நானொரு அரசியல்வாதி ஆதலால்...
எனது எண்ணங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள்
ரத்தக்காயம் பட்டால்கூட காவிச்சாயம் பூசுகிறார்கள்.
மேடையில் பேசினால் கட்சியினர் சாமரம் வீசுகிறார்கள்
நான் தியாகம் செய்தேன் என்னை ஏசு என்றார்கள்
பிறர் சொத்தை தில்லுமுல்லு செய்தால் ஏசுகிறார்கள்.
மகளிர் அணியில் பெண்களின் காவலன் என்றார்கள்
செயலாளரை நோக்கினேன் கோவலன் என்றார்கள்.
நான் ஆளத்தகுந்தவனா என்றால் ஆமா மன்னா என்றார்கள்
மறுபுறத்து எதிர்க்கட்சியினர் மாமா மன்னா என்கிறார்கள்.
விசுவாசிகள் என்னை இதயச்சிறையில் அடைப்போம் என்கிறார்கள்
விசக்கிருமிகள் என்னை உதய்ப்பூர் சிறையில் அடைப்போம் என்கிறார்கள்.
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு போனேன் நடிக்கிறேன் என்றார்கள்
மஸூதியில் கஞ்சி குடித்தேன் ஓட்டுக்கு காக்கா பிடிக்கிறான் என்றார்கள்.
நான் எனது அன்னை வீட்டிலிருந்தேன் பண்ணை வீடு என்றார்கள்
மாறாக சிறிய வீட்டிலிருந்தேன் அதை சின்னவீடு என்கிறார்கள்.
பெஸ்ட் அவார்டு வாங்கினேன் இதுவும் வேஷ்ட் என்றார்கள்
எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்தால் ஹவுஸ் அரெஸ்ட் என்கிறார்கள்.
நடிகையோடு வந்து தங்களைப் பற்றிய குறும்படம் என்றார்கள்
நடிகையோ எம்மிடம் குசும்பான பாடம் நடத்திச் சென்றார்கள்.
கொழுந்தியாளிடம் இனிமை தேடுகிறார் என்றார்கள்
மறுபுறம் கொரோனாவால் தனிமை என்றார்கள்.
தேர்தலில் வெற்றி பெற சொத்து முழுவதும் காலி செய்தேன்
நான் கட்டிய டெபாஸிட்டையே மக்கள் காலி செய்தார்கள்.
இவண்
Chivas Regal சிவசம்போ-
ச்சே அரசியல்வாதியாவது பாவச்செயல் போலயே...
சிவாதாமஸ்அலி-
ஃபோட்டோவுல ஃபோர் ட்வெண்டினு போட்டு இருக்குதே....
ரஸித்தேன் ஜி.
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குஅரசியலுக்கு தகுதியான ஆள் ஆயிட்டீங்க ஜி... ஹா... ஹா...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது ஆசீர்வாதம் எமது சித்தம்
நீக்குஆகா...அற்புதம்...
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றி
நீக்குஹா ஹா ஹா உங்கட போஸ்ட்டருக்கு முன்னால நிஜ அரசியல்வாதியே தோத்துப் போயிடுவார்:))
பதிலளிநீக்குநிஜ அரசியல்வாதி... அப்படீனாக்கா நான் என்ன போலியா ?
நீக்குரசனை.
நீக்குநன்றி சகோ
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி உங்க பின்னாடி ஏதோ தெரியுதே!!! கட்டவுட்டு?! ஓட்டுப் பெட்டி இல்லை இல்லைனா ஒரு ஓட்டு போட்டுட்டுப் போலாம்னு பார்த்தா..
பதிலளிநீக்கு2, 3 நாள் முன்னதான் சினிமாவுக்குப் பாட்டு எழுதினீங்க அதுக்குள்ள அரசியல்லயும் கால் வைச்சுட்டீங்களே!!
ரசித்தேன் கில்லர்ஜி!
கீதா
ஏன் நான் இந்திய குடி'மகன் இல்லையா ? நானும் வரிக்கட்டுறேன் அரசியலில் குதித்து வாறிக்கிட்டு போவேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆகா. அற்புதம்..எதுகை மோனையாய், அரசியல் வசனங்கள் அருமை. தேவ கோட்டை அரசியலால் தேவநாடு ஆனதையும் ரசித்தேன். உங்கள் கற்பனையே அலாதிதான். அதனால் ஆட்சிக்கு வந்த இந்த நா(ர)தமுனிக்கு வாழ்த்துக்கள். ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபதிவைப் பாராட்டியமைக்கும், இணைப்புக்கு சென்றமைக்கும் நன்றி.
ரசித்தேன்.
பதிலளிநீக்குஒவ்வொரு அரசியல்வாதியும் காலியாகிக்கொண்டிருப்பதால், புது அரசியல்வாதிக்கான தேவை இருக்கிறது.
வருக நண்பரே நீங்களாவது புரிந்து கொண்டீர்களே... நன்றி.
நீக்குகொரோனா காலத்துப் புதிய அரசியல்வாதியை வருக வருக என வரவேற்கிறோம்
பதிலளிநீக்குவருக நண்பரே வரவேற்புக்கு நன்றி
நீக்குஅநியாயம் அக்கிரமம். தேவநாடு எங்கள் (கேரளீயர்) நாடு. இதுக்கு பேட்டண்ட் காப்பிரைட் எல்லாம் உண்டு.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா தேவநாடு கேரளமா ? எனக்கு புதிய தகவல்.
நீக்குGod's own country என்று கூகிள் செய்து பாருங்கள்!
நீக்குJayakumar
அவர்கள்தான் "தெய்வத்தின்டே சொந்தம் பூமி கேரளம்" என்று சொல்லிக் கொண்டுதானே வாழ்கிறார்கள். மீள் வருகைக்கு நன்றி ஐயா.
நீக்குநாடு நல்லா இருக்க செம்படையான் ஆதி கேசவ குலசேகர பாண்டியன் நாதமுனி வர வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குநினைத்த காரியம் இனிதே நிறைவேற நல்வாழ்த்துகள்....
பதிலளிநீக்குவாங்க ஜி மிக்க நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
படிப்படியாக ஒவ்வொரு தடைகளையும் கடக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம் தங்களின் செயலும் சிறப்பு தான் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குமிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்க அண்ணா ஜீ. அரசியல்வாதியாகலாம் நீங்கள்.
பதிலளிநீக்குதேவநாடு பதிவை விட கருத்துக்கள் பெரீசு.
வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅரசியல்(வியா)வாதி கெட்டப் அச்சு அசலாக பொருந்துகிறது, சட்டை பாக்கெட்டில் யார் படம்?
பதிலளிநீக்குஅருமை அருமை.பிரமாதம்.
வருக நண்பரே சட்டைப் பாக்கெட்டில் யாருடைய படமும் இல்லை.
நீக்குஆனால் அப்படி காண்பிக்க உள்ளே பணம் வைத்து இருந்தேன்.
"செய்வினை வருந்தச் செய்" மருத்துவக் கல்லூரியில் படித்த நினைவுகள்.
அரசியல்வாதியின் அடிப்படை அம்சங்கள்!!!
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி.
நீக்குஅரசியல்வாதிக்குத் தேவையான அம்சங்கள் நிறைந்த பதிவு. இதை பாலபாடமாகக் கொண்டால் அரசியல்வாதிகள் பிழைத்துப் போவார்கள். :)))))))
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குஉடனே கட்சி ஆரம்பிச்சுடுங்க கில்லர்ஜி. நாமக்கல் மாவட்டக் கிளை தொடங்குறதுக்கு நான் தயாராயிட்டிருக்கேன்.
பதிலளிநீக்கு‘கல்லா’ கட்டிடுவோம்.
ஹா.. ஹா.. முதல் ஆதரவுக்கு நன்றி நண்பரே...
நீக்குஅரசியலில் குதிக்க இன்னுமொரு ஆள் தயார்! நீங்க வாங்க தல! ஒரு ரவுண்ட் வரலாம் நீங்க!
பதிலளிநீக்குவாங்க ஜி ஆதரவுக்கு நன்றி.
நீக்குமுன்னுக்கு பின் முரணா பேசனும்..
பதிலளிநீக்குஎதாவது திட்டம் அறிவிச்சுட்டு மறுநாளே இல்லன்னு அறிவிக்கனும்..
எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள்தான் காரணம்ன்னு சொல்லனும்..
ஊரே பற்றி எரிஞ்சாலும் எனக்கு தெரியாது டிவில பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லனும்.
இதுலாம் கத்துக்கிட்டா 100% அரசியலுக்கு தகுதியானவர்ன்னு சர்டிஃபிகேட் கிடைக்கும்
வாங்க சகோ
நீக்குநான் புதிய அரசியல்வியாதி தங்களது ஆலோசனைகளை ஏற்கிறேன் நன்றி.
அன்பு தேவகோட்டைஜி,
நீக்குஎத்தனை சிந்தனை ஓட்டம் உங்கள் கவிதையில்.
படமோ சூப்பர்.
அரசியலுக்கு வந்தவரின் புலம்பலாகத் தான் பார்க்கிறேன்.
இவர் நல்லவராக இருக்க முடியும்.
மனம் நிறை வாழ்த்துகள் ஜி.
வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்கு‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ‘என்று கவி கா. மு .ஷெரீஃப் ‘நான் பெற்ற செல்வம்’ என்ற திரைப்படத்திற்காக பாடல் எழுதியிருப்பார். சாதாரணமான மனிதனுக்கு இப்படியென்றால் அரசியல்வாதிகளுக்கு கேட்கவா வேண்டும்?
பதிலளிநீக்குநிற்கும் தோரணையும் கைதூக்கி கும்பிடும் பாணியும் அரசியல்வாதிக்குரிய தகுதியை அடைந்துவிட்டீர்கள் எனக் காட்டுகிறது. எனக்குத் தெரியும் நீங்கள் அரசியல் பக்கம் போகமாட்டீர்கள் என்று.
வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கும் என் மீதான ஆணித்தரமான நம்பிக்கைக்கும் நன்றி.
நீக்குஅரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் . Blog என்னாவது ?
பதிலளிநீக்குவாங்க சகோ நலமா ?
நீக்குவலைப்பூ இறுதி மூச்சுவரை எழுதுவேன்.
எங்கள் தலைவர் வாழ்க.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் ஆதரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅரசியல் வாதிகளைப் பற்றிய உங்கள்கருத்து தெரிந்ததே இதில்தோலுரித்துக் காட்டுகிறீர்கள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி
நீக்குஹலோ அரசியல் தலைவராக வந்தால் ப்ளாக்ர்களுக்கு வயதான் காலத்தில் பென்ஷன் கிடைக்க ஒரு வழி செய்யுங்கள் தலைவரே
பதிலளிநீக்குவருக தமிழரே நிச்சய்ம் இப்படி செய்துகூ தமிழை வாழவைக்க முடியும் போலயே...
நீக்குசுவாரசியமான பதிவு. என் பெரியப்பாவிற்கு உங்க பெயரைச் சொல்லி அனுப்பிவிடுகிறேன். அவரும் dmk நீங்க அவருக்காக மட்டும் சிறப்பா எழுதியிருக்கீங்கன்னு சொல்லிடுறேன்.
பதிலளிநீக்குஅபிநயாவின் முதல் வருகைக்கு வந்தனம். வருகைக்கு மிக்க நன்றி.
நீக்குஒரு வாக்கிற்கு 5000 குடுத்தா தான் உங்களுக்கு வோட்டு போடுவேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே விலைவாசி ஏறிடுச்சு உண்மைதான் அதுக்காக நீங்களும் விலையை ஏற்றணுமா ?
நீக்கு