இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 07, 2022

போலியில்லாத போளி

போடி பேருந்து நிலையத்தில்
போளி விற்றவளின் அழகு
போலியில்லை என்றது மனது
போய் பேச்சுக் கொடுப்போமா ?
போடா என்றால்... ? துணிந்து
போனேன் தட்டில் இருந்த
போண்டாவை எவ்வளவு என்றேன்
போதுங்கிற அளவுக்கு சாப்பிட்டு
போங்க காசு வேண்டாம் என்றவளை
போளி விற்பவரின் பெயரென்ன ?
போர்முகில் என்றாள் அழகியவள்
போத்தீஸில் சேலை வேண்டுமா ?
போளி சாப்பிட்டதுக்கு என்றேன்
போலியில்லாத பார்வையை என்மீது
போர்த்தினாள் என் எதிர்கால காதலி.
போதித்தாள் இவளை இன்றே அழைத்துப்
போய் விடலாமோ என்றது மனது
போதுமானவளே சொந்த ஊர் எது ?
போத்தனூர், அப்பா ஒருத்தியோடு
போயிட்டார், அம்மா ஒருத்தனோடு
போயிட்டா... நாமும் எங்காவது
போவோமா ஊர்கோலம்... என்றவளை
போடி முடுதாரு எவனாவது
போக்கத்தவனை பாரு என்று ஓடினேன்
போர்மாறன் நான் வீட்டை நோக்கி...
 
சிவாதாமஸ்அலி-
பேரெல்லாம் இலக்கிய நயமா இருக்கு குலம்தான் குழப்பம் போல...
 
சாம்பசிவம்-
ரெண்டும் நயம் புலி’’யாத்தான் இருக்கும் போல...

35 கருத்துகள்:

 1. எதிர்கால மனைவி கேள்வி பட்டு இருக்கேன்.
  அது என்ன நண்பரே எதிர்கால காதலி.
  மற்றபடி கிழிச்சுட்டுட்டீங்க
  போங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படியெல்லாம் அவசரப்பட்டு தீராமானிக்ககூடாது இப்ப புட்டுக்கிருச்சு பார்த்தீர்களா ?

   நீக்கு
 2. அதென்ன போர்முகில், போர்மாறன்!  வித்தியாசமான பெயர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி எல்லாம் பழங்கால பெயர்கள்தான்.

   நீக்கு
 3. எதிர்காலக்காதலி!!! ஹாஹாஹாஹா

  போ போ என்று தொடங்குவது....சொல்லிருப்பது நல்லாருக்கு

  கில்லர்ஜி தொடக்கத்தில் "துணிந்து போனேன்'' என்று தன்னிலையில் சொல்லிருக்கீங்க கடைசில படர்க்கையில்/எழுதுபவர் சொல்வது போல முடிச்சிருக்கீங்களே ஓடினான் போர்மாறன் என்று..!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது குற்றச்சாட்டை புரிந்து மாற்றி விட்டேன் இறுதி வரிகளை... நன்றி.

   நீக்கு
  2. இப்ப பாருங்க கடைசி வரி நல்லா ரைமிங்காவும் இருக்கு. ஹலோ கில்லர்ஜி அது குற்றச்சாட்டெல்லாம் இல்ல....நம் மனசு கற்பனையில் குதிரை போல ஓடும் போது வார்த்தைகள் கட கடவென வரும் அப்ப இடைல எதையும் கவனிக்காது. எனக்கும் இது நிகழ்வதுதான். எனக்கு இது ரொம்ப அடிக்கடி நிகழ்வது. அதனால்தான் உங்களுக்கும் சொன்னேன் கில்லர்ஜி...

   கீதா

   நீக்கு
  3. நன்று மீள் வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. முடுதாரு.......இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே பலமுறை இங்கு முடுதாருகளும், முடுமைகளும் வந்து இருக்கிறார்களே...

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு நன்றாக உள்ளது. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. பாராட்டுக்கள்.

  போர்மாறனுக்கு போரிலேயே கவனம் போலிருக்கிறது. அதனால் இனிதான் எதிர்காலக் காதலியை எப்படியும் போராடி கண்டு பிடிப்பதாக உத்தேசமா? ஹா.ஹா.

  "போ"விலேயே ஆரம்பித்து"போ"விலேயை முடித்த விதம் அருமை. சுருங்க கூறினால். போலியில்லாத போளியை வைத்து போர் அடிக்காமல்,சொன்ன விதத்தை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை பாராட்டி வாழ்த்திய மைக்கு நன்றி.

   (போளி யார் செய்தது என்பதை அறிய படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.)

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   பதிவை படிக்கும் போதே முதலிலேயே படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன். அப்போது தெரியாத போர்மாறன் அதில் இப்போது தெரிகிறார். ஹா.ஹா.ஹா. ஆக போர்மாறன்தான் போளி விற்பவரா? இல்லை, இவர் பெயர் வேறா? எந்த ஊரில் எடுக்கப்பட்ட படம்?

   நீக்கு
  3. புகைப்படத்தில் உங்களது பெயரும், போளியும் இருப்பதை பார்க்கவில்லையா ?

   மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
  4. ஆகா.. அது வேறா? ஹா.ஹா.ஹா. சற்று மேலே ஏறிட்டுப் பார்க்கத் தவறி விட்டேன். அதுதான் அடுத்த கருத்தில் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் பெங்களூரு போளி என்று குறிப்பிட்டுள்ளார்களே.. அப்படியெல்லாம் நாம் கவனித்து பார்க்கவில்லையே என நினைத்தேன்.:) போலியில்லாத அந்த போளியை பிரபலபடுத்தியமைக்கு நன்றி நன்றி.

   நீக்கு
  5. மீள் வருகை தநதமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 6. அன்பு தேவகோட்டைஜி,
  நலமுடன் இருங்கள்.
  பெங்களூரு போளியும் அழகு.
  உங்கள் பதிவும் அருமை.

  போ என்ற எழுத்தில் ஆரம்பித்துப்
  போயே விட்டான் காதலன்.

  இனி வா என்று சொல்லி ஒரு ஆக்கம் கொடுக்க வேண்டும் நீங்கள்.
  ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அஞ்சாமல் வா. இனி அல்லல்
  உந்தன் வாழ்வில் மிஞ்சாது போம்'.

  அருமைத் தமிழுக்கும் பெயர்களுக்கும் மிக நன்றி அப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 7. போளிக்கு
  போளியும் ஆச்சு..
  போகாத பொழுதும்
  போத்தனூருக்குப் போச்சு..
  போர் முரசும்
  போதாத பூபாளம் ஆச்சு
  போண்டாவும் டீயும்
  போல புன்னகையா ஆச்சு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

   நீக்கு
 8. போவில் தொடங்கி போவில் முடித்தவரையில் ஓகே. வழக்கமான உங்கள் நகைச்சுவையும் கிண்டலும் போனதெங்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இதில் நகைப்பு இல்லைதான் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. போலி போளி முதலில் நல்ல போளியாக இருந்து கடைசியில் போலி என்று தெரிந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது கில்லர்ஜி. ஓடிப் போன போர்மாறனை எப்படி வா என்று சொல்ல அடுத்த பாட்டு பாடப் போகிறாள் அந்தப் போலி போளி போர்முகில்?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இதை போர்முகிலிடம்தான் கேட்க வேண்டும்.

   நீக்கு
 10. அது சரி, போளிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு புரியலை. போ! போ! என்று சொல்வதை விட வா! வா!னு சொல்லி இருக்கலாமோ! என்றாலும் நீங்க எழுத்து வித்தகர் தான். அதில் சந்தேகமே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வா! வா! என்று எழுதி இருந்தால் சுபமாக முடிந்து இருக்குமோ... என்ன செய்வது விதி.
   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. போவில் ஆரம்பித்து போவில் முடித்து இருக்கிறீர்கள்.
  நனறாக இருக்கிறது கவிதை.

  பதிலளிநீக்கு
 12. லாக்டவுனுல...எங்கிட்டு ஊர்கோலம் போறது... ..போக்கத்தவனை பாருன்னு ஒடலாமா நண்பரே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே போர்மாறன் விபரமானவன்தான்...

   நீக்கு
 13. கடைசியில் போ என்று சொல்வதற்காகவே போ வில் ஆரம்பிக்கும் கவிதையோ! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆம் அப்படித்தான் இருக்கும் போல...

   நீக்கு