இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 06, 2021

மாந்தோப்பு போவோமா...


மடிசார் மஞ்சுளாவே மாந்தோப்புக்கு போவோமா
மங்கலமான சேதி ஒண்ணு சொல்றேன் கேளம்மா
கெண்டை மீன் கண்ணழகி அயித்த மக அஞ்சுகமே
அயிரை மீன் வாங்கி கொழம்பு வையடி பொய்யழகி

மட்டைக்கம்பு தெறிச்சு போகும் மாயாண்டி மச்சானே
மத்தியானம் வீடு வந்துரு கோழிக்குழம்பு வச்சேனே
மீனு குழம்பு வச்சா மீள முடியாதே உன்னிடமே
ஏற்கனவே இடுப்புல ஒண்ணு நிக்கிறது என்னிடமே

சோலந்தூரு சோசியரு சொன்னாரே பெட்டகமே
எதிர் பேச்சுக்கு துணையும் உனக்கு உருவாகுமே
உழைச்சுப்போட மச்சானுக்கு தெம்பு உண்டாகுமே
தேன்மொழியே தேவகோட்டை தேன் குடமே

தெள்ளுமணி மச்சானே தெம்மாங்கு பாட்டுக்காரா
தெளிவாக முடிவெடுப்போம் எம் மனசு பூட்டுக்காரா
ரெண்டு சந்தை போகட்டுமே முறுக்கழகு மீசக்காரா
ரெட்டைப்புள்ளை பெத்துத்தாரேன் உன் நயன்தாரா

மார்கழி மாசத்துல கொல்லலாமா மாங்குயிலே
மச்சானும் மருதாணி போடுறேன்டி பூங்குயிலே
மல்லுக்கட்ட விடாதடி மச்சானை கருங்குயிலே
ஏங்கி ஏங்கி சாகுறேன்டி எழிலழகே ஏங்குயிலே

கருவா மச்சானே மணிக்குடமே கலங்காதே
தனிக்குடமே உனைக்கண்டு மனசு தாங்காதே
தேனே தினைக்கரும்பே தினமும் நீ ஏங்காதே
வாயா வாசராசா வஞ்சி உள்ளமும் பொங்குதே

தானே... தன்னானே... தந்தானே தன்னானே
தானே... தன்னானே... தந்தானே தன்னானே
தானே... தன்னானே... தந்தானே தன்னானே
தானே... தன்னானே... தந்தானே தன்னானே

மாயாண்டியும், மஞ்சுளாவும் மங்கலமாய் ஆடிப்பாடட்டும் நாம கண்டுக்காமல் ஒதுங்கிடுவோம் ஓரமாக தந்தானே தன்னானே...


சாம்பசிவம்-
மரத்தை பார்த்தால் தேவகோட்டை அருணா தியேட்டர் மாந்தோப்பு வீதி மாதிரி இருக்குதே...

ChavasRegal சிவசம்போ-
நாமதான் டாஸ்மாக்கில கிடந்துட்டோம் நம்ம, பங்காளியாவது வாழ்ந்துட்டு போகட்டும்...

28 கருத்துகள்:

  1. வழக்கம் போல் அருமை.
    இந்த நாட்டுப்புற பாடல் எந்த ராகத்தில் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவ்வளவு இசைஞானம் எனக்கு கிடையாதே...

      நீக்கு
  2. மாமரமே இப்போதான் பூத்திருக்கு... அதுக்குள்ள மாஙாகாய் மரங்களைச் சுற்றி பாடலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாடும்போது காலநேரமா பார்க்க இயலும்.

      நீக்கு
  3. இந்த வருஷம் தாமதமாய் இருக்குமோ மாங்காய் விளைச்சல்? பாடல் நன்றாய் இருக்கு? மாமரங்களில் எறும்புகளும் நிறைய இருக்கும். பார்த்து கவனமாய் ஆடச் சொல்லுங்க! அது சரி, அதென்ன "மடிசார்"மஞ்சுளா? எதுகை மோனைக்காகவா? இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஹா.. ஹா.. நான் எதுகை மோனைக்காகத்தான் எல்லா வார்த்தைகளையும் உபயோகப்படுத்துகிறேன்.

      நீக்கு
  4. மாந்தோப்புக்கு கிளிகள் மயக்கத்தில் ஆடித்திருந்து அனுபவிக்கட்டும் வாழ்வை.  மனம் திறந்து வாழ்ந்திடுவோம் நாமும்!

    பதிலளிநீக்கு
  5. மடிசார் மஞ்சுளா கோழிகுழம்பு மாயாண்டி காதல் தம்பதிகளாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் மடிசார் எல்லாம் கோழி குழம்பு மீன் கொழம்பு வைக்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே லதா ரங்காச்சாரியும், சிவாஜிராவ் கெய்ட் வாட்'டும் இணையவில்லையா ?

      நீக்கு
  6. நீங்க மட்டும் வேட்டிய மடிச்சுக்கிட்டு களத்துல எறங்குனா உதார் பார்ட்டிகள் பலவும் காணாமப் போகும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  7. தமிழ் சினிமாவில் மரத்தை சுற்றி பாடி காதல் கொல்வார்களே!! அப்படித்தான் மாயாண்டியையும் மஞ்சுளாவையும் நிணைத்துவிட்டேன். கவிஞர் மன்னிப்பாராக....

    பதிலளிநீக்கு
  8. ரொம்பத்தான் பிகு பண்ணின மஞ்சுளாவை மானே தேனே மயிலே குயிலேன்னு பாடியே மயக்கிட்டாரே மாயாண்டி!

    மகாப் பெரிய கில்லாடிதான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாயாண்டி மாயாஜாலக்காரராக இருப்பாரோ... ?

      நீக்கு
  9. கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது. நானும் ஒரு ராகத்துடன் பாடலைப்பாடிப் பார்த்தேன். நன்றாக உள்ளது. இப்படி சுலபமாக வரிகளை சேர்த்து பாடல்கள் இயற்றும் உங்கள் திறமை கண்டு வியக்கிறேன். உங்கள் கவித்திறமைக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிதையை இரசித்து பாடிப்பார்த்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. நாட்டுப்புறப் பாடல் மெட்டில் உங்கள் பாட்டு நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  12. நாட்டுப்புறவியல் துறையினையும் விடவில்லை போலுள்ளது. ரசித்தேன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு