இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 05, 2020

மின்நூலில் கில்லர்ஜி


வணக்கம் நட்பூக்களே... மின்நூல் சமீப காலமாக பதிவர்களை அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் தீநுண்மி போல ஆகிவிட்டது சும்மா கிடந்த ஊதாங்குழலை எடுத்து புல்லாங்குழலாக்கி விட்டார் நமது திண்டுக்கல் சித்தர்-ஜி. 

ஆம் நண்பர்களே நான் பாட்டுக்கு சித்தன் போக்கு ஸெவனோ க்ளாக்கு என்று எழுதிக்கொண்டு வடக்கு நோக்கி போய்க்கொண்டு இருந்த என்னை இதோ கீழ்வானம் சிவக்குது என்றும், செக்கச் சிவந்த வானம் என்றும், கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்றும், கிழக்குச் சீமையிலே என்றும், கிழக்கு வாசல் என்றும், கிழக்கே போகும் ரயில் என்றும் சொல்லி என்னையும் மின்நூல் பக்கமாக திசை திருப்பி விட்டார்.
 
நமக்குத்தான் கொஞ்சம் உசிப்பி விட்டால் போதுமே ட்றம்ப் வரை போய் தெலுங்கில் பேசியாவது அவரு ஜோலியை முடிச்சுருவோமே... இதோ நானும் அவலைளை நினைத்து உரலை இடித்த கதை போல முட்டி மோதி ஒரு மின்நூலை வெளியிட்டு விட்டேன். ஆனால் இதற்கு முட்டி மோதியதுதான் நான் மண்டை உடைந்தது நம்ம டெல்லி வெங்கட்ஜி அவர்களுக்குதான். காரணம் மின்நூலில் நான் எல்கேஜி, அவரு பிரின்ஸ்பால்.
 
இந்த நூலை பதிவேற்றம் செய்வதற்குள் அவர்தான் கஷ்டப்பட்டு விட்டார் பாவம் அவ்வளவு தொந்தரவுகள் கொடுத்து விட்டேன். காரணம் நான் உருவாக்கிய அட்டைப்படத்தை கிண்டில் ஏற்றுக்கொள்ளவில்லை அதில் எனக்கு மன வருத்தமுண்டு. இருந்தாலும் வெங்கட்ஜி அவர்களை ஒரு வழி செய்தாச்சு சும்மா சொல்லக்கூடாது அவருக்கு கோபமே வராது போல... ஐஸ் வைப்போம் அடுத்த நூலுக்கும் அவருதானே...
 
கொரோனா வருதுனு பயந்துக்கிட்டு நாம இன்றைக்கு போயிட்டாலும் இன்னும் நாற்பது வருஷத்துக்கு நம்ம பதிவர்கள் கில்லர்ஜியோட பதிவுகளை படிச்சுக்கிட்டே இருக்கட்டும்னு இருக்கிறதை எல்லாம் கணினியில் அள்ளிப்போட்டு செட்யூல்ட் பண்ணிட்டு கருத்துரைப் பெட்டியையும் திறந்து வச்சேன். அப்படி கணக்குல இருந்த என்னை திண்டுக்கல் தனபாலன் ஜி இப்படி ஆக்கியதால மறுபடியும் கணினியை பிரிச்சு மேஞ்சு புதிய ஐயிட்டங்களை மின் நூலாக்கிட்டேன்.
 
நானும் பதிவர்தானே நான் பிரதமர் ஆகாவிட்டாலும் நாமும் மின்நூலை வெளியிட்டோம்னு பெயர் எடுப்போம் என்ற ஆசைதான். நான் பிரதமர் ஆவதில் மோடிஜி அவர்களுக்கு கோபம் வராவிட்டாலும், திருச்சியில் யாருக்காவது கோபம் வரலாம் என்பது வேறு விசயம். சரி நண்பர்கள் அனைவரும் இலவசமாக வரும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு, படித்து தங்களது கருத்துகளை தரவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். 

மீண்டும் சந்திப்போம் நல்லநாளுடன், அடுத்த நூலுடன்... 

அன்புடன் 
கில்லர்ஜி தேவகோட்டை
 
இதோ மின்நூலின் இணைப்பு - https://www.amazon.in/dp/B08C5FW7DB

இலவச தரவிறக்கம் செய்யும் முகூர்த்த தேதி – ஜூலை 06 - 12.00 am முதல் ஜூலை 08 - 11.59 pm வரை 

தொடர்ந்து கிண்டிலில் கிடக்குக... 

எந்தக் பதிவரும் சிந்தனைப் பதிவர்தான்
வலைப்பூவில் எழுதையிலே – பின்
மின்நூலாவதும் அமேசான் போவதும்
தன்னை நினைப்பதிலே... விண்ணில் பறப்பதிலே...
 
திரைப்படம் – நீடாமங்கலம், நீட் நீலாம்பரி
ஆண்டு - (2020) 
பாடலாசிரியர் – கில்லர்ஜி
இசை – அவரு 
பாடியது – இவரு
 
சிவாதாமஸ்அலி- 
சிரங்கு சொறிந்த விரலும், மீசையை திருகின விரலும் சும்மா இருக்காது.

50 கருத்துகள்:

  1. புத்தம் புதிய அழகுடன்
    சிறப்பான வடிவமைப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி வருக எனது அட்டைப்பட வடிவமைப்பு இங்கு இல்லை நூலின் உள்ளே இருக்கிறது உடனடி வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. Amazon Bestsellers Rank: #94 Free in Kindle Store (See Top 100 Free in Kindle Store)
      #29 in Literature & Fiction (Kindle Store)

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி ஜி

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  3. மின்னூல் கிண்டிலில் வாழ்த்துக்கள் இனிமே மாதம் ஒரு மின்னூல் வெளியிட வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் வாழ்த்துகளுக்கு நன்றி.

      உங்களது தளம் வந்தேன் எனக்கு ஜப்பான் மொழி படிக்கத்தெரியாது ஆகவே தின்பண்டங்களை மட்டும் எடுத்துக் கொண்டேன் நன்றி.

      நீக்கு
  4. மின்நூலுக்கு வாழ்த்துக்கள் ஜி.
    பாடல் அருமை.
    தொடர்ந்து மின்னூல்கள் அணிவகுத்து வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முடிந்தவரை வெளியிடுவேன் மனம் தளரமாட்டேன். வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. மின்னூலுக்கு வாழ்த்துகள் கில்லர்ஜி. மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகள்!

    உங்கள் பாடலும் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி பாடலை வாழ்த்திய இருவருக்கும் நன்றி.

      நீக்கு
  6. சித்தம் போக்கு செவனோக்லாக்கா ஹா ஹா உங்க எழுத்து பாணியே வேர லெவல் சார். அறிமுகமே இப்படின்னா மின் நூல் கண்டிப்பா அட்டகாசம்தான். வாழ்த்துக்கள் கில்லர்ஜி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அபிநயா நூலை வாங்கி படியுங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துகள் கில்லர்ஜி... மென் மேலும் வளரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  8. மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி. இன்னும் பல நூல்கள் உங்கள் கைவண்ணத்தில் வெளிவரட்டும்!

    புதிய எழுத்துரு - நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கும், வழி காட்டியமைக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  9. வாழ்த்துக்கள்!! தொடரட்டும் தங்கள் சேவை......

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் ஜி.   இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்.  வெங்கட் மிக பொறுமையானவர் என்று நாங்களும் முன்னரே கண்டுகொண்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றி.
      ஹா.. ஹா... ஏற்கனவே நீங்களும் அவரை வறுத்து எடுத்து விட்டீர்களோ...?

      நீக்கு
  11. ஆகா...! நன்றி ஜி... மேலும் அசத்துங்க...!

    அப்புறம் இந்தப் பதிவில் எழுத்துரு SUNDARAM-1341 பதிலாக SUNDARAM-1342 பயன்படுத்தி இருக்கலாமோ...? ஏன்னா நீட் நீலாம்பரி கொஞ்சம் மெலிந்து இருக்காங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நன்றி. ஆம் இரண்டு எழுத்துருக்கள் உபயோகப்படுத்தினேன் சில குழப்பங்கள் ஆகவே விட்டு விட்டேன் இனி அசத்துவோம்.

      நீக்கு
  12. வாழ்த்துகள் நண்பரே
    தங்களின் எழுத்துக்கள் அமேசானில் தொடர்ந்து வெளிவரவேண்டும் என விரும்புகிறேன்
    தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள்
    வலைச் சித்தரின் வார்த்தை கேட்டுதான் நானும் அமேசான் பக்கம் ஒதுங்கியுள்ளேன்
    வாழ்க வலைச் சித்தர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் அவர்தான் எல்லோரையும் தூண்டி விடுகிறார்.
      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு

  13. உங்கள் அமோசான் நூலை பலரும் டவுன்லோடு செய்து படித்து பிரபல அமோசான் எழுத்தாளராக வலம் வர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நலமா ? வாழ்த்துகளுக்கு நன்றி. நாளை இலவச தரவிறக்கம் செய்யலாம்.

      நீக்கு
  14. கிண்டில் : பலருக்கும் உதவும் ஒரு காணொளியும் ஒரு வலைத்தளமும்

    https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA

    https://tamilvarigal.com/category/blog/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. அருண் அவர்களின் காணொளி கண்டு வந்தேன் ஜி நன்றி

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    தங்களது முதல் மின்னூலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இதைத் தொடர்ந்து மின்னூல்கள் இன்னமும் நிறைய வெளியிட வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பாடல்தான் மின்னூலின் தலைப்பா? நன்றாக உள்ளது. அட்டைப்படமும் நன்றாக உள்ளது. மறுபடியும் வாழ்த்துகள் சகோ. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      மின்நூலின் தலைப்பு - நீடாமங்கலம், நீட் நீலாம்பரி.

      நீக்கு
  16. மின்னூலுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. மின்னூலுக்கு வாழ்த்துகள். இனி உங்கள் பதிவும் அதிலும் தொடரும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. மனமுவந்த பாராட்டுகள்.

    உற்சாகம் குன்றாமல் இனியும் எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. மின்னூலுக்கு வாழ்த்துகள். ஆனால் உங்கள் சுட்டி வழியே போனால் எனக்கு வேறே என்னென்னவோ வருகின்றன. உங்கள் புத்தகம் வரவில்லை. இங்குள்ள ஸ்க்ரீன் ஷாட் படி எதுவும் வரலை. கணினி கோளாறா என்னனு தெரியலை. மறுபடி பார்க்கிறேன். தொடர்ந்து பல மின்னூல்கள் வெளியிடவும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இணைப்பு சரியாக செல்கிறதே...
      தற்சமயம் இலவசமாக தரவிறக்கம் செய்யலாமே...
      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  20. மின் நூலுக்கு வாழ்த்துகள்! மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  21. வாழ்த்துகள் கில்லர்ஜீ. தொடர்ந்து கலக்குங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  22. மின்னூல் வெளியீடு எளிதாய்விட்டதுவாழ்த்துகள்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நான் முதலில் பெரிதான விசயமாக நினைத்து இருந்தேன்.
      வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  23. ஆஆ இது எப்போ போஸ்ட் வந்ததோ.. என் கண்ணில் இது அகப்படவில்லை கில்லர்ஜி... கொமெண்ட் பார்த்தே இங்கு வந்தேன்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு