இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 26, 2021

வரலாற்றின் அழகு

கோயமுத்தூரின் முக்கிய சாலையில் சிங்காநல்லூர் பேருந்து நிலைத்தின் அருகில் ஒரு தியாகியின் சிலையொன்றை வைத்து இருப்பதை கண்டேன். அவரது பெயர் திரு. N. G. ராமசாமி தோற்றம் 11.03.1912 மறைவு 12.02.1943 அதாவது இவரது அகவை 31 சரியா ? ஆனால் இவரது சிலையின் தோற்றத்தை சுமார் ஐம்பது அகவைக்கும் மேலானவர் போல் வடித்து இருக்கின்றார்கள். இது எப்படி சாத்தியமாகும் ?  

மஹாத்மா காந்தியின் உருவம் என்றாலே அவரை தாத்தாவாகவே நாம் நினைக்கிறோம். இருப்பினும் அவரது இளமைப் பருவத்தை நாம் அங்கீகரிப்பதில்லை. திரு. N.G.ராமசாமி அவர்கள் ஐம்பது அகவைவரை வாழ்ந்திருந்து இப்படி சிலை வடித்திருந்தால் இதில் ஐயப்பாட்டிற்கு வேலையேயில்லை ஓர் பழஞ்சொல் உண்டு ‘’இளமையில் மரணிப்பவன் முதுமையடைவதில்லை’’ என்று இப்பருவத்தில் மக்கள் இவரைக் கண்டு இருக்க சாத்தியமேயில்லை. திருப்பூர் கொடி காத்த குமரன், திரு. பகத்சிங் போன்றவர்களை நாம் இளமையாகவே பார்க்கிறோம் இல்லையா... காரணம் அவர்கள் இளமையில் உயிர் நீத்தவர்கள்.
 
திருவள்ளுவரைக்கூட அவர் முதுமைவரை வாழ்ந்ததால்தான் அவரது உருவத்தை நமது முன்னோர்கள் சித்திரமாக வரைந்து வைத்திருந்தார்கள். அது இன்று டிஜிடல் பிக்சராக உருமாறி நிற்கிறது. இது நமது மாணாக்கர்களுக்கு குழறுபடியான சிந்தனையை வளர்க்கும். இது தவறான செயல் என்பது யாருக்குமே தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லும் செயலும் ஒன்றாக, நன்றாக இருப்பதே வரலாறுகளுக்கு அழகு.

22 கருத்துகள்:

  1. கில்லர்ஜி.. அவரது வாழ்வு கொஞ்சம் பரிதாபத்திற்கு உரியது. ஆலை நிர்வாகிகள், அவர், உழைப்பாளர் யூனியன் ஆரம்பித்ததை விரும்பவில்லை. அவர்களால் தாக்கப்பட்டார். சுதந்திரத்திற்காகப் போராடியவர். தாக்கப்பட்டதால் சிறிய வயதிலேயே தடியை உபயோகித்து நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே மரணமடைந்தார் (சுதந்திரத்திற்கு முன்னால்).

    அந்தமான் தீவிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள், 30 வயதிலேயே கிழட்டுப் பருவம்போல் மாறிய பல படங்களைப் பார்த்திருக்கிறேன்.

    அவரது வரலாறு மிகச் சுருக்கமாகவாவது கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தால் உங்களுக்கு இந்த நியாயமான சந்தேகம் வந்திருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே... அவரது வரலாறு தங்களால் இன்று அறிந்தேன் நன்றி
      கடந்த பதிவு ''கொள்ளிவாயன் மாதஇதழ்'' படிக்கவில்லையே...?

      நீக்கு
  2. நல்ல பதிவு. மிகச்சரியான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். திரு.நெல்லைத்தமிழன் அவரைப்பற்றிய விவரங்கள் கொடுத்திருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. உங்கள் ஆதங்கப்படி இந்தக்குறையை யாராவது இனியாவது களைந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  3. ஒரு தியாகியின் சிலையை ஊன்றிக் கவனித்து ஆராய்ந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. 'ஏதோ ஒரு சிலை' என்று கடந்து போகிறவர்கள்தானே நம் மக்களில் பெரும்பாலோர்!

    நெல்லைத் தமிழன் அவர்கள் தந்த தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      //ஏதோ ஒரு சிலை//
      அப்படி என்னால் கடந்து போகமுடியாது, இது எனது பிறவிக்குணம்

      நீக்கு
  4. உங்கள் கருத்து சரிதான். ஆனால் நெல்லைத்தமிழன் சொல்வது போல் சிறைவாசம் வயோதிக தோற்றம் தரும். கப்பலோட்டிய தமிழன் படத்தில் சுப்பிரமணிய சிவாவைப்பார்த்து சிதம்பரம் அவர்கள் " சிறைவாசம் உங்களை எப்படி உருகுலைத்து விட்டது !" என்று சொல்வார். தேச ஒற்றுமை, சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற கவலை அவரை விரைவில் முதுமை அடைய செய்து இருக்கும்.

    நீங்கள் சொன்னது போல் அவர் வயதை கணக்கிட்டு இளமையோடு சிலை செய்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. அன்பின் தேவகோட்டைஜி,
    தாங்கள் இவ்வளவு கூர்ந்து பார்த்துச் சொல்லாவிடில் தெரிந்திருக்காது.

    பொதுவாக இதுதான் உருவம் என்று தீர்மானித்து விடுகிறார்கள்
    போலிருக்கு.
    இதைக் கண்ட அவர் பெற்றொரும் மற்றோரும் என்ன வருத்தப் பட்டார்களோ.

    இறந்தும் ஒரு நல்லவரின் நினைவுக்கு
    இப்படிக் கேடு விளைவிப்பார்களோ:(

    தகவல் தந்த நெல்லைத்தமிழனுக்கும் உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. நல்ல பதிவு! தகவல்களைத் தந்த நெல்லைத் தமிழருக்கும் சிலை வைத்திருப்பதைக் கண்டறிந்து சொன்ன உங்களுக்கும் நன்றி. இல்லை எனில் இப்படிப்பட்ட தியாகிகளை நாம் நினைவில் வைத்திருக்க மாட்டோம்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு பதிவு. சிலை வைப்பதோடு கடமை முடிந்து விடுகிறது பல இடங்களில் - பராமரிப்பு என்பதே இல்லை. இளவயதில் சிறை சென்றதால் முதுமை சீக்கிரம் வந்திருக்கும் என்ற நெல்லைத் தமிழன் கூற்றும் சரியே.

    தங்கள் ஆதங்கத்தினை சொன்னது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் சிலை வைப்பதோடு மட்டுமில்லாமல் அந்த சிலைகளை இடித்து விடுவார்கள் என்று பயந்து சிறை வைப்பது அதனினும் கொடுமை.

      நீக்கு
  8. மிகவும் அருமை நல்ல பதிவு, நண்பர்களே.. இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது தகவலுக்கு நன்றி மேலும் விபரம் அறிய காத்திருக்கிறேன்.

      நீக்கு
  9. நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு. சாதாரணமாக யாருடைய சிலை என்பதை கூட கவனிக்க மாட்டோம். நீங்கள் இத்தனை நுட்பமாக கவனித்திருக்கிறீர்கள். உங்கள் சந்தேகத்திற்கு நெல்லை தமிழனின் விளக்கமும் அருமை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. இப்படி ஒரு தியாகி பற்றி இப்போதுதான் அறிகிறேன்.   நெல்லையில் தகவல்கள் நன்று.  சிலைவடிப்பபது பற்றி சொல்லவும் வேண்டுமோ..  ஜெ மரணித்த உடன் அவர்  ஒன்றைக் கொண்டு வந்து வைத்தார்களே...  இப்போதெல்லாம் தத்ரூபமாக சிலை வடிக்க யாரும் இல்லை போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு