்கள்... நான் சித்தியில் ஒரு அங்கம்கூட முன்பு பார்த்ததில்லை, சரி இதில் என்னதான் இருக்கு எனப் பார்த்தால் முதலாவதிலேயே பிபி சுகர் எல்லாம் ஏறிட்டுது அதோடு விட்டிட்டேன் ஹையோ ஹையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தி என்பவளே கொடுமைக்காரிதான் இதில் சித்தி ட்டூ வேறா ?

      அதற்கு சின்னம்மாவை பாருங்களேன்... பெங்களூரு போயி...

      நீக்கு
    2. நோஓஒ நீங்க எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சு வச்சிருக்கிறீங்க:)... இதில வாற ஜித்தி... ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பாஆஆஆ நல்லவ:)...

      நீக்கு
    3. சின்னம்மா இப்போ பெங்களூரிலயா இருக்கிறா... நீங்க கீதா ரெங்கனைச் சொல்லலியே ஹா ஹா ஹா:).. அவ இதைப் படிக்க மாட்டா எனும் தைரியம்தேன்:)...

      நீக்கு
    4. ஆமா... ஆமா... இந்த சித்தி இப்போது வாழ்வது நான்காவது கணவரோடுதானே....

      நான் உங்களைத்தான் சொன்னேன் கீதா ரங்கன் பதிவுலகத்தை தள்ளி வச்சுட்டாங்களாம். நேற்று தினத்தந்தியில் படித்தேனே...

      நீக்கு
  17. அப்போ உங்களுக்கு ஆவியில் நம்பிக்கை இல்லையோ கில்லர்ஜி... ஆவி இருக்குதாம் தெரியுமோ... நான் ஆவியானால் எல்லோரையும் நம்ப வச்சே தீருவேன்:).. இது அந்த கில்லர்ஜிக் கதையில் வரும் அப்பா ஆவி மேல் ஜத்தியம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கோவைஆவி வீட்ல இட்லி அவிக்கும்போது பார்த்து இருங்கிறேன்.

      நீக்கு
    2. ஆஆஆ ஏன் உங்க வீட்டில அவிப்பதில்லையோ?:)... நான் இட்லியைக் கேட்டேன்:)

      நீக்கு
    3. எங்கள் வீட்டில் அவிப்பதில்லை சுடுவார்கள்.

      நீக்கு
    4. ஆஆ !! இட்லியை சுடுவாங்களா ..அதிராவை யாரும் பேய்க்காட்ட முடியாது :) தோசையை மட்டுமே சுட முடியும் 
      ஆஹா நாளைக்கு எனக்கொரு கேள்வி கிடைச்சாச்சு @கௌதமன் சார் :))

      நீக்கு
    5. வாங்க இருந்தாலும் அதிராவை இப்படி எல்லாம் பயமுறுத்தாதீங்க!

      நீக்கு
  18. ///Chivas Regal சிவசம்போ-
    கொழுந்தியாள் வீட்டில் இரண்டு தினங்கள் தங்க வேண்டிய அவசியம் ?///
    கரீட்டூ?
    பதில் ஜொள்ளுங்கோ கில்லர்ஜி.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாதாமஸ்அலி-
      நம்ம சின்னக்கடைத்தெரு சிக்கந்தர் பிரான்மலை தர்காவுல கிடா வெட்டி விருந்து வச்சாருல அதுல கலந்துக்கிற போனவரு... அப்படியே சகலை வீட்டுல தங்கி இருப்பாரு.

      ஜொள்'ளியாச்சு.

      நீக்கு
  19. ஹாஹா... பயங்கர கொடுமையா இருக்கே! நல்ல வேளை என் வீட்டில் இருந்த தொல்லைக் காட்சி பெட்டியை மூன்று வருடங்களுக்கு முன்னரே எங்கள் பகுதி காவலாளிக்குக் கொடுத்து விட்டேன். தமிழகம் வரும்போதும் கூட நிகழ்ச்சிகள் பார்ப்பது அரிது தான்.

    நம் மக்கள் ரசித்துப் பார்ப்பதனால் தானே இப்படியான சீரியல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதில் நிறைய பணமும் சம்பாதிக்கிறார்கள். என்றைக்கு இந்த சினிமா/சீரியல் மோகத்தினை விட்டு விலகுவார்களோ! தமிழகம் என்றில்லை கில்லர்ஜி, எல்லா மாநிலங்களிலும் இந்த சீரியல் பைத்தியம் பலருக்கு இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தமிழகத்தில் எந்த மொழி சீரியலையும் டப் செய்து போடலாம் என்று தீர்மானித்து விட்டார்கள்.

      தமிழர்களின் அறிவை எடை போடுவது சுலபம்.

      நீக்கு
  20. தொலைக் காட்சியில் செய்திகள், விவாதங்கள் தவிர எதுவுமே பார்ப்பதில்லை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் இதையும்கூட பார்ப்பதில்லை.

      நீக்கு
  21. அனந்த கோடி நமஸ்காரம். சீரியல்கள் பார்த்தே
    வருடங்களாகிறது. இந்த அபத்தங்களையெல்லாம்
    கண்டு கெட்ட சொப்பனம் தான் வரும்.
    பாவம் நம்மூர்ப் பெண்கள். இதையெல்லாம் பார்க்கிறார்களே.
    மனம் கலங்கி விடாதா. ஆனால் நீங்க எழுதினது மிகவும் நகைச்சுவையாக இருந்தது.
    தேவகோட்டை ஜி. நீங்க கதை எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //பாவம் நம்மூர்ப் பெண்கள்//

      எதற்காக பாவம்னு சொல்றீங்க இந்த வலையில் விழுந்து கொண்டது அவர்கள்தானே இப்பொழுது நினைத்தாலும் உதறி விடமுடியுமே...

      இவர்கள் எல்லாம் படித்து இருந்தும்கூட கிணற்று தவளையாக இருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது அம்மா

      நீக்கு
  22. ஹாஹா :) 2000 தில் சித்தி பார்த்தேன் அப்போ ஜெர்மனில இருந்தோம்  ஒரு வெளி வலை தொடர்பில்லா காலம் வேற வழியில்லை :) பல்லாயிரக்கணக்கில் தொலைவில் இருக்கவங்களுக்கு நம்மூர் கடை உணவுளாம் பார்க்கும்போது வரூஉம் பாருங்க சந்தோசம் அதனாலே பார்த்தேன் தோம் :) பாலசந்தர் கதைகளாம் வீடியோ கேசட்டா வரும் .அதோட இங்கிலாந்து வந்து வெறுத்துப்போச்சு :)யூ டியூபில் வளம் வரும்போது எதேச்சையா இரண்டாம் சித்தின்னு பார்த்தேன் ரெண்டு எபிசோட் அதோட மூடுவிழா நடத்தியாச்சு :)
    மூடநம்பிக்கைக்கு டிஸ்க்ளெய்மர் போட்டு வேகமா பரப்பறாங்க டிவிக்காரங்க :)அந்த அப்பா ஆவி :) எந்த கடையில் சட்டை வாங்குறார் ? ஆவிகள் எப்படி பே பண்ணுவாங்க ?பே (ய் ) பேலிலா ?? அவர் எந்த வெஹிகிளில் வரார் ? சாமீஈ புதன்கிழமை டவுட்டெல்லாம் செவ்வாய் வருதே :))))))))
    நீங்க இன்னும் நாலைஞ்சு நாள் கொட்டாம்பட்டில இருந்திருந்தா இன்னும் நாலு சீரியலை கிள்ளி :) இருக்கலாம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்களது கேள்வி பேயையே பயமுறுத்தும் போலயே...

      இதற்காக நான் கொட்டாம்பட்டியில் தங்கணுமா ?

      நீக்கு
  23. ஹாஹாஹாஹா! உங்கள் நையாண்டி கலக்கல் சகோ. அதிலும் நல்ல கருத்தைச் சொல்லி விட்டீர்கள். வலைத்தள நண்பர்கள் அதிரா,ஸ்ரீராம், ஜிஎம்பி ஐயா, இவர்களை எல்லாம் இணைத்து எழுதியது மேலும் பிரமாதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  24. இவை போன்றவற்றைப் பார்ப்பதில்லை. உங்கள் மூலமாக அவர்களின் சில உத்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. ‘நதி மூலத்தையும் ரிஷிமூலத்தையும் பார்க்கக்கூடாது’ என்பதுண்டு. அதுபோல தொலைக்காட்சி நாடகத்தில் அறிவுபூர்வமானகளை எதிர்பார்க்கக்கூடாது. எல்லா நாடகங்களுக்கும் ஒரே கதைதான். ஒரு பெண் நல்லவராகவும் எல்லோருக்கும் உதவி செய்பவராகவும் எதையும் பொறுத்துப்போகுபவராகவும் இருப்பார். இன்னொருவர் அவருக்கு எதிர் குணம் கொண்டவராகவும் வீட்டில் சண்டை மூட்டுபவராகவும் இருப்பார். இடையே காவல் நிலையம்,சிறைச்சாலை, நீதிமன்றம் காட்சிகளும், குறிசொல்பவர்கள், ஜாதகம் பார்ப்பவர்கள் போன்றவர்களும் வந்துபோவார்கள். அவ்வளவுதான். கதாசிரியர்களும் இயக்குனர்களும் கதையை தங்கள் விருப்பத்திற்கு ஜவ்வுபோல் இழுத்துக்கொண்டு போய் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காலத்தை ஓட்டுவார்கள். இவைகளை தடுக்க ஓரே வழி நாடகங்களை பார்க்காமல் இருப்பதுதான். ஆனால் அது நடக்குமா என்பக்டு தெரியவில்லை. எனவே வீணே கவலைப்படாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக இன்றைய தொலைக்காட்சிகளின் நிலைப்பாட்டை விளக்கி விட்டீர்கள் நன்றி.

      நீக்கு
    2. இதுதான் என்னுடைய கருத்தும். தமிழ் சீரியல்களை பார்ப்பதே நேர விரயம் என்று நினைப்பவன் நான். அதில் அதைப் பற்றி பதிவு எழுதுவது என்பது அதை விட நேர விரயம். மன்னிக்கவும் ஜி!

      நீக்கு
    3. ஹா.. ஹா.. வாங்க ஐயா நானும் பார்ப்பதில்லையே...

      சற்று நேரம் பார்த்ததில் இப்பதிவு எழுதும் எண்ணம் தோன்றியது அவ்வளவே...

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    சீரியல் தொடர்களைப் பற்றி நன்கு அலசி எழுதியுள்ளீர்கள். உண்மையிலேயே ஒரு ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் ஒரிரு தொடருக்கு அடிமையாயிருந்தேன். அந்த தொடர்களில் வரும் சம்பவங்களை பார்க்கும் போது.மனம் உணர்ச்சிவசப்படும். காரணம் அந்த கதையில் ஈடுபாடு மிகவும் கொண்டதுதான். அதன் பின் இப்போது அதையெல்லாம் பார்ப்பதை நிறுத்திய ஏழு வருடங்கள் நிம்மதியாக இருக்கிறேன். தாங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான்.

    இந்தப் பதிவை நேற்றே படித்து விட்டேன். ஆனால் இதற்கு தாமதமாக வந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும். நேற்றெல்லாம் இரவு வரை கே.வா.போ வில் இருக்கைப் போட்டு அமர்ந்து விட்டேன். என் கைப்பேசியில் பதில்கள் அடித்து போட தாமதமாகி விட்டது. அதனால்தான் இங்கும் தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அதை எல்லாம் பார்ப்பதை நிறுத்திய கடந்த ஏழு ஆண்டுகள் நிம்மதியாக இருக்கிறேன்.

      இதுதான் சகோ வேண்டும் இதை எல்லா தாய்மார்களும் உணர்ந்தால் கேபிள் ஒயர்களை பிடுங்கி எரிந்து விடலாம்.

      நீக்கு
  27. இந்த நாடகங்களால் பிரிந்த குடும்பங்கள் எத்தனை? கலாசாரத்தை சீரழிப்பதில் நாடகங்களுக்கு நிகர் வேறேதுமில்லை.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான வார்த்தை.

      தங்களது உதவிக்கு நன்றி

      நீக்கு
  28. டிவி நாடகங்களால் சீரழிந்த குடும்பங்கள் நிறைய என கேள்விப்பட்டதுண்டு ... ஆனால் இப்போது ''நாடக காதல்'' என்று புதிதாக ஏதோ ஒன்று காதில் விழுகிறதே ... அது இன்னா நைனா? !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவர்களது காதலை உடைப்பில்தான் போடவேண்டும்.

      நீக்கு
  29. நாடகம் பார்த்தீங்கள்ல?
    பேய், பிசாசு, ஆவி, சாத்தான், பூதம் இப்படி உங்க வசதிக்கு தக்க, நீங்களும்
    கதை எழுதுங்க!

    யாருமே லாஜிக் கேட்கமாட்டாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கேள்வி கேட்டிருந்தால்தான் தமிழ்நாடு உருப்பட்டு இருக்குமே நண்பரே...

      நீக்கு

  30. சுமார் 32 வருடங்களுக்கு முன்பே சொல்ல துடிக்குது மனசு - படம் பார்க்கவில்லையா நண்பரே
    அதிலே ஆவியாக வரும் கார்த்திக்கை கதாநாயகி காதலிப்பாரே
    காதலே வரும் போது மகளின் பாசத்திற்காக தந்தை நவீன உடை அணிந்து ஏன் வரக்கூடாது
    ( உங்களை நல்லா மாட்டி விட்டேனோ )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்களை மூடராக்குவது தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது நண்பரே...

      நீக்கு
    2. // சுமார் 32 வருடங்களுக்கு முன்பே சொல்ல துடிக்குது மனசு - படம் பார்க்கவில்லையா நண்பரே
      அதிலே ஆவியாக வரும் கார்த்திக்கை கதாநாயகி காதலிப்பாரே //

      அது 'என் ஜீவன் பாடுது' படத்தில் இல்லையோ!

      நீக்கு
    3. ஆஹா இந்த குழறுபடிகள் தெரியாதே... ஜி

      நீக்கு