இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 21, 2021

கனவெல்லாம் வரும் குஷ்பு

 

வணக்கம் நட்பூக்களே... நாடோடி பாட்டுக்காரன் படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதை உல்டா செய்து எழுதியிருக்கிறேன் - கில்லர்ஜி
 
படம் - நாடோடி பாட்டுக்காரன் 1992
பாடலாசிரியர் – வாலி
இசை – இளையராஜா
பாடகர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 
கனவெல்லாம் வரும் குஷ்பு
மனமெல்லாம் தான் குறும்பு
தேடி வந்து வைப்பாயடி ஆப்பு
(கனவெல்லாம் வரும் குஷ்பு)
கெட்டவர்க்கு அடிப்பதெல்லாம் காத்து கருப்பு
நம்ம கிட்டே வேகாதே உங்க பருப்பு
(கனவெல்லாம் வரும் குஷ்பு)
 
ஆண்டாளு பணமுடிப்பு
ஆத்தோரம் காத்திருப்பு
அக்கரையில் கை கலப்பு
சகுனிக்கு மண்டை உடைப்பு
நமக்கெதுக்கு பொல்லாப்பு
நடையை கட்டுவோம் சித்தப்பு
வீரனூரு வண்டி வந்துருச்சப்பு
அதைக் கொஞ்சம் நிறுத்தப்பு
 
எட்டு ரூவா எனது கையிருப்பு
உன்னிடம் எவ்வளவு இருக்கப்பு
மிச்சத்தை நீயும் எடுத்து வைப்பு
அடுத்த மாசம் கருதறுப்பு
கையில் பணம் வேணுமப்பு
அறுத்து எடுக்கணுமே கரும்பு
(கனவெல்லாம் வரும் குஷ்பு)
 
நல்லவர்க்கு மனம் அரும்பு
கெட்டவரை நீ வெறுப்பு
குடிப்பவர்க்கு தினமும் மப்பு
குழம்பாதே நீயும் மாப்பு
இது இறைவனின் படைப்பு
சம்பளத்தை உடன் எடுப்பு
பெரியவருக்கு மாரடைப்பு
 
உதவிப்பணம் நீயும் கொடுப்பு
கெட்டவர்க்கு மனம் கருப்பு
அவன் செயலெல்லாம் அலும்பு
உன் மனம்தான் வெளுப்பு
மறுப்பு எதுக்கு நீ எழும்பு
அழுப்பு நீ ஒதுக்கு வராது இழப்பு
(கனவெல்லாம் வரும் குஷ்பு)
 
பாடல்-ஆச்சி–ரியர்-கில்லர்ஜி
 
இதோ உண்மையான பாடல் வரிகள்.
 
வனமெல்லாம் சென்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
(வனமெல்லாம்..)
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமிதானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
(வனமெல்லாம்..)

ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கரையில் ஆயிரம் பூ பூ
பூத்திருக்கு தாமரைப்பூ
பொன்னிறத்து காஞ்சரம்பு
புத்தம் புது பூஞ்சிரிப்பு காப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன எங்கும் தித்திப்பு
ஒட்டாத ஊதாப்பு
உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு
(வனமெல்லாம்..)

கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவர் பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்பார்ப்பு
வீணாக இழுக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி ஏய்ப்பு
கையோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விருவிருப்பு இருக்கு சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு
(வனமெல்லாம்..)
 
குறிப்பு – இந்த உண்மையான பாடல் வரிகளில் இல்லாத வார்த்தைகளை இணையத்தில் சிலர் எழுதி வைத்து இருக்கின்றார்கள் ஏனென்று தெரியவில்லை அவைகள்.
 
கால் சிலம்பு, மத்தாப்பு, தேனெல்லாம் சிந்தி வரும் செந்தூரப்பு
 
காணொளி

44 கருத்துகள்:

  1. எனக்கும் மிகவும் பிடித்த எஸ் பி பி பாடல்களில் ஒன்று.  உங்கள் வரிகளையும் ரசித்தேன்.  ஆனால் பாடலாகப் பாட முடியாமல் ஆங்காங்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதற்கு காரணம் வரிகள் அனைத்தும் "பு" என்று வருவதுபோல் எழுதியதுதான்.

      இப்பாடலை பாடியது மிகவும் கஷ்டம் ஆனால் கரடுமுரடான வார்த்தைகளை எஸ்பிபி மிக அழகாக பாடியிருப்பார்.

      அதேபோல் இந்த வரிகளையும் எடுத்துப்பாடும் சூட்சுமம் அவருக்குத்தான் வரும்போல...

      நீக்கு
  2. பாடலசிரியராகவே மாறி விட்டீங்க போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அப்படியா கீது ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. பாஜக குஷ்பு உங்கள் மனதை இவ்வளவு கவர்ந்துவிட்டாரா?

    சினிமா பாடலாசிரியராக பயிற்சி எடுக்கறீங்க போலிருக்கு. வாழ்த்துகள்.

    எழுதிய பாடல் சில இடங்களில் நிரடுகிறது. நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எந்த நடிகர், நடிகையும் என்னை சலனப்படுத்தி விடமுடியாது.

      இதில் இந்த பழைய குப்பூஸ் குஷ்பூவா ? வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. பகிர்ந்த பாடல் கேட்டேன்.
    உங்களுக்கு கவிதை எழுத வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு கவிதை நன்றாக எழுத வருகிறது.
    இயற்கை , குழந்தைகள் , பூக்கள், வானம், மழை என்று கவிதைகள் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ஊக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திரைப்படங்களின் பாடல்களுக்கு மாற்று வரிகள் எழுதும் தங்கள் முயற்சி கண்டு பிரமிக்கிறேன். பாராட்டுக்கள். நீங்கள் எழுதியதை படித்து ரசித்தேன். இனிதான் அந்தப் பாடலோடு இணைந்து பாடிப் பார்க்க வேண்டும்.

    வார்த்தைகளை அழகாக கோர்த்து எழுதும் சிறப்பான கற்பனை வளம் உங்களுக்கு உள்ளது. கூடிய விரைவில் நீங்களும் ஒரு திறம் மிகுந்த திரைப்பட பாடலாசிரியராக உலா வர வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடலை ரசித்தமைக்கும், பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!

      நீக்கு
  7. ஆகா
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் ஜி. தொடரட்டும் உங்கள் கவிதைகள்!

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான பாடலைப் பதிவிட்டதற்கு மிக நன்றி/
    அன்பு தேவகோட்டைஜி,

    பாடலுக்குச் சேர்ந்தாற்போல் நீங்கள்
    கவிதை எழுதி இருப்பது மிகச் சிறப்பு.

    இதில் குஷ்பு வந்தார்.?
    நமக்கு எதற்கு. நல்ல பாடலின் இசையையும் எஸ்பிபி யையும்
    ரசிப்போம்.
    நல்ல கருத்துள்ள பாடல்.மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பாடலை ரசித்தமைக்கு நன்றி.

      குஷ்புவைப் பற்றிய பாடல் என்பதால் அவருடைய படத்தை போட்டேன்.

      நீக்கு
  10. படத்தில் இருப்பவர்கள் யார்? குஷ்பு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருப்பது இந்திரா காந்தி, குஷ்பு, சிம்பு இவர்களின் முகங்கள் மிக்ஸ்.

      நீக்கு
  11. கவிதை ..பாடல் அருமை.... படத்தில் கீழ் குத்தகைதாரர் பெயரை பதிவிட்டது சிறப்பு..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே குத்தகைக்காரரை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  12. பாடல் அருமை.குஷ்புவுக்குப் பெருமை.

    பதிலளிநீக்கு
  13. நாடு எங்கும் பரபரப்பு
    நல்ல மனசுக்கு சுறுசுறுப்பு..
    பனங்காட்டு சலசலப்பு
    நரிக்கு மட்டும் சிலுசிலுப்பு..

    டாஸ்மாக்கு விறுவிறுப்பு
    டம்ளனுக்குக் கிறுகிறுப்பு..
    எப்போதும் முணுமுணுப்பு
    வெட்டிப் பேச்சு மதமதப்பு..

    அலங்காரம் தளதளப்பு
    அரிதாரம் பளபளப்பு..
    கண்டாலே மினுமினுப்பு
    டம்ளனுக்குக் கிளுகிளுப்பு..

    நமக்கெதுக்குப் பொல்லாப்பு
    நல்லது சொன்னால் முறுமுறுப்பு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஆஹா அருமையான வரிகள் மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  14. இது குஷ்பூவா !!! ஒரு நிமிஷம் கண்ணு ஏமாத்திடுச்சு :)வனமெல்லாம் செம்பகப்பூ பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் .நீங்க குஷ்பூ பத்தி கவிதை எழுதினது சிவத்தாமஸ்அலிக்கு பிடிக்கல்லையோ :) அவங்களை காணோமே 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அதிரா வராத காரணத்தால் சிவாதாமஸ்அலியும் வராமல் இருந்திருக்கலாம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா மீ வந்திட்டனே:) சிறீ அங்கிளை வரச் சொல்லுங்கோ:)).. ஒருவேளை அவருக்குக் குயுப்பூ அக்காட படம் பிடிக்கவில்லைப்போலும் அதுதான் அப்செண்ட்:))

      நீக்கு
    3. அடடே... குயுப்பு உங்களுக்கு அக்காவா ?

      நீக்கு
  15. "ஆச்சி"ரியர் கில்லர்ஜி நல்லாவே எழுதி இருக்கார். காணொளி அசையவே இல்லை. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  16. காணொளி திடீர்னு வந்துடுச்சு! திடீர்னு அது கொடுத்த சப்தத்தில் தூக்கி வாரிப் போட்டது! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயன்று காணொளி கண்டமைக்கும், பாராட்டியமைக்கும் நன்றி.

      நீக்கு
  17. கவியரசு கில்லர்ஜி மெட்டுக்கு ஏற்ற வரிகளை அழகாக எழுதியுள்ளார். எனக்கும் இது பிடித்த பாடல் தான் நண்பரே.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டுக்கு நன்றி. கவியரசா ? இது டூட்டூ மச்சாக இருக்கிறதே...

      நீக்கு
  18. குஷ்பு கனவில்வருவது எல்லாம் நடக்கிற விஷயங்ளா அததனை குஷ்புமோகமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஐயா பாட்டுக்காக உபயோகப்படுத்தினேன் இதற்காக மோகம்'னு சொல்லி விட்டீர்களே... ஐயா.

      நீக்கு
  19. வை திஸ் கொலவெறி கில்லர்ஜி?:)).. எவ்ளோ அயகான படங்கள் இருக்க, இந்தப் படத்தைப் போட்டுக் கனவில வேற வருகிறா என்கிறீங்களே.. இதுக்கே இப்பூடி எனில்.. அழகிய படங்கள் போட்டிருந்தால் வீட்டுக்கே வந்திருப்பாவோ?:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஷ்புவுக்கு எனது வீட்டில் நுழைய அனுமதி இல்லை.

      நீக்கு
  20. ஆச்சி..ரியர்.. கில்லர்ஜி....

    இப்போ எதுக்குக் கில்லர்ஜி போய் ஆச்சிக்குப் பின்னால நிற்கிறார்?:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  21. ஆ மை ஃபேவரிட் ஆக்டர், பாட்டு... அதுசரி கில்லர்ஜிக்கு இதெல்லாம் பிடிக்காதே.. அதெப்பூடி பாட்டுப் போட்டீங்கள்?.. இடையில ஏதும் செருவி விட்டிருப்பீங்களோ என உத்து உத்துப் பார்த்தேன் .. அப்படி ஏதும் இல்லை, பாட்டு ஒழுங்காப் போகுது.. ஓகே அப்போ நான் பின்பு வாறேன்ன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா எஸ்பிபி உங்களது ஃபேவரிட் ஆக்டரா ? மகிழ்ச்சி.

      நீக்கு