வணக்கம் நட்பூக்களே.... நான் சிறு அகவை முதலே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் சராசரியில் பார்ப்பதைவிட வித்தியாசமான கோணத்தில் பார்த்து அவைகளை படம் பிடித்து இருக்கிறேன் இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம்.
இதற்கு எனது விழியில் பூத்தது என்று தலைப்பு கொடுத்து உள்ளேன் வரிசையாக (1) (2) (3) என்று இலக்கமிட்டு தொடரும்... இவைகளை எடுத்தது இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளும், தேவகோட்டை மட்டுமின்றி பிற ஊர்களும் உண்டு நான் மகிழுந்தில் செல்லும் வழியில் நின்று ரசித்து எடுத்த புகைப்படங்களும் உண்டு வலையுலகில் நான் பொறாமைப்படும் நபரும் உண்டு அவர் திரு. வெங்கட் நாகராஜ் ஜி அவர்கள் இவருக்கு மட்டும் புகைப்படக்கருவி வசப்படுவது எப்படி ? என்று ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன் இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
(இடம்: தேவகோட்டை)
(இடம்: அபுதாபி)
(இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்)
(இடம்: இதம்பாடல்)
(இடம்: மதுரை)
(இடம்: துபாய்)
(இடம்: தேவிபட்டிணம் சாலையில்)
(இடம்: அல்அய்ன்)
(இடம்: தாராபுரம் சாலையில்)
(இடம்: கோயமுத்தூர்)
(இடம்: இதம்பாடல்)
(இடம்: புளியால்)
(இடம்: இலங்கையின் மேலே)
(இடம்: சாயல்குடி)
(இடம்: கோயமுத்தூர்)
(இடம்: இதம்பாடல்)
(இடம்: அபுதாபி)
(இடம்: பாஞ்சாலங்குறிச்சி)
(இடம்: அல்அய்ன்)
(இடம்: அஜ்மான்)
நட்பூக்களே... ரசித்தீர்களா ?
அசத்தல் ஜி... இன்னும் என்னென்ன திறமைகள் "ஒளி"த்து வைத்துள்ளீர்கள்...?
பதிலளிநீக்குவாங்க ஜி உடனடி வருகை தந்து, இரசித்து பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குஅற்புதமான புகைப்படங்கள்..வெங்கட் நாகராஜ் ஜி உங்கள் புகைப்படங்களைப் பார்த்து நிச்சயம் ஆச்சரியப்படுவார்..வாழ்த்துகள்
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குவரலாறு முக்கியம் நண்பரே!!!
பதிலளிநீக்குஆம் நண்பரே அதைத்தான் நானும் சொன்னேன்....
நீக்குvery nice
பதிலளிநீக்குநன்றி தமிழரே...
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. கடைசி படம் மிக அருமை.
பதிலளிநீக்குதாராபுர சாலையில் அந்த மலையை நானும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
அழகர் கோவில் போகும் வழியில் உள்ள வள்ளலார் கோவில் படமும் எடுத்து இருக்கிறேன்.
வருக சகோ ஆஹா என்ன ஒற்றுமை இருவருமே படம் எடுத்து இருக்கிறோம் மகிழ்ச்சி.
நீக்குஎமது படங்கள் இன்னும் வரும்...
படங்கள் நன்றாக உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்
பதிலளிநீக்குமலை (திடீரென்றி எட்டிப்பார்த்து வீட்டை அரவணைக்கிறது)
கார் (ஓடி அடங்கிய வாழ்க்கையடா, நீங்களும் தான்)
செல்லங்கள் ( அது எப்படி உங்களை பார்த்தும் பயமில்லாமல் தூங்குகின்றன)
புத்தக கண்காட்சி பலகைகள் (மாறுபட்ட கோணம் )
ஒற்றை மரம் (பூக்களுடன் பூவாய் கொண்டையில் பெரிய பூ நிலா)
சூரிய அஸ்தமனம்? உதயம் ? (நிற்பவர், சூரியன், அலைகள் என்ற முக்கோணப் பார்வை)
ஆகியவை கவர்கின்றன.
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Jayakumar
வாங்க ஐயா படங்களை மிகவும் இரசித்தது தங்களது கரூத்துரையில் தெரிகிறது மகிழ்ச்சி, நன்றி.
நீக்குஅது சூரிய அஸ்தமனமே.. அஜ்மானில்... (UAE)
அழகான படங்கள்..
பதிலளிநீக்குகலைஞனின் கையில்
கல்லும் புல்லும்
கவிதைகள் பேசும் பேசும்..
காற்றும் மெல்லென
பூக்களை ஏந்தி
சாமரம் வீசும் வீசும்..
வாங்க ஜி
நீக்குகவிதை வழி கருத்து மழை பொழிந்தமைக்கு நன்றி.
எனக்கும் புகைப்படங்கள் எடுக்க்சப்பிடிக்கும் முக்கியமாய் மனிடர்களை படம்பிடிக்க பிடிக்கு அவை நினவு தவறும் போது உயிர்ப்பிக்க உதவும் படங்களில் ஒரு விற்பன்னர் தெரிகிறார்
பதிலளிநீக்குவாங்க ஐயா ஆம் நல்லதொரு தகவல்கள் தந்தீர்கள் வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமிக அருமையாக ஒவ்வொரு படங்களையும் எடுத்துள்ளீர்கள். அதற்கு தகுந்தாற்போல அதன் வாசகங்களை மிகவும் அழகாக தேர்ந்தெடுத்து பொருத்தியிருப்பது ரசிக்கும்படி இருக்கின்றன.
நிலவில் விளக்கு படம், கையில் உதய சூரியனை ஏந்திய படம், மைதானத்தில் களைப்பாகி செல்லங்கள் படுத்துறங்கும் படம், மாலைச் சூரியனின் அழகு படம் என அனைத்துமே கண்களை கவர்வதாக உள்ளது. அத்தனைப் படங்களின் கோணங்களும் மிகச் சிறப்பு. மிகவும் ரசித்தேன். நல்ல திறமையான ஒளிப்பதிவாளர் ஆகி விட்டீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். இன்னமும் அடுத்த பதிவுகளில் மேலும் தாங்கள் எடுத்துள்ள படங்களை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபடங்களை மிகவும் ரசித்து கருத்திட்டமைக்கும், அடுத்தடுத்த படங்களை காண இருப்பதற்கும் நன்றி.
படங்கள் நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇலங்கையின் மேலே அந்த மேகங்கள் இன்னும் இருக்குமா?
வருக நண்பரே...
நீக்குஅந்த மேகம் கலைந்து உகாண்டா பக்கம் போய் விட்டதாக நேற்று இலங்கையிலிருந்து வந்த நண்பர் தகவல் தந்தார்.
படங்கள் அற்புதம். அவற்றிற்கான கருத்துருக்கள் அருமை.
பதிலளிநீக்கு'முன்னாள் மனிதர்கள்'... மிகவும் ரசித்தேன்.
வருக நண்பரே பதிவை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குபடங்களையும், குறும்பு கொப்பளிக்கும் கேப்ஷன்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவாங்க மேடம் மாசத்துக்கு ஒருமுறையாவது எனது தளம் வருவதில் மகிழ்ச்சி.
நீக்குஅற்புதமான படங்கள். எது சிறப்பு எது சுமார்னு எல்லாம் சொல்ல முடியாதபடி அனைத்தும் அருமை. நல்ல விஷயங்களுக்குப் போட்டி போடுவதோ, பொறாமை கொள்வதோ தப்பில்லை! மனமார்ந்த பாராட்டுகள். தாராபுரம் சாலையின் மலை மிக அழகு!
பதிலளிநீக்குவருக சகோ படங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நீக்குஆஹா... படங்கள் அனைத்துமே அழகாக எடுத்து இருக்கிறீர்கள் கில்லர்ஜி. பதிவில் என்னையும் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி. உங்கள் திறமையால் அசத்துகிறீர்கள். நீங்கள் எடுத்த சிறப்பான படங்களின் அணிவகுப்பு தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
நீக்குஅருமையான புகைப்படங்கள் .வாழ்த்துக்கள். நன்றி
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி
நீக்குஎல்லாப் படங்களுமே ரசிக்க வைத்தன. இதம்பாடல் என்றொரு இடமா?
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி ரசித்தமைக்கு நன்றி.
நீக்குஞானி ஸ்ரீபூவு வாழ்ந்த ஊர்.
உத்திரகோசமங்கை (9 கி.மீ)
ஏர்வாடி (5 கி.மீ)
படங்கள் அற்புதம்
பதிலளிநீக்குஅழகு
வலையின் இரண்டாம் ஒளிச் சித்தர் தாங்கள்தான்
வாழ்த்துகள்
வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குதிட்டமிட்டு எடுக்கப்பட்டதோ, தற்செயலாக எடுக்கப்பட்டதோ எப்படியாயினும் ஒவ்வொரு புகைப்படமும் மிகவும் அமையாக அமைந்துள்ளது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே...
நீக்குஇதில் திட்டமிடல் இல்லை, எப்பொழுதும் நான் யதார்த்தமாக எடுக்கும் படங்களே... இதில்கூட பல வருட படங்கள் இணைந்துள்ளன...
வாழ்த்துகளுக்கு நன்றி.
படங்கள் அருமை. படங்களுக்கு தாங்கள் தந்துள்ள தலைப்புகளும் அருமை. பாராட்டுகள்!
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி வருகைக்கு...
நீக்கு