மகாபலிபுரம், ஒளிநகர், ஆழியார்வீதி.
வீட்டுக்குள் நுழைந்த கலியமுத்து அடுக்களைக்குள்
நின்ற மனைவி காளியம்மாளை நோக்கி குரல் கொடுத்தான்.
அடியே காளியம்மா... குடிக்க தண்ணி கொடு.
உள்ளிருந்த தண்ணீர் கொண்டு வந்த காளியம்மாளை கண்டு திகைத்தவன்.
ஏண்டி இப்படி மூலி மாதிரி நிக்கிறே ?
வாசல்ல ஈ.பி.க்காரங்கே குழியை பறிச்சு வச்சு இருக்காய்ங்களே.. அதுல விழுந்திட்டேன்.
உன்னை பலி கொடுக்க பார்க்கிறாய்ங்களோ... ?
நான் எவ தாலியை அறுத்தேன்... எனக்கு இப்படி செய்ய ?
சரி நான் குளிக்கணும் தண்ணி இருக்கா ?
ஒரு வாளிதான் இருக்கு அதை வச்சு குளிங்க...
ஏண்டி கிளி பறக்காமல் நிற்குதே என்னாச்சு ?
நான் மச்சுல வச்சு இருந்த புளிப்பொட்டியை இழுத்தேன். நீங்க மேலே வச்சு இருந்த உளி விழுந்து ஒரு பக்கத்து ரெக்கை போச்சு.
நாற்காலியை போட்டு எடுத்துருக்கலாம்ல...?
அதை பக்கத்து வீட்டு அஞ்சலிதேவி வாங்கிட்டு போனா
இன்னும் வரலை...
அந்த மூலி எதையும் ஒடனே தரமாட்டாளே...
சரி மகள் அழி ரப்பர் வாங்கச் சொன்னாளே வாங்கிட்டு வந்தீங்களா ?
ஆறு மணிக்குதான் வேலை செஞ்ச கூலி கெடைக்கும் வாங்கிட்டு வாறேன்.
மறுபடியும் வெளியில போகணுமா ?
ஆமா.. சரி கயல்விழி எங்கே போயிட்டா ?
அவ அடுப்படியில குழம்பு தாழிக்கிறா...
சரி குளிச்சுட்டு வாறேன்.
ஏங்க சளிப்பிடிச்சு இருக்கே... சுடு தண்ணி வைக்கவா ?
போடி போக்கத்தவளே... இந்த கலியமுத்து என்னைக்கு சுடு தண்ணி போடச்
சொல்லி இருக்கேன் ?
குளித்து வந்த கணவனுக்கு சாப்பாடு போட்டு வைத்தாள் காளியம்மாள்.
என்ன இன்னைக்கு கோழியா ?
புளிக்குழம்பு வச்சு தக்காளிப் பச்சடி.
நேத்து கோழியை அறுக்குறேனு சொன்னே ?
நாளைக்கி எந்தம்பி அருண்மொழி வர்றேனு போன் செஞ்சான்.
அதுனாலே... அந்த தொம்பிக்காக கோழியை ஒருநாள் உயிரை தள்ளி
வச்சுட்டியோ...
யேன் நாளைக்கு சாப்புடுறதுக்கு என்ன கொள்ளைக் கழிச்சல் ?
உன் தொங்கச்சி நளினி வரலையா... ?
அவ புலியூர் அக்கா வீட்டுக்கு போறாளாம்.
ஏண்டி... அருண்மொழியை அங்கே போகச் சொல்லி
இருக்கலாம்ல ?
ஏன்... ஜோலிக்கு போகாம... வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்குறதுக்கா ?
அப்பொழுது வீட்டுக்குள் நுழைந்த
மகன் செழியன் உட்கார்ந்து அலைபேசியை நோண்ட ஆரம்பித்தான்.
தம்பி சாப்பாடு வைக்கவா... களி
சாப்பிடுறியா ?
களியா... சொல்லி இருந்தா வர்ற வழியில் சாப்பிட்டு வந்து இருப்பேனே... சரி சாப்பாடு வைம்மா.
சாப்பிட்டு விட்டு கொள்ளைப்பக்கம்
வந்தவன் வேலியில் கிடந்த துண்டை எடுத்து முகம் துடைத்தபோது பார்த்தான்.
ஏண்டி என்ன இது துண்டுல கிழிசல் ?
எலிதான் நிறைய திரியுதுல அதான் கடிச்சு இருக்கும் வெளியில போயிட்டு வரும்போது கடையில எலி மருந்து வாங்கிட்டு வாங்க...
துண்டை விரித்து கீழே சாய்ந்தவன்
மகனது அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அதில் பாகுபலி படம் நிறுத்தி இருந்தது.
வலைப்பதிவை திறந்து நேற்று படித்து விட்டு பாதியில் நிறுத்தி இருந்த யானையின் காதில் தமிழ்
பேசியது கிளி என்ற பதிவை படித்து முடித்தபோது பாக்யா தளிர்
சுரேஸின் பதிவு வெளியாகியது. அதையும் படித்து விட்டு வலிப்போக்கனின்
கொரோனாவில் பலியானவர்கள் படித்த, கலியமுத்து அடுத்து அவன் போன பதிவு
இதுதான் கிலி கிளி கிழி
சிவாதாமஸ்அலி-
பதிவு யாருக்கோ அஞ்சலி செலுத்துறது மாதிரி இருக்கே...
அடியே காளியம்மா... குடிக்க தண்ணி கொடு.
உள்ளிருந்த தண்ணீர் கொண்டு வந்த காளியம்மாளை கண்டு திகைத்தவன்.
வாசல்ல ஈ.பி.க்காரங்கே குழியை பறிச்சு வச்சு இருக்காய்ங்களே.. அதுல விழுந்திட்டேன்.
நான் எவ தாலியை அறுத்தேன்... எனக்கு இப்படி செய்ய ?
ஒரு வாளிதான் இருக்கு அதை வச்சு குளிங்க...
நான் மச்சுல வச்சு இருந்த புளிப்பொட்டியை இழுத்தேன். நீங்க மேலே வச்சு இருந்த உளி விழுந்து ஒரு பக்கத்து ரெக்கை போச்சு.
சரி மகள் அழி ரப்பர் வாங்கச் சொன்னாளே வாங்கிட்டு வந்தீங்களா ?
மறுபடியும் வெளியில போகணுமா ?
அவ அடுப்படியில குழம்பு தாழிக்கிறா...
ஏங்க சளிப்பிடிச்சு இருக்கே... சுடு தண்ணி வைக்கவா ?
குளித்து வந்த கணவனுக்கு சாப்பாடு போட்டு வைத்தாள் காளியம்மாள்.
புளிக்குழம்பு வச்சு தக்காளிப் பச்சடி.
நாளைக்கி எந்தம்பி அருண்மொழி வர்றேனு போன் செஞ்சான்.
யேன் நாளைக்கு சாப்புடுறதுக்கு என்ன கொள்ளைக் கழிச்சல் ?
அவ புலியூர் அக்கா வீட்டுக்கு போறாளாம்.
ஏன்... ஜோலிக்கு போகாம... வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்குறதுக்கா ?
களியா... சொல்லி இருந்தா வர்ற வழியில் சாப்பிட்டு வந்து இருப்பேனே... சரி சாப்பாடு வைம்மா.
எலிதான் நிறைய திரியுதுல அதான் கடிச்சு இருக்கும் வெளியில போயிட்டு வரும்போது கடையில எலி மருந்து வாங்கிட்டு வாங்க...
பதிவு யாருக்கோ அஞ்சலி செலுத்துறது மாதிரி இருக்கே...
ரொம்ப சிந்திச்சு எழுதுறீங்கள் போல இருக்கே
பதிலளிநீக்குவருக தமிழரே இயன்றவரை சிந்திப்போம்.
நீக்குவித்தியாசமான பதிவு.
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குவார்த்தையில் சிலம்பம் ஆடுகிறீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க மேடம் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்ல கதை மாதிரி அமைப்புடன் லி, ளி, ழி யை சேர்த்து கற்பனை வளத்துடன் உருவாக்கிய பதிவு படிக்க சுவையாக இருந்தது. மிகவும் ரசித்துப் படித்தேன். இப்படி வித்தியாசமாக சிந்தித்து எழுதுவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களது எழுத்து பாணியே என்றும் சுவையானது. மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குநன்றாக இருக்கிறது பதிவு.
பதிலளிநீக்குகிலி, கிளி, கிழி என்று கலியமுத்து நன்றாக பேசுகிறார், சிந்திக்கிறார்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅருமை... ரசித்தேன்...
பதிலளிநீக்குவாங்க ஜி மிக்க நன்றி
நீக்குவார்த்தை விளையாட்டு - ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களின் ரசிப்புக்கு நன்றி
நீக்குபடிச்சி முடிச்சப்புறமும் ரொம்ப நேரம் சிரிச்சிட்டே இருந்தேன். உங்க பதிவைக் காட்டினேன். படிச்சிட்டு என் பெண்டாட்டியும் பேத்திகளும் சேர்ந்து சிரிச்சாங்க.
பதிலளிநீக்குவருக நண்பரே குடும்ப சகிதம் ரசித்தமை அறிந்து மகிழ்ச்சி
நீக்குதமிழில் நல்ல விளையாட்டு. சிந்தனைப்பறவை சிறகடித்துப் பறந்திருக்கிறது.
பதிலளிநீக்குவருக சகோ ஹா.. ஹா.. மிக்க நன்றி
நீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குஹா ஹா ஹா என்னா அறிவு கில்லர்ஜி உங்களுக்கு, உண்மையில் வியப்பாக இருக்கு, லேசான விசயமில்லை இப்படி எழுத்துக்களையும் சொற்களையும் தேடி எடுத்து வசனம் அமைப்பது.. அருமை.
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்தால் சிறீ சிவசம்போ அங்கிள் பேசுவதைப்போலவே இருக்குது:).
வாங்க அதிரா எனக்கு ஒரு இது பாராட்டு மாதிரி இல்லையே...
நீக்குஇது உங்கள் அங்கிள் இல்லை மிஸ்டர். கலியமுத்து.
நான் பொய் சொல்ல மாட்டேன் ஆனா நகைச்சுவைக்காக ஏதும் சொல்வதுண்டு, ... இது உண்மையாகத்தான் சொன்னேன், நிறைய மினக்கெட்டு சொற்கள் தேடி எடுப்பது என்பது அவ்வளவு ஈசியில்லை.
நீக்கு//நான் பொய் சொல்ல மாட்டேன்//
நீக்கு70 வருடமாக ஜேம்ஸ் ஊரணியில் குதிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இருப்பது....?
வர வர சித்தன் போக்கு சிவன் போக்காக இருக்கிறது பதிவு
பதிலளிநீக்குஹா.. ஹா.. வாங்க ஐயா வருகைக்கு நன்றி.
நீக்குஅறுப்பது அருபது..
பதிலளிநீக்குதலைப்பில் இருப்பது பிழை..
ஆயினும் - அன்பே
தமிழில் பேசிட விழை!...
வணக்கம் ஜி மன்னிக்கவும் பிழையை சரி செய்து விட்டேன் நன்றி.
நீக்குநெல்லுடன் வளர்வது களை..
பதிலளிநீக்குநீண்டு செழிப்பது கழை (மூங்கில்)..
கன்றை வரைந்தால் கலை..
கன்றை வளர்த்தால் கலை..
கன்றை வரைந்தாள் கலை..
அருமை ஜி ரசித்தேன்.
நீக்குஅடியே காளியம்மா... என்று கூப்பிடுறமாதிரியே..... இந்தாடா கலியமுத்தா தண்ணின்னு காளியம்மா கொடுத்தா எப்படியிருக்கும்.....!!!!
பதிலளிநீக்குவருக நண்பரே தமிழச்சி காளியம்மாள் கணவரை அப்படி பேசமாட்டாள்.
நீக்குநீரில் செழிப்பது ஆரை
பதிலளிநீக்குநிலத்தில் தழைப்பது கீரை..
விருட்டெனப் போவது சாரை
வீட்டுக்கு வேய்வது கூரை..
ஸூப்பர் ஜி அருமை.
நீக்குதுரை அண்ணன் எல்லாமே சூப்பர்..
நீக்குஅன்பு துரையின் ர, ள உள்ளடங்கிய கவிதை ரசிக்க வைத்தது. வாழ்த்துகள் துரை.
பதிலளிநீக்குஉங்களுக்கு அறுபது ஆண்டு நிறைவோ என்று நினைத்தேன். நீங்கள் வயதில் இளையவர் இது
பதிலளிநீக்குவேற லெவல்:) பதிவு.
வார்த்தை சிலம்பட்டம் அசர வைக்கிறது.
கிலியடைந்தால் கிழிவோம்.
கிளி பேசினால் மகிழ்வோம்.
நன்றி அன்பு தேவகோட்டை ஜி.
வாங்க அம்மா அறுத்த வார்த்தைகள் அறுபது (60) ஆகவே இப்படி தலைப்பு கொடுத்தேன்.
நீக்குபார்த்தீங்களோ கில்லர்ஜி, நீங்க உங்கட படத்துக்கு மேல அறுபது எனப்போட்டதால வல்லிம்மா வயசு அறுபதென நினைச்சிட்டா, ஆனா 70 ஆகிட்டுது என்பது வல்லிம்மாவுக்குத் தெரிய ஞாயமில்லை.
நீக்குவாங்க அதிரா ஏழுக்கு அருகில் மறதியாக பூஜஜியம் போட்டு விட்டீர்களே...
நீக்குசரி பரவாயில்லை அதிராவின் தமிழ் இப்படித்தானே இருக்கும்.
மயங்கொலி என்னும் இலக்கணப் பாடம் நடத்த உங்கள் பதிவு உதவும்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவின் வார்த்தை கண்டு மகிழ்ச்சி.
நீக்குவிரைவில் கில்லர்ஜி அகராதி என்று வெளியிட்டுவிடுவீர்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்கு