இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஏழு நாட்களும்...


திங்கட்கிழமை திவ்யாவுக்கும்,
செவ்வாய்க்கிழமை செல்விக்கும்,
புதன்கிழமை புனிதாவுக்கும்,
வியாழக்கிழமை விமலாவுக்கும்,
வெள்ளிக்கிழமை வெண்ணிலாவுக்கும்,
னிக்கிழமை சங்கவிக்கும்,
ஞாயிற்றுக்கிழமை ஞானவள்ளிக்கும்,
அவரவர் பங்களாவில் போய் டான்ஸ் கிளாஸ் எடுத்து வருவான் ரவிவர்மன்
 
ChivasRegal சிவசம்போ-
ஏழு நாட்களும்... தலைப்பை பார்த்து நான் வேற எதையோ நினைத்து வந்துட்டேனே...
 
சாம்பசிவம்-
எங்கள் பிளாக் லிஸ்ட் போல இருக்கிறதே...

30 கருத்துகள்:

  1. "எங்க குருவை 'வருவான்'என்று எப்படிச் சொல்லலாம்?" என்று 7 பணக்காரக் குமரிகளும் கேட்டால் எப்படிச் சமாளிப்பீர்கள் கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே குமரிகளை என்னால் சமாளிக்க முடியாதா ?

      நீக்கு
  2. கிழமையையும் பெண்ணையும் முடிச்சுப்போட்டு எழுத உங்களால்தான் யோசிக்க முடியும் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானா ? சில பதிவுகளுக்கு வரவில்லையே...

      நீக்கு
  3. ஏழு நாட்களும் தலைப்பு அருமை.
    பொருத்தமான பேர்கள்.
    குருவின் பேர் ரவிவர்மன், கலைகளை சொல்லி தருபவர் பேரும் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒவ்வொரு கிழமைகளுக்கான பெண்களின் பெயர்கள் அமைத்தது அருமை. இந்த (படத்திலுள்ளவர்) டான்ஸை எங்கள் வீட்டு பேர,பேத்தி குழந்தைகள் முன்பு விரும்பி பார்ப்பார்கள். இப்போது அவர்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை. ஏன் என யோசித்தேன். டான்ஸ் மாஸ்டர் 7 நாட்களும் பிசியாக உள்ளதால்தான் என்பது இப்போது புரிந்தது.:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அடடே இவர் தங்களது பெயர்த்திகளுக்கு பிடித்தமானவரா ? நன்று நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      சாதரணமாக அந்த புகைப்படத்தை பார்த்ததும் நான் இயல்பாக சொன்னேன். இந்த பதிவில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா? எனக்கு புரியவில்லையே. நான் ஒரு அப்பாவி.:) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வருக சகோ இதில் உள்குத்து எதுவுமே இல்லை.

      நீக்கு
  5. காதல் தூது என்று நினைத்தால் கடைசி வரி சப்பென்று முடிந்து விட்டதோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நீங்கள் ஏன் அந்தக் கோணத்துக்கு போகின்றீர்கள் ?

      நீக்கு
  6. அன்பு தேவகோட்டைஜி,
    ரவி வர்மன எழுதாத ஓவியங்களோ என்று நினைத்தேன்.:)
    குருவாகி நடனம் சொல்லிக் கொடுக்கிறாரோ.!
    அருமையான இணைப்பு.
    எங்கள் ப்ளாகில் ஒவ்வொரு நாளுக்கு
    ஒன்றாக தலைப்பு இருப்பதையும்
    சேர்த்தது மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  7. திங்கள் முதல் ஞாயிறு வரை... :)

    நன்று!

    பதிலளிநீக்கு
  8. கிழமைக்கு ஓன்ணுதான் என்றால் அதுவே ரீப்பிட்டாக வரும் அதன் பின் போரடிக்கும் அதனால நாளுக்கு ஒன்று என்று பதிவிடுங்க கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  9. ஆஆஆஆஆஆஆஆ நல்லவேளை “அ” நா வில கிழமை நாளின் பெயர்கள் ஏதும் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா தமிழில்தானே இல்லை.
      அரபு மொழியில் ஞாயிறுக்கு ''அஹத்'' என்றும், புதனுக்கு ''அரஃபா'' என்றும் பெயர் இருக்கிறது.

      நீக்கு
  10. நல்ல ரசனைதான் உங்களுக்கு! :)))))

    பதிலளிநீக்கு
  11. கொடுத்துவைத்தவர்... ரவிவர்மன்... வாழ்க!!

    பதிலளிநீக்கு