இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 30, 2021

கலைஞர்களின் நிலைப்பாடு

 

கலைவாணர் NSK (Nagarkovil Sudalaimuthu Krishnan) என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது தமிழ் திரைப்படங்களின் முன்னோடிகளில் முக்கியமானவர் இவர் மனிதநேயமுள்ள மாமனிதர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். அவரைத் தொடர்ந்து பல நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள் பலர் நின்றார்கள், சிலர் வென்றார்கள், சென்றார்கள்.

ஞாயிறு, அக்டோபர் 24, 2021

கலைகளின் நிலைப்பாடு

வணக்கம் நட்பூக்களே... திரைப்படத்தைப் பற்றி எழுதுவோம் என்று நினைத்தபோது... நடிகரைப்பற்றி எழுதினால் என்ன ? என்று மனதில் தோன்றியதின் விளைவே இப்பதிவு. திரு. சிவாஜி கணேசன் அவர்களும், திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும் தங்களை அண்ணன்-தம்பி என்றும், குழந்தைகள் சித்தப்பா, பெரியப்பா என்று அழைத்தார்கள் என்றும் நாம் பத்திரிக்கை வாயிலாக அறிந்த விடயங்கள். 

திங்கள், அக்டோபர் 18, 2021

நீடாமங்கலம், நீட் நீலாம்பரி


 கொரோனா காலத்தில் கணவனும், மனைவியும் வீட்டுக்குள் சிறை வாழ்க்கை வாழும்போது பொழுது போகாத அர்சனா தனது கணவன் அர்ச்சுனனை அர்ச்சணை செய்ய ஆரம்பித்தாள்.

புதன், அக்டோபர் 13, 2021

தமிழ்ச்சூடி

 

துரையிலிருந்து அலைபேசி அழைப்பு (நண்பரின்) தங்கையிடமிருந்து...
 
அண்ணா மகளோட பள்ளி ஆண்டு விழாவுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை எழுதி வரச்சொல்லி இருக்கின்றார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதி விட்டேன் தமிழைக் குறித்து தமிழில் கவிதை வேண்டும். உங்கள் ஞாபகம் வந்தது நீங்கள் எழுதி தாருங்கள் அவசரம் அண்ணா.

வெள்ளி, அக்டோபர் 08, 2021

எனது விழியில் பூத்தது (5)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஐந்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...

ஞாயிறு, அக்டோபர் 03, 2021

பிஞ்சிருக்கும் பிறை

ணக்கம் நண்பர்களே... ‘’முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
 
இதோ எனது பாடல்...