இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 07, 2021

வாழ்க நீவீர் எம்மான்...

புதாபி நண்பரது வீட்டுக்கு வழக்கம் போல் ஓர்தினம் சென்றேன். நண்பர் கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தார். தங்கை கொடுத்த காஃபியை அருந்தி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த நான்...

ஏம்மா... மருமகளை காணோமே எங்கே ? 

உள்ளே படிச்சுக்கிட்டு இருக்காணே...

சப்தம் கேட்டு வெளியே வந்தது மருமகள். எழுந்து உள்ளே போனது தங்கை.

மீசை மாமா நல்லா இருக்கீங்களா ? 

நல்லா இருக்கேன்டா...

உள்ளேயிருந்து தங்கை மருமகளை அழைப்பு விடுத்தது.

இதோ வர்றேன் மாமா...

ம்... சரி 

உள்ளே போன மருமகளை தங்கை பல்லைக் கடித்துக்கொண்டு திட்டுவது சன்னமாக எனக்கும் கேட்டது. பொறுமை தாங்காமல் எழுந்து நானும் உள்ளே போனேன். நண்பர் பார்த்து விட்டு மீண்டும் கணினியில் மூழ்கினார். உள்ளே சென்ற என்னைக் கண்டு திகைத்த தங்கை.

ஸாரிண்ணே... அது வந்து...

எதுக்காக மன்னிப்பு கேட்கிறே ? 

இல்லைணே.... அது...

நீ செய்தது மிகச்சரி. இப்படித்தான் இருக்கணும் இந்த கண்டிப்பு நாளை மருமகளுக்கு நூறு வயது ஆனாலும் மனதில் நிற்கும், நிற்கணும் இது நமக்கு பெருமையான விசயம். உன்னையும் பெருமையாகத்தான் நினைக்கிறேன். அடுத்த முறை இப்படி நடந்தால் பேசாதே... சாத்து.

வெளியே வந்து சோபாவில் அமர்ந்தேன் நண்பர் முத்தெடுத்துக் கொண்டே இருந்தார். மேலும் நாங்கள் பேசியதை ஒட்டாமல், ஒட்டுக் கேட்டு மௌனமாய் சிரிப்பை உதிர்த்தார். மீண்டும் மருமகள் என்னருகே வந்து அமர்ந்து என்னிடம் கேட்டது.

மீசை மாமா என்மேல உங்களுக்கு பாசமே இல்லையா ? 

ஏண்டா இப்படி கேட்கிறே ? 

அம்மாகிட்டே சாத்துல விடுனு சொல்றீங்க... ? 

உன்னை சொல்லலைடா... பேசும்போது கதவை சாத்தி விடுனு சொன்னேன்.

ஓ... அப்படியா...

ஆமாடா உன்னை நான் அடிக்கச் சொல்வேனாடா ? 

அதானே... பார்த்தேன்.

நல்லவேளை எனக்கு வாய் இருந்ததால் சமாளித்து விட்டேன். தமிழில் எவ்வளவு சமாளிப்பு வார்த்தைகளை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழலுக்குதானோ... தமிழ்ப்புலவர்களே வாழ்க நீவீர் எம்மான்... மேலும் சற்று நேரம் மருமகளிடம் அளவளாவி விட்டு, தங்கையிடமும் விடை பெற்று விட்டு நண்பரைப் பார்த்தேன். அவர் இன்னும் முத்தெடுத்துக் கொண்டு இருந்தார். வெளியேறி தொங்கு பெட்டியில் இறங்கும்போது மனம் கேட்டது இந்த வளர்ப்பு முறையை வகுத்து தந்தது இவர்களது மதம்தானே ?  என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. ஆங்.. சொல்ல மறந்து விட்டேனே... உள்ளே தங்கை பல்லைக் கடித்துக் கொண்டு மருமகளை திட்டிய வார்த்தை என்ன தெரியுமா ? 

மாமா பக்கத்துல போய் ‘’சால்’’ போடாமல் உட்கார்ந்து இருக்கியே... அறிவு இருக்கா உனக்கு ? 

நண்பர்களே அந்த மருமகளுக்கு அன்றைய அகவை என்ன தெரியுமா ? 

ஆறு, ஆம் ஆறே அகவைதான். மருகளுக்கு மட்டுமல்ல, எனது தங்கைக்கும் இறைவனிடம் பிரார்த்தனை வைத்தேன். வாழ்க நீவீர் எம்மான். 

சிவாதாமஸ்அலி-

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

42 கருத்துகள்:

  1. நல்ல விஷயங்களை பழக்குவதில் தவறு இல்லை.  ஆறு வயதுதான் என்றால் அப்புறம்  மெதுவாகக் கூட சொல்லி மாற்றலாம், பழக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. உங்களின் பதிவின் முத்தாய்ப்பு மிகவும் அழகு நண்பரே. 6 வயது குழந்தையை இதற்காக திட்டுவது சற்றே வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. எந்த உடையை எப்படி அணிய வேண்டுமோ அப்படி அணியக் கற்றுக் கொள்ள வேண்டும் அது போல எந்த உடையை எங்கு அணிந்து செல்லவேண்டுமோ அப்படி அணிந்து செல்ல வேண்டும் இப்படி பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் கற்று தரவேண்டும் ஆண்களும் வேட்டியோ கைலியோ கட்டினால் மடித்து கட்டக் கூடாது. அப்படிக் கட்டுவது அசிங்கம் என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே மடித்து கட்டக்கூடாது எமது கருத்தும் அதுவே...

      நீக்கு
  4. வித்தியாசமான அறிவுரைதான். நல்ல பழக்கம்.

    நாலாவது படிக்கும்போது, வீட்டுக்கு வந்த தலைமையாசிரியருக்கு குட் மார்னிங் சொல்லாத்தற்காக, அவர் போனபிறகு என்அப்பா என்னைச் சாத்தியது நினைவுக்கு வருது.

    உங்களைமாதிரி பலர் அறிவுரை சொல்வதால்தால் சில பெண்கள் நைட்டிக்கு மேல சால் போர்த்திக்கிட்டு பகல்ல வீதில நடமாடறாங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஹா.. ஹா.. அங்கும் சாத்துதானா ?

      நீக்கு
  5. மாமா , மருமகள் பேச்சை ரசித்தேன். நல்ல சமாளிப்பு மருமகளிடம்.
    அறிவுரை நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மருமகளிடம் வார்த்தைகளை சுலபமாக மாற்றிப் போட்ட உங்கள் சாமர்த்தியத்தை ரசித்தேன். தங்கள் தங்கையின் அறிவுரை நல்லதுதான். ஆனால் ஆறு வயது குழந்தையிடம் பக்குவமாக தனித்திருக்கும் போது சொல்லிப் பழக்கலாம். சிறு வயதின் அறிவுரைகள் என்றுமே நினைவில் நிற்கும். நல்ல குடும்பம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  7. சொல்லிச் சென்ற விதம் சொன்னவிசயத்திற்கு சரியான அழுத்தம் தருகிறது..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. சரி ஜி... நண்பர் எடுத்துக் கொண்டிருந்த முத்தை சற்றே எட்டிப் பார்த்து சொல்ல வேண்டாமா ஜி...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஹா..ஹா..நண்பர் தனது நிறுவனத்து வங்கி கணக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

      ஆகவே எட்டிப் பார்க்கவில்லை பேசவும் முடியவில்லை.

      நீக்கு
  9. நல்ல விஷயம் கில்லர்ஜி. நல்ல பழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல ஆண் பிள்ளைக்கும் சேர்த்து என்றுதான் சொல்வேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண் பிள்ளைகளுக்கும் சேர்த்து ஆம் எமது கருத்தும் இதுவே...

      நீக்கு
  10. மகளுக்கு நல்லபடியாக அறிவுரை சொல்லி திருத்துவது கடமை தான் என்றாலும் வந்தவர் வெளியே சென்ற பிறகு இங்கிதமாக சொல்லியிருக்க வேண்டும். மற்ற‌வர்கள் மனம் புண்படாமல் சொல்லவும் தனிப்பக்குவம் வேண்டும். அந்த இடித்துரைத்தல் தன் பெண்ணுக்கு சொன்ன மாதிரி உங்களுக்காகத்தானோ என்றும் சந்தேகமாக இருக்கிறது! இது எதையுமே கண்டு கொள்ளாமலிருக்கும் நட்பு! அது நட்பு தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதில் தவறு இல்லை என்பதே எனது கருத்து காரணம் ஒளிவு மறைவற்றது எங்களது நட்பு. தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. நல்லப் பழக்கங்களை சிறுவயது முதலே அறிவுறுத்திப் பழக்குவதுதான் சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. நல்ல அறிவுரை தான். ஆனால் ஆறு வயசுக்கு அந்தக் குழந்தைக்கு பேதம் தெரிஞ்சிருக்காது. சுமார் பத்து வயசுக்கப்புறமாச் சொல்லலாம். இந்த வயசுக்கு இதெல்லாம் தேவை இல்லை என்பது என் கருத்து. என்றாலும் வெளியே செல்லும்போது போட்டுப் பழக்கினால் பின்னர் தானே வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்த கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  13. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் நடந்து எத்தனை வருடங்கள் இருக்கும்? ஏனென்றால் இப்போதெல்லாம் இளம் தாய்மார்களே சால் அணிவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் 2014 இருக்கலாம்.

      ஆம் பல லட்ச ரூபாயில் செல்வந்தர்கள் எடுக்கும் உடைகள் தெருவைக் கூட்டிக் கொண்டு செல்கிறது ஆனால் கண்ணியத்தை மறைப்பதில்லை.

      நீக்கு
  14. நல்லதொரு அறிவுரை தான். ஆண்/பெண் இருவருக்குமே இந்த மாதிரி சொல்லிக் கொடுப்பது இன்றைய தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் இரு பாலருக்குமே அவசியமே...

      நீக்கு
  15. நல்ல கருத்துள்ள பதிவு. பெண் குழந்தைகளைக் கவனமாக வளர்ப்பது என்பது இப்போது மிக அவசியமாகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  16. மற்றொரு கருத்தையும் பதிய நினைத்தேன் அது அன்று முடியாமல் போய்விட்டது.

    ஷால் போடுவது நல்ல கருத்து..அது சின்னக் குழந்தைதான்... ஆனால் இதை விட முக்கியம் பெண் குழந்தைக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளக் கற்றுக்கொடுப்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதுவும் முக்கியமானதே தங்களது மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. நீங்கள் சொன்ன விதம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசித்திரக்கவியின் முதல் வருகைக்கு பூங்கொத்து. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. டிசிப்ளின் என்பது சின்ன வயதிலிருந்தே சொல்லிக் கொடுப்பது நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனது கருத்தும் இதுவே... வருகைக்கு நன்றி மேடம்.

      நீக்கு
  19. பெண் குழந்தை பூவைப் போல வளர்க்கப் பட வேண்டியவள்.
    மென்மையும் கண்டிப்பும் சேர்ந்தே இருக்க வேண்டும்.

    தங்களின் சொல் சமாளிப்பு மிகவும் அருமை.
    இப்போது உடை உடுத்துகிறார்களா என்பது கேள்விக் குறி.

    கண்கொண்டு காணமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  20. அருமை நண்பரே! ( தமிழ் டைப் மறந்துவிட்டது அதனால் வலை பக்கம் வர இயவில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் ? மறந்து விட்டது என்று.....

      நீக்கு
  21. ஐம்பதில் வளையாது....

    பதிலளிநீக்கு