வணக்கம் நட்பூக்களே... ஊருக்கு உழைப்பவன் (1976) திரைப்படப் பாடலான //அழகெனும் ஓவியம் இங்கே// என்ற பாடலை நான் உல்டாவாக அதாவது அங்கு காதலன் கொஞ்சுகின்றான் எனது பாட்டில் பாடுபவன் ஒரு திருடனும் அவனது மனைவியும். மேற்கண்ட பாட்டை எழுதிய தமிழன் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடலுக்கு இசையமைத்தது மலையாளி எம்.எஸ்.விஸ்வநாதன், பாடியது தெலுங்கு பி.சுசீலா மற்றும் மலையாளி கே.ஜே.யேசுதாஸ் படத்தில் வாயசைத்தது மலையாளி எம்.ஜி.ராமச்சந்திரன் திரைப்படத்தை இயக்கியவர் மலையாளி எம்.கிருஷ்ணன் நாயர் படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றி பெற வைத்தது தமிழகத்து பாமரத்தமிழர்கள்.
நான் பிரிவினை வாதம் சொல்ல வரவில்லை தமிழனை எவ்வளவு மொழிக்காரன் தொடக்கம் முதலே ஆக்கிரமித்து வந்துள்ளான் என்பதை உணர்த்துவதற்காகவே குறிப்பிட்டேன் இங்கு பாடலாசிரியர் தமிழனாக இருந்தே தீரவேண்டும் என்பது நாமறிந்ததே... இது இன்றுவரை தொடர்கிறது.
இதோ கீழே எனது உல்டா பாடல் வரிகள், அதன் பிறகு சிவப்பு நிறத்தில் உள்ளது கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்களின் உண்மையான பாடல் வரிகள்.
அழுக்கெனும் ஓவியா இங்கே
இவளை அழுத்திய ரவிசங்கர் எங்கே
இலக்கியா, காவியா இங்கே
இவர்களின் கணவர்கள் எங்கே
காமங்கோட்டை கல்குவாரி உடைத்தேன் இரு கைகளில்
சோமன் சொன்ன பூட்டெல்லாம் உடைத்தேன் வரும் வழியில்
முத்து நகைகள் சிதறாமல் என் கைகளில்
மூன்றாம் நகைகள் பார்த்தேன் உந்தன் இடையளகில்
(அழுக்கெனும் ஓவியா இங்கே)
என்றோ இளமை மாறித்தான் வாழும் தரித்திரமே
நீ எந்தன் கள்வன் என்றாலே உள்ளம் கசந்திடுமே
ஒன்றா இரண்டா எனக்கு சொல்ல வருவதில்லை
நான் உன்னால் அடையும் துன்பம் தீரவில்லை
(அழுக்கெனும் ஓவியா இங்கே)
ஆடை விற்கும் பூங்குயிலே நீ ஏன் ஆட்டை அழைத்து வந்தாய்
நான் விற்கத் துடிக்கும் மாட்டை ஏன் நீ மறைத்து வந்தாய்
நீங்கள் குடிக்கும் பாணத்திற்கு ஏன் துடிக்கின்றாய்
நான் மீண்டும் குடிக்க விடாமல் ஏன் நீ மறைக்கின்றாய்
(அழுக்கெனும் ஓவியா இங்கே)
இதோ உண்மையான பாடல் வரிகள்.
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் –
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் –
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம்)
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் –
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம்)
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே –
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை –
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(அழகெனும் ஓவியம்)
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை –
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(அழகெனும் ஓவியம்)
ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம்)
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம்)
யூட்டியூப்பில் பாடலை ரசிக்க மேலே சொடுக்கவும். – கில்லர்ஜி
அட்டெண்டன்ஸ்.1ஸ்ட்.!!!!!..கருத்திற்கு வருகிறேன்
பதிலளிநீக்குகீதா
நன்றி மீண்டும் வறுக்க, வருக!
நீக்குஹா... ஹா... என்ன ஆச்சி ஜி...?!
பதிலளிநீக்குபாணமா...?
பதிலளிநீக்குஇடை - அளவு / அழகு...?
ரொம்ப உல்டா ஆச்சே ஜி...! ஹா... ஹா...
வாங்க ஜி முதலிலேயே ஜொள்ளி விட்டேன் உல்டா என்று...
நீக்குபாடலாசிரியராக சிறு முயற்சிதான்...
கில்லர்ஜியிடமிருந்து இப்படி ஒரு பாட்லா?!!!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
வருக ரசித்தமைக்கு நன்றி
நீக்குகீதா ரங்கன் - திரைப்படத் துறைல இறங்கறதுன்னு முடிவுபண்ணிட்டார். அதுக்கு இந்த மாதிரி பாடல்தான் சரிப்பட்டுவரும்.
நீக்குநான் முடிவு செய்து நடக்குமா ? கொரோனாவால் திரைப்படத்துறையே அழியப் போகிறதாம்.
நீக்குஐயா கோவிச்க்காதிங்க. எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்.
பதிலளிநீக்கு15. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி
வாங்க ஐயா
நீக்குஉயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாதுதான்.
முயற்சிப்போமே காசா பணமா.. இருக்கிற மூன்று கிலோ மூளையை என்ன செய்வது ?
பாடலாசிரியர் மட்டும் தமிழன்...
பதிலளிநீக்குஅதனால் தான் சட்ட சபைக்குள் நுழைய முடிந்தது...
ஆமாம் ஜி
நீக்குசட்டசபையில் நுழைய திட்டமிட்ட பாடல்கள்தான்.
தனது படத்திற்கான பாடல்களை MGR தான் எப்போதும் OK செய்வாராம்...
பதிலளிநீக்குஇப்படியான கருமம் பிடித்த பாடலையும்
இன்னொரு பாடலான மடல் வாழைத் தொடையில் மச்சம் பார்த்த பாடலையும் அவரே ரசித்து ஓகே செய்திருக்க வேண்டும்...
அட விதியே!...
ஆமாம் ஜி
நீக்குஎல்லாமே அரியணை ஏறுவதற்கு தகுந்தாற்போலே அறியாமைவாதிகள் ஒத்துழைத்தார்கள்.
இன்று அதையே நினைத்து எல்லா மொழிக்கார கூத்தாடிகளும் முயல்கிறார்கள்.
அவ(லை)ளை நினைத்து உரலை இடித்த கதை போல...
இந்த மொழிப் பிரிவினை வாதங்களை எல்லாம் விடுத்து, நான் ஊருக்கு உழைப்பவன் பாடல்கள் அத்தனையையும் ரசிப்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். துரை செல்வராஜூ ஸார் சொல்லி இருக்கும் பாடல் உலகம் சுற்றும் வாலிபன் பாடல். நிலவு ஒரு பெண்ணாகி... அந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கும்.
நீக்குஜி நான் பிரிவினை செய்யவில்லை தமிழனை எத்தனை மொழியர்கள் ஆட்சி செய்து இருக்கின்றார்கள் என்பதை நினைவு கூர்ந்தேன்.
நீக்குகடைசி பாரா - தேனாறு தேளாறு ... இவ்வளவு ஆபாசமா எழுதறதுதான் தமிழ் கவிகளின் சிறப்பு போலும்
நீக்கு//லாலாக்கு டோல் டப்பிமா//
நீக்குஎன்ற அர்த்தமற்ற பாடல்களை விடவா...
பாடலின் உல்ட்டாவை ரசித்தேன்.
பதிலளிநீக்குவாங்க ஜி ரசித்தமைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதலில் இந்த திரைப்பட பாடல் சட்டென நினைவுக்கு வரவில்லை. நீங்கள் தந்த சட்டியில் கேட்டப்பின், என்ன இருந்தாலும் நீங்கள் இட்டு கட்டிய பாடலும் அதை விட நன்றாகத்தான் இருக்கிறது எனத் தோன்றியது. ஹா.ஹா.ஹா. ரசித்தேன்.
பாடல் ஆசிரியராக ஆவதற்கு முயற்சிக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பாடலை ரசித்து படித்து பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குபாடல் ஆசிரியராக ஆனதற்கு வாழ்த்துகள். இப்படி ஒவ்வொருவரையும் பிரித்துப் பிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தால்? அக்கம்பக்கம் யாருமே இல்லாமலா வாழ்கிறோம்? தமிழர்கள் தாங்களாகவே தான் திரைப்படக் கதாநாயகர்கள் கால்களில் போய் விழுகின்றனர். எந்த மலையாளியும், தெலுங்கரும், கன்னடவரும் போய் விழச் சொல்லவில்லை! :))))))
பதிலளிநீக்குவருக சகோ மீண்டும் சொல்கிறேன் நான் தமிழர்கள் தொன்றுதொட்டு ஏமாறுவதைத்தான் சொல்கிறேன்.
நீக்குகேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில் தமிழனை கோமாளியாககூட அனுமதிக்க மாட்டார்கள்.
//மலையாளியும், தெலுங்கரும், கன்னடவரும் போய் விழச் சொல்லவில்லை//
ஆம் இது தேவையா ?
வாழ்த்துகளுக்கு நன்றி.
தமிழுக்கும், தமிழருக்கும் இவ்வளவு தூரம் பாடுபடும் தாங்கள் "உல்டா" என்னும் ஹிந்திச் சொல்லைப் பயன்படுத்தி இருக்க வேண்டாமோ? தலைகீழாகப் பொருள் வரும்படி எழுதி இருக்கேன் என்று சொல்லி இருக்கலாமோ? நம்மையும் அறியாமல் வேற்று மொழி வரத்தான் செய்கிறது! :)))))))))))))))
பதிலளிநீக்குஹா.. ஹா.. நான் பாடலை காப்பியடித்துதான் எழுதுகிறேன்.
நீக்குஓவியம் என்னைக் கிறங்கடித்தது. உங்கள் பாடலையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி.
நீக்குபாடியே பார்த்துவிட்டேடேன்...அருமை..
பதிலளிநீக்குகவிஞரின் ரசனைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குநீங்க எப்போதும் திரைப்படத் துறையில் பிற மொழிக்கார்ர்களின் ஆதிக்கத்தைக் குறை சொல்றீங்க. நம்ம ஊர் நடிகைகள் பத்து பேரைச் சொல்லுங்க ப்ளீஸ். ஓவியாகூட மலையாளம்தான். தமிழ்ப் பெண்கள் அழகானவர்கள் இல்லைனு சினிமா ரசிகர்கள் நினைக்கறாங்க போலிருக்கு
பதிலளிநீக்குநம்ம ஊர் ஶ்ரீதேவி ஹேம்மாலினி போன்ற பலர் வடநாட்டில் புகழ் பெற்றிருக்காங்களே. தெலுங்கு ஜெயப்ரதா உபில எம்பி ஆகவும் இருந்திருக்காங்களே
//நீங்க எப்போதும் திரைப்படத் துறையில் பிற மொழிக்கார்ர்களின் ஆதிக்கத்தைக் குறை சொல்றீங்க//
நீக்குஉண்மைதான் தமிழர்களும் இதேபோல் ஆக்கிரமித்தால் நான் எதிர்க்கவே மாட்டேன்.
தாங்கள் சொன்னது அத்தி பூத்ததுபோல்தான் இருக்கிறது. காரணம் அதீத அழகும், திறமையும்.
தமிழகத்தின் கிராமங்களில்தான் அழகிகள் அதிகம் வாழ்கிறார்கள் இதுவே உண்மை.
அழகிய ஓவியம் பாடலிலும் வரிகள் ஆபாசமாத்தான் இருக்கு. காணொளியும்தான்.
பதிலளிநீக்குஉங்க முயற்சி நல்லா இருக்கு. ஆனா வரிகளும் ஆபாசமோ?
இலக்கியா காவியா கணவர்கள் எங்கேன்னு கேட்கறீங்களே. நடிகைகளின் கணவர் வேலை பார்ப்பவர்களைப் பற்றி அவங்களே கவலைப்படுவாங்களான்னு தெரியலையே
அப்பாடலின் காப்பி ஆகவே இதுவும் ஆ'பாசமாகி விட்டது போ....ல...
நீக்கு//இலக்கியா காவியா கணவர்கள் எங்கேன்னு கேட்கறீங்களே//
இலக்கிய ஓவியம் எங்கேனு உண்மையான கவிஞர் கேட்டதை போலி கவிஞர் இப்படி எழுதி இருக்கிறார்.
சினிமா பாடல் ஆசிரியராகிவிட்டீர்களா கில்லர்ஜி?
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
துளசிதரன்
உங்களால் முடிந்தால் நாலு படங்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுங்களேன்.
நீக்குஉங்களது பெயரை 'எடு'க்கிறேன்.
கவிஞர் கில்லர்ஜி வாழ்க வாழ்க
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குபுதிய பரிமாணத்திற்கான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிஞர் முத்துலிங்கம் எங்கே? கவிஞர் கில்லர்ஜீ எங்கே? ஏங்கேயோ….போய்ட்டிங்க.
எதுகை மோனை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
வருக நண்பரே கவிஞர் முத்துலிங்கம் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்.
நீக்குநான் தேவகோட்டையில் இருக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!
அஅவரது பாடல் காட்சுகளை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. எல்லையில்லாத் தொடுகை. என்ன செய்யலாம் நம் கவிஞர்களாவது பிழைத்தாரகளே. உங்கள் கவிதை வரிகள் நல்ல தாக்கு.
நீக்குவாங்க அம்மா எம்ஜிஆரின் படங்கள் பெரும்பாலும் இப்படித்தானே...
நீக்குஇவர்தான் தமிழக மக்களின் இதயதெய்வம்.
வணக்கம்
பதிலளிநீக்குஜி
ஓவியத்துடன் ஒருபாடலை வேறு வடிவில் ஒப்பிட்டு சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஜி
நன்றி
அன்புடன்
ரூபன்
வருக நண்பரே வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
நீக்குஓவியம் பார்த்ததும் கவிதை என நினைத்தேன். கவிதைதான் போலி. உங்களிடத்தில் எழுத்து திறமை இருக்கு அண்ணா ஜீ. பாடலாசிரியாராக வர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபெயர்த்திக்கு நீங்க எழுதும் கடிதத்தினை வாசிக்க நானும் ஆவலா இருக்கேன்.இப்பதான் அவதானித்தேன்.
நீக்குவருக சகோ போலிக்கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குபெயர்த்திக்கு எழுதிய கடிதத்தை படிக்க ஆவல் கொண்டமைக்கு நன்றி.
ஆனால் கடிதம் வெளியாகும் தேதியை பார்த்தீர்களா ?
உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது இதை இப்படி வீணாக்க வேண்டாம் ஜி.
பதிலளிநீக்குபிரிய சகி சொல்வது போல்சொல்வது போல் பேத்தியின் மழலை, பேத்தியின் தளர் நடை ஒவ்வொரு பருவத்திற்கும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சிரிப்பை கவிதையாக எழுதி வைத்தீர்கள் என்றால் நாளை அவள் தன் தாத்தாவின் பெருமையை பாடுவாள்.
அந்த கவிதைகளை இங்கு எழுதினால் நாங்கள் படித்து மகிழ்வோம்.
வருக சகோ
நீக்குபாராட்டுகளுக்கு நன்றி பெயர்த்தியின் கடித விடயம் குறித்து விரைவில் எழுதுவேன்.
பாடலாசிரியருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபாடலாசிரியர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஹா ஹா ஹா கில்லர்ஜிக்கு என்ன ஆச்சு?:).. இப்போ ஆரையாவது அடிச்சு தள்ளி தேம்ஸ்ல உருட்டி விட்டால்தான் பிபி இறங்கும்போலும்:)) ... அடுத்த வைரமுத்து அங்கிள் நீங்கள்தான் எனப் பேச்சு வாக்கில் என் காதில் கேட்டது கில்லர்ஜி:))
பதிலளிநீக்குகில்லர்ஜிக்கு என்ன ஆச்சு ?
நீக்குநான் பாடலாசிரியர் ஆகி விடுவேனோ... என்ற பொறாமை அதிராவுக்கு...
நான் எதற்கு வைரமுத்துவுக்கு அங்கிளாகணும் ?
வந்தாரை வாழவைக்கும்தமிழ் நாடு கில்லர் ஜி மாற்ற முனைகிறாரோ
பதிலளிநீக்குவாங்க ஐயா என்னைப்போல் நூறுபேர் வந்தாலும் நடக்காது.
நீக்குவருகைக்கு நன்றி ஐயா.
பாடலாசிரியாக மாற இது ஒரு பயிற்சியோ?
பதிலளிநீக்குஆம் இயன்றவரை முயல்வோம் வருகைக்கு நன்றி.
நீக்கு