இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 12, 2020

தொட்டில் பழக்கம் கட்டில் வரைக்கும்


   ணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பெண்கள் சகல துறைகளிலும் தடம் பதித்தார்கள் விண்வெளியில் வாழ்வதிலும்கூட பாரதி இவ்வளவு தூரம் ஆசைப்பட்டு இருப்பானா ? என்பதில் எனக்கு முக்கால் காணி அளவு ஐயமுண்டு இதில் பெண்ணினம் பெருமையே கொள்ளட்டும். அதேநேரம் மது அருந்துவதிலும் நீங்கள் போட்டி போடுவது முன்னேற்றமா ? பின்னேற்றமா ? அதற்காக ஆண்கள் மது அருந்துவது தவறில்லை என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல

கொரோனாவால் மதுக்கடைகளை மூடியபோது கட்டாயமாக கிடைக்காத காரணத்தால் பலரும், பல குடும்பத்து இல்லத்தரசிகளும் கொரோனாவால் இந்த பயனாவது கிடைத்ததே என்று நிம்மதி கொண்டது உண்மையே... தமிழக மக்களை ஊரடங்கின் மூலம் கஷ்டப்படுத்தியது மக்களின் நலன் கருதியே என்பதை மறுக்க இயலாது அதேநேரம் ஒருநாள் மதுக்கடையை திறந்தது இந்த அரசு மக்களை மாக்களாக கருதுகிறது என்பதை தெளிவாக்கி விட்டது. இத்தனை நாள் குடிக்காமல் இருந்தவர்கள் ஒரேநாளில் இப்படி காவல்துறையினரிடம் தடியடி வாங்கியாவது குடிக்க வேண்டும் என்று இருந்தவர்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றத்தான் வேண்டுமா ?

இவர்களை எல்லாம் 1984-ல் போபாலில் விஷவாயு கசிந்து இறந்தார்களே அவர்களைப் போலவே விஷவாயுவை கொடுத்து மொத்தமாக அடக்கம் செய்தால்தான் என்ன ? எனது சகோதரனாக இருப்பினும்கூட, இவர்கள் பூமிக்கு பாரமாக வாழ்வதைவிட பூமிக்கு உரமாக சாவதே மேல் மது அருந்துவது படித்த பெண்களே அதிகமாக இருக்கின்றீர்கள் நீங்கள் பட்டப்படிப்பு படித்தது இவைகளை சாதிக்கத்தானா ? நாளை உங்களது கணவர் குடிகாரனாக இருந்தால் நீங்கள் எப்படி அவரை திருத்துவீர்கள் ? அல்லது உங்களது குழந்தைகளே இவ்வழியில் போனால் என்ன செய்வீர்கள் ?

மதுக்கடையை திறந்த அன்றே ஒரு அண்ணன் தங்கையை குடிபோதையில் கொலை செய்து விட்டான், கணவன் மீண்டும் குடிக்கத் தொடங்கிதால் ஏற்கனவே வறுமையில் தவித்த மனைவி குழந்தையுடன் தற்கொலை. இதற்கெல்லாம் காரணம் அரசு மட்டுமல்ல இந்த சமூகத்தில் இப்படிப்பட்டவர்களையே மீண்டும், மீண்டும் ஆட்சியமைக்க அனுமதி அளிக்கும் மாக்களே காரணமின்றி வேறு யார் ? உங்களால் நடுநிலையான நல்ல மனிதர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறதே... பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தால் என்று தணியும் இந்த குடியின் தாகம் என்றே பாடியிருப்பான்.

காணொளி
தொட்டில் பழக்கம் பள்ளியறை வரைக்கும்

44 கருத்துகள்:

  1. பக்கத்தில் ஒரு மிக்சர் திகைத்தாலும் சாப்பிடுகிறது...!

    பதிலளிநீக்கு
  2. ஆணுக்கு பெண் எனும் ஒப்பீடு மிகவும் தவறு ஜி... பெண், ஆணுக்கு நிகராக முடியாது... ஏனெனில் அனைத்திற்கும் மேலானவள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி ஏற்கிறேன் ஆனால் பெண்ணின் பலம் அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
      கணவன் இல்லாவிட்டாலும் பெண்ணால் குடும்பத்தை கௌரவமாக வழி நடத்த முடியும்.
      மனைவி இல்லாவிட்டால் கணவனால் சரியாக நிர்வாகம் செய்ய திறமை இருந்தாலும், சமூகம் விடாது.

      நீக்கு
  3. ஆணோ,பெண்ணோ எவராக இருந்தாலும் குடிப்பது சரியல்ல!

    நிறைய பாட்டில் திறந்து பழக்கம் போல! அதனால் தான் குடிநீர் பாட்டிலைக் கூட இப்படித் திறக்கிறார் அந்தப் பெண்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஆமாம் பழக்கதோஷம்தான் இப்படி செய்ய வைக்கிறது.

      நீக்கு
  4. நண்பரின் பதிவை படிக்க படிக்க வேதனையாக தான் உள்ளது. எனக்கென்னவோ பாரதியார் இந்த கண்ராவிகளை காணும்முன்பே இறந்து விட்டது நல்லது என்றே தோன்றுகிறது.
    இறுதியாய்
    "திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது செம்மையான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  5. உங்களது குழந்தைகளே  இந்த வழியில் போனால் என்ன செய்வீர்கள்?

    நல்ல கேள்வி.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது.
    அந்த பெண் தண்ணீர் பாட்டிலை எளிதாக திறக்க வழி இது என்று செய்கிறார் நினைத்துக் கொள்வோம்.
    உடல் நலம், குடும்ப நலம் கருதி குடியை விட்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அந்தப் பெண்ணின் செயல் ஒரு மொடாக்குடிகாரனின் பழக்கதோஷம் போலவே இருக்கிறது.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தவறுகள் செய்யும் ஆணை ஒரு பெண் திருத்தலாம். திருத்த முடியும். திருத்தியும் இருக்கிறார்கள். ஆனால் பெண்களே மது, புகைப் பிடிப்பது போன்ற கெட்ட வழியில் சென்றால், அந்த குடும்பம் என்னாவது? எல்லாம் நாகரீகங்களின் அலங்கோலம். பாரதியார் அப்போதைய பெண் அடிமைக்காக அவர்கள் தைரியமாக இருக்க வேண்டுமென பாடியதை தவறாக உணர்ந்து கொண்டு இப்போது இது போன்ற பெண்கள் தங்களுக்கு நிறைய சாதகமாக எடுத்துக் கொண்டார்களோ எனத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் பாரதி சொன்னது வேறு வகையான புதுமைப்பெண்களை இவர்களின் புரிதல் தவறு. வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  8. பெண்களும் மதுப்பிரியைகள் ஆகும் பட்சத்தில் தங்கள் கணவனை/ பிள்ளைகளை எப்படித் திருத்துவார்கள்?...

    ஜி அவர்களுக்கு மிகவும் பேராசை தான்...

    நான் உன்னைக் கண்டுக்கலை!..
    நீ என்னைக் கண்டுக்காதே!..

    இப்படியான கொள்கை முடிவுகள் ஏற்பட்டு வெகு நாட்களாகின்றனவே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது பேராசை கணக்கில் சேர்ந்து விட்டதா ?

      ஆம் இன்று அந்தக் கணக்கில்தான் காலம் ஓடுகிறது.

      நீக்கு
  9. நல்ல பதிவு!
    இதுவும்கூட பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதத்தில்கூட இருக்கிறது. இன்றைக்கு சென்னையில் கல்லூரிப்பெண்கள் பலர் மதுவிற்கு அடிமையாக இருக்கிறார்கள். ஒரு முறை எங்களுக்கு சென்னை ஏர்ப்போர்ட்டிற்கு ஹோட்டலிலிருந்து கூட்டிச்சென்ற வாடகைக்கார் ஓட்டுனர் ஒருவர் சில கல்லூரிப்பெண்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் குடித்து கலாட்டா செய்ததில் தன் காரின் ஸீட் பெல்ட் கூட அறுந்து விட்டதாக‌க்கூறினார். அது தான் உங்கள் பதிவைப்படித்த போது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  10. பாரதி இன்று இருந்தால் குடிகாரர்களுக்கு தரமான மது இல்லையென்றால் இந்த ஜகத்தினையே அளித்திடுவோம் என்று பாடி இருப்பான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் நண்பரே...
      அவருக்கும் ஊத்தி விட்டு ருசியை காட்டி இருபார்கள்.

      நீக்கு
  11. மனதை வருந்த வைத்த பதிவு. பல பெண்களும் சகஜமாகவும் எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் மதுவை வாங்கிக் கொண்டு செல்வதை நேரிலேயே கண்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் நான் கண்டதெல்லாம் அடித்தட்டுப் பெண்களே! உயர்வர்க்கப் பெண்களும் வெளிநாட்டு மது போதையில் தான் இருக்கிறார்கள் என்பதையும் கேட்டிருக்கேன்/கண்டிருக்கேன். அவர்களாக மனம் மாறினால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவரவர் அவர்களின் தகுதிக்கு தகுந்தாற்போல் குடிக்கிறார்கள்.

      வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  12. எனது முதல் பதிவில் எழுத்துப் பிழை இருந்ததால் நீக்கி விட்டேன். மாற்றி பதிவிட்டுளேன்.
    "குடிமகன்களோடு சேர்ந்து குடிமகள்களும் குடிகார மக்களாக மாறியது கொடுமை "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.

      நீக்கு
  13. பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதால் கயவர்களால் வன்புணர்வுக்கு ஆளாவது அடிக்கடி நிகழ்கிறது. குடிப்பழக்கத்தால் மனத்தளவிலும் பலவீனப்படுவார்களேயானால், வன்புணர்வு நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போகும்.

    மக்கள் நலனில் அக்கறையில்லாதவர்களுக்கு வாக்களிக்கும் மாக்களை நீங்கள் கண்டித்திருப்பது மிகவும் சரியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் நீங்கள் சொல்வது இனியும் அதிகரிக்கலாம்தான்.
      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. வேதனையான நிகழ்வுகள். சமுதாயத்தை நல்ல வழியில் நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு உண்டு. ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் ஆம் குடும்பத்தின் தலைவர் கணவர் என்பது பொதுவான வார்த்தை. ஆனால் உண்மையில் பொருப்பாளர் மனைவியே...

      நீக்கு
  15. அன்பு தேவகோட்டை ஜி.

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருக்கிறது.
    காணொளியோ மிக வேதனை.

    இந்தக் காட்சிகளை 1975இலேயே திருச்சியில் கண்டிருக்கிறேன்.
    வந்த அதிர்ச்சியில் குழந்தைகளையும்,கணவரையும்
    அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம்.

    தன் முயற்சியில் திருந்தினால் மட்டுமே
    நன்மை விளையும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      1975-ல் கண்டீர்களா ? ஆச்சர்யமான விசயம்.

      உலகை இறைவன்தான் காக்க வேண்டும். வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  16. என்று தணியும் இந்த குடியின் தாகம்..மட்டுமல்ல, குடியின்மீதான மோகமும்கூட.

    பதிலளிநீக்கு
  17. மேலை நாட்டு நாகரீகம் நாம் ஊரில் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பெங்களூரு சென்று பாருங்கள். கல்லூரி பெண்கள் எத்தனை பேர் குடிக்கிறார்கள் என்று. இப்போது நம்மூரிலும் இந்த பழக்கம் வந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பள்ளி மாணவிகள் சிலர் பாட்டிலுடன் குடிப்பது புலனத்தில் (WhatsApp) வந்திருந்தது. இவர்களுக்கெல்லாம் பட்டால் தான் தெரியும். வேறென்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      உண்மைதான், சமீபத்தில் பத்திரிக்கையில் படித்தேன்.

      மதுரையில் மகளிருக்கென்று டாஸ்மாக் திறப்பதாக இப்படி மக்களின் வாழ்வை சீரழிக்க நினைப்பவர்களின் ஆட்சி தேவையா ?

      மக்கள் எதையுமே உணர்ந்து பார்ப்பதில்லை இதே மதக்கலவரம் வரட்டும் வீட்டுக்கு நான்கு நபர்கள் வேலையை மறந்து விட்டு தெருவில் வந்து நிற்பான்.

      இதைத் தடுக்க யாருக்கும் திராணியில்லை.

      நீக்கு
  18. காலம் எவ்வளவோ மாறிவிட்டது. 89ல், ஒரு கம்பெனியில் சேலத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த என்னிடம், கம்ப்யூட்டர் ஆளின் முதல் குவாலிஃபிகேஷனே டிரிங்க்ஸ் எடுத்துக்கொள்வதுதான் என்று பெங்களூரில் இருந்து வந்திருந்த ஐ.பி.எம். உயரதிகாரி சொன்னார்.

    காலம் எவ்வளவோ மாறிவிட்டது. அதனால் இதனைப்பற்றிக் கவலை கொள்வதில் அர்த்தம் இல்லை.

    அது சரி...ஆண் மட்டும் குடிக்கணும், பெண் குடிக்கக்கூடாது என்று எண்ணுவதே ஆணாதிக்க மனப்பான்மை அல்லவா> சும்மா, 'பெண் என்பவள் மேன்மையானவள்' என்றெல்லாம் வாய்வார்த்தைக்குச் சொல்வார்கள். தங்கள் தங்கள் வீடுகளில் பெரும்பான்மையினர் அதனை நடைமுறைப்படுத்துவதில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      //ஆண் மட்டும் குடிக்கணும், பெண் குடிக்கக்கூடாது என்று எண்ணுவதே ஆணாதிக்க மனப்பான்மை அல்லவா//

      நான் எப்ப இப்படி சொன்னேன் ? குடிப்பது இரு பாலருக்குமே தவறே...

      நீக்கு
  19. அரசு டாஸ்மாக்கை ஒழித்தால், கில்லர்ஜி மற்றும் ஒரு சிலரின் வாக்குகள் இந்த அரசுக்குக் கிடைக்கலாம். ஆனால் பல லட்சம் (கோடி?) குடிகாரர்கள் வாக்களிக்கமாட்டார்களே? ஜனநாயக நாட்டில் மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதனை அரசு செய்வதில் என்ன தவறு கில்லர்ஜி? எப்படி என் கேள்வி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க கேள்வியை ChivasRegal சிவசம்போதான் ஆதரவு சொல்வாரு..

      நீக்கு
  20. கில்லர்ஜி நலம்தானே... போஸ்ட் போட்டு 4 நாட்கள் எனக் காட்டுது, வழமையாக 3 நாட்களில் எல்லோ புதுப் போஸ்ட் போடுவீங்க, நான் காணாமல் போன காலத்தில ஏதும் றூல்ஸ் மாத்திப்போட்டீங்களோ... சரி அது போகட்டும்..

    எதுக்கும் இன்னமும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. புதுசா ஏதாவது கதை சொல்லுங்கோ... மகாபாரதம், கம்பராமாயணம், 7 பிள்ளை நல்ல தம்பி நாகடங்காள், சாண்டில்யன் சபதம், பார்த்தீபன் கனவு, பொன்னியின் செல்வன்.. அப்பூடிப் புதுசா ஏதும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க அல்லிராணி நலம்தானே ?
      இது பழைய பஞ்சாங்கமா ? இதோ சற்று நேரத்தில் சுடச்சுட பதிவு வருகிறது.

      தங்களது பதிவுகளை காணோமே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. தாய் மொழி, தாய்நாடு, இப்படியான சொற்கள் தாய் என்ற பெண் இனத்தின் பெருமைக்கு சான்று... பரந்துவிரிந்த பசுமையான விளை நிலத்தில்... சில களை..கள் இருப்பது போல்தான்.. தாங்கள் கூறிய பெண்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு