இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 27, 2020

மொழியில், கலந்திரு(ற)ப்பேன்


புதாபியில் நான் அரசாங்க வேலை வாங்குவதற்கு முன்பு சாதாரண நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் நானும் ஒருவன் இதில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடு இருந்ததே இல்லை தனித்து காணப்படும் மனிதனாக இருக்கவேண்டும் என்ற சிந்தை எனது அப்பா வயிற்றில் இருக்கும் பொழுதே தோன்றிய நீண்டகால எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.

அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே மலையாளம் எழுதப் படிக்க அறிந்து கொண்ட விடயம் அறையில் என்னோடு தங்கி இருக்கும் மற்ற பதிமூன்று நண்பர்களுக்கும் தெரிந்த விசயம். இந்தக்கால கட்டத்திலேயே நான் அரபு நன்றாக பேசத்தெரிந்தவன் என்றாலும் படிக்க, எழுத முயன்று கொண்டு வரும் விடயத்தை நான் அறை நண்பர்கள் அறியாத வகையில் வைத்து இருந்தேன். காரணம் சிலர் கேலி செய்யும் பழக்கம் உள்ளவர்கள் அதாவது நேரிடையாக இல்லை முதுகுக்கு பின்னால் எழுதப் படிக்க அறிந்து கொள்ளும் காலகட்டத்தில்தான் அலைபேசிகள் சாதாரண மனிதர்கள் கையிலும் புழக்கத்தில் வந்து கொண்டு இருந்தது.


அறையில் எல்லா நண்பர்களும் அலைபேசி வாங்கி விட்டனர் நான் முக்கிய நண்பனது எண்ணை எனக்கு (பி.பி,கால்) கொடுத்து இருந்தேன் சில அவசர வேலையாக அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தாலும் நான் அரபு மொழியில் சரளமாக பேசுவது நண்பர்கள் அறிந்த விடயமே... அலுவலகத்தில் எல்லோரும் சொன்னார்கள் சொந்தமாக அலைபேசி வாங்கிக்கொள் என்று எனக்கு ஒர் ஆசை இந்த நிறுவனத்தை விட்டு அரசு வேலையில் சேர்ந்த பிறகுதான் வாங்க வேண்டும் என்று.

காலங்கள் நீடிக்க பாலஸ்தீன் நண்பனொருவன் புதிய அலைபேசி வாங்கவும் தனது பழைய அலைபேசியை செங்கல் போன்ற அளவுள்ளது என்னை வாங்கச்சொல்லி வற்புறுத்த, மற்ற அரபிகளும் அவசரத்துக்கு உன்னை பிடிக்க முடியவில்லை வாங்கிக்கொள் என்று சத்தமிட்டு எனக்காக அந்த அலைபேசியை எழுபத்து ஐந்து திர்ஹாம்ஸ் வாங்கி கொண்டு கொடுத்து விட்டான். பிறகு எத்திசாலட் அலுவலகம் போய் நன்றாக நினைவு இருக்கிறது நூற்றி அறுபது திர்ஹாம்ஸ் கட்டி புதிய சிம் அட்டை வாங்கினேன். பின்னாளில் சிம் அட்டை ஒரு திர்ஹாம்ஸ் என்பது வேறு விடயம்.


அந்த அலைபேசியை பாலஸ்தீனிய நண்பன் அரபு மொழியில் வைத்திருந்தவன் என்னிடம் கொடுக்கும் பொழுது ஆங்கிலத்தில் மாற்றி கொடுத்தான். சட்டென எமது தேவகோட்டை மூளையின் மூலையோரம் தோன்றியது நாமும் அரபு மொழியிலேயே வைத்து இருந்தால் என்ன ? பாலஸ்தீனியைவிட இந்தியனின் மூளை அபாரம் என்று சரோஜாதேவி எழுதிய நூலில் படித்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது. நமக்கும்தான் மூளை இருக்கிறதே... இருக்கிறதா ? திடீரென ஐயம் மனசாட்சியிடம் உறுதி கேட்டுக்கொண்டு. பாலஸ்தீனியனிடம் சொன்னேன்.
மீண்டும் அரபு மொழிக்கு மாற்று
ஏன் ?
ஆங்கிலம் படித்தால் எனக்கு முதுகு வலிக்கும்.

தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் அரபு மொழிக்கு மாற்றுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டேன். அலைபேசியை தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். எல்லோரிடமும் காட்டினேன். மற்றவர்களின் அலைபேசியைவிட என்னுடையது பழைய பண்டாரமாக இருந்த காரணத்தால் யாரும் அதை தீண்டிப் பார்க்கவில்லை. ஒரு மாதம் கடந்து இருக்கும் எனது தொடர்பாளர்களின் பெயர்களை எல்லாம் அரபு மொழியில் தட்டச்சு செய்து பெயர்ப்பட்டியலில் சேமித்து வைத்திருந்தேன். அலுவலகத்தில் இருக்கும் அரேபியர்களின் பெயர்களே அதிகமாக இருந்தன... நன்றாக குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கமும் வந்து விட்டது.

அன்றொரு தினம் மதியம் அருந்திய உணவின் எலிக்கறியில் கோழிக்கறியை கலப்படம் செய்த காரணத்தாலோ... என்னவோ... வயிற்றைக் கலக்கியது மாலை வேளை. கழிவறைக்கு சென்று சற்றே அதிகமாக புழங்கி விட்டு தாமதமாக வந்தேன். எனது கட்டிலின் தலையணையின் கீழே எனது அலைபேசி. பெண்ணுக்கு சடங்கு சுற்றுவதுபோல் அதனைச் சுற்றி சுமார் ஐந்து நபர்களுக்கு மேல் அவர்களின் விழிகளில் ஐயப்பாட்டுடன் சற்றே பீதி.

என்ன பார்த்துக்கிட்டு நிற்கிறீங்க ?
இப்போ உனக்கு அழைப்பு வந்துச்சு.
அதுக்கென்ன... ?  யாராவது கூப்பிட்டு இருப்பாங்க...
ஏழு தடவை வந்துருச்சு...
ஏதும் அவசரமாக இருக்கும் எடுத்து கழிவறைக்கு போயிருக்கேன்னு சொல்ல வேண்டியதுதானே... ?
அரபு மொழியிலே வந்துச்சே... ?
சரி எடுத்து ‘’கில்லர்ஜி ரோஹ் ஹம்மாம்’’னு உனக்கு சொல்லத் தெரியாதா ?
அப்பு உண்மையை சொல்லு இது யாரு விட்டு ?


அப்பு... அதாவது நான்தான் அப்பு அதாவது அப்பன், அப்பா தமிழ்நாட்டில் ஆச்சாரிக்கும், இஸ்லாமியர்களுக்கும் அப்பன்-மகன் உறவு இருப்பது உங்களில் பலரும் அறிந்த விடயமாக இருக்கும். பதிமூன்று பேரையும் நான் மகனே என்றுதான் அழைப்பேன். மற்றவர்கள் என்னை தந்தையே என்றும், அப்பா என்றும், டாடி என்றும் அப்பனே என்றும் அழைப்பார்கள் இவர்களில் மரியாதை மட்டும் கிடைக்காது காரணம் வார்த்தைகள் அவ்வளவு மட்டமாக, கேவலமாக, ஆபாசமாக வந்து விழும். பொதுவாக நான் ஆபாசமாக பேசவே மாட்டேன் ஆனால் இவர்களிடம் மட்டும் அவர்கள் என்னை ஓர் வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள் நான் எட்டு வார்த்தைகளை மட்டுமே சொல்லி இருப்பேன். காரணம் எனக்கு வேகமாக பேச வராது... ஆனால் வரும். இவன் என்னை ஆபாசமாக பேசி விட்டான் என்று நீதி மன்றம் சென்றாலும் செல்லாது. காரணம் இது ஆதி முதல் தொட்டு வரும் பந்தம். இதனைக் குறித்து தேவகோட்டை சந்தனக்கூடு கச்சேரிக்கு வந்த மறைந்த இஸ்லாமியப் பாடகர் அப்பு ஜனாப் நாகூர் ஹனீஃபா அவர்களிடம் தாளில் எழுதிக் கொடுத்து அதன் பின்னேயுள்ள உறவு முறையின் முழுக்கதையை சொல்லச் சொல்லி கேட்டவன் நான். தாளை படித்தவர் மறைந்து நின்ற என்னை கொன்னே புருவேன் என்று விரலைக் காட்டிட நின்றால் உயிருக்கே உலையாகும் என்று நகன்று விட்டேன் அன்று எனது வயது பதினான்கு நான் அவரது கம்பீரமான குரலுக்கு பணிந்து கிடந்தவன் அவருடைய எல்லா பாடல்களுமே என்னிடம் இருக்கும். சரி அந்தக் கதையை பிறகு பார்ப்போம்.

உடன் அலைபேசியை எடுத்து பார்த்தேன் அதில்...
عبدالله محمد احمد المنصوري مدير
மேலாளர் அப்துல்லா முகம்மத் அஹமத் அல் மன்ஸூரி
என்று வந்து இருந்ததை கண்டதும் பதட்டத்துடன் அழைத்து கழிவறைக்கு போயிருந்த விடயத்தை சொல்லி அரேபியரின் மரபுப்படி மன்னிப்பு கோரி என்ன விடயம் என்று அவர் சொன்ன விடயங்களை கேட்டு பதில் அளித்து முடித்து விட்டு.... எனது அழகிய முகத்தை கர்ண கொடூரமாக்கி... அப்படியும் அழகாகத்தான் இருந்தது...
ஏண்டா...நோத....................................................................................................................................................................................................................................................................................................
மன்னிக்கவும் தட்டச்சு செய்ய இயலாத, இலக்கணம் மாறி வறம்பு மீறிய வார்த்தைகல்.... கல்.... கல்....
ஏப்பு இப்படி திட்டுறே.... அரபு மொழியில இருக்கவும் அரபிக்காரன் எவன் விட்டாவது இருக்குமோன்னு பயம்தான்... ஸுருத்தா (POLICE) தேடி வந்தால் எல்லாருக்கும்தானே பிரச்சனை ?
ஏண்டா..................... அரபு மொழியில் வச்சிருந்தா... திருடிக்கிட்டு வந்துட்டேன்னு நினைச்சுட்டீங்களா ?
இல்லப்பு உன்னைப்பத்தி எங்களுக்கெல்லாம் தெரியாதா ? உனக்கு அரபு பேசத் தெரியும் இப்படி எழுதுவேன்னு யாருக்கும் தெரியாதுல...
அன்றாடம் இவர்களை வறுத்துக் கொண்டு இருப்பதால் இது பெரிய விடயமாக தெரியவில்லை ஆகவே அமைதியானேன். வயிற்றில் எலிக்கறியின் குடைச்சல் வேறு.
சரிப்பு எனக்கும் கொஞ்சம் படிக்க சொல்லிக் கொடுப்பு.
அதன் பிறகு எனது அலைபேசிக்கு எல்லோரும் அழைத்து அவரவர்கள் பெயர்கள் அரபு மொழியில் வருவதை குறித்துக் கொண்டு அழகு பார்க்கத் தொடங்கினர். காலம் உருண்டோட விஞ்ஞான வளர்ச்சியோடு வாழ்க்கையின் பொருளாதார வளர்ச்சியும் வளர செங்கலை நினைவுச் சின்னமாக வைத்து விட்டு தொடுதிரை அலைபேசி வாங்கினேன் இன்றுவரை அலைபேசியின் அமைப்பு அரபு மொழியில் இருக்கிறது பெயர்ப்பட்டியலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் இருக்கிறது. புலனம் அமைப்பை அவ்வப்போது தெலுங்கு மொழியில் வைத்து இருப்பேன். இப்படி மொழிகளை புழக்கத்தில் வைத்து இருப்பதால் மொழியால் நானும், என்னுடன் மொழியும் கொஞ்சிப் பேசி கலந்திரு()ப்போம். வாழ்க தமிழ்.


இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்கு சமம். - காந்தியடிகள்

53 கருத்துகள்:

  1. உங்கள் மொழி அறிவுத் திறன், கற்கும் ஆர்வம் பாராட்டத் தக்கது.

    எனக்கும் செங்கல் அளவு மொபைல் நினைவுக்கு வந்துவிட்டது. அதற்கு முன்பு பேஜர் கொடுத்திருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டிற்கு நன்றி.

      பேஜர் கிட்டும் பாக்கியம் எனக்கு இல்லை ஆனால் அதன் சுவாரஸ்ய அனுபவம் எனக்கு உண்டு.

      நீக்கு
    2. எனக்கு அந்த செங்கல் மொபைல் முதல் முதலாகக் கிடைத்ததும் பெருமிதம் தாளவில்லை. கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது, வந்த அழைப்பை எடுக்க அதனை எடுத்தால், காரை ஓட்ட முடியாமல் அப்புறம் மொபைலை சீட்டின் கீழ் தள்ளிவிட்டுவிட்டேன். அந்தச் செங்கல் ஒரு வாரம்தான் என்னிடம் இருந்தது. பிறகு கம்பெனி சிறிய போன் ஒன்றை வாங்கித்தந்தது. (1999 ஆரம்பத்தில்)

      நீக்கு
    3. பேஜரை இடுப்பில் சொருகிக் கொண்டு தமிழ்நாட்டு சூபர்வைஷர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே அடேங்கப்பா... கப.. கபா.

      நீக்கு
  2. நகைச்சுவை உங்களுக்கு சரளமாக வருகிறது.   நிறைய இடங்களில் புன்னகைத்து, சிரித்து விட்டேன்.  நல்ல அனுபவம் போங்க...    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி இனிய காலை வணக்கம். ஹா ஹா ஹா ஹா பல இடங்கள் காமெடி...

    உங்கள் மொழிப்புலமை அறிந்த விஷயம். நல்ல திறமைசாலி கில்லர்ஜி நீங்கள். பள்ளிப்படிப்பு இல்லை என்றெல்லாம் இனி பதிவுகளில் உளறக் கூடாது சொல்லிப்புட்டேன் ஹா ஹா ஹா....ஏனென்றால் உங்களுக்குப் பல நல்ல அனுபவங்கள். அனுபவங்கள் தான் மிகச் சிறந்த ஆசிரியர். அது கற்றுத் தரும் பாடம் தான் அதுவும் அதை நாம் மிகச் சிறப்பாக உள் வாங்கிக் கொண்டால் அதைப் போன்ற சிறப்பானது எதுவும் இல்லை என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. ஏட்டுக் கல்வி வேண்டும் தான் ஆனால் அதையும் ப்ராக்ட்டிக்கலாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவே அனுபவக் கல்வி ஆகச் சிறந்தது.

    விட்டா என்றால் அர்த்தம் லவுட்டுதலோ?!! ஆட்டையைப் போடுதல்? ஓகே ஓகே திருடுதல் நு நீங்களே சொல்லிட்டீங்க பார்த்திட்டேன்...

    ரசித்தேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை மிகவும் ரசித்தமைக்கு நன்றி

      ஆம் அனுபவம் நல்ல ஆசானே
      முந்தைய பதிவு "பேயிடம் பேசிய பேரம்" படியுங்கள் அதுவும் அபுதாபி அனுபவமே...

      விட்டா ?
      எவன்விட்டாவது + எவனோடதாவது

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. பல மொழிகள் பேச கற்றுக் கொண்டு அதுவும் படித்து, எழுதவும் கற்று கொண்ட தங்கள் திறமையை பாராட்டுகிறேன்.

    வேலைக்கும் சென்று கொண்டு பல மொழிகளை ஆர்வமாக கற்று தேர்ந்த தங்களை கண்டு நான் வியந்தும் போகிறேன். ஆனால், திறமையுடன் பல மொழிகளுடன் பேசி பழகும் உங்களுடன் மொழிகள் கலந்து உறவாடுவதில் வியப்பேதும் இல்லை. உங்களின் பன்முகத் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்குமிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்தமைக்கு நன்றி

      வேலைக்கு சென்று வருவதில்தானே மொழியும் அடங்கி இருக்கிறது

      விரிவான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  5. நீங்கள் பல மனிதர்களுக்கு சமம் ஜி... எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்தும் தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும் - அதை வலைப்பூக்களிலும் காண்கிறேன்...

    எத்தனையோ கரடுமுரடான பாதைகளை கடந்து வந்தாலும், உங்களின் எளிமையும் மிகவும் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசத்தெரியாத காரணத்தால்தான் இன்று நான் பிழைக்கத் தெரியாதவனாக ஆகி விட்டேன்.

      நான் இவ்வளவு காலமும் நல்லவனாக வாழ்ந்ததற்காக துளியளவும் வருத்தமில்லை

      ஆனால்  ?

      ரொம்ம்ம்ப...... நல்லவனாக வாழ்ந்து விட்டதை நினைந்து என்னை நானே வெறுக்கிறேன்.

      பிறவியை பலனுள்ளதாக ஆக்க வேண்டுமென்ற ஞானம் இருபது வயதில் தோன்றினால் பயனுண்டு

      பிறவியை பாழாக்கி விட்டோமே என்ற புத்தி ஐம்பது வயதில் வந்தால் பயனில்லை

      நான் ஐம்பது வயதின் இரண்டாம் நிலையாளன்.

      நீக்கு
  6. பல மொழிகளை கற்கும் ஆர்வம் நல்ல விஷயம். உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் கில்லர்ஜி.

    ரசனையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நீங்களும் ஹிந்தி ஆசான்தானே...

      நீக்கு
  7. `>>>என்ற சிந்தை என் அப்பா வயிற்றில் இருக்கும்போதே..`<<<.

    விஞ்சானதுக்கே சவால் நம்ம கில்லர்ஜி!

    >>>எனக்கு வேகமாக பேச வராது...><<<

    - இங்கே தலைக்கீழ். நான் பேசி முடித்தவுடன் எதிரில் இருப்பவர்கள், `என்னமோ சொன்னிங்களே, மறுபடியும் சொல்லுங்கள்` என்பார்கள். அவ்வளவு வேகம். ஆனால் இப்படி குறை இருப்பதுதான் மற்றவர்களிடம் நம்மை தனிமைப்படுத்தி `தனித்த` புத்திசாலி(?) யாக மாற்றிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா
      நான் உண்மையை மட்டும் பேசுவதில்லை அதன் அடிநாதத்தை மீட்டி விடுபவன்

      இதில் பலருக்கு மாற்றுக் கருத்து வரலாம் கருத்தில் மாற்றம் கண்டாலே நமக்கு மட்டுமல்ல! நாட்டுக்கும் மாற்றம் கிடைக்கும்

      நீக்கு
  8. 1997 புகைப்படத்தில் எங்கே இருக்கிறார் நம்ம கில்லர்ஜி!
    1997 புகைப்படம் என்னுடைய மஸ்கட் வாழ்க்கையை நினைக்க வைத்து விட்டது. 1997லில் தான் நானும் முதன் முதலில் மஸ்கட் சென்றது.

    முதல்ல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சகனும் சாமி!!!! - உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மணிகண்டனோடு நலமா ?

      அதில் நானில்லை இது அரபு நாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைதானே...

      இந்தக் கேள்வியை நீங்க "முதல் மரியாதை" வீராசாமிடம் கேட்கணும்.

      நீக்கு
  9. மொழிகள் பயில்வது ஒரு கலை. அது பலருக்கு வருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  10. மொழிகள் பல கற்றமேதை. உங்களின் ஆர்வம், முயற்சி வாழ்க!
    நல்லவானக வாழ்ந்தற்கு உங்களை நீங்கள் வெறுக்க வேன்டாம்.
    எத்தனை வயதிலும் சாதனை செய்யலாம், வாழ்க்கையை மீண்டும் வாழலாம்.உங்களால் பலன் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்று நினைத்து பெருமிதம் அடையலாம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ஆறுதல் மொழி கண்டு எமது விழிகள் நிறைந்தன...

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது மொழியில், கலந்திரு(ற)ப்பேன் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றி.
      எமது பங்களிப்பு என்றும் நிலவும் நண்பரே...

      நீக்கு
  12. 1997 என்று எழுதிய படத்தைப் பார்த்தது, துபாயில் (தேரா) அத்தகைய குடியிருப்புகளைப் பார்த்த நினைவைக் கொண்டுவந்தது. ஒரு அறையில் இரு தளமாக 8 படுக்கைகள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பெட்டி மாத்திரமே வைத்திருப்பார்கள். துவைக்கும் மிஷின், குளிப்பது எல்லாம் பொது அறைகளில். ஒரு படுக்கைக்கு 1993ல் 250 திர்ஹாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தொடக்கத்தில் ஒரு அறையில் 14 நபர்களோடு தங்கினேன்.

      கால வளர்ச்சி ஒரு ரூமில் 2 நபர்கள் மட்டுமே...

      இருப்பினும் தொடக்கத்தில் வாழ்ந்தது வசந்தகாலமே...

      இனி கிடைக்காது.

      நீக்கு
  13. பல மொழி கற்கும் ஆவல் நல்லதே! எந்த மொழியையும் கற்கலாம்! ஆனால், தாய்மொழியை மறக்காமல் இருக்க வேண்டும்.கூடவே மற்ற மொழிகளை மட்டம் தட்டி பேசவும் கூடாது அதான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தமிழ்மொழியை நான் எப்பொழுதுமே மறந்ததில்லை அரபு நாட்டில் அரசாங்கத்தில் எனக்கு கொடுத்த கணினியில் ஸ்கிரீன் "அ" என்ற எழுத்தைத்தான் பெரிதாக வைத்து இருந்தேன். அது சர்ச்சையை கிளப்பினாலும் நான் இறுதிவரை மாற்றவில்லை

      அதேபோல்
      தமிழ்ச்செல்வி என்ற பெயரில் எங்கள் வீட்டில் இருவர் உண்டு. மேலும் தமிழ்வாணன், தமிழ்மாறனும் உண்டு.

      நீக்கு
  14. ஐம்பது வயதிற்குள் பல மொழி கற்றிருக்கிறீர்கள்; பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். பலருக்கும் உதவியிருக்கிறீர்கள்; இன்னும் நிறையச் சாதிக்க இருக்கிறீர்கள். வாழ்நாளை வீணடித்துவிட்டதாக இனியும் சொல்லாதீர்கள்.

    நீங்கள் ரொம்ப நல்லவர் என்பதால்தான் எனக்கு[இன்னும் பல வலையுலக நண்பர்களுக்கும்] உங்களை ரொம்பவும் பிடித்திருக்கிறது. அவ்வாறு வாழ்ந்துவிட்டதை நினைத்து வருந்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரை மனதுக்கு ஆறுதலை தந்தது.

      நன்மைகளை மட்டுமே செய்து குடும்பத்தில் பத்து நபர்களிடம்கூட நல்ல பெயர் எடுக்க இயலாத வாழ்வில்.

       நன்மைகளை செய்து நாட்டு மக்களிடம் நல்ல பெயர் எடுக்க அரசியல்வாதிகளால் இயலுமா ? என்றே பல நேரங்களில் நான் சிந்திக்கிறேன்.

      நீக்கு
  15. மொழி எல்லைகள் கடந்தது...

    பதிலளிநீக்கு
  16. அன்பு தேவகோட்டைஜி,
    இளைய வயதிலிருந்து உழைத்து,குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவர் நீங்கள்.
    பல மொழிகள் கற்றதன் பலன் தங்கள் சாமர்த்தியம் வெளிப்படுகிறது.
    தங்களுக்கு ஏமாற்றம் மனைவியை இழந்த தனிமைதான். சொல்லி ஆற்றிக் கொள்ள ஒரு துணை இருந்தால் எத்தனையோ துன்பங்களைக் கடக்கலாம்.
    இத்தனை ஆற்றலும் உங்களுக்குத் துணை கொடுக்க
    இறைவன் அருளட்டும். மிகச் சிறிய வயது. என் கடைசிமகனுக்கும் இந்த வருடம் 50 ஆகப் போகிறது.
    ஆண்டவன் உங்கள் அனைவரையும் அரவணைத்து காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டேன்

      பிறக்கும்போதே தீர்மானித்து விட்ட வாழ்க்கை வழி அதனை கடந்தே தீரவேண்டும்.

      நீக்கு
  17. பலமொழி வித்தகரான உங்களிடமிருந்து நாங்கள் கற்கவேண்டியது நிரம்ப உள்ளது. தாய்மொழியுடன் ஓரளவு ஆங்கிலம், ஓரளவு இந்தி தெரிந்துள்ள நிலையில் பிற மொழியறிவின் முக்கியத்துவத்தினை உணரமுடிகிறது. இதைப் படித்தவுடன் நான் பணிக்கு சென்ற இரண்டாம் நாள் நினைவிற்கு வந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவர். வந்ததோ தில்லியிலிருந்து இந்தியில் தொலைபேசி அழைப்பு. அப்போதுதான் மூன்றாவது முறையாக தொலைபேசியை பயன்படுத்துகிறேன். தட்டுத்தடுமாறி பேசி அரைகுறையாகப் புரிந்து அதனை நிர்வாக இயக்குநரிடம் தெரிவித்தபோது வியந்து, பாராட்டு தெரிவித்தார். சரியாக நான் உள்வாங்கிக்கொண்டதாகவும் கூறினார். பிற மொழியறிவின் தேவையை உணர்த்தும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் உள்ளத்தை இப்பதிவு கிளறி விட்டதை அறிந்து மகிழ்கிறேன்.

      தங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி

      நீண்ட கருத்துரைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  18. அன்பின் ஜி..

    தங்களுடன் பழகியிருந்த சில மணித்துளிகள் மனதின் பொக்கிஷம்...

    வாழ்க நலமுடன்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அதுவொரு கானாக்காலம் மீண்டும் சந்திப்போம் இறையருளால்... கொரானாவைக் கொன்று...

      நீக்கு
  19. அருமை நண்பரே. காப்பி அடித்து எழுதினாலும் உங்களை போல் நகைச்சுவையாய் எழுத வருவதில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் இப்பொழுது எழுதுவது இல்லை கணினியில் தட்டச்சுதான் செய்கிறேன்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  20. பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் வருவதில்லை. தங்களுக்கு பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதால் பல மொழிகளைக் கற்று தேர்ந்துள்ளீர்கள்.பாராட்டுகள்!

    இரண்டுமொழிகள் தெரிந்தவர் இரண்டு மனிதருக்கு சமமென்றால் பல மொழிகள் கற்ற தாங்கள் எத்தனி மனிதர்களுக்கு சமம் என எண்ணி வியக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எத்தனை மொழிகள் கற்றாலும் இரண்டு மனிதனுக்கு சமம் என்பதே காந்திஜியின் கருத்தாகும்.

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  21. ஆஹா .... இவ்வளவுநாளும் எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து வந்தது... நம்ம கில்லர்ஜி சார் மட்டும் எப்படி பன்மொழிப் பண்டிதராகவும் ''அட்வான்ஸ்'' அறிவாளியாகவும் இருக்கிறார் என்று ..... ஆனால் இன்றுதான் தெரிந்துகொண்டேன் ... எல்லாம் அந்த ''எலிக்கறி'' செய்யும் மாயம் என்று ....ம் ..ம் ... இருக்கட்டும் ... இருக்கட்டும் .... இனி நாமளும் எலி வேட்டைக்கு கிளம்பிட வேண்டியதுதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      எலிக்கறி மூட்டு வலிக்கு நல்லது மொழியறிவுக்கு மூளையை அபிவிருத்தி செய்யுமாம்

      நீக்கு
  22. மொழியில் கலந்திறப்பேன்:)).. இது எல்லாம் சரிதான் ஆனா எந்த மொழி எனச் சொல்லவே இல்லையே..

    ஆனாலும் கில்லர்ஜி, அரப்பு மொழியை இவ்வளவு தூரம் பேச எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டது சின்ன விசயம் இல்லை, சிலருக்கு மொழி கற்பதென்பது ஒரு கொடைதான், ந்த மொழிக்குள் போனாலும் டக்கெனப் பேசப் பழகிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எந்த மொழியென்று ஏன் சொல்லணும் ?
      பழகிய எல்லாமொழியும் என்றே நினைக்கலாமே...

      தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      அங்கு கொரானா நிலவரம் எப்படி ? அதை பதிவிடலாமே...

      நீக்கு
    2. அப்போ நீங்க “மொழிகளில்” எனச் சொல்லியிருக்கோணுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊ:))...

      கொரொனா பற்றி எழுதினால் இப்போ சனம் அடிக்க வருவினம் கில்லர்ஜி:)) மக்க?ளின் காதெல்லாம் கண் எல்லாம் புளிச்சுப்போய் இருக்கு கேட்டுக் கேட்டு:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. கொரானாவை விரட்டி விட்டீர்கள் போலயே...

      நீக்கு
  23. பன்மொழி ஆளுமை
    பயன்மிக்க உறவுகளைத் தரும்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு