இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 25, 2021

சூராணம், சூப்பர்வைசர் சூர்யா

 

புதாபி வேலை செய்யுமிடத்தில் உணவருந்தும் இடைவேளையில்.... அன்றைய சூழலின் காரணமாக சூப்பர்வைசர் சூர்யா தனது இரண்டு பணியாளர்களோடு ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்-கள்.

என்னடா கவி கோழியை எதுக்கு தினேஷுக்கு வைக்கிறே... ?
இல்லை சார் இன்றைக்கு வியாழக்கிழமை...
 
ஆமா அதுக்கு என்ன ?
இல்லை சாப்பிடமாட்டேன்.
 
அதான் காரணமென்ன ?
விரதம்...
 
விரதமா ? இங்கே வந்து என்னடா விரதம் ?
தெட்சிணாமூர்த்திக்கு...
 
தெட்சிணாமூர்த்திக்கா ? டேய்... தினேஷா என்னடா சொல்றான் கவி ?
ஆமா சார் வியாழக்கிழமை கவி தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருப்பான்.
 
அப்படியா நல்ல பழக்கம்தான் அரபு நாட்டுக்கு வந்தும் இந்தப் பழக்கம் வச்சுருக்கியே ரொம்ப பெருமையா இருக்குடா... ஆமா ரொம்ப காலமா இருக்கியோ... ?
இல்லை சார் இங்கே வந்துதான்...
 
என்ன நேர்த்திக்கடன் சீக்கிரம் சம்பாரிச்சு வீடு கட்டணும்னா... ?
இல்லை... அரபு பேசுறதுக்கு...
 
அரபு பேசுறதுக்கா ? என்னடா சொல்றே... அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்னடா சம்பந்தம் ?
அது வந்து சீக்கிரம் அரபு பேசிப்பழகணும்... அதான்...
 
டேய் தினேஷா... என்னடா சொல்றான் இவன் ?
அது வந்து சார் தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்தா சீக்கிரம் அரபு பேசலாம்ணு விரதம் இருக்கான்.
 
எவன்டா சொன்னது இப்படி ?
நம்ம கில்லர்ஜிதான் சார்.
 
கில்லர்ஜியா ?
ஆமா... சார்...
 
என்னங்கடா சொல்றிய.... ?
ஆமா சார் கில்லர்ஜி நாங்க எல்லோரும் ஒண்ணாத்தானே வந்தோம் கில்லர்ஜி மட்டும் சீக்கிரம் எல்லா மொழியும் பேசுறாப்பல, நீ மட்டும் எப்படி சீக்கிரம் பழகினேனு கேட்டேன் கில்லர்ஜி வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்ததாலதான் பேச முடிந்ததாம்.
 
அட மூதேவி கில்லர்ஜி யாரைத்தான் ஓட்டலை உன்னை விட்டு வைக்கப் போறாரு. ஏண்டா நீயாவது இவனுக்கு புத்திமதி சொல்லக் கூடாதா ?
அதெப்படி சொன்னா எனக்கு கோழிப்பீசு கிடைக்காதுல...
 
அடப்பாவி கோழிக்காக இவனை நீயும் சேர்ந்து முட்டாளாக்கி வச்சு இருக்கே... இவன் எவ்வளவு நாளா இப்படி விரதம் இருக்கான் ?
ஒரு வருசத்துக்கும் மேலே இருக்கும்.
 
வியாழக்கிழமை கம்பெனி மெஸ்ஸில் கோழி போட்டது உனக்கும் வசதியாப் போச்சு. சரி இவன் அரபு பேசுனானா ? எனக்கு ஒண்ணும் அப்படி பேசுனதா தெரியலையே...
அதெப்படி பேச வரும் மூளை வேணும்ல...
 
ஹா... ஹா... ஹா... டேய்... கேட்டியா என்ன சொல்றானு ? மூதேவி இந்தா என்னோட கோழியை நீ சாப்பிடு...
கில்லர்ஜி என்னை ஏமாத்திட்டாப்பலயா ?
 
வேறென்ன... நாளைக்கு சாப்பாடு எடுக்க வரட்டும் நான் கேட்கிறேன்.
இனிமேல் எனக்கு கோழிப்பீசு கிடைக்காது...
 
மறுதினம் மதிய வேளையில் தனது இடத்திலிருந்து தனது சாப்பாடு பாக்ஸை எடுக்க வந்த கில்லர்ஜியை சூப்பர்வைசர் சூர்யா. அழைக்கிறார்.
 
கில்லர்ஜி இங்கே வாங்க...
வணக்கம் சார்.
 
நல்லா இருக்கீங்களா ?
நல்லா இருக்கேன்... என்ன சார் சிரிக்கிறீங்க... ?
 
நம்ம கழிஞ்சான் கவி கிட்டே என்ன சொன்னீங்க ?
.....ஒண்ணும் சொல்லலையே.....
 
ஏதோ விரதம் இருக்க சொன்னீங்களாம் ?
? ? ? இல்லை சார் சும்மா ஏதோ சொன்னேன்... அதை நம்பிக்கிட்டு...
 
நம்பிக்கிட்டு...
அவனும் ஒரு வருசமா விரதம் இருக்கான்.
 
அவன் விரதம் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா ?
ஆமா கழுதியா தினேஷு சொன்னாப்பலே எனக்கும் கோழி கிடைக்குது இப்படியே வண்டி ஓடட்டும்னு...
 
சரி அவனுக்கு ஏதாவது அரபு சொல்லிக் கொடுக்கிறீங்களா ? கம்பெனி பிலிப்பைனிகளுக்கெல்லாம் கத்துக் கொடுக்கிறதா கேள்விப்பட்டேன்.
இல்லை சார் சும்மா கேட்டால் ஏதாவது சொல்லுவேன்...
 
ஆமா நம்ம சடையாண்டிகிட்டே என்ன சொன்னீங்க ?
ஒண்ணும் சொல்லலையே...
 
ரெடிமிக்ஸ் கான்கிரீட் போடுற வண்டியை குப்பூஸ் அரைக்கிற மிஷின்’’னு சொன்னீங்களாம், காலைல கம்பெனி பஸ்ஸுல அதைபத்தித்தான் பசங்க பேசுறாங்கே... ரோட்டுல வண்டி போனா அதோ குப்பூஸ் மிஷின்’’னு கத்துறாங்கே... எப்படி கில்லர்ஜி உங்களுக்கு இப்படி தோணுது... ?
.................................. ?
 
சரி, சரி தொப்பியை சொரியாம போயிட்டு வாங்க...
வர்றேன் சார்... 


ChavasRegal சிவசம்போ-
குஷ்பு வண்டினு சொல்லாம விட்டாரே.... இங்கும் சூர்யாவா ?
 
குப்பூஸ் சப்பாத்தி போன்ற அரபு நாட்டு ரொட்டி உணவு.

47 கருத்துகள்:

  1. குப்பூஸ் அரைக்கிற மிஷினா? அடப்பாவி..ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இது பழைய நிகழ்வு இன்னும் பசுமையாக அபுதாபியில் ஓடிக்கொண்டே இருக்கிறது...

      நீக்கு
  2. குப்பூஸ் எவ்வளவு சல்லிசு விலை அங்கெல்லாம். ஒரு வேளை இரண்டு வேளை உணவாகிடும். இங்க இந்தியாவுல அவ்வளவு சல்லிசா உணவு கிடைக்குதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே உங்களுக்கு இப்படியும் ஆசை இருக்கிறதா... நான் சென்றபோது ஒரு குப்பூஸ் 0.50 ஃபில்ஸ்

      நீக்கு
    2. ஓமானில் அந்த கூப்ஸ் 100 பைசா. இன்றைய நிலவரம் தெரியாது.

      நீக்கு
    3. எமராத்திலும் விலை உயர்ந்து விட்டதாம்.

      நீக்கு
    4. பஹ்ரைனில் நான் இருந்த நாள்வரை குப்பூஸ் (சுடச்சுடப் பண்ணித்தருவது... இரான ரோட்டி என்று பெரிதாக இருக்கும், 1 அடிக்கும் மேல். குமாச்சி தடியாகவும் முக்காலடிக்கும் மேல் இருக்கும். ஐந்து பீஸ் 100 ஃபில்ஸ்.. அதாவது 1 திர்ஹாமுக்குச் சிறிது குறைவு ஐந்து பீஸுக்கு. இது அரசாங்க சப்சிடி என்பார்கள். ஒரு முழு ப்ரெட் 1 திர்ஹாம்.

      நீக்கு
    5. எமராத்தில் ஷேக் ஸையித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் அவர்களின் மரணத்திற்கு பிறகு அனைத்து விலைகளும் மா(ஏ)றி விட்டது.

      நீக்கு
  3. நல்ல நகச்சுவை பதிவு.

    கவியை விரதம் இருக்க வைத்து விட்டீகள்.

    பாவம் அவருக்கு அரபு மொழி சொல்லி கொடுத்து இருக்கலாம் நீங்கள், அதற்கு குரு காணிக்கையாக விரதம் இருக்க வைத்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  4. குப்பூஸ் என்றால் என்ன? அரபு நாடுகளில் இருந்தவங்களுக்குத் தான் தெரியும் போல! ஆமாம், அது சரி, சம்பந்தமே இல்லாமல் சூர்யா எதுக்கு இங்கே? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குப்பூஸ் அரபு நாட்டு உணவு.
      சூப்பர்வைசர் பெயர் சூர்யா இதற்கு நானென்ன செய்ய முடியும் ?

      நானென்ன "குரு" என்றா பெயர் வைத்தேன் ? என்னை அரசியல் சிக்கலில் மாட்டிய விட்ருவீங்க போலயே...

      நீக்கு
    2. கீதாக்கா பானுக்கா நெல்லை எல்லாம் சொல்லிட்டாங்க பாருங்க...இது அமெரிக்கா அங்கல்லாம் செய்யற பிட்டா ப்ரெட் அல்லது நம்ம திக் ரொட்டி தான் கீதாக்கா பிசா போல திக் கா இருக்கும் ஆஃப்கானி ரொட்டியும் இப்படித்தான் இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் அவ்வளவுதான் பேசிக்கா எல்லாம் ஒன்றுதான் அக்கா

      கீதா

      நீக்கு
  5. என்ன இருந்தாலும் உங்க திறமை அசத்துகிறது. (பொறாமையுடன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஃகி இஃகி இஃகி நன்றி.

      நீக்கு
    2. @கீதா அக்கா குபூஸ் என்பது ஒரு லெபனீஸ் ரொட்டி. பெரும்பாலும் மைதாவிலும் சில சமயங்களில் கோதுமையிலும் செய்யப்படும். மொத்தமாக இருக்கும். அதில் முட்டைகோஸ், கேரட், தக்காளி, வெங்காயம், மயோனீஸ் போன்றவை சேர்த்து ரோல் பண்ணி தன் தருவார்கள். ஒன்று சாப்பிட்டாலே கம்மென்று ஆகி விடும். இதில் அசைவுமும் உண்டு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. குப்பூஸை கறிக்குழம்பு, கோழி, சாம்பார், தயிர், ரசத்தை தவிர எல்லா வகையான குழம்பு மட்டுமல்ல எல்லா வகையான கூட்டுகளுடன் தொட்டு சாப்பிடலாம்.

      நீக்கு
  6. விரதம்...நல்ல உத்தி..ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  7. சும்மா சொன்னதை அம்மா சொன்னது போல் நம்பி விட்டாரே ஜி... தின்னு தினேசு கில்லாடி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி தினேஸுக்கு கோழிப்பீஸ் லாபம்தானே...

      நீக்கு
  8. கில்லர்ஜியே சொன்னாலும்........ !!! இப்படியா... ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்தி முத்தினால் எதையும் நம்புவார்கள் நண்பரே...

      நீக்கு
  9. எந்த மொழியையும் கற்றல் :- இதற்கு ஒரு அற்புதமான குறள் உள்ளது... இந்தக் குறள் மற்ற 1329 குறள்களை விட சிறப்பு வாய்ந்தது :- வெண்பா விதிகள் படி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கடைசி குறளா ? தகவலுக்கு நன்றி ஜி.

      நீக்கு
  10. கேட்பவர் கேள்வி கேட்காமல் நம்பினால் சொல்பவர் சொல்லதானே செய்வார்!!!  குப்புஸ் உணவு பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி கேட்கிறவன் கேனயனாக இருந்தால் கேணிக்குள்ளே ஆணி முளைக்கும்னு சொல்லலாமோ ?

      நீக்கு
    2. ஹிஹிஹி... நான் அப்படிச் சொல்லவில்லை!

      நீக்கு
    3. நானும் சொல்லவில்லையே... கேள்விக்கணை எழுப்பினேன் அவ்வளவுதான் ஜி

      நீக்கு
  11. ஒருவனை விரதம் வைக்க செய்த புண்ணியம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. உங்களுக்கென்று விஷயங்கள் வந்து மாட்டுகின்றனவே..!! சபாஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நகைச்சுவை என்பது எல்லா இடங்களிலும் உண்டு தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    எப்படியோ தங்கள் நண்பர் கவியையும், உங்களுடன் விரதம் இருக்க வைத்து விட்டீர்கள்.ஆனால் பலன் உங்களுக்கு மட்டுந்தான் கிடைத்துள்ளது போலும்... குப்பூஸ் என்ற உணவு இப்போதுதான் அறிகிறேன். நீங்களும் திங்கப் பதிவில் இதைப்பற்றி எழுதலாமே.... பதிவு நகைச்சுவையாக இருந்தது. தலைப்பு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் எங்கே விரதம் இருந்தேன் ? பலன் எனக்கு கிடைத்தால் மகிழ்ச்சியே...

      குப்பூஸை கறிக்குழம்பு, கோழி, சாம்பார், தயிர், ரசத்தை தவிர எல்லா வகையான குழம்பு மட்டுமல்ல எல்லா வகையான கூட்டுகளுடன் தொட்டு சாப்பிடலாம்.

      நீக்கு
  14. ஹாஹாஹா. இந்த காலத்திலயும் இப்படியா நண்பரே. அவர் பாவம் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது நிகழ்ந்தது கி.பி.1997-ல் எனக்கும் பொழுது போகவேண்டாமா ?

      நீக்கு
  15. அன்பின் தேவகோட்டைஜி,
    அந்த இரானிய ரொட்டி கபூஸ் என்று நினைத்திருந்தேன்:)

    அவர் விரதம் இருக்க மற்றவர்கள் சாப்பிட
    நல்லதொரு சொல் விருந்து எங்களுக்கு.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. ஹாஹாஹாஹா கில்லர்ஜி!! நெஜமாவே உங்க பெயருக்கேத்தாப்புல பயலுகளை போட்டு க் கொன்னு எடுக்கறீங்க இப்படிக் கதை வுட்டு!!! பாவம் அந்தாளு கவி!

    குபூஸ் செய்யற மெஷின் ந்னு ஹாஹாஹா (ரொட்டி பத்தியும் சொல்லிட்டீங்களே...) ஆனா நிஜமாகவே இப்படி ஒரு உருளை மாவு கலக்க உண்டு கில்லர்ஜி...ஷேப் தான் வித்தியாசம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் இப்படி இயந்திரங்கள் உண்டுதான் ஆனால் இவைகள் வருவதற்கு முன்பே நான் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  17. விரதம் இருந்ததற்கு என்றாவது பலன் கிடைக்கும்! அந்த விதத்தில் உங்களுக்கும் அப்பலனில் பங்கு கிடைக்கலாம் கில்லர்ஜி! :)

    பதிலளிநீக்கு
  18. கில்லர்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விரைவில் மன அமைதியுடனும் மகிழ்வுடனும் குடும்பத்தாருடனும் பெயர்த்திகளுடனும் ஆனந்தமாக வாழ்நாள் கழியப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு