இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 12, 2020

ஸ்வப்னாவுடன் மகிழ்ந்து...


அந்த விடுதியில கல்வி கற்றுக் கொடுத்தது குற்றம்'னு காவல்துறை கைது பண்ணி கூட்டிப் போறாங்களே ஏண்ணே ?
அட முடுமை அங்கே கல்வி கற்றுக் கொடுக்காமல் கலவி கற்றுக் கொடுத்தாங்களாம்

ஏண்ணே மாமா'னு கூப்பிட்டதுக்காக அந்த போலீஸ் ஸ்டேஷன்'ல நம்ம மாதவனை அடிச்சுட்டாங்களாம்ல ?
அவன் மாமா'னு கூப்பிட்டது ஏட்டய்யாவை அப்புறம் அடிக்காமல் என்ன செய்வாங்க...

ஏன் டீச்சர் என் மகனை வீட்டு பாடம் எழுதுனதுக்காக அடிச்சீங்களாமே ?
உங்க மகனை பல்லியை அடிப்பது பாவம்'னு எழுதச் சொன்னால் பள்ளியை இடிப்பது லாபம்'னு எழுதுறான்

நம்ம மேனேஜர் டைப்பிஸ்ட் பாபுவை வேலையை விட்டு நீக்கிட்டாராமே ?
மாசமானா ஒழுங்கா சந்தாவை கட்டு'னு டைப்படிக்கச் சொன்னதுக்கு மாசமாக்கி ஒழுக்கமா சாந்தாவை காட்டு'னு டைப் அடிச்சுருக்கான்.

கொடுத்த கடனை கேட்டதுக்கு காத்தமுத்து நல்லமணியை அடிச்சிட்டானாமே ஏண்ணே ?
அவன் பொண்டாட்டி முத்தம்மாட்ட போயி கடனை மொத்தமா கொடு'னு சொல்றதுக்கு வாய் தவறி கடனை முத்தமா கொடு'னு சொல்லிட்டான் அதான் காத்தமுத்து மொத்திட்டான்

நம்ம பாட்ஷாபாய் பக்கத்து வீட்டுக்காரன் மேலே போலீஸ்'ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காராமே ஏண்ணே ?
அவரு பக்கத்து வீட்டுக்காரன் மகன்ட்ட வீட்டுல திரியிற அந்த பாச்சாவை அடிச்சு கொல்லுடா'னு சொல்லிருக்கான் இவரு நம்மளைத்தான் சொல்றானு நினைச்சு பாட்ஷா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டாரு

மளிகைக்கடையில நம்ம படித்துறை படிக்காசை அடிச்சிட்டாங்களாமே ஏண்ணே ?
நூறு ரூபாய்க்கு மல்லியை கொடு'னு சொல்றதுக்கு பதிலா நூறு ரூபாய்க்கு மல்லிகாவை கொடு'னு சொல்லிட்டான் இதைக் கேட்டதும் கல்லாவுல இருந்த கொள்ளிவாயன் பொண்டாட்டி மல்லிகா படிக்கல்லை எடுத்து அடிச்சுட்டா...

அந்த விளையாட்டுத்திடல் வர்ணனையாளரை எதுக்கு அடிக்கிறாங்க ?
இரண்டு அணிகளும் நேருக்குநேர் மோதட்டும்'னு சொல்றதுக்கு இரண்டு அண்ணிகளும் நேருக்குநேர் மோதட்டும்'னு சொல்லிட்டானாம்

அமைச்சர் இந்திரஜித் பதவிப்பிரமானம் செய்யும்போது அமைச்சர் பதவியை ஆளுனர் ரத்து செய்துட்டாராமே ?
உறுதிமொழி எடுக்கும்போது இந்தியாவை கட்டிக் காப்பேன்'னு சொல்லாமல் இந்திராவை கட்டிக் காப்பேன்'னு சொன்னாராம்.

நம்ம செக்ரட்டரி ஸ்வப்னா மேடம் ஆண்டு விழாவில் பாடிக்கிட்டு இருந்தவரை அறைஞ்சிட்டாங்களாமே... ?
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து'னு பாடவேண்டிய பாடலை ஸ்வப்னாவோடு வாழ்வில் மகிழ்ந்து'னு பாடிட்டாராம்

பஞ்சாட்சரம் தன்னோட பொண்டாட்டி பஞ்சவர்ணத்தோட பஞ்சாமிர்தம் கடை வச்சு இருந்தானே ஆளையே காணோம் ?
பஞ்சம் வந்துச்சுல அதுல பஞ்சனூர் பக்கம் போயி பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யிறாங்களாம்

ஏண்ணே மொக்கைராசு பொண்டாட்டி கண்டக்டரை செருப்பை கழட்டி அடிச்சிட்டாளாமே ?
ஆமாடா ஊர் வந்ததும் வாய் தவறி இறங்குடி'னு சொல்லிட்டான் இவளும் படக்குனு கோபப்பட்டுட்டா... அவனும் என்ன செய்வான் ? ஊருப்பேரு எரங்குடி'னு வச்சுருக்காங்கே


நண்பர்களே... இப்படி கேவலமாக தமிழை எழுதுவதும், உச்சரிப்பதும் நம்மால்தானே... பிறந்து ஒரு வருடம் கடந்தவுடன் எல்கேஜி, யூகேஜி அப்படினு ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து விட்டதால் வந்த வினை. இனியாவது தமிழில் சரியாக உச்சரித்து பேசுவோம், தமிழில் எழுத்துப் பிழையின்றி எழுதுவோம்.

வாழ்க தமிழ் வளர்ப்போம் தமிழ்
தேவகோட்டை தமிழன் கில்லர்ஜி

ChivasRegal சிவசம்போ-
செருப்படி, விளக்குமாற்று அடி, படிக்கல்லு அடிகளிலிருந்து அடுத்த சந்ததிகளை காப்பாற்றுவதற்காகவாவது சரியாக தமிழை படிக்க வைக்கணும் போலயே...

62 கருத்துகள்:

  1. சில புன்னகைக்க வைத்தது சில சிரிக்க வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிரிப்பும், புன்னகையும் சகலைப்பாடிகள்தானே...

      நீக்கு
  2. கல்வி என்பதைத் தட்டச்சும் போது நான் ரொம்பவெ கூர்ந்து பார்ப்பேன். ல் ன் மேல் புள்ளி வந்துள்ளதா என்று. நிறைய தட்டச்சுப் பிழைகள் வந்து அர்த்தமே தவறாகிவிடுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அரபு மொழியில் نوال - بوال என்று வந்த கதைபோல் ஆகிவிடும்.

      நீக்கு
  3. ஸ்வப்பனா என்பதைப் பார்த்ததும் அண்டை மாநிலத்தைப் பற்றியோ ன்னு நினைத்தேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா நேரத்தில் அடுத்த மாநிலத்து நபர்கள் வந்தால் பிரச்சனைதான்.

      நீக்கு
  4. பதிவை அலங்கரிக்கும் திரைத் தாரகை யாரோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நம்ம டிக் டிக் டிக் ஸ்வப்னாதான்.

      நீக்கு
  5. சொப்பனாவ இன்னும் காணோமே... ன்னு நெனச்சேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மையமே ஸ்வப்னாதானே... ஜி

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ் சகோ இப்போ குழப்பத்தில் மையத்தை மய்யம்னு படிச்சிட்டேன் 

      நீக்கு
    3. சகோ எனக்கு அரசியல் தெரியாது அவசிமில்லாமல் பரமக்குடியோடு மோத விடாதீர்கள்.

      நான் சொன்ன மையம் சென்டர்.

      நீக்கு
  6. நகைச்சுவை போல் தெரிந்தாலும்
    பதிவு நல்ல கருத்தை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. ஜோக் மாலை சூப்பர்
    நல்லாவே ரசிச்சி சிரிச்சேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ரசித்து சிரித்தமைக்கும், சிரித்து ரசித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  8. ஸ்பெல்லிங் மிஸ்டேக் பிரச்சினை நிறைய இருக்கும்போல :)  நாம ஒன்னு சொல்ல அது தானே மொழிபெயர்ந்து வேறமாதிரி விளைவை தருது :))அதிகம் சிரித்து ரசித்ததது இரண்டு அண்ணிகளும் மோதட்டும் :)))  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ ஸ்பெல்லிங் தவறுகள் சில வார்த்தைகளையே மாற்றி விடுகிறதே...

      நீக்கு
  9. ஆஹா...டங் ஸ்லிப்பில் இவ்வளவு இருக்கா...இரசித்துச் சிரிக்கவைத்தது...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே பதிவை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  10. என்னாச்சு சகோ? அசைவ வாடை தூக்கலா இருக்கே? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் அசைவமா ? அய்யய்யோ எனக்கு அந்த முத்திரை குத்திடாதீங்கோ...

      நீக்கு
  11. உங்கள் வார்த்தை விளையாட்டுகள் ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. அனைத்தையும் ரசித்தேன்.

    இன்னைக்கு கூத்தாடிகளுக்கான அர்ச்சனை மிஸ்ஸிங்.

    புதிய ஊர் பேரைத் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே... கூத்தாடிகளை நான் மறந்தாலும் என்னை உசுப்பேற்றி விடுகிறீர்கள்.

      ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. கடைசி வரிகள் சிந்திக்க வைத்தன.

    தமிழ் நம்ம மொழிதானே... தானா வந்துடும். புள்ளை முதல்ல பொழைக்கிற வழியைப் பார்க்கட்டும் என நினைப்பதால் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தர்றாங்க.

    மொழியை அலட்சியப்படுத்தும்போது, அது அலட்சியப்படுத்தியவர்களுக்கு வருவதே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகளுக்கு ஆங்கிலம் இல்லாமல் இனி உலகில் வாழவே முடியாது என்ற நிலையாகி விட்டது.

      நீக்கு
  14. சிரிக்க வைக்கிறது... அதை விட இப்படியும் உள்ளது என்கிற வேதனையும் வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஞாபகம் வந்தது :-

    1) நம் குமார் அவர்கள் அனுப்பிய தமிழ் சொற்களைப் பற்றிய காணொளி...

    2) நீச்சல்காரன் அவர்களின் தமிழ் சேவை...

    பதிலளிநீக்கு
  16. ஹாஹாஹாஹா, எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ! நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்கள் ஏரியாப் பக்கம்தான் இப்படி எல்லாம் ஊருக்கு பெயர் வைக்கிறீங்க...

      நீக்கு
  17. ரசித்தேன் நண்பரே
    எரங்குடி,
    தமிழ் நாட்டில் தமிழ் படும்பாடு வேதனைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. வார்த்தை விளையாட்டு - ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. நல்ல நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள்.இப்படி சில எழுத்துக்கள், சொல்லும் பொருளை தவறுதலாக அர்த்தம் கொள்ள வைக்கிறது என எண்ணும் போது தமிழை தமிழர்களாகிய நாம் நன்றாக படிக்கவில்லையோ என ஐயம் வருவது சகஜம்தான்.

    அந்த ஊர் பெயர் விசித்திரமாகத்தான் உள்ளது. இப்படியே நிறைய ஊர்கள் எங்காவது பிராயாணிக்கும் போது,என் கண்ணிலும் பட்டு விசித்திர உணர்வை தந்திருக்கின்றன.

    வார்த்தைப் பிழைகள் தரும் வீபரீத செய்திகள் அனைத்தையும் நீங்கள் கோர்த்த விதத்திற்கு வாழ்த்துகள். (இப்போது நானே டைப் செய்த கருத்தை பத்து தடவை பார்த்துப்பார்த்து அனுப்பும் ஒரு சூழ்நிலைக்கு உருவாக்கி விட்டீர்கள். ஹா. ஹா.ஹா.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை அலசி கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      இந்த ஊர் திருச்சி பக்கமாக உள்ளது.

      ஹா.. ஹா.. நீங்களும் பயந்து விட்டீர்களா ?

      நீக்கு
  20. சாந்தா சந்தா, பாச்சா என்று பல ஜோக்ஸ் பக்கென சிரிக்க வைத்தன..  எப்படிதான் தோன்றுகிறதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. எரங்குடி நிகழ்வினை அதிகம் ரசித்தேன். தேனிக்கு அருகேயுள்ள போடி நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  22. எமக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது...படத்தில் இருக்கும் ஸ்ஸ்வாப்னாவுடன் மகிழ்ந்து.... அவுக......கீ..கிழவியாகவுல இருப்பாக.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது முப்பது வருடத்துக்கு முன்பு வந்த பதிவு நீங்கள் தாமதமாக வந்து விட்டீர்களே...

      நீக்கு
  23. எப்படி இப்படி எல்லாம் எழுதுகின்றீர்கள் கில்லர்ஜி! எல்லாமே ரசித்தேன் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. ரொம்பவே நகைச்சுவை உணர்வுள்ளவராகத் தெரிகிறீர்கள். நேரில் எப்படியோ?

    தாமதமான வருகைக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாமதமானாலும் வருகை தந்து விடுகிறீர்களே நன்றி.

      நேரில் எப்படியோ... ஹா.. ஹா..

      நீக்கு
  25. தேவகோட்டைஜியின் கற்பனை
    பதிவு முழுவதும் சிரிப்பு.
    நானும் அவதிப் பட்டிருக்கிறேன்
    எழுதும்போது தவறு வருவதில்லை. கணினி வந்த பிறகு வேதனையாக இருக்கிறது.
    அதையே ரசிக்கும்படி செய்து விட்டீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா.
      எழுதும்போது தவறு வருவதில்லை உண்மைதான் அம்மா தவறுகளை உடனுக்குடன் திருத்திட அன்று ஆசிரியர் இருந்தார்.

      தட்டச்சு செய்யும்போது நாமே ராஜா, நாமே மந்திரி. வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு

  26. பலவற்றை ரசித்தேன். பாச்சா என்றால் என்ன? பேருந்தின் முன் பக்க போர்டில் இருந்த ஊர் பெயர் "ஏறுங்குடியா"?

    என்னுடைய பாடல் (ஒலிப்பேழை) ஒலிப்பதிவு செய்தபோது பாடகர் பாடிய விதம் அவரது உச்சரிப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லாததால் இரவு 7 மணிக்கு ஆரம்பித்த பாடல் பதிவு இந்த ஒரு பாடகரால் நள்ளிரவையும் கடந்து நடந்து முடிந்தது. அதில் சில வார்த்தைகள் "ஆனந்தகளிப்பு " அதை அவர் "ஆனந்தகலிப்பு " எனவும் "ஏற்றுக்கொள்ளும்" என்பதை "ஏற்றுக்கொல்லும்" எனவும் பாடி இருந்தார். பாடல் அத்தனையும் பதிவாகி அவர் வீட்டிற்கும் சென்றுவிட்டார், எனினும் நான் கேட்கும்போது சரி இல்லை என்றவுடன் அவரை மீண்டும் அழைத்துவந்து மறுமுறை பாடவைத்து பதிவாக்கிய அந்த இரவு இப்போதும் நினைவில் இருக்கின்றது. நேராக லண்டனில் இருந்து சென்னையில் உள்ள ஒலிப்பதிவு ஸ்டுடியோவிற்கு சென்று அனைத்தையும் சரிசெய்தபிறகே என் வீட்டிற்கு சென்றேன்.

    இப்போது வரும் சில சினிமா பாடல்களை பாடும் பாடகர்கள் இந்த வல்லின மெல்லின பேதமின்றி பாடுவதை கேட்கவே அருவெறுப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாச்சா என்பது ஒருவகையான கரப்பான்பூச்சி அடுப்படி வாஷ்பேஷன் பைப்களில் பார்க்கலாம்.

      தங்களது பழைய நி(கழ்)னைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

      அன்று பாடகர்கள் பாடினார்கள்.
      இன்று படிக்கிறார்கள் இதுதான் வேறுபாடு.

      வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  27. நகைப் பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  28. தமிழ் பேசுவதாக நினைத்துக்கொண்டு தமிழ் மொழியைக் ‘கொல்லும்’ நபர்களை தங்களின் பதிவு நினைவூட்டுகிறது. இதற்கு காரணம் தங்கள் பிள்ளைகள் மழலையர் பள்ளியிலிருந்தே ஆங்கிலம் பேசவேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும், தமிழை சரியாக கற்பிக்காத ஆசிரியர்களும் அதை சரியாக கற்காத மாணவர்களுமே. இந்த அவலம் மாறும் என நம்புவோம். பதிவை இரசித்தேன்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      இன்றைய அவலநிலை இதுதான் அழகாக விளக்கியமைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  29. எங்கள் பகுதியில் ஏறுவாடி(ஏர்வாடி)என்று ஒரு ஊர் உண்டு.. இறங்குடி(எரங்குடி) என்று ஒரு ஊரும் இருப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன் !!! ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஏர்வாடி என்றால் வள்ளியூர் பக்கமா ?

      நீக்கு
    2. ஆமாம் ... அதுவேதான் ..

      நீக்கு
    3. வள்ளியூர், சித்தூர் தென்கரை மகாராஜா எங்கள் குலதெய்வம் நண்பரே...

      நீக்கு