இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 26, 2021

இறுதியில் சுபம்

 

01. பல்லாவரம் வீட்டுக்கு பட்டா போடுவதற்கு பல்லாயிரம் லஞ்சம் கேட்டவரைக் குறித்து புகார் கொடுக்க சென்ற செங்குன்றனிடம் லஞ்சம் கேட்டார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி லட்சுமணன்.
 
02. தனியாரில் மருத்துவம் பார்த்தால் தனது வீட்டை எழுதி வாங்கி விடுவார்கள் என்று நினைத்த பர்கூர் பார்த்தீபன் தாத்தாவை அரசு மருத்துவமனையில் பார்க்க தாத்தா பரலோகம் போனார்.
 
03. மனைவிக்கு தெரியாமல் சின்னவீடு வைத்திருந்த பாக்கியநாதனின் பெரியகுளம் வீட்டை அவனுக்கு போதையை ஊற்றி அவனுக்கே தெரியாமல் எழுதி வாங்கினாள் பெரியநாயகி.
 
04. துபாய்க்கு போனால் சொகுசாய் வாழலாம் என்று மனைவி பேச்சைக் கேட்டு போன பொன்னுச்சாமி தூப்பாய் கழுவும் வேலையில் நொந்து கிடந்தே வாழ்ந்தான் மூன்று வருடமாய்.
 
05. சீரியலில் நடித்தால் பணமும், புகழும் கிடைக்குமென்று நம்பி போய் சென்னையில் சீரழிந்து வந்த சீதா விறகுகடை ராமனை வளைத்துப் போட்டு வாழ்க்கையை கடத்தினாள்.
 
06. கரூர் வேலைக்கு போன மதிவாணன் மதிய உணவுக்கு பக்கத்தில் இருக்கும் கொழுந்தியாள் வீட்டுக்கு போய் விடலாம் என்று அடிப் போட்டதை அறிந்தவள் தாய் வீட்டுக்கு போனாள்.
 
07. உத்திரகோசமங்கையில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்ற செந்தாமரையிடம் பங்குப்பணம் கேட்டு பத்ரகாளியாய் புருஷனோடு சண்டைக்கு வந்தாள் அக்கா ஆண்டாள்.
 
08. தூத்துக்குடி கடலில் முத்து குளிக்கப் போன நண்பர்களுக்குள் முத்து எடுத்து வந்து பங்கு வைத்தபோது வாய்த் தகராறில் முத்துச்சாமிக்கு கத்திக்குத்து விழுந்தது.
 
09. திருமணத்துக்கு போன இடத்தில் மணப்பெண் ஓடி விட்டதால் உறவினர்களின் முடிவால் திடீர் மணப்பெண்ணாகி திருச்சியில் திருமதியானாள் தினைவள்ளி.
 
10. குடிகார கணவரோடு பிணக்காகி ஏர்வாடி தங்கை வீட்டுக்கு போய் வரலாமென்று போனால் தங்கையை தூக்கிப் போட்டு மிதித்து கொண்டு இருந்தான் அவளது குடிகார கணவன்.
 
11. திருநெல்வேலி பெண்ணுக்கு ஐம்பது பவுன் நகை வரதட்சிணை போடுவதாக சொன்னதும் மாப்பிள்ளையின் அப்பா அல்வா கொடுத்து விடுவார்களோ... என்று ஐயப்பட்டார்.
 
12. நல்ல குடும்பம் உங்கள் மகளை சொந்த பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்வார்கள் என்று கல்யாண தரகர் சொன்னதும் தேவகோட்டை மாப்பிள்ளைக்கு சம்மதித்தனர்.
 
Chivas Regal சிவசம்போ-
திருநெல்வேலிக்காரவுங்க அல்வா சுவையா செய்தது குற்றமா ?
 
சிவாதாமல்அலி-
இறுதி சமாச்சாரமாவது சுபமாக வந்துச்சே... மகிழ்ச்சி.
 
எதிர் வரும் 2022-ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் நலம் விளைவிக்கும் என்று ஆத்மார்த்தமாக நம்புவோமாக...
 
அன்புடன்
கில்லர்ஜி தேவகோட்டை

24 கருத்துகள்:

  1. பல பேர் (3, 6, 7, 10) அல்வா கொடுத்து உள்ளார்களே ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஜி எனக்கும் அப்படித்தான் தோணுது...

      நீக்கு
  2. என்னது தேவகோட்டை மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுக்கிறார்களா? சொட்டை தலையை பார்த்ததுக்கு அப்புறமும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஊரின் பெருமைக்காக கொடுப்பார்கள்.

      நீக்கு
  3. கிழி கிழி என்று கிழித்து விட்டார் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே டான்ஸ் மாஸ்டர் கலா மாதிரி சொல்றீங்களே...

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நன்கு எழுதியுள்ளீர்கள். எல்லா ஊர்களையும் விட இறுதியில் தேவகோட்டை மாப்பிள்ளை நல்லவராக இருப்பது மனதுக்கு நிம்மதியை தந்தது.

    வரும் ஆண்டு நல்லவிதமாக பிறந்து, அனைவரையும் நலமாக்கும் என நானும் நம்புகிறேன். நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்ப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையை சொன்னேன் அவ்வளவுதான் தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. ஹாஹாஹா கடைசில சொன்னீங்க பாருங்க!!! கில்லர்ஜி!! அது சரி ஃபோட்டோ அனுப்பலையோ மாப்பிள்ளை? தேவகோட்டை மாப்பிள்ளைக்குக் கொடுவா மீசைன்னு தெரியாம போச்சு போல!!!

    அதுக்குத்தான் அல்வான்னு சொல்லுங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அல்வா கொடுப்பது திருநெல்வேலிகாரர்கள் வேலை.

      நீக்கு
    2. ஹாஹாஹா அதானே தேவகோட்டைய விட மாட்டீங்களே!!!

      நாங்க ஸ்வீட்டுங்கோ அதான் ரிச் அல்வா கொடுக்கறோமாக்கும்

      கீதா

      நீக்கு
    3. வாங்க அல்வா ஊருக்காரர் இன்னும் வரவில்லையே...

      நீக்கு
  6. அதான் சரி, தேவகோட்டை மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? தலையில் இருக்க வேண்டியதெல்லாம் மீசையாக இருக்கு. அம்புடுதேன்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா எல்லோரும் ஒரே மாதிரி சொல்றீங்களே...

      நீக்கு
  7. கில்லர்ஜி இதில் பலரும் அல்வா கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் பொருத்தமான படம் போட்டிருக்கிறீர்கள்!.

    தேவகோட்டை மாப்பிள்ளை என்றால் அது நீங்கள்தானோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தேவகோட்டையில் நான் மட்டும்தான் மாப்பிள்ளையாக இருக்கிறேனா ?

      நீக்கு
  8. தமிழ்நாடு பூரா இந்நிலைதானா?  தேவகோட்டை தவிர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அதெல்லாம் எனக்கு தெரியாது ஒரு டஜன் ஊர்களை ஆராய்ந்ததில் இதுவே அறிக்கை.

      நீக்கு
  9. சுபம்.. சுபமோ சுபம்!..

    ஆமாம்.. அந்த தேவகோட்டை மாப்பிள்ளை யாரு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வருகைக்கு நன்றி.
      அவரு.... அதானே எனக்கு தெரியாது.

      நீக்கு
  10. தேவகோட்டையாருக்கு இப்படி ஒரு ஆசை யா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைகளை சொன்னேன் இதற்கு பெயர் ஆசையா ?

      நீக்கு
  11. ரசனை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு